Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
செம்மறி‬ ஆடு வளர்ப்பு
Posted By:Hajas On 8/6/2016 8:29:12 AM

where to buy abortion pill in usa

abortion pill online usa blog.analysisuk.com

 

செம்மறி‬ ஆடு வளர்ப்பு

பட்டியில் 100 செம்மறி ஆடுகள் உள்ளன, இவைகளுக்கு 5 கிடா என்று பராமரித்து வருகிறோம். காலை சுமார் 11 மணியளவில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்குத் திரும்புவோம் என்று தன் ஆடுகளுடன் இருக்கும் பிணைப்பை வெளிப்படுத்தினார்.

வளர்ந்த ஆடுகளுக்கு மேய்ச்சல் முறை மட்டுமே; கலப்புத் தீவனம் என்று எதுவும் கொடுப்பதில்லை. பெட்டை ஆடுகளே அதிகம் வளர்க்கிறோம், இவைகளால் பட்டியை வளர்க்கச் செய்யலாம். கிடாக்கள் அதிகமாக வளர்த்தால் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன.

குட்டிகள்
செம்மறி ஆடு 14 மாதத்தில் இரண்டு முறை குட்டி ஈனும். மேய்ச்சல் முறையில் குட்டிகள் தொலைவிற்கு அழைத்துச் சென்றால் அவைகள் அசதியாகிவிடும். ஆகவே, குட்டி பிறந்த 50 நாட்களுக்கு மேய்ச்சலுக்கு விடுவதில்லை. பட்டியில் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டுள்ள குட்டிகள், மேய்ச்சலுக்குச் செல்லும் போது குட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டு கொட்டகையில் அடைத்து, தீவனம் வழங்கப்படும். கோடை காலத்தில் 1 மாதத்திற்குப் பின்பும், குளிர்காலங்களில் 50 நாட்களுக்குப் பிறகும் மேய்ச்சலுக்கு விட வேண்டும்.

குட்டிகள் பிறந்து 1 மாதத்திற்குப் பிறகு – சோயா பொட்டு, கடலைப் பொட்டு (கொண்டக் கடலை)… போன்றவைகளை 9 அங்குல உயரத்தில் தீவனத் தொட்டி அமைத்து கொடுத்திடுவேன். மேலும், தீவனமாக வேப்பந்தழை, சவுண்டல்… போன்றவைகளைக் கொட்டகைக்குள் கட்டித் தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் குட்டிகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதுடன் மேய்ச்சல் முறைக்குத் தயாராகிவிடும். ஆண்மை நீக்கம் செய்த கிடாக்குட்டிகள் நன்கு கொழுக்கும் மேலும் பெட்டை ஆடுகளுக்கும் தொல்லை கொடுக்காது. நன்றாக வளரும் குட்டிகளை ஆடுகளுக்குப் பதிலாக மந்தையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேய்ச்சல் முறை
பண்ணைக்குள் மேய்ச்சல் முறையில், ஒரு எக்டேருக்கு சுமார் 10 ஆடுகள் வரை வளர்க்கலாம். காலநிலையைப் பொறுத்தே மேய்ச்சலின் நேரம் அமைகிறது என்கிறார். வெயில் காலங்களில் காலை 10 மணிக்கு மேய்ச்சலுக்குச் சென்று 5 மணிக்குத் திரும்புவோம். இதுவே, பனி பொழியும் மாதங்களில் காலை 11 மணிக்குத்தான் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன் – காரணம் இந்த மாதங்களில் பொழியும் பனித் தண்ணீரை மேய்ந்தால் ஆடுகளுக்கு சளி பிடிக்கும் இதனால் நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

மழைக் காலங்களில் ஆடுகளுக்குக் கொழுப்பு சேரக் கூடாது. இதைக் கணக்கில் கொண்டு மேய்ச்சலின் நேரத்தைக் குறைக்க வேண்டும். கொழுப்பு அதிகமானால் துள்ளு மாரி நோய் வரும். இது போன்ற காலங்களில் 7 மணி நேரம் மட்டுமே மேய்க்க வேண்டும்.

பராமரிப்பு
பனி மாதங்களிலும் மற்றும் மழைக் காலங்களில் (மழை பொழியும் நாட்களில்) கொட்டகையில் வைத்துப் பராமரித்து கொள்ள வேண்டும். மேலும், குடற்புழு நீக்கம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
ஆடுகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் முடி சிலிர்த்து நிற்கும். சரி வர மேய்ச்சல் எடுக்காது போன்ற அறிகுறிகளை வைத்துக் கண்டறிய வேண்டும்.

மேலும், காது ஓரத்தில் தொட்டுப் பார்த்தால் ஜில் என்று இருக்கும் – இவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். செம்மறி ஆடுகளைப் பொருத்த வரையில் பராமரிப்பு என்பது மிக முக்கியம் என்கிறார்.

