Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 11-15
Posted By:Hajas On 9/5/2015 3:07:29 AM

remeron

remeron dreampix.fr

எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 11 - 15

by : David Praveen 

பாகம் 1 - 5பாகம் 6 - 10 

 

பாகம் 11

இந்த புத்தகத்தோடு சேர்த்து The Book of Breathings என்றொரு புத்தகமும் இருக்கிறது. இதுவும் The Book of the Dead போன்றதே. The Book of Breathings-ல் ஒரு பாடல் தோத் கடவுளே இந்த இரண்டு புத்தகங்களையும் எழுதியதாக ஒரு குறிப்பு வருகிறது. மம்மியானது பிரமிடுக்குள் வைக்கப்பட்டத்தும் இந்த இரண்டு புத்தகங்களும் கூட சேர்த்து வைக்கப்படும். பிரமிடுற்குள் இருக்கும் அறைகளில் எதாவது ஒன்றில் இந்த புத்தகங்களை வைப்பதற்கென்றே மாடம் கட்டப்பட்டிருக்கும்.

சில சமயங்களில் மம்மியின் துடைகளுக்குகிடையில் இந்த இரண்டு புத்தகங்களையும் வைப்பதுண்டு. இப்படியான சடங்குகள் முடிந்தவுடன் பிரமிடின் கதவு இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுவிடும். இந்த இடத்தில் பிரமிடுகளின் தோற்றம் குறித்து அறிந்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. பிரமிடுகளின் தோற்றமும் எகிப்திய பாரோ பரம்பரையின் தோற்றமும் பிரிக்க முடியாதது. இறந்தப் பிறகான மறு உலக வாழ்க்கைப் பயணத்திற்கு மிக முக்கியமானது என்பதையும் தாண்டி சமாதிகள் தங்களுடைய ஆளுமையையும் பலத்தையும் அறிவித்து எதிரிகளை மிரட்டக் கூடிய மிக முக்கிய கருவிகளில் ஒன்று என்று எகிப்தை ஆண்ட வரலாற்றிர்கு முற்றப்பட்ட காலகட்ட அரசர்கள் கருதியிருக்கிறார்கள்.

பிரமிடுகளின் மூலத்தைக் குறித்து தெரிந்துக்கொள்ள உட்காருகிறோம் என்றால் பாரோக்களின் தோற்றம் குறித்து தெரிந்துக்கொள்ளப் போகிறோம் என்பது எகிப்திய நாகரீகத்தின் அறிவிக்கப்படாத விதி. அந்த அந்த விதியை நாம் மீற முடியாது. எகிப்திய நாகரீகத்தின் முதல் பாரோவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரலாற்றுக்கு முற்பட்ட (prehistorical) எகிப்தைக் குறித்து பார்த்துவிடலாம். எகிப்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் Nabta Playa என்கிற இடத்திலிருந்து வருகிறது. இந்த இடம் எகிப்து சூடான் எல்லையில் இருக்கும் மேற்கு பாலைவனப் பகுதியில் இருக்கிறது.

எகிப்தின் வடக்குப் பகுதிகளிலேயே முதன்முதலில் விவசாய நாகரீகம் தோன்றியதற்கான அடையாளங்கள் இருக்கிறது. விவசாய நாகரீகம் தோன்றிய சமயத்தில் எகிப்திற்குள் மற்றொரு இன மக்களின் ஊடுருவல் நடந்திருக்கவேண்டும் என்று மானுடவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். எது அந்த மக்களினம் என்பது குறித்து சர்ச்சை இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களில் சிலர் அந்த இனம் மெசப்படோமியவை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். மற்றொரு குழு இந்த மக்களினம் தூறக் கிழக்கிலிருந்து வந்தவர்கள் என்கிறார்கள்.

