Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள்
Posted By:Hajas On 7/9/2017 2:11:07 PM

abortion clinic chicago

latest you can get an abortion open

"பூமியின் (அ)பூர்வ கதை"

(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)

 (பாகம் : 6) (நீரில் இருந்து நிலத்திற்க்கு)

(பாகம் :7 -"பூமியின் திகில் நாட்கள்")


#ரா_பிரபு

(பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்)

கடந்த பாகத்தில் சொன்ன அந்த எரிமலை பேரழிவு உலக நிலவாழ் விலங்குகளில் எண்ணிக்கையை ஒரே அடியாக 70 சதம் காலி பண்ணி இருந்தது.

கடந்த 50 கோடி ஆண்டுகளில் பூமி மொத்தம் 5 முறை பேரழிவை சந்தித்து உள்ளது. அதாவது கிட்ட தட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு ஒரு பேரழிவை அது சந்தித்து வருகிறது.
ஆனால் பூமியை பொருத்த வரை அதன் அனுபவம் என்ன வென்றால் அழிவு என்பது பழையதை அழித்து விட்டு அடுத்து அதை விட பிரமாண்டமான ஒன்றிற்கு உயிர் கொடுப்பது.

No automatic alt text available.

அப்படி பூமிக்கு வந்த அடுத்த பிரமாண்டம் தான் "டைனோசர்."
அடுத்த 16 கோடி ஆண்டுகளுக்கு பூமியில் ராஜ நடை போட்ட பிரமாண்டம் அவை. மொத்த பூமி பல ஆண்டுகளுக்கு அவர்கள் வசம்.

டைனோசர்கள் பூமியில் நடை போட தொடங்கிய காலகட்டத்தில் பூமியின் நில பகுதியில் ஒரு பெரிய வரலாற்று மாற்றம் நடக்க தொடங்கி இருந்தது .
அதாவது இது வரை நிலபகுதி மற்றும் நீர் பகுதி என்று இரண்டே பகுதிகள் இருந்தன நில மாக இருந்தது மொத்தம் ஒரே கண்டமாக தான் இருந்தது. 
ஆனால் இந்த கால கட்டத்தில் அது 7 கண்டமாக மெல்ல மெல்ல பிரிய தொடங்கியது.
ஆப்ரிக்கா தென் அமெரிக்காவை விட்டு பிரிந்தது அது இருந்த இடத்தில் அட்லாண்டிக் கடல் என்ற ஒன்று உண்டாகியது.

Image may contain: one or more people, cloud and outdoor

கிட்ட தட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக இந்த டைனோசர்கள் தங்கள் ஆட்சியை நடத்தின. தாவர உன்னி மாமிச பட்சிணி என இரண்டாக பிரிந்தன. இரை தேடின ஒன்றோடு ஒன்று சண்டை இட்டு கொண்டன.
அவைகள் வாழ்ந்த காலத்திலேயே அவைகள் காலடியிலேயே எலி போன்ற பூமிக்கு உள்ளே சென்று வாழும் சிறு உயிரினங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தன. அவைகள் காலடிக்குள் தவழ்ந்து வாழ்ந்தன.(சம்பந்தமில்லாமல் இங்கே எலி போன்ற இவைகளை பற்றி நான் குறிபிட ஒரு காரணம் உண்டு...பிறகு சொல்கிறேன்)

Image may contain: 1 person

நிறைய பேருக்கு ஸ்பீல் பர்க் புண்ணியத்தில் டைனோசர்கள் பற்றி தெரிந்து இருக்கிறது. ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த பிரமாண்டம் அவைகள் மட்டுமே அல்ல.. அதை போல நிறைய மிரட்டும் ராட்சத விலங்குகளை கொண்டது தான் அந்த ஜுராசிக் யுகம்.
மிக விசித்திரமான பல விலங்குகள் உலா வந்த உலகம் அது...
உதாரணம் : டைட்டனோபோவா...

இது ஒரு பாம்பு ....என்ன ..நம்ம கற்பனைக்கு எட்டாத அளவு பெரிய பாம்பு. இவைகளின் எலும்புக்கூடுகள் உலகின் சில மூலைகளில் கிடைத்து இருக்கின்றன . அவற்றை ஆராய்ந்த ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள் .

