Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
விஞ்ஞானம் - part-1
Posted By:nsjohnson On 3/4/2016 9:58:07 PM

 
 
 
 
 
 

உண்மையை மறைக்காதீர்! அதை பொய்யுடன் கலக்காதீர்!

 
 
 
 
 
 
 
#cssmenu ul,#cssmenu li,#cssmenu span,#cssmenu a{margin:0;padding:0;position:relative}#cssmenu{height:49px;border-radius:5px 5px 0 0;-moz-border-radius:5px 5px 0 0;-webkit-border-radius:5px 5px 0 0;background:#fefefe;background:-moz-linear-gradient(top,#fefefe 0%,#eee9f0 100%);background:-webkit-gradient(linear,left top,left bottom,color-stop(0%,#fefefe),color-stop(100%,#eee9f0));background:-webkit-linear-gradient(top,#fefefe 0%,#eee9f0 100%);background:-o-linear-gradient(top,#fefefe 0%,#eee9f0 100%);background:-ms-linear-gradient(top,#fefefe 0%,#eee9f0 100%);background:linear-gradient(top,#fefefe 0%,#eee9f0 100%);border-bottom:2px solid #db000b;width:auto}#cssmenu:after,#cssmenu ul:after{content:'';display:block;clear:both}#cssmenu a{background:#fefefe;background:-moz-linear-gradient(top,#fefefe 0%,#ececec 100%);background:-webkit-gradient(linear,left top,left bottom,color-stop(0%,#fefefe),color-stop(100%,#ececec));background:-webkit-linear-gradient(top,#fefefe 0%,#ececec 100%);background:-o-linear-gradient(top,#fefefe 0%,#ececec 100%);background:-ms-linear-gradient(top,#fefefe 0%,#ececec 100%);background:linear-gradient(top,#fefefe 0%,#ececec 100%);color:#000;display:inline-block;font-family:Helvetica,Arial,Verdana,sans-serif;font-size:12px;line-height:49px;padding:0 20px;text-decoration:none}#cssmenu ul{list-style:none}#cssmenu > ul{float:left}#cssmenu > ul > li{float:left}#cssmenu > ul > li > a{color:#000;font-size:12px}#cssmenu > ul > li:hover:after{content:'';display:block;width:0;height:0;position:absolute;left:50%;bottom:0;border-left:10px solid transparent;border-right:10px solid transparent;border-bottom:10px solid #db000b;margin-left:-10px}#cssmenu > ul > li:first-child > a{border-radius:5px 0 0 0;-moz-border-radius:5px 0 0 0;-webkit-border-radius:5px 0 0 0}#cssmenu > ul > li.active:after{content:'';display:block;width:0;height:0;position:absolute;left:50%;bottom:0;border-left:10px solid transparent;border-right:10px solid transparent;border-bottom:10px solid #db000b;margin-left:-10px}#cssmenu > ul > li.active > a{-moz-box-shadow:inset 0 0 2px rgba(0,0,0,0.1);-webkit-box-shadow:inset 0 0 2px rgba(0,0,0,0.1);box-shadow:inset 0 0 2px rgba(0,0,0,0.1);background:#ececec;background:-moz-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:-webkit-gradient(linear,left top,left bottom,color-stop(0%,#ececec),color-stop(100%,#fef ef));background:-webkit-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:-o-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:-ms-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%)}#cssmenu > ul > li:hover > a{background:#ececec;background:-moz-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:-webkit-gradient(linear,left top,left bottom,color-stop(0%,#ececec),color-stop(100%,#fef ef));background:-webkit-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:-o-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:-ms-linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);background:linear-gradient(top,#ececec 0%,#fef ef 100%);-moz-box-shadow:inset 0 0 2px rgba(0,0,0,0.1);-webkit-box-shadow:inset 0 0 2px rgba(0,0,0,0.1);box-shadow:inset 0 0 2px rgba(0,0,0,0.1)}#cssmenu .has-sub{z-index:1}#cssmenu .has-sub:hover > ul{display:block}#cssmenu .has-sub ul{display:none;position:absolute;width:200px;top:100%;left:0}#cssmenu .has-sub ul li{*margin-bottom:-1px}#cssmenu .has-sub ul li a{background:#db000b;border-bottom:1px dotted #ff0f1b;filter:none;font-size:11px;display:block;line-height:120%;padding:10px;color:#fff}#cssmenu .has-sub ul li:hover a{background:#a80008}#cssmenu .has-sub .has-sub:hover > ul{display:block}#cssmenu .has-sub .has-sub ul{display:none;position:absolute;left:100%;top:0}#cssmenu .has-sub .has-sub ul li a{background:#a80008;border-bottom:1px dotted #ff0f1b}#cssmenu .has-sub .has-sub ul li a:hover{background:#8f0007}
 