விவசாய நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் அதாவது இன்றையிலிருந்து சுமார் 10,000 வருடங்களுக்கு முன்பு தூர கிழக்கில் மிகப் பெரிய நாகரீகமாக இருந்தவர்கள் தமிழர்கள். கடல்கோள்களால் தங்களுடைய செழிப்பு மிக்க நிலங்களை இழந்துக்கொண்டிருந்தவர்களும் தமிழர்கள்தான். இந்த இடத்தில் தொல்காப்பியம் குறிப்பிடும் ஃபற்றுளி ஆற்று நிலம், கபாடபுரம் போன்ற நிலப் பகுதிகளை கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகள் இடைவெளியில் இந்தியப் பெருங்கடல் தொடர்ந்து தமிழர்களின் விவசாய நிலங்களை காவு வாங்கிக்கொண்டிருக்க தமிழர்கள் அதிகம் அதிகம் கடலைவிட்டு மேடான நாடுகளுக்குள் செல்ல வேண்டியிருந்தது.

கடல் அவர்களின் நிலங்களை அழித்துக்கொண்டிருந்தபோது தமிழர்கள் அந்த கடலை எதிர்த்து அதன் மேல் எப்படி களம் செலுத்துவது என்று கற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாகவே பெருங் கடல்களில் கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தையும் முதன் முதலாக வளர்த்தெடுக்கும் வாய்ப்பும் தமிழர்களுக்கே வாய்த்தது. இயற்க்கை அவர்களின் நிலங்களின் மீது தாக்குதல் தொடுக்க அதே இயற்க்கையை பயன்படுத்தி புதிய புதிய நிலங்களை சென்று அடைந்தவர்கள் தமிழர்கள். இன்றைக்கு இலங்கைக்கு தெற்கில் இருந்த தங்களுடைய நிலங்களை கடல் மெல்ல மெல்ல விழுங்க தமிழர்கள் பெரும் அளவில் கூட்டம் கூட்டமாக கப்பல்களில் வடக்கு, வட மேற்கு மற்றும் வட கிழக்கு என்று மூன்று திசைகளிலும் புதிய நிலங்களைத் தேடி இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

இந்த வகையில் கடல் தாண்டி புதியப் புதிய குடியிருப்புகளை (colonies) முதன் முதலில் உருவாக்கியவர்களும் தமிழர்களே. இந்தியப் பெருங்கடலில் வட மேற்காக கூட்டம் கூட்டமாக சென்ற தமிழர்கள் கரையேறியது எகிப்தின் வடக்குப் பகுதியில். தமிழர்களின் இந்த குடிப்பெயர்விற்குப் பிறகே எகிப்தின் வடக்கு பகுதியில் விவசாய நாகரீகம் தோன்றியிருக்கவேண்டும். இந்தியப் பெருங்கடலில் வடக்கு திசையாக சென்றவர்களே சிந்துவெளி நாகரீகத்தையும் தோற்றுவித்திருக்க சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன.

எகிப்தில் விவசாய நாகரீகம் தோன்றியதும் மூன்று பெரு நகரங்கள் உருப்பெற்றன. அவைகள் Tjeni, Nubt மற்றும் Nekhen.

அடுத்த தொடரிலும்....

 

.பாகம் 12

இந்த மூன்று பெரு நகரங்கள் உருவாவதற்கு முன்பிலிருந்தே அதாவது கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே எகிப்தியர்களிடம் நிலவிய செவி வழி செய்தி (நன்றாக கவனிக்கவும் கதை அல்ல செய்தி) Osiris என்பவரே எகிப்திர்க்கு நாகரீகத்தையும் விவசாயத் தொழில் நுட்பத்தையும் கொண்டவந்தவர் என்கிறது. அன்றை எகிப்தியர்கள் Osiris-யை மரணம் மற்றும் அதற்கு பிறகான மறுவாழ்விற்கான கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள்.

David Praveen's photo.

