Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு
Posted By:peer On 11/5/2016 11:59:18 AM

 

பெண்கள் குறிப்பிட்ட கோவிலுக்குள் நுழைய முடியாமல் இருப்பது அரசியல் சட்டத்திற்கு உட்படாதது, விமர்சன படுத்த கூடாது, நம்பிக்கை!

குறிப்பிட்ட கோவிலில் சட்டை அணியாமல் வர சொன்னால் கழட்ட வேண்டும், அரசியல் சட்டத்திற்கு உட்படாதது, விமர்சன படுத்த கூடாது, நம்பிக்கை!

பிராமணர் அல்லாத ஆண்கள், பொதுவில் பெண்கள் குருக்கள் ஆகி கடவுளுக்கு சேவகம் செய்ய முடியாது, அரசியல் சட்டத்திற்கு உட்படாதது, விமர்சன படுத்த கூடாது, நம்பிக்கை!

சைவர்கள் ஒன்லி, பிராமணர்கள் ஓன்லி குடியிருப்புகள் கட்டி கொள்வார்கள், அதை பொதுவில் விளம்பர படுத்துவார்கள், இன்னாருக்கு கிடையாது என பகிரங்கமாக சொல்வார்கள், அது அரசியல் சட்டத்திற்கு உட்படாதது, விமர்சன படுத்த கூடாது, சுதந்திரம்!

மதசார்பற்ற நாடான அரசு அலுவலங்களில், இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் மற்றும் எல்லா மதத்தவரும் சேர்ந்து வரி கட்டி நடத்தப்படுகிற அரசு இயந்திரத்தில் ஆயுத பூஜைக்கு பட்டை போடுவார்கள், ராக்கட் விடும் போது யாகம் நடத்துவார்கள், தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் மாற்றி செல்லும் போது அந்த இருக்கையை அகற்றி ஹோமம் செய்வார்கள், அது அரசியல் சட்டத்திற்கு உட்படாதது, விமர்சன படுத்த கூடாது, நம்பிக்கை!

ஹிந்து கோட் பில் (Hindu Code Bill) பேச்சு வந்த போது, ஹிந்து அடிப்படைவாதிகள் அதை கடுமையாக எதிர்த்தார்கள், குதித்தார்கள் பலமுறை தள்ளி போடப்பட்டது, அது அரசியல் சட்டத்திற்கு உட்படாதது, விமர்சன படுத்த கூடாது, நம்பிக்கை!

பெண்களுக்கு சொத்தில் சரிக்கு சமமான நிலைப்பாட்டை எடுக்க சட்டம் கொண்டு வந்த போது, பெண்கள் சீரழிந்து விடுவார்கள், இது மஹா தப்பு என கூட்டமாக ஒரு சிம்பனியே நடத்தினார்கள், அன்றைய தேதிக்கு அது அரசியல் சட்டத்திற்கு உட்படாதது, விமர்சன படுத்த கூடாது, நம்பிக்கை!

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்,

இவையெல்லாம் அரசியல் சட்டத்திற்கு உட்படாமல் நம்பிக்கையாக இருக்கும் போது, Uniform civil Code வந்து தான் Constitution னை காப்பாற்ற போறாங்களாம்! அது வேண்டுமா வேண்டாமா என்பது தனிப்பட்ட விவகாரம், ஆனால் சமூக சீர்திருத்தத்துக்கு தான் இந்த அரசு அக்கறையோடு செய்கிறது என இஸ்லாமிய மக்கள் நம்ப வேண்டுமானால், அதற்குண்டான தகுதியை காவி அரசு உருவாக்கி கொள்ள வேண்டும்!

81% ஹிந்து மத மக்களின் நம்பிக்கை என்கிற பெயரிலான அடிப்படை வாதத்தை சீரமைக்கும் பணியை முதலில் செய்து விட்டு, பிறகு சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொள்ளட்டும்!

கற்பதாலும், பின்பற்றுவதால் ஒருவனால் இங்கே பாஸ்டர் ஆக முடிகிறது, கற்றாலும் மத நம்பிக்கையை பின்பற்றினாலும் இங்கே ஒருவன் கருவறைக்குள் நுழைய பிறப்பு எடுத்து வர வேண்டும் என்கிற சட்டத்தை முதலில் தூக்கி எறிந்து விட்டு வரும் வரை, உங்களின் சமூக அக்கறைக்காக காத்து கொண்டிருக்கிறோம் என்பதனை,

என் இனிய காவிகளே, உங்கள் பாசத்திற்குரிய ஹிந்து மக்களாகிய நாங்கள், உங்கள் முகரைகளில் படிந்திருக்கும் கிரீஸ் டப்பா கருப்பை துடைத்து விட்டு, Fair & Lovely விளம்பரத்தில் நடிப்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறோம்! உங்கள் க்ரீமுக்கு உங்கள் முகம் வெளுப்பாகும் போது, கரிசல் காட்டில் பிறந்து உழைத்ததாலவே கருப்பாகி போன நாங்கள் அந்த க்ரீமை வாங்க காத்து இருக்கிறோம்!

நன்றி: வாசுகி பாஸ்கர்

Hindu Code Bill: https://www.quora.com/What-was-HINDU-Code-Bill 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..