அந்த பாம்பு அளவில் ஒரு பேருந்து அளவு பெரிதாக இருந்தது. அவை அசால்ட்டாக டைனோசரகளை அடித்து கொல்லும் அளவு வலிமையானதாக இருந்தது... அவை நம்மை இறுக்கினால்... நம் மேல் ஒரே நேரத்தில் 3 ஈபில் டவர் வைக்கும் அளவு எடையை உணர்ந்திருப்போமாம். ஓரு வேலை இக்கால காடுகளில் அவை வாழ்ந்து இருந்தால்...அவைகளின் முக்கிய உணவு... யானை.. காண்டா மிருகம்.. நீர் யானை... காட்டெருமை... ஒட்டக சிவங்கி...சிங்கம் புலி... இப்படி இருந்து இருக்கும்.. (இணையத்தில் அதன் உருவத்தை தேடி பாருங்கள் இமைக்க மறுப்பீர் ...)

ஆனால் நண்பர்களே ஒரு விஷயம் அது டைனோசரை அடிப்பது ஒரு கற்பனையாக தான் சொன்னேன் நிஜதில் அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டை இட வாய்ப்பு இல்லை...
காரணம் இரண்டும் வெவேறு கண்டத்தில் வாழ்ந்தவை... மேலும் இரண்டுக்குமான கால இடைவெளியும் கொஞ்சம்வேறாக இருந்திருக்கிறது.

(you tube இல்" taitanoboa v/s t rex" என்று போட்டு பாருங்களேன்... இரண்டும் சண்டை இட்டால் எப்படி இருக்கும் என கற்பனை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று இருக்கிறது... நல்ல சுவாரஷ்யமாக இருக்கும்)

சரி நண்பர்களே இப்போது.....

நமது கால இயந்திரத்தை 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொஞ்சம் நிறுத்த வேண்டும். பூமியின் அடுத்த பேரழிவு நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது. பூமியை உலுக்கிய மகா பேரழிவு அது.

அது ஒட்டு மொத்த டைனோசர் இனத்திற்கும் சங்கு ஊத இருக்கிறது.

நிறைய பேருக்கு தெரியாது டைனோசர் வாழ்ந்த வரலாறை விட அவை அழிந்த வரலாறு மிக பிரபாண்டமானது என்று.
அன்று நடந்த வின் கல் மோதல் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு பேரழிவு நிகழ்வு .பூமியின் வரலாற்றில் பயங்கரமான திகில் நாட்கள் அவை.
வாருங்கள் விண்கல் மோதி எப்படி டைனோசர் அழிந்தது அதன் வீரியம் என்ன என்பதை அருகில் சென்று பார்ப்போம். அடுத்த சில பாராக்களை நீங்கள் மூச்சை இழுத்து வைத்து கொண்டு தான் படித்தாக வேண்டும். நல்ல வேலை அந்த காலத்தில் நாம இல்லை என்ற உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாது.

இன்றையலிருந்து கிட்ட தட்ட 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த விண்கல் பூமியை மோதியது.(இந்த 7 ஆவது அத்தியாயத்தில் இதை பற்றி சொல்வதாக 3 ஆவது அத்தியாயத்தில் சொல்லி இருந்தது நினைவு இருக்கலாம்.)

விண்கல் என்றதும் நாம் அதை ஏதோ சின்ன கல் போல் கற்பனை செய்து கொள்ள கூடாது .
அது ஒரு மலை. அதன் கீழ் பகுதி இங்கே இடித்த போது அந்த கல்லின் மேல் முனை 32 ஆயிரம் அடி உயரத்தில் இருந்தது அதாவது இன்று விமானம் பறக்கும் உயரம். (இமய மலை வெறும் 8 கிமி உயரம் தான் ஆனால் அன்று மோதிய மலை 10 கிமி உயரம் கொண்டது.)

அந்த பிரமாண்ட விண்கல் புவியின் காற்று மண்டலத்திற்குள் நுழைந்த உடன் மிக பெரிய நெருப்பு பந்தாக தீ பற்றி எரிய தொடங்கியது. அந்த ஒளி வானில் சூரியனை விட பல மடங்கு அதிகம் பிரகாசமாக இருந்ததாம் வானம் திடீரென இவ்வளவு பிரகாசாக பார்த்து இராத விலங்குகள் வானை ஆச்சர்யமாக பார்த்தது. அப்படி ஆர்வத்தில் அண்ணாந்து பார்த்த விலங்குகள் வெளிச்சம் தாங்காமல் எல்லாமே உடனே தங்கள் கண் பார்வையை இழந்தது.
அந்த கல் மோதும் முன்பே அது விழப்போகும் இடத்தை சுற்றி உள்ள காற்று திடீரென சூடாகி அந்த பகுதி விலங்குகள் கல் விழும் முன்பே எரிந்து போனது

.No automatic alt text available.

