Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் !
Posted By:peer On 10/29/2016 7:55:48 AM

cheap abortion pill kit online

cheap abortion clinics in memphis tn click here

இன்டியாஸ்பென்ட் பத்திரிக்கை ஆய்வின்படி உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் இராஜஸ்தான் ஆகிய ‘பாரத தேச’த்தின் பார்ப்பனிய மாநிலங்கள் பெண்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 மற்றும் தேசியக் குற்றப்பதிவு மையத்தின் மாதிரிப்பதிவு மதிப்பாய்வு – 2014 லுள்ள எட்டு குறியீட்டு எண்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வறிக்கையை அப்பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகிறது

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகிறது

 


உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 21 இலட்சம் பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்படுகின்றது. அதுவே மேற்குவங்கத்தில் 13 இலட்சமாகவும் பீகாரில் 12.5 இலட்சமாகவும் இருக்கிறது. நான்கில் ஒரு இராஜஸ்தான் பெண்ணிற்கு 18 வயது முடியும் முன்னரே திருமணம் நடக்கிறது.

மேற்குவங்கத்தில் பெண்களின் சராசரித் திருமண வயது 19.3 ஆக இருக்கிறது. உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் சராசரி திருமண வயது 19.4 ஆக இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில் பிரசவிக்கும் ஒவ்வொரு இலட்சம் பெண்களில் 29 பெண்கள் உயிரிழக்கிறார்கள். அடுத்தநிலையில் இராஜஸ்தானில் 23.9 பெண்களும், பீகார் மற்றும் ஜார்கண்டில் 21.4 பெண்களும் பலியாகின்றனர்.

ஜூன் – 2016 -ல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஒருத்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தனியார் மருத்துவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதி ஏழை இந்தியப்பெண்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கவேண்டும் என்பதுதான் அது. அதாவது வருடம் முழுவதும் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடித்து விட்டு மாதம் ஒரு நாள் இலவச உபாசம் இருந்து ஏழைகளுக்கு அருள்பாலிக்க வேண்டுமாம்.

அரசு மருத்துவமனைககளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளைப் மேம்படுத்துதல் போன்ற இன்றியமையாத செயல்திட்டங்கள் மூலமே ஏழைகளைப் பாதுகாக்கமுடியும். இதை மறுத்து விட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சுரண்டலை மறைப்பதற்கு இப்படி ஒரு நாடகம்!

இராஜஸ்தானில் ஐந்தாவது வகுப்பு செல்லும் முன்னரே 40 விழுக்காட்டு பெண் குழந்தைகள் பள்ளிகளிலிருந்து விலக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான இந்திய மக்கள் கருதுவதை விட அதிகமாக பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பெண் குழந்தைகளை சுமையாக கருதுவதால் பதின்மபருவத்தை எட்டும் முன்னரே திருமணம் செய்கின்றனர். இந்தியாவில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்களுக்கு 18  வயதிற்கு முன்னரே திருமணம் செய்யப்படுகின்றது.

பதினைந்து வயதிற்குள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகும் இந்தியப்பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் அதிகமாகும் (2014-ம் ஆண்டின் படி). இது 2001 ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 1.7 இலட்சத்தை விட 88 விழுக்காடுகள் அதிகமாகும். இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.  எந்த மதமாக இருந்தாலும் பிற்போக்காக இருப்பதில் பெரிய வேறுபாடு இல்லை. இதில் கூடுதலாக முசுலீம்கள் பிற்போக்கான நடவடிக்கைகளை பின்பற்றுவதாக உதார் விடும் இந்துமதவெறியர்களே இந்தயாவின் பெண்ணடிமைத்தனத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர்.

இந்தியாவில் ஆண்-பெண் பாலின விகித வேறுபாடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரியானாவில் குழந்தை பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 834 பெண்களாகவும், அதுவே பஞ்சாப்பில் 846 ஆகவும் இருக்கிறது. புள்ளிவிவரங்களில் சிற்சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்தியா முழுதும் இதே அவலநிலைதான். குறிப்பாக பார்ப்பனிய இந்துமதவெறியர்கள் செல்வாக்கோடு இருக்கும் வட இந்திய (இந்து பேசும்) மாநிலங்களே பெண்களை ஒடுக்கி ஆளும் காட்டுமிராண்டித்தனத்தில் முன்னணியில் இருக்கின்றன. பெண்ணை தாயாக போற்றும் இந்துத்துவ மரபின் உண்மை முகம் இதுவே.