பயன்கள்
செம்மறி ஆடுகள், இறைச்சி, எரு, தோல், கம்பளி மற்றும் பால் வழங்குகின்றன. (ஆட்டுத்தோலில் வளரக்கூடிய உரோமங்களுக்குக் கம்பளம் என்று பெயர். கம்பளங்கள் புரோட்டினால் ஆனது. தீப்பற்றாமை மற்றும் ஈரம் உறிஞ்சாமை ஆகியவை இதன் சிறப்புத் தன்மைகளாகும்.)
அதன் பிழுக்கைகளும் நிலத்தில் பரப்பி விடுகின்றன.

தென்னந் தோப்பில் இடத்தை ஒவ்வொரு முறையும் மாற்றிப் பட்டி அடைக்கும் பொழுது, அதன் பிழுக்கை மற்றும் சிறுநீர் போன்றவைகள் நல்ல உரமாவதால் மரங்கள் நன்கு செழிப்புடன் வளர்வதுடன் காய்களும் நல்ல ருசியுடன் உள்ளதாக கூறுகிறார்.

கிடைபோடும் பொழுது நள்ளிரவில் ஆடுகளை எழுப்பி, பக்கத்திலேயே இடம் மாறி படுக்க வைக்க வேண்டும். சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று முறை கூட ஆடுகளை மாற்றி அமைக்கலாம். இதனால் ஆடுகளின் ரோமம், பிழுக்கை, சிறுநீருடன் கலந்து நிலத்திற்கு உரமாகச் சேரும்.

அந்தக் காலங்களில் (இன்றும் சில இடங்களில்) பண்ணை நிலங்களில் வாடகைக்கு மந்தைக்கிடை போட்டு அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
விற்பனை மற்றும் கழித்தல் (திறனற்றவற்றைக் கழித்தல்)
இறைச்சி விற்பனைக்கு மூன்று மாதம் முதல் எட்டு மாத வயதுள்ள குட்டிகளை விற்கலாம். வியாபாரிகள் தேடி வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்,

சில நேரங்களில் சந்தைக்கு எடுத்துச் செல்வதும் உண்டும். 5 கிலோ எடை உள்ள குட்டி சுமார் ரூபாய்2,200/-க்கு விற்கப்படும். வளர்ந்த மற்றும் நன்கு குட்டி ஈனும் ஆடுகளைப் பட்டியின் வளர்ச்சிக்கு வைத்துக் கொள்வோம். 2 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறை வயது முதிர்ந்த ஆடுகளை விற்று விட்டு கிடாக்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கழித்து, பட்டியில் இருந்து நன்கு திறன் பெற்ற கிடாவைத் தேர்வு செய்து வளர்ப்போம்.

நன்கு குட்டி ஈன்ற ஆடு, 5 வயது முதிர்வின் பின்னால் விற்கும் போது ரூபாய்2,000/- என்ற விலை மட்டுமே கிடைக்கும். இவைகள் விற்பனை என்பதை விட கழித்தல் என்றே சொல்ல வேண்டும் என்கிறார். ஆடுகளைக் கழிப்பது என்பது சரிவர மேயாத ஆடுகள், மற்ற ஆடுகளின் மீது முட்டும் இடிக்கும் ஆடுகள் – குட்டி, பெட்டை மற்றும் கிடாக்கள் எனப் பல்வேறு நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் பெட்டைகளில் சதைப்பற்று குறைவானவை, ஊனமானவை, ஓராண்டுக்கு ஒரு முறை கூட சினை பிடிக்காதவை போன்றவைகளைத் திறனற்றவை என்று கழித்திட வேண்டும்.

செம்மறி ஆடுகள் மந்தையாகக் கூடி வாழ விரும்புபவை. ஆகவே, அதிக எண்ணிக்கை கொண்ட மந்தையையும் ஓர் ஆள் மேய்த்து விட முடியும்.
செம்மறி ஆடுகள் சராசரியாக ஒரு நாளில் 9 முதல் 11 மணி நேரம் வரை மேயும்.
கலப்புத் தீவனங்கள் எதுவும் வழங்காமல், வெறும் மேய்ச்சலை மட்டுமே வைத்துக் கூட வளர்த்திட முடியும்.
பயிர் சாகுபடி நிலங்களில், பயிர்களுக்குத், தீங்கு விளைவிக்காமல் அருகு, கோரை… போன்ற களைச்செடிகளை மேய்ந்து விடும்.

இவைகளை உயிருள்ள களை எடுப்பான் என்றே சொல்லலாம். கடந்த ஆகஸ்ட் 2015 இதழில், சிந்தனை புதிதில், தெரிந்த ரகசியம் என்னும் தலைப்பில் கட்டுரை வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.


நன்றி - தொழில் மேம்பாட்டிற்க்கான மாத இதழ்

https://www.facebook.com/photo.php?fbid=627306114114825&set=a.240157109496396.1073741827.100005063264040&type=3&permPage=1

 




சுய தொழில்கள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..