அந்த கல் பூமியை தாக்கிய போது அதன் வேகம் வினாடிக்கு கிட்ட தட்ட30 கிமி வேகம் . அதன் வெளி படுத்திய ஆற்றல் ஹிரோஷிமா வில் போடப்பட்ட குண்டை போல பல லட்சம் மடங்கு அதிகமாக இருந்தாதாம்.
அது மோதிய சில வினாடிகள் கழித்து அந்த பள்ளத்தை பார்த்தால் ஆச்சர்ய பட்டிருப்பீர்கள் .
அங்கே அந்த மலையை காண வில்லை. ஆம் மோதிய வேகமும் வெப்பமும் மொத்த மலையை உருக்கி சுற்றி படர விட்டு பாறையே ஆவியாக்கி வானத்தில் வீசி விட்டிருந்தது.

இந்த காட்சியை கானும் தூரத்தில் இருந்த விலங்குகள் அதே வினாடி வெப்பதில் கருகி விழுந்ததன.
இது இடித்த சில வினாடிகள் கழித்து மிக பெரிய வெப்ப அதிர்வளை ஒன்று கிளம்பி நீண்ட தூரம் வரை சென்று அடித்தது. 
மேலே இருந்து பார்த்தால் ஏதோ குளத்தில் கல்லை போட்டதை போல ஒரு அலை பரவியது போல் தெரிந்தாலும் அது தனது பாதையில் வந்த அணைத்து மரம் செடி கொடி விலங்குகளை சுட்டு பொசுக்கி தள்ளியது. எனவே இவ்விபத்து நடந்த இடத்தில் இருந்து பல கிமி தள்ளி இருந்த விலங்குகளும் செத்து ஒழிந்தன.

மோதல் நடந்த 8 நிமிடம் கழித்து சுற்று வட்டார நில பகுதிகள் டன் கணக்கில் சூடான சாம்பலில் மூழ்கடிக்க பட்டது. வானில் ஆவியாகி சென்றிருந்த பாறைகள் இபோது மழையாக பெய்ய தொடங்க..... பூமி வரலாற்றில் உயிரினங்கள் பார்த்திராத வகையில் பெய்ந்த முதல் நெருப்பு மழை அது.
அந்த துளிகள் விழுந்த இடம் மொத்தம் சந்தேகம் இன்றி சாம்பல் ஆனது.

மோதல் நிகழ்ந்த 45 நிமிடம் கழித்து காற்று அழுத்தத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்ததால் 960 கிமி வேகத்தில் ஒரு பயங்கர புயல் ஒன்று வீசியது.
மோதலுக்கு பல மணி நேரம் கழித்து வானம் சுத்தமாக ஒளியை உள்ளே விடாத ஒரு இருட்டு போர்வையாக மாறி இருந்தது. 
இதனால் மோதல் நடந்த பகுதிக்கு சுத்தமாக சம்பந்தமில்லா பூமியின் அடுத்த முனையில் வாழும் உயிரினங்கள் கூட தப்ப முடியவில்லை.

உள்ளே ஒளியை அனுமதிக்காத அந்த மேகங்கள் தொடர்ச்சியாக பல மாதங்களுக்கு இப்படியே நீடித்தது. உள்ளே மின்னலும் வெப்ப பொழிவும் தொடர்ந்து கொண்டே இருந்ததால் மொத்த பூமி பந்தை தூக்கி அடுப்பில் வைத்து விட்டதை போல மொத்த கிரகமும் சூடாகி கொதித்தது.
சூரிய ஒளி உள்ளே புக முடியா புகை மண்டலம் என்பதால் தினம் அங்கே எல்லா நேரமும் இரவு தான்.

டைனோசர் போன்ற பெரிய விலங்குகள் இப்படி உடனே உடனே மணிக்கு மணி நிமிஷத்துக்கு நிமிஷம் ஏற்பட்டு கொண்டிருந்த சூழ்நிலை மாற்றத்தை தாங்க முடியாமல் கொத்து கொத்தாக செத்து விழுந்தன.
குளோபல் வார்மிங் கட்டுக்கடங்காமல் போனது . லட்சம் கோடி டன் அளவு கார்பன்டை ஆக்சைடும் கார்பன் மோனாக்சைடும் வெளிப்பட்டு பூமியை சூழ்ந்தது.

