Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 19
Posted By:Hajas On 10/11/2016 12:22:20 PM

amitriptyline for pain

amitriptyline alcohol death jlopresti.fr

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

தொடர் 2: வேற்றுக்கிரகவாசிகள்

Episode 18: மனிதர்களது  பறக்கும் தட்டு v/s, வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டு


Episode 19: பறக்கும் தட்டுக்குரியோர் யார் 



அறிமுகம்:
சென்ற தொடரில் சொல்லப்பட்ட பல கருத்துக்களைத் தகுந்த மார்க்க ஆதாரங்களுடன் நிரூபிக்கும் விதமாகவே இந்தத் தொடர் அமைந்திருக்கும். இதுவரை கூறப்பட்ட பல மர்மங்களை இஸ்லாத்தின் வெளிச்சத்தில் நோக்கும் தொடர் இது தான். இந்தத் தொடரில் தான் அனைத்து மார்க்க ஆதாரங்களும், ஜின்கள் குறித்த மார்க்க நிலைபாடுகளும், தகுந்த விளக்கங்களும் உள்ளடக்கப் பட்டிருக்கும் இன் ஷா அல்லாஹ். எனவே, ஜின்கள் குறித்த இந்த நெடுந்தொடரையொட்டி யாராவது என்னோடு விவாதிப்பதாக இருந்தால், இந்தத் தொடரையொட்டியே விவாதிக்க வேண்டியிருக்கும்.

ஆரம்பம்:
சென்ற தொடரில் நாம் பறக்கும் தட்டுக்குரியோரைப் பற்றியும், அவர்களது மர்மம் மிக்க நடவடிக்கைகள் பற்றியும் ஓரளவுக்குப் பார்த்தோம். இறுதியில் இவர்கள் யார் என்ற கேள்வியோடு தொடரை நிறைவு செய்தோம். இந்தக் கேள்விக்கான விரிவான பதிலோடு தான் இந்தத் தொடர் ஆரம்பிக்கிறது.

பறக்கும் தட்டுக்குரியோர் யார் என்ற கேள்விக்கான ரத்தினச் சுருக்கமான பதில், இவர்கள் வேறு யாருமல்ல; ஜின் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான். இனி இந்தப் பதிலின் விரிவான வடிவத்தைத் தகுந்த நியாயங்களோடு பார்க்கலாம்.

நியாயம் 1:
இந்தப் பிரபஞ்சத்தில் மனித அறிவுக்குப் புலப்படாத பரிமாணங்களில், எங்கெல்லாம் பகுத்தறிவும், ஆசாபாசங்களும் வழங்கப்பட்ட ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் ஜின்கள் என்ற பட்டியலுக்குள் தான் நாம் சேர்க்க வேண்டும். இது தான் மார்க்கத்தின் நிலைபாடு.

இவ்வளவு பிரும்மாண்டமான பிரபஞ்சத்தில், சுயமாக சிந்தித்துத் தீர்மாணிக்கும் ஆற்றலோடும், பகுத்தறிவோடும், ஆசாபாசங்களோடும் அல்லாஹ்வால் இதுவரை படைக்கப் பட்ட ஒட்டுமொத்த ஜீவராசிகளையும் இஸ்லாம் இரண்டே இரண்டு இனங்களுக்குள் தான் அடக்குகின்றது. ஒன்று மனித இனம்; மற்றது ஜின் இனம்.

இந்த இரண்டு இனங்களையும் தாண்டிய மூன்றாவது ஓர் இனத்தை அல்லாஹ் படைத்ததாகவோ, அவ்வாறான வேறு இனங்கள் இருப்பதாகவோ மார்க்கம் எந்த இடத்திலும் குறிப்பிடவேயில்லை.

ஆகவே, இந்த அடிப்படையின் பிரகாரம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதலாவது உண்மை என்னவென்றால், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் வாழும் ஜீவராசிகளுள், மனித இனத்தை சாராத, பகுத்தறிவு கொண்ட ஏனைய அனைத்து ஜீவராசிகளையும் ஜின்கள் எனும் இனத்துக்குள் தான் நாம் உள்ளடக்க வேண்டும். அது எப்படிப்பட்ட ஜீவராசியாக இருந்தாலும் சரியே. இது தான் மார்க்கத்தின் நிலைபாடு. இந்த அடிப்படையில் தரம்பிரிப்பது தான் இஸ்லாத்தை நம்பும் ஓர் ஆய்வாளனின் கடமை.

