Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 6 - 10
Posted By:Hajas On 9/4/2015 4:26:10 AM

generico cialis farmacia

pillola cialis controindicazioni adboesten.nl

எகிப்தின் மர்மங்கள்: The Book of the Dead, பிரமிடுகள்,..பாகம் 6 - 10

by : David Praveen 

பாகம் 1 - 5


பாகம் 6

 

அவனுக்கு முன் மூவாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த எகிப்தின் வரலாற்று பொக்கிசங்களை அழிக்க உத்திரவிட்டான் அகநேத்தன். உலகப் புகழ்பெற்ற பிரமிடுகள், பிரமிடு கல்லறை கோயில்கள், கர்நாக்கில் (Karnak என்பது நம்முடைய காஞ்சிபுறமும் தஞ்சாவூரும் எப்படி பல கோயில்களின் நகரங்களோ அதேப் போல எகிப்திய நாகரீகத்தின் கோயில்களின் நகரம்.) இருந்த பல நூறு கோயில்கள் என்று அனைத்திலும் இருந்த மற்ற கடவுள்களின் சிலைகளையும், புடைப்பு சிற்பங்களையும், சித்திரங்களையும் சிதைக்க கட்டளையிட்டான்.

தன்னுடைய நாட்டின் தலை சிறந்த வரலாற்று பொக்கிசங்களை தானே அழிக்கும் ஒரு மன்னனை அன்றுதான் உலக வரலாறு கண்டது. மூவாயிரம் ஆண்டுகளாக காலம் காப்பாற்றி வந்த வரலாற்று அற்புதங்களை தன்னுடைய ஒரேக் கட்டளையின் மூலம் நிர்மூலமாக்கினான் அகநேத்தன். இப்படி சிதைக்கப்பட்ட சிலைகளுக்கு பதிலாக தன்னுடைய ஏலியன் உருவம் கொண்ட சிலைகளை நிறுவ சிற்பிகளையும் கட்டிட கலைஞர்களையும் பூசாரிகளையும் கட்டாயப்படுத்தினான்.

எகிப்தியர்கள் இனி மற்ற கடவுளர்களின் பெயர்களை தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ள கூடாது என்கிற அடுத்த அதிரடி கட்டளையும் அவனிடமிருந்து வந்தது. Aten என்கிற தன்னுடையப் பெயரையே மக்களும் மற்ற கடவுள் பூசாரிகளும் தங்களுடைய பெயர்களுக்கு பின்னால் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னது அவனுடைய அரசாணை. இதன் காரணமாகத்தான் அவனுடைய மனைவி எகிப்திய பேரழகி Nefertiti தன்னுடைய பெயரை Neferneferu’aten’ என்று மாற்றிக்கொண்டாள். எகிப்து முழுவதும் குஞ்சான் குழவான்களிலிருந்து அனைவரின் பெயருக்கு பின்னாலும் Aten ஒட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

கோயில்களில் மற்ற கடவுளரின் சிலைகள் ஒழுங்காக சிதைக்கப்படுகிறதா மக்களும் பூசாரிகளும் தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் Aten என்று சேர்த்து தன்னை சிறப்பிக்கிறார்களா என்று கண்காணிக்க ஒரு தனிப் படையே ஏற்பாடு செய்தான் அவன். இந்த படைக்கு Upper Egypt மற்றும் Lower Egypt என்று எகிப்து முழுவதும் சுற்றித் திரிந்து மற்ற கடவுளர்களின் சிலைகளை அழிப்பதுதான் பிரதான வேலையே. இந்த படைக்கு உள்ளூர் பூசாரிகளும் உதவ வேண்டும் இல்லையென்றால் பூசாரிகளின் தலைதப்பாது.

அவன் காலத்திற்கு முன்பு வரை கடவுளர்களின் சிலைகள் காலையும் மாலையும் நகரின் தெருக்கள் வழியாக ஊர்வலம் போவது வழக்கம். அகநேத்தன் அதற்கும் தடைவிதித்தான். Aten கடவுளாகிய தான் தன்னுடைய கோயிலுக்கு காலையும் மாலையும் குதிரைகள் பூட்டிய ரதத்தில் சென்று திரும்புவதை மக்கள் வழியெங்கும் திரண்டு நின்று சிறப்பிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அகநேத்தனுடைய இத்தகைய நடவடிக்கைள் ஒன்றை மிக உறுதியாகத் தெளிவுப்படுத்தியது. அது எகிப்திய நாகரீகம் அதுவரை அறிந்திருந்த அனைத்து கடவுளர்களையும் இல்லாமல் ஆக்கிவிட்டு இனி எகிப்தில் கடவுள் என்றால் அது தான் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவனுடைய தீவிர சிந்தனையை.