 

எகிப்தியர்கள் Osiris-யை கடவுளாக்கிவிட்டாலும் அவன் வரலாற்று கால மனிதன் என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு எத்தகைய சந்தேகமும் இல்லை. நிச்சயம் Osiris எகிப்திய பூர்வீகத்தை உடையவன் இல்லை என்பதிலும் ஆராய்ச்சியாளர்களுக்கு எத்தகைய சந்தேகமும் இல்லை ஆனால் அவன் எந்த நாகரீகத்தை சேர்ந்தவன் என்பதற்கு மட்டும் இன்னுமும் விடைக் கிடைக்கவில்லை. (நம்முடைய பல்கலைகழக வரலாற்றுத் துறைகள் என்னச் செய்துக்கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஏன் நம்மூரில் வரலாற்று துறையில் ஆய்வுப் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்பவர்கள் Osiris-க்கும் தமிழர்களுக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளை முன்னெடுக்கவில்லை? ஆய்வுப் பட்டத்திற்கு ஆசைப்பட்டு சினிமா கதைகளையும் பாடல்களையும் ஆராய்பவர்கள் இருக்கும் இடத்தில் இத்தகைய கேள்விகள் எல்லாம் நகைப்பிற்கு உரியதுதான்! இவ்வளவு வாய் கிழிக்கும் நீ இத்தகைய ஆராய்ச்சிகளை செய்யவேண்டியதுதானே என்று கேட்டால் தனி மனிதர்கள் இத்தகைய ஆராய்ச்சிகளை முன்னெடுத்துவிட்டு போகலாம் என்றால் பல்கலைகழகங்கள் பிறகு என்னத்தான் செய்யும்?)

இன்றையிலிருந்து 7000 வருடங்களுக்கு முன்பே எகிப்தியர்கள் Osiris குறித்த செய்தியை விலங்குகளின் எலும்புத் துண்டுகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். எகிப்தியர்கள் பயன்படுத்திய எழுத்து வடிவம் hieroglyphics. இது சித்திர வடிவ எழுத்து வகை. அன்றைய காலகட்டத்திலிருந்தே எகிப்தியர்கள் தங்களுடைய சமூக வாழ்வை எழுத்துக்களாக பதிவு செய்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். இந்த ஆர்வம் அடுத்த 5000 ஆயிரம் வருடங்களுக்கும் அவர்களை விட்டு போகவேயில்லை.

இந்த எழுத்துப் பழக்கத்தின் தொடர்ச்சியாகவே முதல் பாரோத் தொடங்கி 31-வது பரம்பரையின் கடைசி பாரோ வரையிலும் தங்களுடைய அன்றாட செயல்பாடுகள் தொடங்கி அரசியல் செயல்பாடுகள் வரை அனைத்தையும் எழுத்துக்களாக பதிவு செய்ய அவர்கள் தவறவேயில்லை. இதற்கு என்றே scribe என்று ஒரு அரசாங்கப் பதவியை உருவாக்கி அதில் எழுத்தர்களை நியமித்திருக்கிறார்கள்.
சுமார் 6000 வருடங்களுக்கு முற்பட்ட எகிப்தியர்களின் எழுத்துக்களில் இருந்து நமக்கு தெரியவரும் Osiris குறித்த செய்தி இதுதான். Osiris தன்னுடைய மனைவியான Isis மற்றும் உடன் பிறந்த சகோதரனான Seth உடன் எகிப்திற்கு வந்து எகிப்திய பூர்வ குடிகளுக்கு சமூக வாழ்வைக் குறித்தும் விவசாயத் தொழில் நுட்பம் குறித்தும் கற்றுத் தருகிறான். இந்த செயல் அவனுக்கு எகிப்திய பூர்வ குடிகளிடம் மிகுந்த மரியாதையையும் செல்வாக்கையும் பெற்றுத் தருகிறது.

