Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு
Posted By:Hajas On 7/19/2017 4:11:50 AM

abortion pill usa legal

abortion pill usa legal

imodium

imodium onderdewatertoren.nl

"பூமியின் (அ)பூர்வ கதை"

(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)

பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும்

(பாகம் : 9 = ' ஐஸ் ஏஜ் விளையாட்டு '')

#ரா_பிரபு

 

 

10000 ஆண்டுகளுக்கு முன் :
நடந்து நடந்து ஒருவழியாக மனிதன் தென் அமெரிக்காவை அடைந்திருந்தான் .
அங்கு இருக்கும் குளிரை அனுபவித்து பார்த்தான்.

ஒரு பக்கம் இயற்கை இவன் அறியாத ஆனால் இவன் பெருமளவில் பாதிக்க பட போகிற விளையாட்டு ஒன்றை விளையாடி கொண்டிருந்தது. ஐஸ் ஏஜ் விளைவுகள் கடலை பல இடங்களில் வெறும் உறைந்த பணியாக மாற்றி கடல் மட்டத்தை 300 400 அடி வரை குறைத்து இருந்தது. இது கடல் உள்வாங்கிய பகுதி என்று அறியாமல் அப்போது வெளிப்பட்ட நில பகுதியில் நடந்து சென்று தான் உலகின் பல மூலைக்கு சென்று சேர்ந்திருந்தான் மனிதன்.

No automatic alt text available.

இன்றையலிருந்து 10000 ஆண்டுகளுக்கு முன் நமது கால இயந்திரத்தை நிறுத்தி விட்டு மொத்த பூமியை ஒரு ரவுண்ட் சுற்றி பார்த்தால் மனிதன் இப்போது பனி பிரதேசம் , சமவெளி, பாலைவனம் ,மலை பகுதி என பூமியின் பல வகை தகவமைப்பை தாங்கி அதற்கேயறாற்போல தன்னை மாற்றி கொண்டு அனைத்து இடத்திலும் பரவி வாழ தொடங்கி இருந்தான்.

இப்போது இயற்கை தனது விளையாட்டின் அடுத்த அடி யை எடுத்து வைத்தது அதாவது உறைந்திருந்த பனி பாறைகள் உருக தொடங்கி இருந்தன . இறங்கி இருந்த கடல் மட்டம் மீண்டும் உயர தொடங்கி இருந்தது. அந்த வழியை பயன்படுத்தி ஆங்காங்கே சென்ற மனிதன் தான் இருந்த இடதிலேயே தீவுகளாக சிறை வைக்க பட்டான். அவன் கடந்து செல்ல வேண்டும் என்றால் இப்போது கடல் குறுக்கே தடுத்தது. உலக வரைபடம் இன்று நாம் பார்க்கும் வடிவத்தை அடைந்தது. ஆங்கங்கே இருந்த மனிதன் அந்தந்த கண்டத்தினராக ஆங்காங்கேயே வாழ தொடங்கினான். இந்த நேரத்தில் பூமி வரலாற்றில் மனித குலத்தின் அடுத்த திருப்பு முனை ஏற்படுவதற்கான அடிபடையான செயல் ஒன்று நடக்க தொடங்கி இருந்தது.

Image may contain: beach, outdoor, water and nature

ஆப்ரிக்காவில் மழை பொழிவு காரணமாக ஆப்ரிக்காவின் விக்ட்டோரியா ஏரி ஆல்பர்ட் எரி இரண்டும் நிரம்பி வழிந்தோட தொடங்கின. வழிந்த ஓடிய நீர் நதியாக அவதாரம் எடுத்து. எகிப்தில் பாய்ந்து ஓடியது...அது தான் பிற்காலத்தில் உலகின் மிக நீண்ட நதி என பெயரெடுக்க போகும் நைல் நதி. அதே நேரம் மேசபடோமியா (இன்றைய ஈராக் ) இலும் நதிகள் உருவாகி பாய்ந்து ஓட தொடங்கின. பாகிஸ்தானில் இந்தஸ் நதி ஓட தொடங்கி இருந்தது. சைனாவில் மஞ்சள் நதி தனது ஓட்டத்தை தொடங்கி இருந்தது. 

