Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..)
Posted By:Hajas On 6/11/2017 4:39:02 PM

"பூமியின் (அ)பூர்வ கதை"

(பூமியின் மொத்த வரலாற்றில் ஒரு வேக பயணம்)

பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்)

 

(பாகம் :3) (நிலா நிலா ஓடி வா..)

#ரா_பிரபு

(பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்)

பிறந்த குட்டியாக எதை ஒன்றையும் பார்தாலும் பார்க்க மிக அழகாக இருக்கும் என்ற லாஜிக் பூமிக்கு பொருந்தாது. காரணம் பூமி பிறந்த போது அது ஒரு மிரட்டும் நரக கிரகம்.

அதன் பரப்புகளில் எட்டி பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உருகிய பாறைகளின் லாவா குழம்புகள் உலா வந்து கொண்டிருப்பதை காண முடியும்..

Image may contain: night
அந்த சூடான கொழ கொழ பாறை கூழால் தான் இந்த கிரகம் சூழ பட்டிருந்தது.
இந்நிலையில் பூமியின் சுழற்சி வேகம் இன்றை போல 24 மணி நேரமாக இருந்திருக்க வில்லை. அன்றைய ஒரு நாள் என்பது வெறும் 6 மணி நேரங்கள் மட்டும் தான்.

குறிப்பிட்ட காலத்திற்கு எல்லாம் கலந்த கலவையாக இருந்த பூமியின் தனிமங்களை தனித்தனி அடுக்குகளாக வரிசையாக அடுக்கிவைத்த புண்ணியம் பூமியின் ஈர்ப்பு விசையையே சாரும். அவைகள் இரும்பு நிக்கல் போன்ற கனமான தனிமங்களை பூமியின் மையத்திலும் ஏனைய கணம் குறைந்த தனிமங்களை படி படியாக மேல் அடுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாகவும் அடுக்கி வைத்தன.

மையத்தில் உள்ள இரும்பு நிக்கல் போன்றவையால் பூமிக்கு காந்த புலம் என்ற ஒன்று உருவாகி பூமியை ஒரு ராட்சத காந்தமாக மாற்றியது. இந்த காந்த புலங்கள் சூரியனில் இருந்து வரும் சக்தி யூட்ட பட்ட துகள்களில் இருந்து சூரிய புயலில் இருந்து பூமியை காக்க தொடங்கின. இன்றும் காத்து கொண்டு இருக்கின்றன.

இப்படி ஆர்பாட்டமாக சுற்றி சுழன்று கொண்டிருந்த பூமியின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத விபத்து ஒன்று ஏற்பட்டது... மோதல் விபத்து.

அதாவது கிட்ட தட்ட 450 கோடி ஆண்டு முன் இளைய பூமியை விண்வெளி பொருள் ஒன்று மிக வேகமாக தாக்கியது.

Image may contain: night

தாக்கிய அந்த பொருள் ஏதோ சிறிய விண்கல் அல்ல (பூமி வரலாற்று பாதையில் விண்கல் மோதல் என்ற ஒரு நிகழ்வும் நடக்க இருக்கிறது ஆனால் இப்போது இல்லை அதற்கு இன்னும் சில கோடி ஆண்டுகள் செல்ல வேண்டும். நியாபகமாக இக்கட்டுரை தொடரின் 7 வது அத்தியாயத்தில் அதை பற்றி சொல்கிறேன்)

மோதிய அந்த பொருள் ஒரு முழு கிரகம் அதன் அளவு கிட்ட தட்ட இன்றைய செவ்வாய் கிரகம் அளவு. அது மோதிய வேகம் அசுர தனமான மணிக்கு கிட்ட தட்ட நாற்பது ஆயிரம் கிலோ மீட்டர் வேகம்.

அந்த தாக்கத்தால் பூமி மிக பெரிய அளவில் பாதிக்க பட்டது அதன் உடலில் ஒரு சிறிய பகுதி பிய்த்து எறிய பட்டு அவைகள் ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து பிறகு பூமியை தொடர்ந்து சுற்ற ஆரம்பித்தது. பிற்காலத்தில் "நிலா " என்று அழைக்க பட்டு கவிஞர்கள் கவிதை எழுத ...குழந்தைகளுக்கு காட்டி சோறூட்ட பயன்பட்டது.