எகிப்தியர்கள் கடவுளர்களுக்கும் குடும்பம் உண்டு என்று பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் என்பாதல் தன்னுடைய மனைவி மற்றும் ஆறு பெண் குழந்தைகளையும் கூட கடவுள்கள் என்று அறிவித்தான். எகிப்தியர்கள் வருடா வருடம் sed மற்றும் Opet என்கிறத் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். இந்த இரண்டு திருவிழாக்களையும் இனி எகிப்தியர்கள் தன்னை சிறப்பிக்கும் திருவிழாக்களாக கொண்டாட வேண்டும் என்று மற்றொரு அதிரடியை கிளப்பிவிட்டான்.

நான் கடவுள் என்று தான் செய்யும் அழிச்சாட்டியங்களைப் பொறுக்க முடியாமல் மக்கள் கொதித்தெழுந்து தன்னுடைய உயிருக்கு ஆபத்தை உண்டுப் பண்ணாலும் பண்ணிவிடுவார்கள் என்கிற பயம் அவனுக்கு ஒரு பக்கம் இருந்துக்கொண்டேதான் இருந்தது. இதன் வெளிப்பாடாக அவனுடைய அரண்மனைக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாவல் படையில்லாமல் அவன் நகர்ந்தது கிடையாது. காலையும் மாலையும் தான் கடவுளாக இருக்கும் கோயிலுக்கு தானே சென்று வரும் சடங்கை கூட பாதுகாவல் படையின் துணையுடன்தான் செய்வான். தான் உருவாக்கிய புதிய நகரத்தில் தன்னுடைய பாதுகாப்பிற்கு குறைச்சல் இல்லாமல் பார்த்துக்கொண்டான்.

தன்னுடைய பாதுகாவல் படையில் பெரும்பாலும் நுபிய மத்தியத் தரைகடல் நாடுகளைச் சேர்ந்த படை வீரர்களையே வேலைக்கு அமர்த்தியிருந்தான். தலைமை பூசாரிகள் ஒன்று சேர்ந்து சூழ்ச்சி செய்து அரசாங்க அதிகாரிகளை தங்களின் கைகளுக்குள் போட்டுக்கொண்டு தன்னை கொலை செய்தாலும் செய்யலாம் என்கிற பீதியில் தன்னுடைய அரசாங்கத்திலும் அதிகாரமிக்க பதவிகளிலும் வெளி நாட்டவர்களையே நியமித்தான். இதெல்லாம் எகிப்திய மக்கள் அதுவரை பார்த்திராத விசயங்கள். கடவுளாக தன்னை கருதிக்கொண்டவனுக்கு இந்த பூமியில் இருந்தவரைக்கும் பயத்திற்கு பஞ்சமே இல்லை.

ஆனால் அவன் எதிர்பார்த்தபடி மக்கள் அவனை எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அவன் காலத்திய எகிப்தியர்களின் சராசரி ஆயுட் காலம் 40 வயதுதான் என்று கிடைக்கும் தொல்பொருட்கள் உறுதிப்படுத்துகின்றன. அவன் ஆட்சி காலத்திய மக்கள் ஊட்டச் சத்து குறைபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் நையல் நதியின் விவசாய செழிப்பு அன்றைய காலத்திலேயே உலக புகழ்பெற்றது. சிந்து நதி விவசாய செழிப்புபோல. அப்படி இருந்தும் அவனுடைய ஆட்சி காலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்திருந்து இருந்ததற்கு கடும் உழைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த தொடரிலும்.......


 

பாகம் 7

 

எகிப்திய நாகரீகம் என்றாலே பிரம்மாண்டமான பாரோ கட்டிடக் கலைதான். அன்றைக்கு எகிப்திய நாகரீகத்தோடு சம காலத்திலிருந்த சுமேரிய மற்றும் சிந்துவெளி நாகரீகங்களைவிடவும் மிக பிரம்மாண்டமான கட்டிடங்கள் எகிப்தில் உருவாக்கப்பட்டது. இத்தகைய மிரட்டும் கட்டிடக் கலைக்கு தேவைப்படும் பொருளாதார தேவையை நைல் நதியின் செழிப்பு பார்த்துக்கொள்ள மனித உழைப்பை எகிப்திய மக்கள்தான் கொடுக்கவேண்டியிருந்தது. இந்த கடும் உழைப்பே அவர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்திருக்கவேண்டும் என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு நிருபிக்கப்பட்ட உண்மை கிடையாது.

