Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....!!
Posted By:peer On 5/23/2017 1:23:51 PM

benadryl pregnancy category

benadryl and pregnancy

ராஜேஸ்குமார் கிரைம் நாவல் படித்தவர்களுக்கு தெரியும், சென்னையில் கதை துவங்கும், அங்கே ஒரு கொலை நடக்கும், மற்றொரு பாகம் சிங்கப்பூரில் துவங்கும், அங்கேயும் ஒரு கொலை நடக்கும். அடுத்த பாகம் ஏதாவது ஒரு கிராமத்தில் துவங்கும். அங்கேயும் ஒரு கொலை நடக்கும். மூன்று சம்பவங்களுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு இருக்காது. ஆனால் கடைசியில் கதை முடியும் போது மூன்று சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவரும். மூன்று சம்பவங்களிலும் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்கள் என்று கொண்டு வந்து முடிப்பார் ராஜேஸ்குமார்.

 

 

ராஜேஸ்குமார் நாவலைப் படிப்பது போல தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு விசயமும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததைப் போல தோன்றினாலும் எல்லாவற்றிலும் புள்ளிகளை வைத்து அதை இணைத்தால் அது கடைசியில் RSS பயங்கரவாதிகளிடத்தில் போய்தான் முடியுமோ என்றே கருதத்தோன்றுகின்றது.

மே 1 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஒரு வெடிகுண்டு லாரி பிடிபடுகின்றது. அழுத்திச் சொல்லுங்கள், பிடிபட்டது பட்டாசு லாரி அல்ல! கல்குவாரியில் வைக்கும் வெடிகுண்டும் அல்ல! வெடித்தால் 4 கிலோமீட்டர் தொலைவை நாசமாக்கும் வெடிகுண்டுகள் இருந்த லாரிதான் பிடிபட்டது. அந்த லாரி கோவையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது.

அந்த சம்பவத்தில் சிக்கியவர்கள் மோகன், ராஜ்குமார் ஆகியோர் ஆவர். இவர்கள் இரண்டு பேரும் முஸ்லிம்கள் இல்லை என்பதால் என்னவோ இந்த வழக்கில் மீடியாக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அவர்களை அனுப்பியது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பதும் தெரியவந்தது.

ஆரம்பத்தில் வெடிகுண்டு லாரி பிடிபட்டது என்று கூறிய மீடியாக்கள் அதன்பிறகு டாஸ்மாக் லாரியில் ஒரே ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தங்கள் செய்தியை மாற்றி கொண்டார்கள். ஆக வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது உண்மை, ஆனால் ஊடகங்களில் யாரும் இதை ஆயுத எழுத்தில் பேசவில்லை, நேர்பட பேசுவில் பேசவில்லை, விவாத மேடை ஏற்றவில்லை, கேள்வி நேரமாகவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அடுத்து அமித்ஷாவின் தமிழகப் பயணம். தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளவும் தமிழக பாஜகவில் நிகழும் குழாயடிச் சண்டைக்கு பஞ்சாயத்து பேசவும் தமிழகம் வருவதாக இருந்தார் அமித்ஷா. அமித்ஷாவைப் பற்றி இங்கே கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜகவில் உள்ளவர்களில் அதிக (குறுக்கு) புத்திக்கூர்மை கொண்டவர் அமித்ஷா மட்டுமே! தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்ட வைக்கும் வித்தையைக் கற்ற அசாத்திய திறமை வாய்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர் அமித்ஷா.

மோடி என்ற ஒன்றுக்கும் உதவாத உப்பு மண்ணை வைரக்கல் என சொல்லி மக்களிடம் ஜொலிக்க வைத்தவர் அமித்ஷா. சமர்பதி பெட்டியை எரித்து அதன்மூலம் கலவர நெருப்பைப் பற்ற வைத்து 3 ஆயிரம் முஸ்லிம்களை கதறக் கொன்ற கலவரத்தின் சூத்திரதாரி இந்த அமித்ஷா. ஆர்.எஸ்.எஸ் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அத்வானி, முரளிமனோகர் ஜோஸி, உமாபாரதி, வாஜ்பாய் குரூப்பை அப்பளம் ஊருகாய் விற்றுப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளியவர் இந்த அமித்ஷா. ஓட்டு மெசினில் எந்த பட்டனை அமுக்கினாலும் அது தாமரைக்கு தண்ணீர் பாய்ச்சும் வித்தையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இந்த அமித்ஷா.

அமித்ஷா திறமை வாய்ந்தவர் மட்டுமல்ல! சரியான திட்டமிடலாளர். நேரம் தவறாமை இவரது தாராக மந்திரம், சோம்பேறிகளின் பகைவன் இந்த அமித்ஷா. அமித்ஷா கிங் அல்ல, ஆனால் சப்பை குப்பைகளைக் கூட கிங் ஆக்கும் வித்தை தெரிந்த கிங் மேக்கர். அப்பேர்ப்பட்டவர் தமிழகத்திற்குள் கால் வைக்கத் தயாரானார். ஏன்?

தமிழக பாஜகவில் நடக்கும் குழாயடிச் சண்டை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகின்றது. தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் இரட்டை இலை மூலமாக சுவாசித்துக் கொண்டு மரணப் படுக்கையில் கிடக்கும் தாமரையின் கழுத்தை ஆளாளுக்கு நெறித்தால் தாமரை செத்தே போய் விடும் என்பதற்காகவே அமித்ஷா தமிழகம் வர இருந்தார்.