 

Wednesday, 31 December 2014

41) விஞ்ஞானம் - part-1

 
بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

விஞ்ஞானம் பகுதி-1

Geographic Coordinate System புவியியல் அளக்கூறு:

நாம் பள்ளிப்பருவத்தில் கிராப் graph வரைந்திருப்போம் அதாவது சிறுதும் பெரிதுமாக பல சதுரங்கள் இருக்கும் ஒரு தாளில் முதலில் புள்ளிகளை வைப்போம் பின்னர் அப்புள்ளிகளை இணைத்து கோடுகள் வரைவோம். பின்னர் அந்த கோட்டின் நீளத்தை அளப்போம். இதன் அடிப்படையை முதலில் பார்ப்போம்.

graph தாளில் x அச்சு y அச்சு என இரண்டு அச்சுக்கள் இருக்கும். குறுக்கே இடப்பட்டுள்ள கோடுகளுக்கு x அச்சு எனவும் நெடுக்கே இடப்பட்டுள்ள கோடுகளுக்கு y அச்சு எனவும் பெயர். இப்படி பல x கோடுகளும் பல y கோடுகளும் ஒரு graphல் இருக்கும். ஒரு x அச்சும் ஒரு y அச்சும் சந்திக்கும் இடம் ஒரு புள்ளி ஆகும். உதாரணமாக 4ம் x அச்சும் 5.6ம் y அச்சும் சந்திக்கும் புள்ளியை (4, 5.6) என்று அழைப்போம். ஆக graph ல் எந்த ஒரு புள்ளியை குறிக்க வேண்டுமாயினும் அதற்கு இரண்டு எண்கள் கொண்ட ஒரு கூறு (coordinate) வேண்டும். இதே போல் பூமியில் எந்த ஒரு இடைத்தை குறிக்க வேண்டுமெனிலும் இரண்டு புள்ளிகள் வேண்டும்.

பூமியில் கற்பனையாக குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் வரைந்துள்ளனர். குறுக்காக வரையப்பட்ட கோடு, குறுக்கை, நிரைக்கோடு அல்லது அட்சரேகை latitude என்றழைக்கப்படுகிறது. இதனை நாம் graphல் x அச்சுக்கு இணையானதாக கொள்ளலாம். குறுக்கைகள் கிழக்கிலிருந்து மேற்காக வரையப்பட்டுள்ளன. எனவே ஒரு குறுக்கயிலிருந்து அடுத்த குறுக்கை வடக்கிலோ தெற்கிலோ இருக்கும். குறுக்கைகள் வடக்கு அல்லது தெற்கு திசைகளை குறிப்பதாக உள்ளன.

நெடுக்காக வரையப்பட்ட கோடு நெடுக்கை, நெடுங்கோடு அல்லது தீர்க்கரேகை longitude என்றழைக்கப்படுகிறது. இதனை நாம் graphல் y அச்சுக்கு இணையானதாக கொள்ளலாம். நெடுக்கைகள் வடக்க்கிலிருந்து தெற்காக வரையப்பட்டுள்ளன. எனவே ஒரு நெடுக்கயிலிருந்து அடுத்த நெடுக்கை கிழக்கிலோ தெற்கிலோ இருக்கும். நெடுக்கைகள் கிழக்கு மேற்கு திசைகளை குறிப்பதாக உள்ளன.

 
 
 
 
 
 
Graphல் ஒரு சதுரம் 1cm x 1 cm அளவு கொண்டது. அதாவது x அச்சு 3 என்பது 0 அச்சிலிருந்து 3 cm தூரத்தில் இருக்கும். ஆனால் பூமியில் உள்ள ரேகைகள் மீட்டர் அல்லது கிலோ மீட்டர் கணக்கில் வரையப்பட்டவை அல்ல. டிகிரி கணக்கில் வரையப்பட்டவை. இதற்கு காரணம் பூமி கோள வடிவில் இருப்பதுவே. Latitude 8 என்றால் 0 டிகிரி குறுக்கையிளிருந்து 8கிமி என்று பொருள் அல்ல. 0 டிகிரி மையத்திலிருந்து 8 டிகிரி என்று பொருள்.