Osiris-க்கு கிடைத்த மரியாதையும் செல்வாக்கும் Seth-ற்கு பொறாமையை உண்டாக்குகிறது. பொறாமையை கட்டுப்படுத்த முடியாமல் Seth தன்னுடைய உடன் பிறந்த சகோதரனை கண்டம் துண்டமாக வெட்டி வீசிவிடுகிறான். இதுவரைக்குமான விவரிப்பு Osiris-யும் Isis-யும் வரலாற்றில் வாழ்ந்த இரத்தமும் சதையும் கலந்த மனிதர்களாக காட்டிவிட்டு இதற்குப் பிறகு அவர்களுக்கு தெய்வத் தன்மையைக் கொடுத்துவிடுகிறது. துண்டு துண்டாகிவிட்ட Osiris-யின் உடலை Isis தன்னுடைய மந்திர சக்தியின் மூலம் ஒன்று சேர்த்து எடுத்துக்கொண்டு சேத்துக்கு பயந்துக்கொண்டு எகிப்தின் வடக்கு பகுதிக்கு சென்றுவிடுகிறாள்.

இதற்குப் பிறகு Isis–க்கு Horus என்று ஒரு மகன் பிறக்கிறான். Horus தன்னுடைய தந்தையின் கொலைக்கு பழிவாங்க Seth-வுடன் கடுமையாக மோதுகிறான். இரண்டு தரப்பிலும் அதிகமாக இரத்தம் சித்தப்பட்ட சண்டையை முடிவிற்கு கொண்டுவர கடவுளர்களுக்கு முன் இந்த தகராறு கொண்டு செல்லப்படுகிறது. கடவுளர்கள் Osiris பக்கமும் Horus பக்கமும் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொண்டு Osiris-யின் உடலுக்கு மீண்டும் உயிர் தருகிறார்கள். பிறகு அவனை மரணம் மற்றும் மறு உலகின் கடவுளாகவும் அரசனாகவும் அறிவிக்கிறார்கள். Horus-யை எகிப்தின் அரசனாக அறிவிக்கிறார்கள். Seth தீமையின் அடையாளமாக அறிவிக்கப்பட்டு அழிக்கப்படுகிறான்.

Osiris மற்றும் Horus குறித்த இந்த செய்திகளை எகிப்தின் பாரோக்கள் அதி தீவிரமாக நம்பினார்கள். இதன் காரணமாகவே பாரோக்கள் தாங்கள் உயிருடன் இருக்கும்போது தங்களை Horus-யின் அவதாரமாகவும் இறந்தப் பிறகு Osiris-யின் அவதாரமாக மாறிவிடுவோம் என்றும் நம்பினார்கள். Tjeni, Nubt மற்றும் Nekhen நகரங்களுக்கிடையே தொடக்கத்திலிருந்தே ஒட்டுமொத்த எகிப்தையும் யார் ஆட்சி செய்வது என்பதுக் குறித்த போட்டி இருந்துவந்தது.

அடுத்த தொடரிலும்......

 

பாகம் 13

இந்த மூன்று நகரங்களுக்கும் இடையில் அதிகார சண்டைகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. இது பல நூறு ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது. இத்தகைய சண்டையில் ஈடுபட்ட அரசர்கள் குறித்தும் இதில் எந்த நகரத்தின் கை ஓங்கியிருந்தது என்பதைக் குறித்தம் எழுத்து ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவைகள் நிச்சயம் எதிர்காலத் தொல் பொருள் ஆராய்ச்சியில் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Nekhen நகரப் பகுதியில் நடைப்பெற்ற தொல் பொருள் ஆய்வின் போது ஆராய்ச்சியாளர்கள் கல்லால் செதுக்கப்பட்ட பட்டையம் ஒன்றை கண்டுப்பிடித்தார்கள். எகிப்திய தொல் பொருள் ஆய்வு வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்தைய மிக மிகப் பழமையான தொல் பொருள் இதுதான். இதன் காலம் இன்றையிலிருந்து 5000 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.