 

அகநேத்தனுடைய வீழ்ச்சி அவனுடைய தாய் Tiye-யின் இறப்போடு தொடங்கியது. இந்த துக்கத்திலிருந்து அவன் மீள்வதற்கு முன்பே அவன் மிகவும் நேசித்த அவனுடைய இரண்டாவது மகள் Meketaten அவளுடைய ஏழாவது வயதிலேயே இறந்தது அவனை மேலும் உலுக்கிவிட்டது. இதிலிருந்து அவன் மீண்டதாகத் தெரியவில்லை. அவனுடைய 17-வது ஆட்சி ஆண்டில் (கி.மு. 1336-ல்) அகநேத்தன் இறந்துப்போனான். தன்னுடைய மம்மியை வைக்கப்போகும் sarcophagus-யின் நான்கு மூலையிலும் எகிப்திய பழமை கடவுளரின் சிலை உருவத்தை வைக்க கூடாது என்பது அவன் உயிருடன் இருந்தபோதே அறிவித்துவிட்ட விசயம். அதற்கு பதிலாக தன்னுடைய மனைவி நெப்ரிடிடியின் சிலை உருவை வைக்கவேண்டும் என்றும் அறிவித்திருந்தான். அதன் படியே செய்யப்பட்டது. இதுவும் அதுவரை எகிப்து நாகரீகம் அறியாத ஒன்று.

 

அகநேத்தனுடைய மம்மி உடலில் இருந்த ஈரம் கூட காய்ந்திருக்காது அதற்குள் எகிப்தில் பழைய நிலைமை படு வேகமாக திரும்பிவிட்டது. அமூன் கடவுளின் தலைமை பூசாரி அகநேத்தனுடைய மரணத்திற்காகவே காத்துக்கொண்டிருந்தவர்கள்போல இனி எகிப்தியர்கள் பழையபடி அமூன் கடவுளை வழிபடலாம் என்று அறிவித்தார். இதற்கு அகநேத்தனுடைய குடும்பத்தினரிடையேயும் பெரும் ஆதாரவு இருந்திருக்கிறது முக்கியமாக நெப்ரிட்டி இதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

 

அவன் இறந்ததும் ஆட்சி நெப்ரிடிடியின் கைக்கு வந்தது. ஆனால் அகநேத்தனுடைய அந்தப்புர பெண்களில் ஒருவருக்குப் பிறந்த Smenkhkara என்பவன் தன்னை எகிப்தின் பாரோவாக அறிவித்துக்கொண்டு கி.மு. 1333–1332 வரை ஆட்சியிலிருந்தான். இதற்கு ஒரு முடிவுக்கட்ட நெப்ரிடிடியும் எகிப்தின் தலைமை பூசாரிகளும் ஒன்று சேர்ந்து ஒரு உடன்பாட்டிற்கு வந்தார்கள். அதன்படி அகநேத்தனுக்கும் மற்றொரு அந்தப்புர பெண்களில் ஒருத்தருக்கும் பிறந்த Tutankhaten என்பவனுக்கு நெப்ரிடிடியின் மூன்றாவது மகளான Ankhesenpaaten-யை திருமணம் செய்துவைத்து Tutankhaten-யை அதிகாரப் பூர்வ பாரோவாக அறிவிப்பது என்று முடிவானது. இவர்களின் பெயர்களுக்கு பின்னால் Aten என்கிற ஒட்டு ஒட்டிக்கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் எல்லாம் அகநேத்தனுடைய திருவிளையாடல்தான்.

 

ஆனால் Tutankhaten-னும் Ankhesenpaaten-னும் திருமணம் செய்துக்கொண்டப் பிறகு தங்களுடையப் பெயர்களை துத்தன்கமூன் (Tutankhamun), அனக்ஸ்னமூன் (Ankhesenamun) என்று மாற்றிக்கொண்டார்கள். அமூன் கடவுளின் பெயர் மீண்டும் எகிப்தியர்களின் பெயர்களோடு வந்து ஒட்டிக்கொண்டதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. துத்தன்காமூன் கி.மு. 1332-ல் Upper Egypt மற்றும் Lower Egypt என்று ஒட்டுமொத்த எகிப்திர்கும் பாரோவாக பதவியேற்றான்.