எந்த ஒரு வட்டத்தையும் 360 டிகிரியாக பிரிப்பதை போன்று நெடுக்கைகளை 360 டிகிரியாக் பிரித்துள்ளனர். இதை 0 இலிருந்து 360 வரை இடாமல் வசதிக்காக -180 இலிருந்து +180 ஆக பிரித்துள்ளனர். குறுக்கைகளை 360 டிகிரியாக பிரிக்காமல் 180 டிகிரிகளாக பிரித்துள்ளனர். இதனடிப்படையில் 0 டிகிரி குறுக்கை பூமியில் மத்தியில் செல்கிறது. இது பூமத்திய ரேகை என்றழைக்கப்படுகிறது. +90 டிகிரி குறுக்கை சரியாக வடதுருவத்திலும் -90 டிகிரி குறுக்கை தென் துருவத்திலும் அமைந்துள்ளது. 0 டிகிரி நெடுக்கை லண்டன் கிரீன்விச் வழியாக செல்கிறது. இது முதன்மை நெடுக்கை என்றழைக்கப்படுகிறது. +180 டிகிரி நெடுக்கையும் -180 டிகிரி நெடுக்கையும் ஒன்றேதான். பூமி உருண்டையாக இருப்பதே இதற்கு காரணம்.

பூமத்திய ரேகையும் முதன்மை நெடுக்கையும் சந்திக்கும் இடத்தை பூமிபரப்பின் மையமாக கொள்ளலாம். அதாவது (0, 0) புள்ளி. சென்னையின் புவியியல் கூறு +13.08, +80.27 ஆகும். அதாவது சென்னை பூமியின் புற மையத்திலிருந்து வடக்கே 13.08 டிகிரியிலும் கிழக்கே 80.27 டிகிரியிலும் அமைந்துள்ளது. லண்டன் +51.5072, -0.1275. ப்ரெசீல் -15.7833, -47.8667

Time zone நேர மண்டலம்:

பூமி ஒரு முறை சுழலுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. பூமியில் மொத்த டிகிரி 360. அதாவது பூமி 360 டிகிரி சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. அப்படியானால் ஒரு டிகிரி சுற்ற (24 × 60 ÷ 360 = 4min) 4 நிமிடங்கள் ஆகின்றன. 8 டிகிரி நெடுக்கையிலிருக்கும் ஒரு ஊருக்கும் 7டிகிரி நெடுக்கையிலிருக்கும் ஒரு ஊருக்கும் சூரிய உதயத்தில் 4 நிமிட வித்தியாசம் இருக்கும்.

எந்திர கடிகாரங்கள் கண்டு பிடிக்கும் முன் நிழல் கடிகாரத்தை மனிதர்கள் பயன் படுத்தி வந்தனர். இவை ஊருக்கு ஊர் வெவ்வேறு நேரத்தை காட்டிகொண்டிருக்கும். ஊட்டிக்கும் சென்னைக்கும் சூரிய உதயத்தில் 16 நிமிட வித்தியாசம் உள்ளது. எனவே ஊட்டியில் சூரிய கடிகாரம் 1மணியை காட்டினால் சென்னையில் சூரிய கடிகாரம் 1:16 மணியை காட்டும். ஒரே நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இரு ஊர்களில் வெவ்வேறு நேரம் இருந்தால் அது நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது. இது தகவல் தொடர்பிலும் போக்குவரத்திலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஒரே நிர்வாக கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் ஒரே கடிகார நேரம் இருக்கவேண்டும்.

பூமி எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியில் எல்லா வினாடிகளிலும் சூரிய உதயமும் மறைவும் நிகந்து கொண்டே இருக்கின்றன. எனவே ஒரு நாளின் சூரியன் முதலில் எங்கே உதிக்கிறது என கூற இயலாது. அதாவது திங்கள் கிழமையின் சூரிய உதயத்தை எந்த நாட்டினர் முதலில் பார்கின்றனர் என்று கூறவே இயலாது. இப்படி கூற இயலாவிடில் ஒரு சர்வதேச நேர கட்டுப்பாட்டை கொண்டு வர இயலாது. அதே வேளையில் சூரியன் இங்கு தான் முதலில் உதிக்கிறது என்று எந்த இடத்தை கூறினாலும் அது தவறாகவும் அமைந்து விடாது.