இந்த கல் பட்டையத்தில் செதுக்கப்பட்டிருக்கும் சங்கதிகளே மேலே நாம் பார்த்த மூன்று நகரங்களுக்கும் இடையில் நடைப்பெற்ற ஓயாத சண்டையில் இறுதி வெற்றிப் பெற்றது எந்த நகரம் என்றும் அந்த வெற்றியை சாதித்தவன் யார் என்பதையும் அடையாளம் காட்டிய முதல் வரலாற்று ஆதாரம். இந்த பட்டையத்தில் வாட்ட சாட்டமாக நிற்கும் ஒரு உருவம் தன்னுடைய இடது கையில் தரையில் விழுந்து கிடக்கும் ஒருவனின் தலை முடியை கொத்தாக இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்த உருவம் தன்னுடைய வலது கையில் ஒரு தடியை பிடித்தபடி கீழே விழுந்து கிடப்பவனின் தலையில் ஒங்கி அடிக்கத் தயாராக இருப்பதுபோல ஒங்கியிருக்கிறது.

 

David Praveen's photo.
 
 

கீழே விழுந்து கிடக்கும் உருவம் எத்தகைய எதிர்பும் இன்றி சக்திகள் அனைத்தையும் இழந்துவிட்டதைப் போல துவண்டுப்போய் கிடக்கிறது. அந்த உருவத்திற்கும் கீழே மேலும் இரண்டு உருங்கள் துவண்டு விழுந்துக் கிடக்கின்றன. கல் பட்டையத்தின் இடதுபுறம் ஒரு சிறிய உருவம் ஒரு கையில் தண்ணீர் குவலையையும் மறு கையில் பாத அணிகளையும் பிடித்துக்கொண்டு நிற்கிறது. வலது புறம் மனித கரங்கள் உடைய ஒரு கழுகு துண்டாக்கப்பட்ட மனித தலை ஒன்றை கயிறில் கட்டி இழுத்துக்கொண்டிருக்கிறது. இது கல் பட்டையத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை விளக்க அதிக சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு மிகத் தெளிவான காட்சி அமைப்பு.

போரில் வெற்றிப் பெற்ற ஒருவன் அவனிடம் தோற்று கீழே விழுந்து கிடப்பவனின் தலை முடியை இழுத்துப்பிடித்து அவன் மண்டையை தடியால் அடித்து நொறுக்கப்போகிறான். ஏற்கனவே இரண்டு பேரை அவன் அப்படி செய்திருக்கிறான் என்பதும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. ஆக இந்த பட்டையத்தில் இருப்பவன் நிச்சயம் ஒரு அரசனாகத்தான் இருக்கவேண்டும். ஆம் அப்படியேத்தான். மேலும் அந்தப் பட்டையம் Narmer என்கிறப் பெயரையும் கொடுத்தது. இந்த பெயரே ஆராய்ச்சியாளர்கள் இந்த பட்டையம் எந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கிறது என்பதை அடையாளம் காண உதவியாக அமைந்தது.

இந்த இடத்தில் நாம் Manetho என்பவரைக் குறித்த அறிந்துக்கொள்ள வேண்டும். இவர் எகிப்திய பூசாரிகளில் ஒருவர். இவர் வாழ்ந்தது இன்றையிலிருந்து சுமார் 2300 வருடங்களுக்கு முன்பு. இவர் சுமார் கி.மு. 300 ஆண்டு வாக்கில் ஒரு அற்புதமான காரியத்தை செய்தார். அது எகிப்திய நாகரீகம் குறித்த செய்திகளைத் தொகுத்து ஒரு வரலாற்று புத்தகம் எழுதியது. இவர் பூசாரி என்பதால் எகிப்தின் கோயில்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரமாயிரம் பப்பைரஸ் சுருள்களை எந்தவித அனுமதியும் தடையும் இல்லாமல் பார்க்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்.

எகிப்திய கோயில்களில் குவிந்து கிடக்கும் சுருள்களை சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்காமல் பாரோக்கள் குறித்த ஒரு வரலாற்று புத்தகத்தை எழுதினார். பப்பைரஸ் சுருள்கள் பதிவு செய்திருந்த முதல் பாரோத் தொடங்கி 31-வது வம்சத்தின் இறுதி பாரோ வரையான தகவல்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் தொகுத்துதார். மிக மிக கடினமான காரியம் இது. மண்டை காய்ந்துவிடுவது மாத்திரமில்லாமல் இடுப்பும் ஒடியக் கூடிய வேலை. இன்றைக்கு நான் எகிப்திய பாரோக்கள் குறித்த அட்டவணையை மிக எளிதாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன் என்றால் அதற்கு முழு முதல் காரணம் Manetho.