 இங்கே Upper Egypt மற்றும் Lower Egypt என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். நைல் நதி உருவாகும் பகுதியை Upper Egypt என்றும் நைல் நதி மெடிடிரினியன் (Mediterranean) கடலில் கலக்கும் பகுதியை Lower Egypt என்றும் கி.மு. 3000 ஆண்டு தொடங்கியே எகிப்தியர்கள் பிரித்து அறிந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பகுதியையும் பிரிக்கும் Middle Egypt என்று அழைக்கப்படுவது Thebes நகரம். Thebes-லிருந்துக்கொண்டு இரண்டு பகுதிகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே எகிப்திய பாரோக்களின் தலைநகரம் போல செயல்பட்டு வந்தது Thebes. இந்த நகரத்தைதான் அகநேத்தன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இழுத்து மூடியது.

 துத்தன்காமூன் சிறு வயதிலேயே பாரோவாக பதவியேற்றவன். அவனுடைய தந்தை அகநேத்தன் செய்து வைத்துவிட்டுப்போன அலங்கோலங்களை படுவேகமாக சீர்படுத்த தொடங்கினான். எகிப்து முழுவதும் அகநேத்தன் சிதைத்த கடவுளர் சிலைகளை சீராக்கி புதுபிக்க கட்டளையிட்டான். எகிப்தியர்கள் பழையபடி தங்கள் விருப்ப தெய்வங்களை வழிபட எந்த தடையும் இல்லை என்று அறிவித்தான். இப்படி எகிப்திய மக்களின் மனம் குளிர போய்கொண்டிருந்த துத்தன்காமூனுடைய ஆட்சி பத்து ஆண்டுகளைத் தாண்டவில்லை துத்தன்காமூன் அல்பாயுசில் போய் சேர்ந்துவிட்டான். மிக இளவயதிலேயே இறந்த பாரோக்களில் துத்தன்காமூன் ஒருவன்.

இவனுடைய மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். துத்தன்காமூன் அரண்மனை சதியின் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு புறவய ஆதாரகங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். துத்தன்காமூன் ஆட்சி வந்ததிலிருந்து மக்களின் இஷ்டத்திற்கு மத சுதந்திரம் கொடுத்துவிட்டாலும் அவனுடைய இரகசிய திட்டம் அவனுடைய தந்தை அகநேத்தனின் மத திட்டத்தையே மீண்டும் அதிக பலத்துடன் மக்களின் தலையில் திணிப்பதாக இருந்திருக்கலாம். அதாவது அகநேத்தனே எகிப்தின் ஒரேக் கடவுள் என்கிற நிலையை உண்டாக்குவது.

அடுத்த தொடரிலும்......


பாகம் 8

 

இதை மோப்பம் பிடித்துவிட்ட தலைமை பூசாரிகள் சூழ்ச்சி செய்து அவனை கொலை செய்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களில் ஒரு குழு நம்புகிறது. அவன் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டானா அல்லது இயற்க்கையாகவே மரணமடைந்தான் என்பதில் மர்மம் நீடித்தாலும் அவனை அடக்கம் செய்த கல்லறையில் சாதாரண மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கப் பொருட்கள் இருந்தது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

 உதாரணத்திற்கு அவனுடைய மம்மி வைக்கப்பட்டிருந்த sarcophagus-யை மூடியிருந்தது முழுக்க தங்கத்தால் அவனுடைய முழு உருவமும் செதுக்கப்பட்ட தங்கப் பலகை. பாரோ என்றதுமே உங்கள் நினைவில் வரும் பாரோ உருவம் (பெரும்பாலும் தொலைக்காட்சிகளிலும், ஆலிவுட் படங்களிலும், பத்திரிக்கைகளிலும் வரும் தங்கத்தாலான பாரோ முகம் கொண்ட புகைப்படம்) துத்தன்காமூனுடைய sarcophagus-யை மூடியிருந்த தங்க பலகையில் இருந்து வந்ததுதான். இது உலகப் புகழ்பெற்ற புகைப்படம். ஏறத்தாழ இரு நூறு நூற்றாண்டுகளாக உலக மக்கள் இந்த பாரோ முகத்திற்கு பழக்கமானவர்கள்.

