Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1
Posted By:Hajas On 1/9/2016 7:53:30 AM

prednisolon

prednisolon 1world2go.com

 

 

ரேஷன் கார்ட்...
1. ரேஷன்கார்டுக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் ?
ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது.(ஏர்வாடிக்கு நாங்குனேரி,வள்ளியூருக்கு இராதாபுரம்) இங்குதான் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

2. முதலில் குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம் உள்ளது .அதை பூர்த்தி செய்தல் வேண்டும் . விண்ணப்ப படிவம் எங்கே கிடைக்கும்? தற்போது இணையதளத்திலும் விண்ணப்பப்படிவம் கிடைக்கின்றது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் http://www.tn.gov.in/appforms/ration.pdf என்ற இணைதளத்திலும், தமிழில் என்றால்http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற இணைதளத்திலும் பிரதி எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கெள்ளாம் முடியாது என்றால் ,செய்யது ஸ்டோர் ஏர்வாடி,ஸ்டார் கம்யூட்டர் ஏர்வாடி .போன்ற இடங்களிலும் தாலுகா ஆபீஸின் வெளிப்புறங்களிலும் கிடைக்கும்.அவற்றை அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து வட்ட வழங்கல் அலுவலர்களிடமோ அல்லது அவர் சார்ந்த அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் .அவ்வாறு அனுப்பும் போது விண்ணப்பம் சென்றடைந்ததை உறுதி செய்து கொள்ள ஆதாரமாக ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பது நல்லதும் ,பின்னால் உதவக்கூடியதுமாகும்.

சரி புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பங்களுடன் எதை எல்லாம் இணைக்க வேண்டும்?
விண்ணப்பம் பூர்த்தி செய்து அதில் விண்ணப்பதாரர் கையெப்பம் அல்லது இடது பெருவிரல் ரேகை பதிவு செய்து அத்துடன் 
* தமிழ்நாட்டில் மனுதாரர் தற்போது வசிக்கும் விலாசத்திற்கான ஆதாரம் ( அசல் ஆவணத்தின் பிரதி(ஜெரக்ஸ் காப்பி)
*தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தற்போதைய இருக்கும் வீடு சொந்தமானது என்றால்.கடைசியாக சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது.
*மின்சார கட்டணம் ரசீது(கடந்த மாதம்)அல்லது தொலைபேசி கட்டண ரசீது(கடந்த மாதம்) அல்லது வங்கி புத்தத்தின் முதல் பக்கம்,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டில் வசிப்பவராக இருந்தால் அதன் ஒதுக்கீட்டு ஆணை.அல்லது கடவுச்சீட்டு ,
வாடகை வீட்டில் வசிப்பவராக இருப்பின் நடப்பு ஆண்டில் போடப்பட்ட வாடகை ஒப்பந்தம் .
*இதற்கு முன் இருந்த முகவரியில் குடும்ப அட்டை வழங்கப் பட்டிருப்ப்பின் குடும்ப அட்டை வழங்கு அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்பு சான்றுடன் பழைய குடும்ப அட்டையையும்.
*சரி இதற்க்கு முன் நமது பெயர் எந்த குடும்ப அட்டையில் இருந்ததோ அதில் இருந்து நீக்கியதற்கான நீக்கல் சான்று,அல்லது பெயர் சேர்க்கப் பட வில்லை என்ப்தற்கான சான்று
*முந்தய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “குடும்பஅட்டை இல்லா சான்று”
முன்பு குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து இருந்தல் அதன் விண்ணப்ப பதிவு எண்,அல்லது அது தள்ளுபடி செய்யப் பட்டு இருப்பின் அதன் காரணம் ஏதேனும் இருப்பின் அதன் விபரம்.
*எரி வாயு இணைப்பு இருப்பின் அது யாருடைய பெயரில் இருக்கின்றது .எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
*விண்ணப்பத்தாரருக்கு தனது விண்ணப்பம் குறித்த நிலையினை தெரிவிக்க கைபேசி எண் அல்லது மின் அஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தாரரிடம் அவரின் விண்ணப்பத்தின் முடிவினை தெரிவிக்க சுய முகவரியிட்ட, தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்க வேண்டும்.(இதற்கப்புறம் என்ன செய்ய ,அதை நாளை பார்ப்போம்)

https://www.facebook.com/groups/baithussalam/permalink/939857306082987/

குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2

குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3

குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4

குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..