ஒரு வகையில் இவைகள் எல்லாமே பூமி விளையாட்டு ஐஸ் ஏஜ் உடன் தொடர்பு உடையவையாக இருந்தன. இந்த ஆறுகள் மனித வரலாற்றில் மிக பெரிய திருப்பு முனையை உண்டு பண்ணின ( கடந்த பகுதிகளில் புல் உண்டு பன்ணியதை போல) அதாவது இது வரை குனிந்து நடந்த மனிதன் நிமிர்ந்து நடந்தது புற்களால் தான் என்பதை போல இது வரை நாடோடியாக இருந்த மனித குலம் முதல் முறையாக நின்றது அந்த ஆற்றின் கரைகளில் தான் .

இதன் பக்க விளைவாக மக்கள் தொகை பெருகி கொண்டே போனது. ஊரை அமைத்து தங்க தொடங்கினான். மேலும் மிக பெரிய திருப்பு முனை கண்டுபிடிப்பு ஒன்றை செய்தான். அது தான் தனக்கு தேவையானதை தானே விதைத்து தயாரிப்பது (விவசாயம்). அது அவன் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியது. 

Image may contain: outdoor
மத்திய கிழக்கு பகுதியில் இருந்த மனிதன் கூடுதலாக இனொன்றை முதல் முதலில் செய்தான்.

விலங்குகளை பழகி வளர்த்தான்..
ஆப்ரிக்கா பகுதியின் மக்கள் அங்கே இது போன்ற எளிதில் பழகி வளர்க்க முடிய கூடிய விலங்குகள் இல்லாமல் விட்டு விட்டனர். ஆனால் இங்கே உன்னிப்பாக கவனித்தால் இது இருவருக்கும் இடையே வாழ்க்கை தரம் வேறு பாட்டை உண்டாக்கியது. ஐரோப்பிய நன்றாக வளர்ச்சி அடைய தொடங்க ஆப்ரிக்கன் கொஞ்சம் பின் தங்க தொடங்கினான் .இது பிற்பாடு வரலாறு முழுதும் ...ஏன் இன்றும் கூட பிரதி பலித்து கொண்டு தான் இருக்கிறது .

இது தவிர மனிதன் பழக்கிய விலங்கில் முக்கியமானது ஒன்று இருந்தது. சமவெளிகளில் மிகுந்த ஆற்றல்களோடு ஓட கூடிய இது வரலாற்றை பெருமளவு மாற்றியதில் முக்கிய பங்கு உண்டு..இதை முதன்முதலில் வட அமெரிக்கர்கள் பழக தொடங்கினார்கள். அந்த விலங்கு "குதிரை." கி.மு 4000 ஆம் ஆண்டுகளுக்கு முன் ஆசிய நாட்டவர்கள் பல பேர் குதிரையை பழக்கி இருந்தனர். 

No automatic alt text available.

இந்த குதிரைகள் போர்.. ஆள் இடப்பெயர்ச்சி .....பொருள் இடப்பெயர்ச்சி என்று பல வகையில் அவர்களுக்கு உதவியாக இருந்தது. பல இடங்களில் இது போர்க்கள வெற்றி தோல்வியை நிர்ணயித்தது...பல இடங்களில் வரலாற்றை மாற்றி அமைத்தது .

நண்பர்களே....

இது வரை காடு மலை என முரட்டு தனமாக இருந்த வரலாறு இனி நாகரிகம்... நகரம் என மாற இருக்கிறது.
அந்த மாற்றம் அடுத்த பாகத்தில் தொடங்குகிறது...

-பூமி இன்னும் சுழலும்..............

 

பாகம் : 10 முதல் நகரம்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..