இவர் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த அடிப்படையில் 150-க்கும் மேற்ப்பட்ட பாரோக்களை வரிசையாக தொகுத்தாரோ அதையே இன்று வரைக்கும் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைவிட ஒருவர் சிறப்பாக நூற்றுக்கணக்கான பாரோக்களின் தகவல்களை தொகுத்திருக்க முடியாது என்பதால் நவீன ஆராய்ச்சியாளர்கள் அதில் கைவைக்க துணியவில்லை. மானிதோ எகிப்தின் முதல் பாரோ Menes என்று தொடங்குகிறார். இவனுக்கு Narmer என்றும் Hor-Aha என்று வேறுப் பெயர்களும் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்த நாம் மேலேப் பார்த்த கல் பட்டையத்தின் இரகசியம் மெல்ல மெல்ல அவிழ்ந்துவிட்டது.

அடுத்த தொடரிலும்......

 

பாகம் 14

Tjeni நகரின் அரசன் Narmer சுமார் கி.மு. 3000 வருடங்கள் வாக்கில் Nubt மற்றும் Nekhen நகரின் அரசர்களை போரில் தோற்கடித்து அந்த நகரங்களை நிர்மூலமாக்கியிருக்கிறான். அவனுடைய வெற்றியின் சிறப்பை இந்த உலகிற்கு அறிவிக்கும் விதமாகவே Nekhen நகரில் அந்த கல் பட்டையம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த கல் பட்டையத்தில் கீழேக் கிடப்பவனின் மண்டையில் அடிப்பதுபோல் நிற்பது நார்மர்.

இந்த வெற்றிக்குப் பிறகு தனித் தனி நகரங்களாகப் (city states) பிரிந்துக் கிடந்த எகிப்தை ஒன்றாக்கி ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து எகிப்தை ஒரு நாடாக மாற்றினான். தன்னை ஒன்றினைந்த எகிப்தின் முதல் பாரோவாக கி.மு. 2950 வாக்கில் அறிவித்தான். எகிப்தின் பாரோ வம்சம் இவனிலிருந்தே தொடங்குகிறது. இவனிலிருந்தே எகிப்தின் முதல் அரச வம்சாவளி (First Dynasty) தொடங்குகிறது. இதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் Early Dynastic Period என்று வசதிக்காக மேலும் ஒரு பகுப்பாக பகுத்திருக்கிறார்கள். Early Dynastic Period கி.மு. 2950–2575 வரை சுமார் 400 ஆண்டுகளுக்கு நீள்கிறது. இந்த பகுப்பு மூன்றாம் அரச வம்சத்தோடு (Third Dynasty) முடிவடைகிறது.

போரில் தோற்ற எதிரியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து அவன் தலையில் அடித்துக்கொல்லும் இந்த காட்சியமைப்பை அவனுக்குப் பின் வந்த அனைத்து பாரோக்களும் தங்களுடைய வெற்றியை அறிவிக்கப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த காட்சியமைப்பை அனைத்துப் பாரோக்களின் கோயில்களிலும் பிரமிடுகளிலும் குடைவரைக் கல்லறைகளிலும் பார்க்க முடியும். பெண் பாரோக்களாக இருந்தவர்களும் கூட இந்த காட்சியமைப்பில் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த இடத்தில் எகிப்திய பாரோ வம்சத்தின் மொத்தப் பட்டியலையும் தருவது ஏற்புடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

EARLY DYNASTIC PERIOD கி.மு. 2950–2575
முதல் வம்சாவளித் தொடங்கி மூன்றாம் வம்சாவளி வரை