 

இந்தியாவில் சுமார் 1.2 கோடி குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதில் இந்துக்களின் எண்ணிக்கை 84 விழுக்காடும் என்றும் இசுலாமியர்களின் எண்ணிக்கை 11 விழுக்காடும் ஆகும்.


இந்தியப் பெண்களில் 1.9 கோடி பேர்கள் ஏழு குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே 10 ஆண்டுகளை உத்திரப்பிரதேசப் பெண்கள் செலவிடுகின்றனர். உத்திரபிரதேச மக்களின் சராசரி ஆயுட்காலமான 60 ஆண்டுகளில் ஆறில் ஒரு பங்கு இப்படியாக வீணாகிறது.

பெண்களுக்கு கிடைக்கும் உயர் கல்வியறிவு குழந்தைப்பிறப்பு விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுத் தாக்கத்தைச் செலுத்துகிறது. பட்டதாரியாக உள்ள பெண்களின் குழந்தைப் பிறப்பின் விகிதம் 1.9 ஆக இருக்கும் அதேநேரத்தில் கல்வியறிவு மறுக்கப்பட்ட பெண்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் 3.8 ஆக இருக்கிறது.

பெரும்பாலான இந்தியப்பெண்கள் பள்ளிப்படிப்பை முடித்து பட்டதாரியாவதற்கும் பணிக்குச் செல்வதற்கும் இந்தியச்சமூகத்தில் நிலவும் சாதி,மத மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் தடையாய் இருக்கின்றன. இந்தியாவின் நகரங்களில் நூற்றில் 14 பெண்களும் கிராமபுறங்களில் நூற்றில் ஒருப்பெண் மட்டுமே 12 ம் வகுப்பை முடிக்கிறார்கள் என்று தனியார்த் தொண்டுநிறுவனத்தின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

பீகார், இராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள், பெண்களின் கல்வியறிவில் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. 2010-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி இந்தியப்பெண்களின் சராசரி பள்ளிவாழ்க்கை 4.1 ஆண்டுகளாகவும் ஆண்களின் சராசரி பள்ளிவாழ்க்கை 6.1 ஆண்டுகளாகவும் ஆகவும் இருக்கிறது. இந்த இலட்சணத்தில் மேட்டுக்குடி கல்விக்காக இந்திய அரசு செலவழிக்கும் பணத்தை ஒப்பிட்டு பாருங்கள்!

ஐக்கியநாடுகளுக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்(UNESCO) தகவலின்படி பெண்குழந்தைகளின் வருகைப்பதிவு தொடக்கப்பள்ளியில் 81 விழுக்காடாக இருக்கிறது. அதுவே இரண்டாம் நிலைப்பள்ளிகளில் 49 விழுக்காடுகளாக தேய்ந்துவிடுகிறது. சமூகப்பொருளாதர ஏற்றத்தாழ்வு சீரழிவில் சிக்கித்திணறும் இந்தியச்சமூகத்தில் பாலின வேறுபாடு சிறுவர்களின் கல்வியையும் விட்டுவைப்பதில்லை. பெண்கள் வேலைக்கு போகக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவரும், சங்கரசாச்சாரிகளும், வகாபிய மதவெறியர்களும் பத்வாக்களை விதிப்பதின் சமூக அவலமே மேற்கண்ட நிலை.

15 வயது முதல் 25 வயது வரையிலான இந்தியப்பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் படிப்பறிவு மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அனைவருக்கும் கல்வி என்ற ஒரு பொது இலக்கை அடைவதில் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் கூறுகிறது.

மோடியின் ஆட்சி ஆடி கார் கிடைக்குமிடமாக இந்தியாவை மாற்றியிருக்கிறதே அன்றி பெண்கள் முன்னேறும் நாடாக மாற்றவில்லை! மூச்சுக்கு மூச்சு பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண்களுக்கு கழிப்பறைகள் என்று உச்சாடனம் செய்யும் ஆளும் வர்க்கம் நம் நாட்டின் சரிபாதி மக்களான பெண்களை எவ்வளவு கொடிய நரகத்தில் தள்ளியிருக்கின்றன என்பதற்கு இவ்விவரங்களே சான்று!

இந்துமதவெறியர்களின் இருப்பு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை பெண்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் ஒழிப்பு போரில் பெண்கள் படையாக கிளம்பி வரவேண்டும்!

– சுந்தரம்






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..