எனவே, இந்த நிலைபாட்டுக்கு அமைய, பறக்கும் தட்டுக்களில் தோன்றக் கூடிய மர்ம இனத்தவரையும் ஜின்கள் என்ற இனத்துக்குள்ளேயே நாம் சேர்க்கிறோம். இந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இனி ஒருசில மார்க்க ஆதாரங்களைக் கொஞ்சம் விரிவாக அலசலாம்:

ஆதாரம் 1:
நிச்சயமாக ஓசை தரக்கூடிய கருப்புக் களிமண்ணால் நாமே மனிதனைப் படைத்தோம்.
(அதற்கு) முன்னர் ஜின்னை கடும் வெப்பம் கொண்ட நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
(அல் குர்ஆன் 15 : 26-27)

இந்த வசனத்தின் மூலம், மனிதனைப் படைப்பதக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இந்தப் பிரபஞ்சத்தில் பரந்து வாழக்கூடிய பகுத்தறிவு வழங்கப்பட்ட ஜீவராசிகளாக ஜின்களை மட்டும் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். மனிதரோ, அல்லது ஜின்களோ அல்லாத மூன்றாவதோர் இனத்தை அல்லாஹ் படைத்திருந்தால், அதைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு மிகவும் தகுந்த தருணம் இந்த வசனம் தான். ஆனால், அப்படியெந்தக் குறிப்பும் இந்த வசனத்தில் மட்டுமல்ல; குர்ஆனில் வேறெந்த வசனத்திலும் கூட சுத்தமாக சொல்லப்படவே இல்லை.

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மறைமுகமான உண்மை என்னவென்றால், பகுத்தறிவோடும், ஆசாபாசங்களோடும் இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஜீவராசிகள் இரண்டு தான். ஒன்று மனித இனம்; மற்றது ஜின் இனம். மூன்றாவது ஓர் இனம் இல்லை; இருந்திருந்தால் மார்க்கத்தில் எங்காவது ஓர் இடத்திலாவது அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது நிச்சயமாக சொல்லப் பட்டிருக்கும். அவ்வாறான எந்தக் குறிப்பையும் காணவே முடியவில்லை.

எனவே, மனித இனம் அல்லாத, வேறெந்த விசித்திர ஜீவராசியை நாம் எதிர்கொள்ள நேர்ந்தாலும், அது பகுத்தறிவுடையது என்று தெரிய வந்தால், எமக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்தைக் கொண்டு நாம் எடுக்க வேண்டிய முடிவு, அது ஜின் இனத்தைச் சார்ந்த ஏதோ ஒரு ஜீவராசி என்பதாகத் தான் இருக்க வேண்டும்.

ஆதாரம் 2:
"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான். (அல் குர்ஆன் 2 : 30)

இந்த வசனத்தின் மூலம் கூட, மனித இனத்தைப் படைப்பதற்கு முன்பே ஜின் இனத்தவர் பூமியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதும், அவர்களுள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், குழப்பம் விளைவித்துக் கொண்டும் இருந்தார்கள் என்பதும் தெரிகிறது. வானவர்களின் கூற்றை வைத்தே இதைப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, எதிர்காலம் பற்றிய மறைவான ஞானம் வானவர்களுக்கு இல்லை. அதை அல்லாஹ் மட்டுமே அறிகிறான். எதிர்காலம் பற்றிய ஞானம் இல்லாத வானவர்கள், மனித இனத்தைப் படைப்பதற்கு முன்பே, “இரத்தம் சிந்திக் குழப்பம் விளைவிப்பவர்களைப் படைக்கப் போகிறாயா?” என்று கேட்பதிலிருந்தே, பூமியின் கடந்த கால வரலாறு பற்றிய தமது அனுபவ அறிவை வைத்துத் தான் அவர்கள் இவ்வாறான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மனிதனைப் படைக்க முற்பட்ட கடந்த காலத்தில் ஜின்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எனவே, ஜின்களது அடாவடித்தனமான கடந்தகால வரலாறுகளை நேரில் கண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே வானவர்களது கேள்வி இங்கு தொடுக்கப் பட்டிருக்கிறது என்பது புரிகிறது.

