Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 18
Posted By:Hajas On 10/10/2016 6:21:18 AM

viagra

viagra transeo.se

பறக்கும் தட்டுக்களும் ஜின்களும்
=============================

by - Abu Malik

தொடர் 2: வேற்றுக்கிரகவாசிகள்

Episode 17: சிக்மா செயல்திட்டம்


Episode 18: மனிதர்களது  பறக்கும் தட்டு v/s, வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டு



அமெரிக்க இரகசிய அரசுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் இடையில் இவ்வாறு ஆரம்பித்த இந்த இரகசிய உறவு காலம் செல்லச்செல்ல கொஞ்சம் கசக்க ஆரம்பித்தது. ஏனெனில், வாக்களித்த பிரகாரம் வேற்றுக்கிரகவாசிகள், தமது பறக்கும் தட்டுத் தொழினுட்பங்களை முழுமையாகக் கற்றுக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டே காலத்தைக் கடத்துவதையும், அதே நேரம் தமது திட்டங்களுக்கேற்ப மனிதர்களை உபயோகப் படுத்துவதை மட்டும் நாசுக்காக செய்து கொண்டிருந்ததையும் அமெரிக்கா உணரத் தொடங்கியது.

பல சந்தர்ப்பங்களில் வாக்கு மீறுபவர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும், நம்பிக்கை மோசடி செய்பவர்களாகவுமே வேற்றுக் கிரகவாசிகள் நடந்து கொள்வதை அமெரிக்கா அவதானித்தது. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகளைக் கூட அவ்வப்போது தமது வசதிக்கேற்ப மீறுபவர்களாகவே வேற்றுக் கிரகவாசிகள் நடந்து கொண்டார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. விரிசலைத் தொடர்ந்து பணிப்போரும் ஆரம்பித்தது.

இப்படியே மாறி மாறி நண்பர்களாவதும், பகைவர்களாவதுமாகவே இவர்களுக்கிடையில் ஒரு சிக்கலான உறவு இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதாவது, இவர்களோடு அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வேற்றுக்கிரகவாசிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை; வெவ்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாகவே அவர்கள் தோன்றுகிறார்கள்.

ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரோடு பகைத்துக் கொள்ளும் போது, வேறோர் இனத்தவர் மூலம் இவர்கள் தொடர்பு கொள்ளப் படுகிறார்கள். அதன் மூலம், அந்தப் புது இனத்தவருடன் மீண்டும் நல்லுறவு ஆரம்பிக்கும். அவர்களது உறவு கசக்கும் போது பிரிதோர் இனத்தவரது நட்புறவு இவர்களுக்கு வேறோரு வழியில் கிடைப்பதாக இருக்கும். இப்படியே மாறி மாறி உறவும், பகையுமாக ஒரு சிக்கலான தொடர்பு தான் மனிதர்களுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இடையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சிக்கலான உறவுமுறைகளின் சரியான பின்னணி என்னவென்பது நமக்கு மட்டுமல்ல; இவர்களோடு தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கும் இலுமினாட்டிகளுக்கும் கூட இன்னும் சரியாகப் புரியவில்லை. இந்த வேற்றுக்கிரகவாசிகளது உண்மையான பூர்வீகம் தான் என்னவென்பது இலுமினாட்டிகளுக்கே இதுவரை உருப்படியாகத் தெரியவில்லை என்பது தான் உண்மை. ஏதோ ஒரு குருட்டு அனுமானத்தின் அடிப்படையிலேயே தொடர்புகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

