இனி நாம் அனுப்பிய மனுவை தல ஆய்விற்கு அனுப்பப்படும்.ஒரு அலுவலர் விண்ணப்பத்தாரரின் ,முகவரி சரிதானா? அவர் தனியாக சமையல் செய்கின்றறா? எரிவாய்வு இணைப்பு இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்வார்.
மனுதாரர் பூர்த்தி செய்து உதவி ஆணையர்/ வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்த புதிய குடும்ப அட்டை மீது மனு பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தணிக்கைக்கு வருவார்.அவ்வாறு வரவில்லை எனில் மேற்கண்ட அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தகவல் கேட்கலாம்.
அதன் பிறகு நமது விண்ணப்பம் தகுதியானதாக இருப்பின் ,ஒப்புதல் அளிக்கப்பட்டு குடும்ப அட்டை அச்சடிக்க அனுப்பப்படும்.
கவனத்தில் கொள்ளுங்கள்
----------------------------------------
மனுதாரரின் வீட்டில் ஆய்வுக்கு வரும் அலுவலரின் அடையாள அட்டையை(அலுவலக அடையாள அட்டை)அவர் ஆய்வை துவங்குவதற்கு உட்படுமுன் மனுதாரர் கேட்கலாம்.உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் அலுவலரின் நேர்மை மற்றும் அவர்கள் கனிவாக நடந்துக்கொள்வதை உறுதி செய்ய விருப்புகிறது.இத்துறை அலுவலர்கள் ஆய்வுஅலுவலரின் முறையற்ற நடத்தை மற்றும் கையூட்டு கேட்பு தொடர்பான புகார்களை மனுதாரர் தொலை பேசி அல்லது மின்னஞ்சல் மூலமாக ஆணையர் ,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அவர்களுக்கு தயக்கமின்றி தெரிவிக்கலாம்.
மனுதாரர் மனு செய்த உடன் வரிசை எண்,தேதி,அலுவலக முத்திரையுடன் மனுவின் மீதான இறுதி முடிவை தெரிந்துக்கொள்ள தேதி ஆகியவையுடன் கூடிய ஒப்புகை சீட்டு தரப்படும் .
ஆகவே மனுவின் மீதான இறுதி முடிவை தெரிந்துக்கொள்ளும் தேதிக்கு முன்பாக (அதாவது 30 நாட்களுக்கு முன்பாக ) அலுவலர்களை தொடர்பு செய்தல் கூடாது.
தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க காலநிர்னயம் செய்துள்ளது.
உங்களது குடும்ப அட்டை வந்தவுடன் 15 நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளும் படிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப் படும் .
ஒரு வேளை உங்களது மனு தள்ளுபடி செய்யப் பட்டிருப்பின் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து 60 நாட்களுக்குள் அதற்கான காரணம் அஞ்சல் அட்டை மூலம் தெரியப்படுத்தப் படும்.புதிய குடும்ப அட்டை பெற கட்டனம் வெறும் ஐந்து ரூபாய் தாங்க.
விண்ணப்பம் கொடுத்து 60 நாட்கள் ஆகியும் அனக்கம் இல்லன என்ன செய்யனும் ? அதை நாளைக்கு பார்க்கலாமா?
https://www.facebook.com/groups/baithussalam/permalink/940305656038152/
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4
குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5