இதன் அடிப்படியில் ஒரு நாள் எங்கே தொடங்குகிறது என்பதை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு முடிவு செய்ய வேண்டும். அந்த இடத்தில ஒரு நாள் ஆரம்பம் ஆகும் அந்த இடத்திற்கு கிழக்கே உள்ள பகுதிகள் முந்தய நாளில் இருக்கும். சூரியன் இந்தியாவில் உதிக்கிறது என வைத்துக்கொண்டால் இந்தியாவும் அதன் கிழக்கே உள்ள பாகிஸ்தானும் திங்கள் கிழமையில் உள்ள அதே வேளையில் இந்தியாவிற்கு மேற்க்கே உள்ள வங்காள தேசமும் மலேசியாவுக்கும் ஞாயிற்று கிழமையாக இருக்கும். இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே நாளை முடிவு செய்யும் இந்த கோடு நிலப்பரப்பு அதிகம் இல்லாத கடல்பரப்பில் அமைந்தால் அது சரியாக இருக்கும். இதற்கு உகந்தாதாக பசிபிக் கடல் உள்ளதால் அதையே சர்வதேச தேதிக்கோடாக கொண்டனர்.

இந்த சர்வதேச தேதிக்கோடு சரியாக 180 டிகிரி நெடுக்கையில் longitude வரும். இன்னும் சொல்லப்போனால் பசிபிக் கடலின் நடுவில் 180டிகிரி கோட்டை இட்டதால் தான் 0 டிகிரி கோடு கிரீன்விசில் அமைந்தது. இந்த கோடு சர்வதேச தேதிக்கோடு என்றழைக்கப்படுகிறது. International Date Line. இதனடிப்படையில் நியுசிலாந்து நாட்டினர் ஒரு நாளின் சூரிய உதயத்தை முதலில் பார்ப்பர். இந்த 180 டிகிரி கோட்டிலிருந்து மேற்கே செல்லும் ஒவ்வொரு 15 டிகிரி நெடுக்கைக்கும் ஒவ்வொரு மணிநேரம் அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு 15டிகிரிக்கும் ஒரு மணிநேர வித்தியாசத்தை ஏற்படுத்தி நேரக்கட்டுப்பட்டை அமைப்பது தான் time zones நேர மண்டலங்கள் என்றறியப்படுகின்றன.

நேரமண்டலங்களை கணக்கிடும் பார்முலா பின்வருமாறு.:
Time zone = longitude  ÷ 15
நேரமண்டலம்  = நெடுக்கை ÷ 15

இந்தியாவின் நேர மண்டலம் +5.5 இது சரியா என்று பார்ப்போம். மேலுள்ள பார்முலாவில் இதை இட்டுநோக்குவோம்
Longitude = time zone × 15 = 5.5 × 15 = 82.5
82.5° தீர்க்க ரேகை இந்தியா வழியாக செல்கிறது. இந்தியா சரியான நேரமண்டலத்தை தேர்ந்தெடுத்துள்ளது

இந்த பார்முலாவை கொண்டுதான் நேரமண்டலங்கள் வரையறுக்கப்பட்டன. அந்த நாட்டின் வழியாக செல்லும் முக்கியமான தீர்க்க ரேகையை 15ஆல் வகுத்தால் அந்த நாட்டிற்கான நேர மண்டலம் கிடைக்கும். எனினும் பல நாடுளில் அவர்கள் நாட்டின் வழியாக செல்லும் எந்த நெடுக்கையும் ஒரு முழு எண்ணை நேர மண்டலமாக தருவதில்லை. முழு என் என்பது 3, 6, 8 என்பவை ஆகும். ஆனால் சில நாடுகளின் நெடுக்கை தசம பின்ன எங்களை நேர மண்டலமாக தரும். எடுத்துக்காட்டிற்கு இந்திய நேரமண்டலம் 5.5. இந்தியாவில் 4.5, 5, 5.5, 6 & 6.5 ஆகிய நேரமண்டலங்களுக்கான நெடுக்கைகளும் செல்கின்றன. இந்திய அவற்றின் மையத்திலிருக்கும் 5.5ஐ தேர்ந்தெடுத்தது. இந்தியா “ஐந்தரை” எனும் பின்னதை ஒரு பிரச்சனையாக பார்க்க வில்லை. அனால் சில நாடுகள் நேரமண்டலங்கள் முழு எண்ணாக வருவதை விரும்பி அவர்கள் நாட்டில் செல்லாத ஒரு நெடுக்கையை தேர்ந்தெடுத்துள்ளன.