தமிழிசை ஒருபுறம் ஆள் திரட்டி நிற்க, பொய்வாயர் பொன்னார் ஒரு பக்கம் ஆள் திரட்டி நிற்க, கருப்பு.முருகானந்தம் தலைவர் நாற்காலியைப் பிடிக்கத் தயாராக, வானதி சீனிவாசன் தன்னிடம் உள்ள கம்ப்யூட்டர் படையை ஏவி தமிழிசையை கிழி கிழியென கிழித்து அடுத்த தலைவர் வானதிதான் என கிளப்பி விட சென்னைத் தரைப்படை குழாயடிச் சண்டை விட சுவாரஸ்யமாக தமிழக பாஜகவின் தலைவர் நாற்காலிச் சண்டையால் தமிழக பாஜக தத்தளித்து நிற்கின்றது. அதை சமாதானம் செய்யவும், தமிழகத்தில் பெரிய தலைவர்கள் இல்லாத நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் மே 10 மற்றும் 11 ஆம் தேதி சென்னைக்கும் மே 12 ஆம் தேதி கோவைக்கும் வர இருந்தார் அமித்ஷா!

அமித்ஷாவின் அரசியல் வரலாற்றில் இதுவரை அறிவிக்கப்பட்ட எந்த அரசியல் பயணமும் ரத்து செய்யப்பட்டது கிடையாதாம். அமித்ஷாவின் பயணம் இன்ச் பை இன்சாக ஆய்வு செய்யப்பட்டுத்தான் வகுக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இவ்வளவு தெளிவாக தமிழகப் பயணம் திட்டமிடப்பட்டு திடீரென மே 6 ஆம் தேதி அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்து தஞ்சையில் சாஸ்த்திரா யுனிவர்சிட்டியில் கடந்த மே 12 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் ஆயுத மற்றும் வெடிகுண்டு பயிற்சி எடுக்கும் சாகா பயிற்சி முகாம் நடைபெற்றது. 143 இளம் காவி பயங்கரவாதிகள் இந்த முகாமில் கலந்து கொண்ட இந்த முகாமின் கடைசி நாள் பயிற்சி அளிக்க கடந்த 12 ஆம் தேதி தஞ்சை வந்துள்ளார் RSS தீவிரவாத தலைவன் மோகன் பகவத்.

சரி மேலே சொன்ன மூன்று சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவைதான். ஆனால் ராஜேஸ்குமார் பாணியில் பொருத்திப் பார்த்தால் ஏதாவது சிக்கலாம்.

வெடிக்குண்டு லாரி பிடிபட்ட இடம் தஞ்சை மாவட்டத்திற்கு அருகில் உள்ள குடவாசல். வெடிகுண்டு லாரி புறப்பட்ட இடம் கோவை. வெடிகுண்டு லாரியை அனுப்பியதாகச் சொல்லப்படும் ரமேஷ் சென்னை.

அமித்ஷா முதலில் வர இருந்த இடம் சென்னை. அடுத்து வர இருந்த இடம் கோவை. அமித்ஷாவின் திட்டமிட்ட பயணம் இதுவரை ரத்தானது இல்லை. வெடிகுண்டு லாரி பிடிபட்டவுடன் அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஒருவேளை வெடிகுண்டு லாரி பிடிபடவில்லையென்றால் நடக்க வேண்டியது நடந்து இருக்கும் அமித்ஷாவும் தமிழகம் வந்திருப்பார் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

ஆர்.எஸ்.எஸின் பயிற்சி முகாம் நடைபெற்ற சாஸ்த்ரா யூனிவர்சிட்டி இருக்கும் தஞ்சை மாவட்டத்திற்கு அருகில்தான் குடவாசல் இருக்கின்றது. அதுமட்டுமின்றி RSS பயங்கரவாதிகளின் சாகா பயிற்சி என்பது துப்பாக்கிகள் வெடிகுண்டுகள் கையாள்வது பற்றிய பயிற்சியாகும். மே 12 ஆம் தேதி அமித்ஷா கோவையில் இருக்க, அதே மே 12 மோகன் பகவத் தஞ்சையில் இருப்பதாக பிளான் போடப்பட்டுள்ளது.

மே 12 ஆம் தேதி பாருங்கள் நாங்கள் யார் என்று தெரியும் என்று சில சங்பரிவார பயங்கரவாதிகள் முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். அதையெல்லாம் பொருத்திப் பார்க்கும் போது லாரியில் வந்த வெடிகுண்டு சாகா பயிற்சிக்காக வந்ததா? அல்லது அமித்ஷா வரும் அதே நாளில் சாஸ்த்திரா யூனிவர்சிட்டியில் பயிற்சி பெற்ற இளம் தீவிரவாதிகள் கூட்டத்தில் குண்டை வெடிக்கச் செய்து சாக்கா தீவீரவாதிகளுக்கு சங்கை ஊதி விட்டு அதை வைத்து ஏதேனும் பெரிய வன்முறையை தூண்டுவதற்கு திட்டம் போட்டார்களா என்பது மர்மமாகவே உள்ளது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பழைய புத்தகக் கடையில் வாங்கிய ராஜேஸ்குமார் நாவலில் கடைசிப் பக்கம் இல்லாமல் போனால் எப்படி இருக்குமோ அதேநிலைதான் இந்த மூன்று சம்பவங்களுக்கும் முடிவு கிடைக்காமல் போனதன் நிலையும்!

இந்நேரம் அந்த வெடிகுண்டு லாரியில் ஏதாவது ஒரு இஸ்லாமிய பிச்சைக்காரர் பயணித்திருந்தால் கூட அனைத்து மீடியாக்களும் வரிந்து கட்டிக் கொண்டு 4 நாளைக்கு விவாதம் நடத்தியிருக்குமே! இப்போது எல்லா மீடியாவும் தூங்கி விட்டதே!

ஊடகங்கள் மௌனம் கலைக்காதோ ?







General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..