 அந்த வகையில் இன்றைய உலக மக்களின் மிக அபிமான பாரோ துத்தன்காமூனே. இதற்கு காரணம் அவனுடைய மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மமும் அவனுடைய கல்லறையில் இருந்த அளவிட முடியாத தங்கமும். இன்றையத் தேதியில் எகிப்து பாரோக்கள் குறித்த திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் அது நிச்சயம் துத்தன்காமூனை தொடர்புப்படுத்தியதாகத்தான் இருக்கும். கூகுளில் அதிகம் தேடப்படும் பாரோவும் இவனே.

 இவனுடைய கல்லறையை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சமயத்தில் அதற்குள் இவனுடைய மம்மி இல்லை என்பது இவனைக் குறித்த அடுத்த சுவாரசியம். The Valley of the Kings-ல் இருந்த இவனுடைய கல்லறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து திறந்து பார்த்தபோது அதற்குள் ஒப்புக்குப் பெறாத சிலப் பொருட்களைத் தவரி வேறு எதுவுமே இல்லை. கல்லறை திருடர்கள் அவனுடைய கல்லறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துவிட்டதுமில்லாமல் அவனுடைய மம்மியையும் ஏதோ செய்து அழித்துவிட்டார்கள் என்றுதான் முதலில் ஆராய்ச்சிளார்கள் தீர்மானித்தார்கள்.

 ஆனால் வேறு ஒரு மம்மிக்கு உரிய கல்லறையில் துத்தன்காமூனுடைய மம்மியும் அவனை அடக்கம் செய்தபோது வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருடங்களும் எத்தகைய சேதமும் இல்லாமல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏதேச்சையாக கிடைக்கப்பெற்றது. துத்தன்காமூனுடைய மம்மி கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றால் அதை ஆராய்ச்சியாளர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்கிற வரலாறு படு சுவாரசியமான வாசிப்பை கொடுக்க கூடியது. இது குறித்த National Geographic Channel மிக அருமையான பல குறும்படங்களை எடுத்து ஒலிபரப்பியிருக்கிறது. இந்த வகையிலும் துத்தன்காமூன் மக்களின் சுவாரசியத்தை தூண்டிவிட்டான்.

 துத்தன்காமூனுடைய மம்மி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதையே ஒரு தனிக் கட்டுரைத் தொடராக எழுதலாம். அதை நாம் இங்கே செய்யப்போவதில்லை. ஆனால் மம்மி செய்யும் முறையைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். வரலாற்றின் தந்தை என்று சிறப்பிக்கப்படும் Herodotus (இவர் இன்றையிலிருந்து சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்கர். இவரே முதன் முதலாக மத்தியத் தரைக்கடல் பகுதிகளின் வரலாற்றை தொகுத்து எழுதியவர். இவருடைய புத்கத்தின் பெயர் Histories. இது ஒரு அருமையான புத்தகம் நண்பர்களே. இது அப்பழுக்கற்ற வரலாற்று புத்தகம் என்றாலும் இதை அவர் ஒரு வரலாற்று புதினம் போல் படு சுவாரசியமாக எழுதியிருப்பார்) எகிப்தில் விரிவாக சுற்றுப்பயணம் செய்து எகிப்து குறித்து தன்னுடைய புத்தகத்தில் ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார்.

 அதில் எகிப்தில் மம்மிகள் எப்படி செய்யப்படுகிறது என்று ஒரு விளக்கம் தந்திருக்கிறார். எகிப்தில் மம்மிகள் பாரோக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் ஒரு வகையிலும் பணம் படைத்தவர்களுக்கு ஒரு வகையிலும் ஏழைகளுக்கு ஒரு வகையிலும் என்று பல முறைகளில் செய்யப்பட்டிருக்கிறது. முதலில் பாரோக்களின் மம்மிகள் எப்படித் தயாரிக்கப்படும் என்பதை பார்ப்போம். (இது முழுக்க முழுக்க Herodotus-யின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை அடிப்படையாக கொண்டது).

 பாரோக்கள் இறந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்துதான் அவர்களுடைய உடல் பிரமிடுகளுக்குள்ளோ அல்லது குடைவரை கல்லறைகளுக்குள்ளோ வைக்கப்படும். அதுவரை அவர்களுடைய உடல் மம்மிக்களாக மாற்றப்படும் சடங்கு நடைப்பெறும். ஒரு பாரோ இறந்ததும் அவருடைய உடல் அவருடைய உடலை வைக்கத் தயாராக இருக்கும் பிரமிடை பராமரிக்கும் பூசாரியிடம் கொடுக்கப்படும். இந்த பூசாரிக்கு கீழ் பல வைத்தியர்கள் இருப்பார்கள். அவர்களும் பூசாரிகள்தான்.