மேலும், இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே, இதற்கான அல்லாஹ்வின் பதிலும் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று அல்லாஹ் கூறுவதன் விரிவான அர்த்தம் பின்வருமாறு தான் இருக்க வேண்டும் என்பதே எனது புரிதல்:

“உங்களுக்குப் பூமியின் கடந்தகால வரலாறு மட்டும் தான் தெரியும். அந்த அனுபவ அறிவை வைத்துத் தான் நீங்கள் மனிதர்களை எடைபோடுகிறீர்கள். ஆனால், அதையும் தாண்டிய எல்லாமே எனக்குத் தெரியும். இவர்களது எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதும் எனக்குத் தெரியும்; இவர்களது விதி எப்படி முடியப் போகிறது என்பதும் எனக்குத் தான் தெரியும். மேலும், இவ்வாறு குழப்பம் செய்பவர்களாக முதலில் ஜின்களைப் படைத்ததும், அதே போல் இப்போது மனிதர்களைப் படைக்கப் போவதும் ஏன் என்ற உண்மையான காரணம் கூட, படைக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும்”

மேலே முன்வைக்கப்பட்ட விளக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக இமாம் தபரி, தனது தஃப்ஸீரில் பதிந்திருக்கும் ஒரு செய்தியும் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அந்தச் செய்தி இது தான்:

“மனிதனைப் படைக்க முன், பூமியில் ஜின்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களாகவும், இரத்தம் சிந்துபவர்களாகவும், ஒருவரையொருவர் கொலை செய்து கொள்பவர்களாகவுமே இருந்தார்கள்.”

இந்தச் செய்தியை, தஃப்ஸீர் அத் தபரியில் பார்க்கலாம்.

மேலும், மனிதனைப் படைக்க முன் பூமியில் ஜின்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்ததாகவும், அவர்களைத் தண்டிக்கும் பொருட்டு வானவர்களின் படையணி ஒன்றை அல்லாஹ் பூமிக்கு அனுப்பி வைத்ததாகவும், அவர்கள், குழப்பம் விளைவித்த ஜின்களை அடித்துத் துவம்சம் செய்து, சமுத்திரங்களுக்கு அப்பால் கண்காணாத் தூர தேசங்களுக்குத் துரத்தியடித்ததாகவும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்த இன்னொரு செய்தி கூட ஹாக்கிம் கிரந்தத்தில் பதிவாகியிருக்கிறது. இந்த ஹதீஸின் இலக்கம், மற்றும் நம்பகத்தன்மை பற்றிய குறிப்புகள் எனது கைவசம் இல்லாததால், இதை ஓர் ஆதாரமாக இங்கு பதியத் துணியவில்லை. அரபு மொழியில் தேட முடிந்தவர்கள் தேடிப் பார்க்கலாம் என்பதற்காகவே இதை மேலதிகமாக இங்கு குறிப்பிடுகிறேன்.

மேலே நாம் முன்வைத்திருக்கும் கருத்துக்களை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாகவே பின்வரும் ஆதாரம் கூட அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:

ஆதாரம் 3:
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை. குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
(பின்னர்) நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பிறகு பூமியிலே உங்களை நாம் வழித்தோன்றல்களாக ஆக்கினோம்.
(அல்குர்ஆன் 10:13,14)

இந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய பகுதி, “உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நாம் அழித்திருக்கின்றோம்” என்ற வாசகம் தான். இந்த வாசகத்தின் மூலம் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது முந்திய மனித சமூகங்களை மட்டும் அல்ல; ஜின்களையும் சேர்த்துத் தான். ஏனெனில், வசனத்தின் பிற்பகுதியில், “அவர்களுக்குப் பிறகு பூமியிலே உங்களை நாம் வழித்தோன்றல்களாக ஆக்கினோம்” என்று அல்லாஹ் கூறுவதை வைத்து, அழிக்கப்பட்ட முந்திய சமூகங்கள் பற்றிய வரலாறுகள், மனித இனத்தின் வரலாறுகளை மட்டுமல்லாது, மனித இனத்தைப் படைப்பதற்கு முற்பட்ட காலத்து நிகழ்வுகளையும் உள்ளடக்குகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

மனித இனத்தின் கையில் அல்லாஹ் பூமியை ஒப்படைப்பதற்கு முன்னர், இந்தப் பூமியின் வாரிசுகளாக ஜின்கள் தாம் நீண்ட நெடுங்காலமாக இந்தப் பூமியை ஆண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்பது இந்த வசனத்தின் மூலமும் தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல், ஜின்களிலும் பல்வேறுபட்ட இனத்தவர்கள் இந்தப் பூமியில் அட்டூழியம் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும், அவர்களில் பல தலைமுறையினர் அழிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. ஆகவே இந்த வசனத்தின் மூலமும் நாம் மேலே முன்வைத்த கருத்து இன்னும் ஒரு படி உறுதியாகிறது.