(பிய்த்து எறிய பட்ட இடத்தில உண்டான பள்ளங்கள் தான் பிற்காலத்தில் தன்னீர் நிரப்ப பட்டு கடல்கள் என்று அழைக்க பட்டன. இன்று நிலாவின் பருமன் எவ்வளவு உள்ளது என்று கணக்கு போட்டு பார்த்த ஆய்வாளர்கள் அதை உடைத்து தூள் ஆக்கி நமது கடலில் போட்டு நிறப்பினால் கிட்ட தட்ட பூமியின் கடலை தூர்க்கும் அளவு சரியாக நிலா இருப்பதாக சொல்கிறார்கள்)

மோதலில் தான் காதல் உண்டாகிகிறது பிறகு வாழ்க்கை துணை கிடைக்கிறது என்ற சினிமா லாஜிக்கிற்கு ஏற்ப பூமி மோதலுக்கு பின் தனக்கு என்று ஒரு துனையை அதாவது துணை கிரகத்தை உண்டாக்கி கொண்டது.

Image may contain: text
அந்த துணை கிரகம் சும்மா வெட்டியாக சுத்தி வரவில்லை. பூமியில் பல விஷயங்களை அது நிர்ணயிக்கிறது.(கணவன் செயல்பாட்டில் பின்னணியில் இருந்து உதவும் மனைவியை போல்) குறிப்பாக பூமியின் பருவநிலை.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து கொண்டு சுற்றுவதால் தான் பருவ மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று நமக்கு தெரியும். சரி இதில் நிலவின் பங்கு என்ன?

ஒரு மைதானத்தில் சங்கிலியால் கட்ட பட்ட இரும்பு குண்டு ஒன்றை ஒருவர் கையால் பிடித்து வேகமாக சுற்றுவதாக கற்பனை செய்யுங்கள் .இப்போது அவர்
அந்த குண்டின் எடையால் பாதிக்க பட்டு ஒரு குறிப்பிட்ட பேலன்ஸ் இல் சுழல்வதை பார்க்கலாம் .அந்த குண்டு இவரை இழுத்து கொண்டு சுற்றும். திடீரென அதை விடுத்தால் அவரும் அந்த சூழல் பேலன்ஸ் இல் இருந்து விடு 
படுவார் அல்லவா.

அப்படி தான் நிலாவின் ஈர்ப்பு விசையால் பூமி தனக்கும் நிலவுக்கும் ஒரு கற்பனை கயிறு கட்டி விட்டதை போல அதை இழுத்து கொண்டு சுற்றி வருகிறது. மேலும் 'பூமி பெலன்ஸி'ல் நிலா முக்கிய பங்கு வகிக்கிறது. நிற்க போகும் பம்பரம் போல பூமி தலை ஆட்டி நிலையில்லாமல் சுற்றாமல் நிலையான சுழற்சிக்கு இது உதவியாக இருக்கிறது. 
பூமி இப்போது இருக்கும் அச்சில் சூழல இதுவும் ஒரு காரணம். அப்படி அந்த அச்சில் சுழல வில்லை என்றால் பருவங்கள் ஏற்பட்டிருக்காது.

இது தவிர நிலவின் ஈர்ப்பு விசை இன்னோரு காரியத்தை செய்தது பூமியை இழுத்து பிடித்து 6 மணிநேரமாக இருந்த பூமியின் சுழற்சி வேகத்தை படி படியாக குறைத்து 24 மணி நேரமாக மாற்றியது.

இப்படி சுற்றி திரிந்து கொண்டிருக்கும் இந்த சூழல் பூமியில் உயிரினங்கள் ஏதும் இன்றி கிட்ட தட்ட 80 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.
காரணம் உயிரினங்கள் உண்டாக மிக முக்கிய தேவை ஒன்று இருந்தது.
"நீர் இன்றி அமையாது உலகு" என்று வள்ளுவன் அப்போதே சொல்லி விட்டு போன நீர்.
பூமியின் அடுத்த கட்ட தேவையாக இருப்பது நீர் உருவாக்கம். 
அது எப்போ எப்படி உண்டாகியது என்ற தகவல்கள் அடுத்த பாகத்தில்............

_பூமி இன்னும் சுழலும்.........

 






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..