OLD KINGDOM கி.மு. 2575 - 2125
நான்காம் வம்சாவளித் தொடங்கி எட்டாம் வம்சாவளி வரை

FIRST INTERMEDIATE PERIOD கி.மு. 2125–2010
பத்தாம் வம்சாவளித் தொடங்கி பதினோராம் வம்சாவளி வரை

MIDDLE KINGDOM கி.மு. 2010–1630
பன்னிரெண்டாம் வம்சாவளித் தொடங்கி பதினான்காம் வம்சாவளி வரை

SECOND INTERMEDIATE PERIOD கி.மு. 1630–1539
பதினைந்தாம் வம்சாவளித் தொடங்கி பதினேழாம் வம்சாவளி வரை

NEW KINGDOM கி.மு. 1539–1069
பதினெட்டாம் வம்சாவளித் தொடங்கி இருபதாம் வம்சாவளி வரை

THIRD INTERMEDIATE PERIOD கி.மு. 1069–664
இருபத்தியோராம் வம்சாவளித் தொடங்கி இருபத்தைந்தாம் வம்சாவளி வரை

LATE PERIOD கி.மு. 664–332
இருபத்தியாராம் வம்சாவளித் தொடங்கி முப்பத்தியோராம் வம்சாவளி வரை

இதற்குள் அடங்கியிருக்கும் பாரோக்களின் பெயர் பட்டியலை தருவது சலிப்பை ஏற்ப்படுத்தும் என்பதால் அதை இங்கே நான் குறிப்பிடவில்லை.

அடுத்த தொடரிலும்.......

 

பாகம் 15

நார்மருக்கு முன்பு எகிப்தில் இருந்த வம்சாவளிகளைக் குறித்து கொஞ்சமே கொஞ்சம் தகவல்களை பப்பைரஸ் சுருள்கள் தருகின்றன. அந்த வம்சாவளிகளின் பெயர்கள் Tasian, Badarian மற்றும் Nagada. இந்த வம்சாவளியைச் சேர்ந்த அரசர்களே நாம் மேலப் பார்த்த மூன்று நகரங்களையும் ஆட்சி செய்திருக்கிறார்கள். நார்மர் இதில் எந்த வம்சாவளியைச் சேர்ந்த அரசன் என்று தெளிவாகத் தெரியவில்லை. தமிழ்ர்கள் குறித்த மானுடவியல் வாசிப்பு அனுபவம் உடையவர்களுக்கு Nagada என்கிறப் பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் நெறிடியிருக்கும்.

எகிப்தின் Nagada-க்கள் தமிழர்களின் தொல் பழங்கால வேட்டை நாகரீக குடிகளில் ஒன்றான நாகர்களாக (Nagas) இருக்குமோ என்று சந்தேகம் எழலாம். இந்த சந்தேகம் உண்மையாகவும் கூட இருக்க வாய்ப்புகள் பிரகாசம்தான். ஆனால் இத்தகைய அற்புதமான ஆராய்ச்சித் தகவல்களை எடுத்துவைத்துக்கொண்டு தெளிவாக ஆராய்ந்து எகிப்திய பழங்குடிகளுக்கு நாகரீகத்தையும் விவசாயத்தையும் அதன் மூலமான நகர வாழ்வையும் ஆட்சி அமைப்பையும் அறிமுகப்படுத்தி எகிப்திய நாகரீகத்தின் வேராக இருந்தவர்கள் தமிழர்கள் என்பதை இந்த உலகிற்கு அறிவிக்கவேண்டிய நம்முடைய பல்கலைகழக வரலாற்று ஆராய்ச்சித் துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்பது அதற்கேத் தெரியாத நிலையில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது.