அதாவது, முன்னர் நாம் குறிப்பிட்ட ஏனைய குர்ஆன் வசனங்களோடு இந்த வசனத்தையும் இணைத்து விளங்க முயற்சிக்கும் போது, மனிதனைப் படைப்பதற்கு முன்னர் ஜின்களையே இந்தப் பூமியின் வாரிசுகளாக அல்லாஹ் ஆக்கியிருந்தான் என்பதும், அவர்களுக்கு அல்லாஹ் அருட்கொடைகளை வழங்கியிருந்தான் என்பதும், அவர்களுக்குள்ளும் பல இறைத்தூதர்களை அனுப்பியிருந்தான் என்பதும், பிறகு அவர்களது கெட்ட செயல்கள் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான் என்பதும் தெளிவாகவே புரிகிறது.

மேலும், ஜின்களை அல்லாஹ் தண்டித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வசம் ஒப்படைக்கப் பட்டிருந்த இந்தப் பூமியை, அவர்களிடம் இருந்து பறித்தெடுத்து, மனித இனத்தின் கையில் ஒப்படைத்ததன் மூலம், இந்தப் பூமியின் புதிய வாரிசுகளாக மனித இனத்தையே ஆக்கினான் என்பதும் இவ்வசனங்கள் மூலம் உறுதியாகிறது.

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களின் தொகுப்பை வைத்து நாம் சில உண்மையைப் புரிந்து கொள்கிறோம்:

மனித இனத்தின் கையில் அல்லாஹ் இந்தப் பூமியை ஒப்படைக்கும் வரை, இந்தப் பூமியில் பரந்து வியாபித்து ஒரு முழுமை பெற்ற நாகரீகமாக வாழ்ந்து வந்தது ஜின் இனத்தவர்கள் தாம் என்பது தெரிகிறது. அதாவது பூமியின் பழைய சொந்தக்காரர்களாக ஜின்களே இருந்தார்கள் என்பது தான் இதன் கருத்து.

மனித இனத்தைப் படைத்து, பூமியின் புதிய சொந்தக்காரர்களாக மனிதர்களை அல்லாஹ் ஆக்கிய பிறகு, பழைய சொந்தக் காரர்களாக இருந்த ஜின்கள் ஓரங்கட்டப் பட்டு, இந்த முப்பரிமான உலகிலிருந்து, மறைவான வேறொரு பரிமாணத்துக்குத் துரத்தியடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே மேற்கூறப்பட்ட பதிவுகள் மூலம் நாம் விளங்கும் கருத்து.

இந்தக் கருத்தின் அடிப்படையில் சிந்திக்கும் போது இன்னுமோர் அம்சத்தையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, ஒருவரது கையிலிருந்து, ஒரு சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, இன்னொருவருக்கு அது ஒப்படைக்கப் பட்டால், அதன் பழைய சொந்தக்காரர்கள் மனதில், இழந்த சொத்தைத் திரும்ப அடைய வேண்டும் என்ற ஏக்கம் கண்டிப்பாக இருக்கத் தான் செய்யும். இந்த ஏக்கத்தின் அடிப்படையில் பழைய சொந்தக் காரர்கள் அடிக்கடி தாம் இழந்த பழைய சொத்தைச் சுற்றி வட்டமிடுவதும், அடிக்கடி நோட்டமிடுவதும், அதைத் திரும்ப அடைவதற்குத் தம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் திட்டமிடுவதும், சதி செய்ய முயற்சிப்பதும் சகஜம். உள்ளத்தில் ஆசாபாசங்களோடு படைக்கப்பட்ட எந்த இனமாக இருந்தாலும் இந்த அடிப்படையில் முயற்சிப்பது இயற்கை.

இந்த உளவியல் உண்மையின் அடிப்படையிலும், பறக்கும் தட்டுக்களில் அடிக்கடி நமது உலகுக்குள் ஊடுறுவும் ஜீவராசிகள், முன்னொரு காலத்தில் தமது சொத்தாக அனுபவித்த இந்த முப்பரிமான உலகை இழந்த ஜின் இனத்தவர்களின் இன்றைய தலைமுறைகளாகவே இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன் ஷா அல்லாஹ் வளரும்...

- அபூ மலிக்

Episode 20:  ஜின்கள் 




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..