 அவர்கள் செய்யும் முதல் காரியம் பாரோவின் மூக்கின் வழியாக ஒரு கம்பிப்போன்ற கருவியை நுழைத்து மூலையை வழித்து எடுத்து வெளியேத் தூக்கிப்போட்டுவிடுவார்கள். எகிப்தியர்களைப் பொறுத்தவரை மூலை என்பது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய உறுப்பு அல்ல. இதயமே மனிதனின் சிந்திக்கும் உறுப்பு என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. பிறகு கண்களை எடுப்பார்கள். இரண்டு கண்களையும் ஒரு ஜாடிக்குள் வைத்துவிடுவார்கள். அந்த ஜாடிக்குள் உப்பு மற்றும் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய்போன்ற திரவம் இருக்கும். இது மனித உடல் உறுப்புகளை கெட்டுப்போகாமல் பாதுகாக்க கூடிய வீரியம் மிகுந்ததாக இருந்திருக்கிறது.

 அடுத்த தொடரிலும்.......

 

பாகம் 9

 

    அடுத்து இடுப்புக்கு மேலே வயிற்றின் அடிபாகத்தில் வலது புறமும் இடது புறமும் சிறிதாக கிழித்து அதேக் கம்பிக் கருவியைக் கொண்டு குடல் மற்றும் வயிற்று பாகங்களை எடுத்து எறிந்துவிடுவார்கள். பிறகு இதயம் பத்திரமாக எடுக்கப்பட்டு மற்றொரு ஜாடியில் வைக்கப்படும். இவைகள் முடிந்தப் பிறகு ஒரு பெரிய குண்டான் போன்ற பாத்திரத்தில் உப்பும் மூலிகைகளும் கலந்து தயாரிக்கப்பட்ட தண்ணீரில் பாரோவின் உடலை ஏறக் குறைய ஒரு மாத காலத்திற்கு ஊரப் போட்டுவிடுவார்கள். உப்பைத் தவிர மூலிகைப் பொருட்களின் கலவை இரகசியம் குறித்து ஹிரடோடசிற்கு அறிவிக்கப்படவில்லை.

 அமூன் கோயில் பூசாரிகள் அதுக் குறித்து வாய் திறக்க மறுத்துவிட்டதாக அவர் எழுதுகிறார். ஒரு மாத காலம் மூலிகைப் பொடிக் கலக்கப்பட்ட தண்ணீரில் ஊரிய பாரோவின் உடல் எடுக்கப்பட்டு மூக்கு துவாரம் வழியாக உப்பும் மூலிகைப் பொடியும் ஒரு வித எண்ணெயும் செலுத்தப்படும். அடுத்து வயிற்றுப் பகுதியில் கிழிக்கப்பட்ட துவாரம் வழியாகவும் இதே முறையில் செய்யப்படும். இப்படியே ஒரு வார காலம் நடைப்பெறும்.

 

அடுத்து உடல் முழுவதும் மீண்டும் ஒரு வகை எண்ணெய் பூசப்பட்டு பருத்தி துணிக்கொண்டு அந்த உடல் சுற்றப்படும். பிறகு பூசாரி அந்த உடலை அரச குடும்பத்திடம் ஒப்படைப்பார். இந்த காரியங்களை செய்யும்போது பூசாரிகள் ஓநாயின் முகம் போன்ற முகமுடியை அணிந்துக்கொள்வார்கள் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். காரணம் அனுபிஸ் கடவுள்தான் மம்மிபிகேசன் வேலைகளுக்கும் மறு உலக பயணத்திற்கு துணை செய்யும் கடவுள் என்பதால்.

 பாரோவின் உடல் சகல மரியாதைகளுடனும் பிரமிடிற்கு எடுத்துச் செல்லப்படும் கூடவே வண்டி வண்டியாக தங்கத்தாலான ஆடம்பரப் பொருட்களும் சமையல் சட்டிகளும் எடுத்துச் செல்லப்படும். ஒரு பாரோ இறந்துவிட்டால் உயிருடன் இருக்கும் அவருடைய அன்புக்கு பாத்திரமான வேலைக்காரர்களும் மம்மியாக வேண்டியதுதான். மறு உலகத்திற்கும் சென்று பாரோவிற்குப் பணிவிடை செய்யத்தான். இப்படியான வேலை ஆட்கள் உயிருடன் இருக்கும்போதே நாம் மேலேப் பார்த்த மம்மிபிகேசன் காரியங்கள் இவர்கள் மீது நடத்தப்பட்டதா அல்லது விசம் கொடுத்துக் கொன்றப் பிறகு அவர்கள் மம்மியாக்கப்பட்டார்களா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது.