ஆங்கில வரலாற்றுத் துறை, ஒப்புக்குப் பெறாத துப்புக் கிடைத்தாலே அதை வைத்துக்கொண்டு பிரமிக்கத்தக்க வரலாற்று உண்மைகளை வெளியேக் கொண்டுவருவதையும் எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்குமான உறவுகள் குறித்து இத்தனை வளுவான மறைமுக வரலாற்று ஆதாரங்கள் இருந்தும் நம்முடைய வரலாற்று துறை தூங்கி வழிந்துக்கொண்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்பதையும் கூட நினைத்துப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. சங்டப்பட்டும் வருத்தப்பட்டும் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றுப் புரிகிறதுதான் இருந்தாலும் ஆதங்கம் அடங்கவில்லை. நல்லதோர் வீணைச் செய்து அதை நலங்கெட புழுதியில் எறிபவர்களை நீங்கள் பார்த்தது இல்லையென்றால் அதற்காக கவலையேப்படவேண்டாம் காரணம் நாம்தான் அந்த அறிவீளிகள். உலக நாகரீகங்களுக்கெல்லாம் வழிகாட்டிய நம்முடைய சிறப்புகளை இப்படி அறியாமைப் புழுதியில் தொலைத்துக்கொண்டிருக்கும் நாம் முட்டாள்கள் இல்லாம் வேறு என்ன!

Tasian, Badarian மற்றும் Nagada வம்சாளியைச் சேர்ந்த அரசர்கள் தங்களுடைய வல்லமையை எதிரிகளுக்கு எடுத்துக்காட்ட தங்களுடைய கல்லறைகளையும் ஒருக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவைகள்தான் பிற்காலத்தில் பாரோக்களின் பிரமிடுகளாக வளர்ச்சியடைந்தவைகள். அந்த வகையில் பிரமிடுகளின் தொடக்கம் என்பது சுமார் கி.மு. 6000 ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது. தொடக்கத்தில் இருந்தவைகள் கற்குவியலைக் கொண்டு உருவாக்கப்பட்ட மணல் மேடு போன்றவைகளாக இருந்திருக்கிறது. இதற்குள் அறைகள் எல்லாம் கிடையாது. அரசர்களின் உடல்களும் மம்மிக்களாக மாற்றப்பட்டு இந்த கற்குவியல்களுக்கு அடியில் வைக்கப்பட்டதற்கான தொல்லியல் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த கற்குவியல் கல்லறைகளின் அடுத்த நிலை வளர்ச்சியான Mastabas நார்மரின் காலப் பகுதியில் தோன்றுகிறது. நார்மரின் உடலே Mastaba விற்குள்தான் அடக்கம் செய்யப்பட்டிருகிறது. நார்மரின் இந்த மஸ்டபா இன்றைய Abydos பகுதியில் இருக்கிறது. மஸ்டபாஸ் சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இவைகள் நீள் சதுர வடிவம் கொண்டவைகள். காலத்தால் முற்ப்பட்ட மஸ்டபாக்களின் கீழே அறைகள் இல்லாமல்தான் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மஸ்டபாக்களுடன் இறந்த பாரோக்களை வழிப்பட என்று மேற் கூரையில்லாத கோயில்களும் ஒரு சில பலிபீடங்களும் இருந்திருக்கின்றன. இந்த தொடக்க கால மஸ்டபாக்களில் வைக்கப்பட்ட பாரோக்களின் இறந்த உடல்கள் மம்மிபிகேசன் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

நார்மர் காலத்திய மஸ்டபாக்களின் கீழே இரண்டு அறைகள் கொண்ட அமைப்பு வழக்கத்திற்கு வந்திருக்கின்றன. நார்மரின் மஸ்டபாவாக இன்றைக்கு அடையாளம் காணப்பட்டிருக்கும் மஸ்டபா அடித்தளத்தில் இரண்டு அறைகளைக் கொண்டிருக்கிறது. இதில் நார்மரின் மம்மி உடல் வைக்கப்பட்டிருந்திருக்கலாம்.

அடுத்த தொடரிலும்......

 
David Praveen's photo.
David Praveen's photo.
 
 

 பாகம் 11 - 15பாகம் 16 - 20பாகம் 21 - 25பாகம் 26 - 30

 



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..