கத்தர்:
கத்தரின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையில் செல்லும் நெடுக்கைகள் 50.7° & 51.7°
எனவே கத்தரின் நேர மண்டலம்  3.38  (50.7 ÷ 15)   முதல்  3.44   (51.7 ÷ 15)  க்குள் இருந்திருக்க வேண்டும்
கத்தர் 3.5 நேரமண்டலத்தை எடுத்திருக்க வேண்டும் ஆனால் தவறாக நேர மண்டலம் 3 ஐ எடுத்துவிட்டது.

UAE:
UAE ன் கிழக்கு மற்றும் மேற்கு எல்லையில் செல்லும் நெடுக்கைகள் 51.6° & 56.3°
எனவே UAEன் நேர மண்டலம்  3.44  முதல்  3.75     க்குள் இருந்திருக்க வேண்டும்
UAE 3.5 நேரமண்டலத்தை எடுத்திருக்க வேண்டும் ஆனால் தவறாக நேர மண்டலம் 4 ஐ எடுத்துவிட்டது.

உங்கள் நேரமண்டலம் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை எளிமையாக அறிந்து கொள்ள: உங்களது லுஹ்ர் தொழுகை நேரம் 12மணியை ஒட்டியதாக இருக்க வேண்டும். லுஹ்ர் தொழுகை நேரம் காலநிலை மாற மாற மாறிக்கொண்டிருக்கும். அப்படி மாறினாலும் குறைந்தது வருடத்திற்கு இருமுறை உங்கள் லுஹ்ர்  பாங்கு நேரம்  சரியாக 12மணிக்கு வந்தால் உங்கள் நேரமண்டலம் சரியானது. வருடத்தில் எந்த நாளுமே உங்கள் லுஹ்ர் தொழுகை நேரம் 12மணிக்கு வரவில்லை என்றால் நேரமண்டலம் தவறானதாகவே உள்ளது.

இப்படி நேர மண்டலம் தவறாக இருப்பதால் ஏதாவது பெரிய பாதிப்பா என்றால் பொதுவாக எந்த பாதிப்பும் இல்லை. அதனால் ஏற்பட்ட ஒரு பெரிய குழப்பத்தை கீழே விளக்கியுள்ளோம்

Coordinated Universal time (UTC) சர்வதேச நேரம்:

Coordinated Universal Time (UTC) is a standard for time keeping. நேரத்தை வரையறுக்க உதவும் ஒரு சீர்செய்யப்பட்ட முறையே சர்வதேச நேரம்:

நேரத்தை கணக்கிடவும் அதை அதை பதிவு செய்யவும் ஒரு சீரான வரைமுறை தேவை. பிந்தைய வரலாறுகளை குறிக்கவும் எதிர்கால நிகழ்வுகளை திட்டமிடவும் மிகச்சரியான நேரத்தை கணக்கிடும் வரைமுறை தேவை. UTC அமுலாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பல முறைகள் உலகில் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் utc எல்லா விதத்திலும் சரியானதாக தேர்ந்த்டுக்கப்பட்டது. இந்த சீரான வரையறையில் “ஒரு நாள்” “ஒரு வினாடி” ஆகியவை வரையறுக்கப்படுள்ளன.

ஒரு வினாடி:
வினாடி என்பதை பூமியின் வேகத்தை வைத்தே முன்னர் வரையறுத்தனர். பூமி ஒருமுறை சுற்ற ஆகும் காலத்தில் 86,400ல் ஒரு பகுதி ஒரு வினாடி என அறியப்பட்டது. ஆனால் பூமியின் வேகம் சீரானதல்ல. ஒரு நிலையான நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால் பூமி ஒரு முறை சுழல சராசரியாக. 23 hours, 56 minutes, 4.0916 seconds எடுக்கிறது அதுவே சூரியனை அடிப்படியாக கொண்டு பார்த்தல் பூமி ஒரு முறை சுழல சராசரியாக 24மணி நேரம் எடுக்கிறது. இவை அனைத்தும் சராசரி வேகமே. பூமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேகத்தில் சுழல்கிறது. மேலும் பூமியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது

எனவே பூமியின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு நேரத்தை கணக்கிட்டால் அது பிழையாகவே வரும். அடிக்கடி நமது கடிகாரங்களில் பிழை திருத்தும் செய்ய வேண்டி வரும். இதை தவிர்க்க மிகத்துல்லியமான ஒரு அடிப்படையை கையாள வேண்டும். அதற்காக சீஸியம் அணுவின் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு ஒரு வினாடியை நிர்ணயம் செய்தனர். ஓரளவுக்கு ஏற்கனவே இருந்த பூமியின் சுழற்சி அடிப்படையிலான நேரத்துடன் இது ஒத்துபோகவும் செய்தது. இதன் அடிப்படையில் ஒரு நிமிடம் என்பது ஏற்கனவே இருந்த 60 வினாடிகள் எனவும் ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள் எனவும் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் எனவும் நிர்ணயம் செய்யப்பது. இதன் அடிப்படையில் ஒரு நாளுக்கு 86,400 வினாடிகள் இருக்கும்.

ஒரு நாள்:
பூமி ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு நாள் ஆகும். ஒரு நாளுக்கு 86,400 சீரான வினாடிகள் (SI Standard Seconds) என தெரிந்து கொண்டோம். ஆனால் பூமியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ஒரு நாளுக்கு 86,400 வினாடிகள் என நிர்ணயம் செய்வது சில வருடங்கள் செல்லும்போது பிழை ஏற்படுத்தும். இந்த பிழையை சரிகட்ட ஒரு சில வருடங்கள் கூடும்போது ஒரே ஒரு நாளுக்கு மட்டும் ஒரு வினாடியை அதிகப்படுத்துகின்றனர். இப்படி செய்வதன் மூலம் சீரான  பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தை சீரான நேரத்துடன் சரிகட்ட முடியும். இப்படி சீரான வினாடியை குறைந்து வரும் பூமியின் சுழற்சி வேகத்துடன் சரி கட்ட பல முறை ஒரு நாளில் ஒரு வினாடியை அதிகரித்துள்ளனர். 21ஆம் நூற்றாண்டில் மட்டும் 2005 2008 ஆம் ஆண்டுகளில் டிசம்பர் 31ம தேதி நள்ளிரவில் ஒரு வினாடியை அதிகப்படுத்தினர். பின்னர் 2012 & 2015 ஆம் ஆண்டுகளில் ஜூன் 30 ஆம் தேதி இது போல் செய்துள்ளனர். இந்த நாட்களில் ஒரு நாள் என்பது 86,400 வினாடிகளுக்கு பதிலாக 86,401 வினாடிகள் கொண்டதாக இருக்கும்.

சர்வதேச நாள் என்றால் என்ன?
சர்வதேச நாள் என்று எதுவும் இல்லை. சிலர் கிரீன்விச்சில் நிலவும் நாளை சர்வதேச நாள் என்று தவறாக கூறி வருகிறார்கள். அப்படி எதுவுமே இல்லை.

மேலே ஒரு வினாடி ஒரு நிமிடம் ஒரு மணி நேரம் ஒரு நாள் ஆகியவற்றின் வரையறைகளை தெரிந்து கொண்டோம். இப்போது ஒரு நாளுக்கு மேல் செல்லும் நேரத்தை எப்படி கணக்கிடுவது. இன்றிலிருந்து 10 நாளுக்குப்பின் நிகழ இருக்கும் நிகழ்ச்சியை எப்படி குறிப்பிடுவது. இதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கிரிகோரியன் நாட்காட்டியையே UTC யும் பயன்படுத்துகிறது. மேலும் வானியல் கணிதத்திற்கு ஜூலியன் நாள் என்றறியப்படும் கணக்கீடும் பயன்பாட்டில் உள்ளது.