 சில ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களுடைய மூலையும் வயிற்று பாகங்களும் எடுக்கப்பட்டு அவர்கள் மம்மிகளாக மாற்றப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். காரணம் பிரமிடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பாரோவின் வேலையாட்களின் மம்மி உடல்கள் ஆயுதம் கொண்டு கொல்லப்பட்டதற்கான அடையாளங்களையோ அல்லது விசம் கொடுத்துக்கொல்லப்பட்டதற்கான அடையாளங்களையோ காட்டவில்லை என்பதுதான்.

 பாரோவின் மம்மி உடலோடு சேர்த்து அவருடைய வேலையாட்களின் மம்மி உடல்களும் பிரமிடிற்குள் வைக்கப்படும். கூடவே மறு உலகப் பயணத்தின்போது வழியில் சமைத்து சாப்பிடத் தேவையான உணவுப் பொருட்களும் வைக்கப்படும். இந்த இடத்தில் நாம் மற்றொரு முக்கியமான விசயத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதுபற்றி ஹிரடோடஸ் குறிப்பிடவில்லை. ஒருவேலை அவருக்கு இதுப்பற்றி சொல்லப்படாமல் மறைக்கப்பட்டிருக்கலாம். நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய அந்த விசயம் The Book of the Dead.

 Stephen Sommers இயக்கத்தில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வெளிவந்து உலகம் முழுவதிலும் சக்கைப்போடு போட்ட The Mummy திரைப்படம் குறித்து அனேகமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த படத்தின் நடுப்பகுதியில் The Book of the Dead என்று ஒன்றை தூக்கிக்கொண்டு சில கதாப்பாத்திரங்கள் அலைவதை பார்க்க முடியும்.

 உண்மையில் The Book of the Dead என்று ஒன்று எகிப்திய வரலாற்றில் இருந்ததா என்றால் ஆம் இருந்தது. இன்றும் கூட இருக்கிறது என்பதே உண்மை. இந்த புத்தகத்தை எகிப்தியர்கள் REU NU PERT EM HRU என்று அழைத்தார்கள். படத்தில் காட்டப்படுவதைப் போல இந்த புத்தகத்தை படித்து இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா என்றால்?

 அடுத்த தொடரிலும்......

 

பாகம் 10

 

                நிச்சயமாக அது முடியாது. இது மதச் சடங்கு பாடல்களும் மந்திரச் சடங்கு வார்த்தைகளும் கொண்ட ஒரு தொகுப்பு. இந்த புத்தகம் பெரும் பாலும் இறந்தப் பிறகு மனிதனுக்கு என்ன நடக்கும் என்றும் மறு உலகில் மனிதன் எத்தகைய வாழ்வை மேற்கொள்வான் என்றும் சொல்லக் கூடியது. சுமார் 8000 வருடங்களுக்கு முற்பட்ட மனிதனின் மரணம் குறித்த புரிதல்தான் இந்த புத்தகத்தில் இருக்கும் சடங்கு பாடல்களும் மந்திரச் சொற்களும்.

 இந்த புத்தகம் கடந்த 8000 வருடங்களில் மூன்று முறை திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. முதல் திருத்தம் கி.மு. 3500 வாக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை Heliopolitan Recension என்கிறார்கள். இந்த திருத்தப்பட்ட வடிவம் வரலாற்று முற்பட்ட காலத்திலிருந்து ஐந்தாவது பாரோ வம்சாவளி காலகட்டம் வரைக்கும் புழக்கத்திலிருந்திருக்கிறது.

 இதற்குப் பிறகு இந்த புத்தகத்தில் நடந்த திருத்தத்தை Theban Recension என்கிறார்கள். இது பதினெட்டாம் வம்சாவளி காலகட்டம் தொடங்கி இருபத்தியிரண்டாம் வம்சாவளி காலகட்டம் வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து நடந்த திருத்தத்தை Salte Recension என்பார்கள். இந்த திருத்தப்பட்ட புத்தகம் இருபத்தியாறாம் வம்சாவளி காலகட்டம் தொடங்கி தாலமி காலகட்டம் வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இடையில் விடுபட்ட காலங்களில் இந்த புத்தகம் கால வெள்ளத்தில் தவர விடப்பட்டு பல முறை மீண்டும் கண்டு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 David Praveen's photo.