Image may contain: outdoor, water and nature

அதன் பின்......
மோதல் விளைவாக பூமி வரலாற்றில் இது வரை வந்திராத அளவு 14.5 அளவுக்கு ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஒன்று பூமியை தாக்கியது.(2012 என்ற படத்தில் காட்ட படுவது 11.7 ரிக்டரின் விளைவு... அப்போ 14 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள்)
அதன் பின் விளைவாக இது வரை வந்தில்லாத பூமி வரலாற்றில் முதல் முறையாக 1000 அடி உயர சுனாமி வந்து தாக்கியது.

பூமி மிக பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி அதன் தட்டுகள் இடம் பெயர்ந்ததால் எரிமைலைகள் வெடிக்க தொடங்கின. 
அவைகள் வெளியேற்றும் டன் கணக்கான சாம்பல் அப்படியே பூமியை சூழ தொடங்கியது. முன்பு சொன்ன பூமியை சூழ்ந்த அடர் மேகத்துக்கு காரணம் இது தான். சூழ பட்ட பூமிக்குள் இருந்த விலங்குகள் தாவரங்கள் மொத்தமும் கருகி அழிந்து இருந்தாதால் உணவில்லாமல் தவித்தன பின் ஒன்றன் பின் ஒன்றாக துடித்து இறந்தன.

பூமியின் வாழ்க்கை பாதையில் இது மறக்க முடியாத நரக நாட்கள்.
ஆனால் எல்லா துன்ப நாட்களுக்கும் முடிவு உண்டு. மெல்ல மெல்ல காலம் செல்ல செல்ல மேகம் விலகியது ... ஒளி உள்ளே வந்தது.. காற்று சுத்தமாகியது. எரிமலை அடங்கியது பூமி ஒரு நிலைக்கு வந்தது.

ஆனால் இவையெல்லாம் நடந்த பின் பூமியில் எட்டி பார்த்த போது.
இந்த பூகம்பத்தில் ..சுனாமியில் .. அதிர்வலையில்... புயலில்... நெருப்பு மழையில் விஷ காற்றில் ... சூரிய ஒளி இல்லாத இருட்டில்....உணவில்லா சூழலில் பூமியின் கிட்ட தட்ட மொத்த உயிர்களும் துடைத்து எரிய பட்டிருந்தது.

10 கோடி ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த டைனோசர் மொத்த இனம் முடிவை சந்தித்தது. தப்பி பிழைத்து பூமியில் புதையுண்டு கிடந்த முட்டையில் இருந்து வெளிப்பட்ட சில டைனோசர்கள் உன்ன உணவு இல்லாமல் பரிதாபமாக இறந்து போனது.

பூமியின் இந்த மோசமான நாட்களை தாக்கு பிடிக்க முடியாமல் கிட்ட தட்ட மொத்த உயிரினங்களும் இறந்து போய் இருப்பது போல தெரிந்தாலும் உண்மை அதுவாக இருக்க வில்லை. கடலில் மிக பெரிய உயிர் கூட்டம் இன்னும் மிச்சம் இருந்தது. பூமியில் அடியில் சென்று வாழும் எலி போன்ற..... டைனோசர் நடந்த போது அதன் காலடியில் தவழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்த சில உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தது.

வரலாற்றில் டைனோசர் எனும் ஊர்வன வகுப்பின் சகாப்தத்தின் முடிவிற்கு வந்த பின் பூமி தனது அடுத்த காலடி வைப்புக்கு தயாராகியது. முன்பே குறிப்பிட்டது போல ஒரு அழிவிற்கு பிறகு அதை விட பயங்கர பிரமாண்டமான ஒன்றை படைக்கும் பழக்கம் கொண்ட பூமி தனது அடுத்த நகர்வை நிகழ்த்த தொடங்கியது.

பூமி அடியிலும் மரம் உச்சியிலும் உயிர் பிழைத்து இப்போதைக்கு அப்பாவி போல தவழ்ந்து கொண்டிருக்கும் அந்த உயிரினங்களை பார்த்து சிரித்தது பூமி.....

காரணம் ஊர்வன வகுப்பின் சகாப்தத்திற்கு பின் வரலாற்றை மாற்ற இருக்கும் ஒரு அறிவாளி விலங்கு வருகைக்கு இவைகள் தான் முன்னோடிகள் என்று பூமி தாய் க்கு தெரியும்...

அங்கே தவழ்ந்து ஓடி கொண்டிருந்த விலங்குகளுக்கு பெயர்.....

"பாலூட்டிகள் "

-பூமி இன்னும் சுழலும்..............

பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும்




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..