சர்வதேச நேரம் எனப்படுவது மேலே உள்ள வினாடி மற்றும் நாளுக்கான கிரீன் விச் நெடுக்கையில் சூரியன் வானின் உச்சத்தில் இருக்கும் பொது உள்ள நேரத்தை அடிப்படையாக கொண்டு உலகெங்கும் நேரத்தை கணக்கிடும் முறையாகும். இதன் அடிப்படையில் முதன்மை நெடுக்கையில் (prime meridian) நண்பகலாக இருக்கும்போது (180°) சர்வதேச தேதிக்கோட்டில் நள்ளிரவாக இருக்கும். அப்போது நேரம் 00:00 (12:00 AM) என வரையறுக்கப்படுகிறது. முதன்மை நெடுக்கையில் (prime meridian) இருந்து 15° கிழக்கில் இருக்கும் ஊருக்கு 1 மணிநேரம் அதிகமாக இருக்கும் அதாவது 1:00AM அல்லது UTC +1. முதன்மை நெடுக்கையில் (prime meridian) இருந்து 82.5° கிழக்கில் இருக்கும் இந்தியாவில் அப்பொழுது 5:30AM ஆக இருக்கும் அதை UTC +5.5 என்பார்கள். இதன் பொருள் UTC யிலிருந்து ஒவ்வொரு நாடும் எத்தனை மணி நேர வித்தியாசத்தில் உள்ளது என்பதை குறிப்பதே. இதனடிப்படியில் தான் கிழக்கில் இருக்கும் சிங்கப்பூர் இந்தியாவிலிருந்து 2 ½ மணி அதிகமாகவும் மேற்க்கில் இருக்கும் துபை 1 ½ மணி குறைவாகவும் உள்ளது.

உலக நேரம் என்பது நேரத்தை கணக்கிட வடிவமைக்கப்பட்ட ஒரு STANDARD ஆகும். இதை அடிப்படையாக கொண்டு தான் நேரம் கணக்கிடப்படுகிறதே தவிர உலக நேரம் என்பது எந்த நாட்டுக்கும் உரிய நேரமண்டலம் அல்ல. இது எங்கேயும் ஒரு நேரமண்டலாமாக பயன்படுத்தப்படுவதில்லை. STANDARD என்றால் என்னவென்று இன்னும் விளக்க வேண்டுமென்றால். ISO 9001 எனப்படுவது தரக்கட்டுபாட்டிற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சர்வதேச STANDARD ஆகும். இதை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தொழிலுக்கும் தகுந்தவாறு செயல்படுதிக்கொள்ளலாம். மேலும் IEC என்பது உலகளாவிய ஒரு STANDARD ஆகும். மின்னியல் சாதனங்களை வடிவமைப்பதற்கான ஒரு STANDARD ஆகும் இதை ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது தேவைகேற்ப மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். IEC 61439 என்பது ஒரு சர்வதேச ஸ்டாண்டர்ட் அதுவே இந்தியாவிற்கு IS 61439 எனவும் சவூதிக்கு SASO 61439 எனவும் இங்கிலாந்திற்கு  BS EN 61439 எனவும் மாற்றப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கே இந்த உதாரணம்.

எனினும் வசதிக்காக சில இடங்களில் சர்வதேச நேரம் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. UTC முறை சர்வதேச தகவல் தொடர்புக்கும் வியாபாரத்திற்கும் பயன்படுகிறது. இந்தியாவிலிருந்து கீவ் எனும் நகரிலுள்ள ஒரு பொருளை வாங்க வேண்டுமெனில் தகவல் பரிமாற்றங்கள் ஒரு பொதுவான நேர அடிப்படையில் நிகழ வேண்டும். “நான் 5.30க்கு உங்களை அழைப்பேன்” என்று அவரிடம் சொன்னால் அவர் அவரது ஊரில் 5:30 என்று நினைக்கக்கூடும். 5.5இந்திய நேரம் என்று சொன்னால் முதலில் அதை அவர் சர்வதேச நேரத்திற்கு மாற்றி பின்னர் அவரது நாட்டின் நேரத்திற்கு மாற்றிக்கொள்வார். மின் அஞ்சல்களில் (email) சர்வதேச தொடர்புகள் செய்யும்போது தங்களது ஊரின் நேர்த்தி UTC முறையில் குறிப்பிடுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். எடுத்துக்காட்டிற்கு துபையில் பணிபுரியும் ஒருவர் தனது மின் அஞ்சல் கையொப்பத்தில் (email signature) UTC +4 என குறிப்பிட்டிருப்பார்