இவர்களது பறக்கும் தட்டுத் தொழினுட்பங்களைப் பொருத்தவரை, இதுவரை அமெரிக்காவினால் இந்தத் தொழினுட்பங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தத் தொழினுட்பத்தின் ஒருசில பகுதிகளை மட்டுமே இதுவரை இவர்களால் கற்றுக்கொள்ள முடிந்தது. கற்றுக்கொண்ட அந்த ஒருசில பகுதிகளை வைத்து அமெரிக்க இலுமினாட்டிகள் இதுவரை சில பறக்கும் தட்டுக்களைத் தமது முயற்சியில் தயாரித்தும் இருக்கிறார்கள். அவற்றில் சிலதை வெற்றிகரமாக வானில் பறக்கவும் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு மனிதர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட பறக்கும் தட்டுக்களும், வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுக்களும் உருவத்திலும், பறக்கும் விதத்திலும், அதிவேக ஆற்றல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். ஆனால், இரண்டுக்கும் இடையில் தொழினுட்ப ரீதியில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுக்களின் ஆற்றல், காற்றில் பறப்பதோடு மட்டுப்படுத்தப் பட்டதல்ல. காற்றில் பறந்து கொண்டிருக்கும் அதே வேளை, சர்வசாதாரணமாக கடல் நீருக்குள்ளும் ஊடுறுவி, நீர்மூழ்கிக் கப்பல்களை விடவும் பலமடங்கு அதிக வேகத்துடனும், செயல்திறனுடனும் சமுத்திரத்தின் ஆழத்தில் கூட அதிவேகத்தில் பயணிக்க வல்லவை. காற்றிலிருந்து நீருக்குள்ளும் அமிழ்ந்தும், நீருக்கு அடியிலிருந்து திடீரென்று காற்றில் எழும்பியும் அனாயாசமாகப் பறக்க வல்லவை. மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட பறக்கும் தட்டுக்களின் வீரியம் இந்த அளவுக்கு இல்லை.

மேலும், வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுக்களுக்கு, நின்ற இடத்திலிருந்தே ஒரே கணத்தில் ஒளியின் வேகத்தையும் மிஞ்சிய வேகத்தில் மாயமாக மறைந்து போகும் ஆற்றல் இருக்கிறது. மேலும், சில விசித்திரமான சக்தி அலைகள் மூலம், நிலத்திலிருக்கும் உயிரினங்களையோ, பொருட்களையோ காந்தம் ஈர்ப்பது போல் அந்தரத்தில் நின்றவாறே தமது பறக்கும் தட்டுக்குள் ஈர்த்தெடுக்கும் விசித்திரமான ஓர் ஆற்றல், வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்களுக்கு இருக்கின்றது.

பொதுவாக மனிதர்களைக் கடத்தும் போது அனேகமான சந்தர்ப்பங்களில் இந்த விசித்திரமான ஆற்றல் மூலம் தான் நிலத்தில் இருக்கும் மனிதர்களை காற்றில் அந்தரத்தில் நின்றவாரே இவர்கள் தமது பறக்கும் தட்டுக்குள் ஈர்த்தெடுப்பதுண்டு. இவ்வாறான ஆற்றல்களெல்லாம் மனிதர்கள் வடிவமைக்கும் பறக்கும் தட்டுக்களுக்கு இல்லை. ஏனெனில், இந்தத் தொழினுட்பங்கள் பற்றிய சரியான அறிவை மனிதர்களால் இதுவரை கற்றுக் கொள்ள முடியவில்லை.

பல மர்மமான ஆற்றல்களை உள்ளடக்கிய வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுக்களது தொழினுட்பங்கள் குறித்து மனிதர்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் சொற்பம் தான். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுத் தொழினுட்பம் பற்றி மனிதர்கள் அறிந்து வைத்திருக்கும் ஒருசில உண்மைகள் இவை தாம்:

வேற்றுக்கிரகவாசிகளது பறக்கும் தட்டுக்களில் இருக்கும் தொழினுட்பம் மனித கண்டுபிடிப்புகளுக்கு இதுவரை முழுமையாகப் புலப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அவற்றின் சக்தி முதல் (Energy source), மனித சக்தி முதல்களைப் போல் இல்லை. பிரதான சக்தி முதலாக உள்ளே இருப்பது, காற்பந்தின் அளவிலான அணு உலை போன்ற ஒரு பகுதி தான். இந்த அணு உலை போன்ற தொகுதி, நமது அணு உலைகளைப் போல் யுரேனியம் அணுக்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. மேலும், நமது ஊர்திகள் இயங்குவதற்கு எரிபொருளாகப் பெட்ரோல் தேவைப்படுவது போல், இவர்களது பறக்கும் தட்டுக்கள் இயங்குவதற்குத் தேவைப் படுவதெல்லாம், வெறும் தண்ணீர் தான். ஒரு சொட்டுத் தண்ணீரை வைத்துப் பல வியக்கத்தகுந்த சாதனைகளை இந்தப் பறக்கும் தட்டுக்கள் சாதிக்க வல்லவை. தண்ணீரிலிருந்து இவ்வளவு சக்தியை அவர்களது பறக்கும் தட்டுக்கள் எவ்வாறு பெறுகின்றன? இந்தக் கேள்விக்கான விடைகளையோ, இந்தத் தொழினுட்ப இரகசியங்கள் பற்றிய முழு விபரங்களையோ இதுவரை மனிதர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இதுவரை கூறப்பட்ட தகவல்களை வைத்துக் கொண்டு, வேற்றுக்கிரகவாசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் இரகசியத் தொடர்புகளெல்லாம் அமெரிக்காவில் மட்டும் தான் இருக்கிறதென்று யாரும் தவறாகப் புரிந்து விடக் கூடாது. அனேகமான சம்பவங்கள் அமெரிக்காவையொட்டியே நடக்கின்றன என்பதனாலேயே அமெரிக்காவைப் பிரதானப் படுத்தி இங்கு கூறப்பட்டது. ஆனால், அமெரிக்கா மட்டுமல்ல; மேலும் பல வளர்ந்த நாடுகளிலும் கூட இதே போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்துக்கு ரஷ்யாவை இங்கு குறிப்பிடலாம்.

நாம் ஏற்கனவே பார்த்த பிரகாரம் 1947 இல் அமெரிக்காவில் ரொஸ்வெல் நகரில் நடந்த பறக்கும் தட்டு விபத்துக்களைப் போன்ற ஒரு சம்பவம் ரஷ்யாவிலும் நடந்தது.

1969 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு கிராமப்புறத்தில் சிறிய பறக்கும் தட்டொன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததாகவும், ரஷ்யாவின் இரகசிய உளவுப் பிரிவான KGB மூலம் இந்தப் பறக்கும் தட்டும், அதனுள் இறந்து கிடந்த சின்னஞ்சிறிய அளவிலான வேற்றுக்கிரகவாசியும் இரகசியமாக மீட்கப்பட்டு, “கஸ்புட்டின் யார்” என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் இரகசிய இராணுவத் தளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கு மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் சிலர் மூலம் பகிரங்கமாக்கப்பட்ட, “The Secret UFO Files of the KGB” எனும் கோப்புகள் மூலமே இந்தத் தகவல்கள் வெளியுலகுக்குக் கசிந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. இது பற்றிய மேலதிக தகவல்கள், மற்றும் காணொளிகளைப் பின்வரும் லிங்க்குகளில் பார்க்கலாம்:

https://www.youtube.com/watch?v=Ihd21dHa7oE
http://www.huffingtonpost.com/2013/12/10/russia-alien-autopsy-crashed-ufo_n_4411271.html

இந்தச் சம்பவங்களின் பிறகு, வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய விவகாரங்களில் அமெரிக்காவோடு ரஷ்யாவும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகவே சொல்லப்படுகிறது. இது பற்றிய விபரங்களை சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

இந்தத் தொடரில் சொல்லப்படவிருந்த சம்பவங்கள் எல்லாம் சொல்லப்பட்டாயிற்று. இப்போது நாம் கேட்க வேண்டிய சில கேள்விகள் இருக்கின்றன:

யார் இந்த வேற்றுக் கிரகவாசிகள்? மனிதர்களுக்குச் சொந்தமான இந்த முப்பரிமாண உலகுக்கு இவர்கள் அடிக்கடி வந்து போக வேண்டிய அவசியம் தான் என்ன? இவர்களது உள்நோக்கம் தான் என்ன?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்து கொள்ளும் விதமாகவே இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடர் அமைந்திருக்கும்.

இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

- அபூ மலிக்


Episode 19: பறக்கும் தட்டுக்குரியோர் யார் 




Power of Creator
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..