 இந்த புத்தகத்திலிருக்கும் சடங்கு பாடல்களையும் மந்திரச் சொற்களையும் பிரமிடு சுவர்களிலும், மம்மிகள் வைக்கப்படும் sarcophagus-களிலும், பிரமிடுக்குள் வைக்கும் பப்பைரஸ் சுருள்களிலும், கல்லறை கோயில்களிலும் எழுதிவைப்பார்கள்.

 எகிப்தியியல் வல்லுனர்கள் (Egyptologists) – உலக நாகரீகங்களிலேயே எகிப்திய நாகரீக வரலாற்று ஆராய்ச்சி ஒன்றிர்கு மட்டுமே ஒரு தனி துறையே இருக்கிறது Egyptology என்பது அதற்குப் பெயர் காரணம் அவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் எகிப்திய வரலாற்றில் கொட்டிக்கிடக்கிறது. மற்ற உலக நாகரீகங்கள் எழுத்து வடிவ வரலாற்று தகவல்கள் இல்லாமல் திணறிக்கொண்டிருக்க எகிப்திய நாகரீகம் ஒன்று மட்டுமே இருக்கும் எழுத்து வடிவ வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்து வெளியிட திணறிக்கொண்டிருக்கிறது – இந்த புத்தகத்தின் பூர்வீகம் எகிப்திய நாகரீகத்தை சேர்ந்ததில்லை என்று கருதுகிறார்கள்.

 இந்த புத்தகத்தின் மரணம் மற்றும் மறு வாழ்வுக் குறித்த கருத்துக்கள் மெசப்பட்டோமியா மூலத்தலிருந்து வந்திருக்கலாம் என்று அவர்கள் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறார்கள். இதில் விசேசம் மெசப்பட்டோமிய நாகரீகம் சமூக வாழ்வின் பல கருத்தியல்களை தமிழர்களிடமிருந்து பெற்றிருக்கிறது. இப்படி சொன்னால் நம்முடைய ஆட்களே சிரிப்பார்கள். சிரித்தால் சிரித்துவிட்டுப் போகட்டும் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இது திராவிட கருத்தியல் கிடையாது. வரலாற்று உண்மை. மெசப்பட்டோமியாவில் ஊர்க் (Urk) என்று நகரம் இருந்தது. இன்றையிலிருந்து 9000 வருடங்களுக்கும் மேல் பழமைக்கொண்டது.

 இந்த ஊர்க் என்கிற நகரை மெசப்பட்டோமிய பகுதியில் உருவாக்கி மெசப்பட்டோமிய நாகரீகத்திற்கு சமூக வாழ்வுக் குறித்த கருத்தில்களை அவர்களுக்குள் விதைத்தவர்கள் நம்மவர்களேதான். ஊர் என்று பெயர் ஒற்றுமை இருந்தாலே உடனே அது நம்முடையது என்று சொல்லிவிடுவதா என்று மேலும் நீங்கள் சிரித்தால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பது கண்களுக்குத் தெரியாது. காரணம் ஊர் என்கிறப் பெயர் திராவிட மொழி மூலத்திலிருந்து வந்திருக்கவேண்டும் என்று மெசப்பட்டோமிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். திராவிட மொழியின் மூலம் எது என்பது ஊர் உலகமே அறிந்த விசயம்.

 ஆக எகிப்தியர்கள் தமிழர்களின் மரணம் மற்றும் மறு வாழ்வுக் குறித்தக் கருத்தியல்களை மெசப்பட்டோமியர்கள் வழியே பெற்றிருக்கிறார்கள் என்று சொல்வது வரலாற்றுக் குற்றமாகிவிடாது என்று நம்புகிறேன். எகிப்து ஒன்றாக்கப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு (இன்றையிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு) எகிப்தியர்கள் The Book of the Dead-யை எழுதியது Thoth என்கிறக் கடவுள் என்று நம்பத்தொடங்கினார்கள். தோத் கடவுள் மற்ற கடவுள்களின் செயல்களை பதிவுச் செய்யும் scribe-ஆக எகிப்தியர்கள் நம்பினார்கள். இவர் Osiris கடவுளின் பணியாளாக கருதப்படுபவர்.

 அடுத்த தொடரிலும்......

பாகம் 11 - 15பாகம் 16 - 20பாகம் 21 - 25பாகம் 26 - 30




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..