உலகளாவிய நிகழ்சிகள் அனைத்தும் சர்வதேச நேரத்திலேயே குறிப்பிடப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டியின் நிகழ்சி நிரல் உலக நேரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். முக்கியமாக வானியல் நிகழ்வுகள் (கிரகணம், புவிமைய சங்கமம், விண்கற்களின் காட்சி, METEOR SHOWER) உலக நேரத்திலேயே குறிப்பிடப்படும். இப்படி உலக நேரத்தில் குறிப்பிடுவதற்கான காரணம் உலகில் எந்த பகுதியில் உள்ளவரும் அவரது உள்நாட்டு நேரத்திற்கு அதை மாற்றி பார்த்துக்கொள்ளவே. உலக நேரத்தை எங்கேயும் நேரடியாக பயன் படுத்த இயலாது (கிரீன்விச் தீர்க்க ரேகையில் அமைந்துள்ள நாடுகளை தவிர). உள்நாட்டு நேரத்திற்கு மாற்றப்படுவதற்காகவே உலக நேரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பிரச்சனைகள்:

உள்நாட்டு நேர வித்தியாசம்:

அமெரிக்கா அகலத்தில் பெரிது என்பதால் அங்கே ஒரே time zone நேர மண்டலத்தை பின்பற்ற இயலாது. அப்படி பின்பற்றினால் ஒரு ஊரில் சூரியன் உதிக்கும்போது 8 மணியாகவும் வேறொரு ஊரில் 12மணியாகவும் இருக்கும். எனவே அமெரிக்காவில் 9 நேர மண்டலங்கள் உள்ளன. ரஷ்யாவும் இப்படிதான். இதே அளவு பெரிய நாடான சீனா ஒரே நேர மண்டலத்தை தேர்ந்தெடுத்துள்ளது. எனவே சீனாவின் கிழக்கு எல்லையில் 6:50 க்கு சூரியன் உதிக்கும் மேற்கு எல்லையில் 9:30 க்கு சூரியன் உதிக்கும். இதனடிப்படியில் மாகாணத்திற்கு மாகாணம் அலுவலக நேரங்கள் மாறுபடும். இந்தியாவிலும் இதே நிலைதான். இந்தியாவின் கிழக்கு எல்லையில் 05:50க்கு சூரியன் உதயமாகும். மேற்கு எல்லையில் 07:40க்கு உதயமாகும்.

உலகில் 3 நாட்கள்:

நேரமண்டலங்களை நிர்ணயிக்கவும் சீராக்கவும் எந்த சர்வதேச அமைப்புகளும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே தங்களுக்கான நேரமண்டலதையும் ஒவ்வொரு நாடும் முடிவு செய்யலாம்.
இதனால் பலநாடுகளும் தவறான நேரமண்டலங்களையே தேர்ந்தெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நாம் மேலே கூறிய தசம பின்னங்களாகும். ஓரிரு எடுத்துக்காட்டுகளும் கூறியுள்ளோம்.

அபிட்ஜான்
UTC
கிரிபாற்றி
(UTC+14)
பேக்கர் தீவு
(UTC-12)
0
14
-12
வியாழன், 09:00
வியாழன், 23:00
புதன், 21:00
வியாழன், 10:00
வெள்ளி, 00:00
புதன், 22:00
வியாழன், 11:00
வெள்ளி, 01:00
புதன், 23:00
வியாழன், 11:59
வெள்ளி, 01:59
புதன், 23:59
வியாழன், 12:00
வெள்ளி, 02:00
வியாழன், 00:00

இப்படி ஒவ்வொரு நாடும் தங்களது நேரமண்டலத்தை தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை நிலவுவதால் கிரிபாற்றி எனும் நாடு 2000ம் ஆண்டின் வருடப்பிறப்பு தங்கள் நாட்டில் முதலில் தொடங்கினால் அதிகமான உல்லாச பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருவார்கள் எனும் அடிப்படையில் தங்களது நேரமண்டலத்தை பொருத்தமில்லாமல் 2மணி நேரங்கள் அதிகப்படுதிக்கொண்டனர். இப்படி அவர்கள் செய்ததால் எல்லா நாளும் 2மணி நேரங்களுக்கு உலகில் 3கிழமைகளும் 3தேதிகளும் இருக்கும். லண்டனில் வியாழன்  10:15 இருக்கும்போது அமெரிக்கன் சமோவா எனும் தீவில் புதன் இரவு 11:15 மணியாகவும், கிரிபாற்றி தீவில் வியாழன் 00:15 மணியாகவும் இருக்கம். இது மனித தவறு என்பதில் மாற்றுகருத்தில்லை.

தொடர்ந்து படிக்க ... விஞ்ஞானம் - பாகம்-2  >>   http://hafsa13.blogspot.com/2015/07/astro2.html
 
 
 
 
 
 
 
 
 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..