Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive.........பாகம் 3
Posted By:Hajas On 8/28/2015 11:35:33 AM

where can i buy abortion pill online

buy abortion pill

 

டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive.........பாகம் 3

by David Praveen 

பாகம் 1பாகம் 2

எந்த ஒரு விசயத்தையும் புரிந்துக்கொள்ள நமக்கு தேவைப்படுவது அடிப்படையான விசயங்கள் என்பதால் அடிப்படைகள் முதலில் (first things first). இந்த பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இப்பொழுது வரை வாழ்ந்துவரும் உயிரினங்களைக் குறித்து தெரிந்துக்கொள்வதற்கு பயன்படுவது பூமியின் மேலிருக்கும் பாறைகளும், கீழேயிருக்கும் மண் அடுக்குகளுமே (layers). இப்படி பாறைகளையும் மண் அடுக்குகளையும் ஆராய்வதற்கு Stratigraphic Geology என்றுப் பெயர். Strata என்றால் பாறை அடுக்குள் அல்லது மண் அடுக்கு என்று அர்த்தம்.

பாறை அடுக்குகளும் மண் அடுக்குகளும் பூமியில் வாழ்ந்த வாழுந்து வரும் உயிரினங்களின் எலும்புகளை புதைப்படிவங்களாக (fossils) சேரித்து வைத்திருக்கின்றன. இந்த புதைப்படிவங்களை சேகரித்து ஆராய்வதின் மூலம் எத்தகைய உயிரினங்கள் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த பூமியில் வாழ்ந்து வருகிறது அல்லது வாழ்ந்து இல்லாமல் மறைந்துவிட்டன என்கிறத் தகவல்களைப் பெற முடியும். இப்படி பெறப்படும் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் stratigraphic record என்கிறார்கள்.

இந்த stratigraphic record-களே பூமியில் பல உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன என்கிறத் தகவலையும் பூமி பல முறை காலநிலை (climate changes) மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்கிறத் தகவலையும் தருகின்றது. இந்த தகவல்களே பல கோடி ஆண்டுகளுக்கு பூமியில் இருந்த தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் உருவ அமைப்புகளையும் தருகின்றன. இந்த stratigraphic record-யை 1840-களில் John Phillips என்கிற இயற்க்கையியளாளர் (naturalist) மூன்று பகுதிகளாகப் பிரித்தார்.

அந்த மூன்றுப் பகுதிகள் Paleozoic era, Mesozoic era மற்றும் Cenozoic era. இந்த மூன்று பகுப்புகளும் பூமியில் உயிரினங்கள் தோன்றி அழிந்து மீண்டும் தோன்றி அழிந்த ஒட்டுமொத்த காலகட்டத்தை உள்ளடக்கியது. இந்த மூன்று பெரும் கால பகுப்புகளுக்கு உள்ளே வருவதுதான் Ordovician, Devonian, Permian, Triassic மற்றும் Cretaceous உயிரின அழிப்புகள் காலம். உங்களுக்கு கொஞ்சம் தலை சுற்றுவதுப்போலிருந்தால் இங்கேயே நிறுத்திவிட்டு இதமான சூட்டில் ஒரு கோப்பை டீ குடித்துவிட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். எனக்கும் படு சூடாக ஒரு கோப்பை டீத் தேவைப்படுகிறது. என்ன தயாரித்துக்கொடுக்கத்தான் ஆள் இல்லை. டீ தயாரிப்பது என்ன இரசவாதமா? தயாரித்துவிடவேண்டியதுதான்.

அசுவாசப்படுத்திக்கொண்டு வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். Paleozoic era-வை பூமியின் old life என்கிறார்கள். இந்த காலகட்டத்திலிருந்துதான் உயிரினங்களின் எலும்புக் கூடுகள் புதைப்படிவங்களாக கிடைக்கத் தொடங்குகின்றன. இது இன்றையிலிருந்து 530 கோடி ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து 250 ஆண்டுகள் வரை நீள்கிறது. இந்த காலகட்டத்திற்குள் வாழ்ந்த உயிரினங்களை பல இயற்க்கை காலநிலை மாறுதல்கள் பல முறை அழித்திருக்கிறது. இருந்தாலும் இந்த காலகட்டத்தை திடீரென்ற ஒரு பெரும் அளவிலான இயற்க்கை காலநிலை மாற்றம் முடிவிற்கு கொண்டுவருகிறது (mass extinction). அதாவது அப்பொழுது பூமியில் இருந்த உயிரினங்களை அனேகமாக துடைத்து அழித்துவிட்டது என்று அர்த்தம். (இங்கே டார்வினுடைய பரிணாமக் கொள்கையை நீங்கள் எப்படி முடிச்சுப்போட்டாலும் எடுபடாது. காரணம் பூமியிலிருந்த அனேகமாக அனைத்து உயிரினங்களும் அழிந்துவிட்டப் பிறகு அது எங்கிருந்து பரிணமிக்கும்).

இதற்கு அடுத்து Mesozoic era தொடங்குகிறது. இதை பூமியின் middle life என்கிறார்கள். இந்த காலகட்டத்தில் திடுதிப்பென்று பூமியில் மீண்டும் உயிரினங்கள் தோன்றுகின்றன. ஆனால் இன்னும் வலிமையாக. இந்த காலகட்டத்தில் பல முறை பூமியில் உயிரன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கிறது. அதற்கு காரணமாக இப்பொழுது நம்பப்படுவது (நம்பத்தான் படுகிறது நிருபிக்கப்படவில்லை) காலநிலை மாற்றம். இந்த காலகட்டமும் 65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முடிவிற்கு வருகிறது. இந்த காலகட்டத்தை முடிவிற்கு கொண்டுவந்ததும் ஒரு பெரும் அளவிலான உயிரின அழிப்பு நடவடிக்கை (mass extinction). இந்த முறையும் பூமியில் இருந்த ஏறக்குறைய அனைத்து உயிரினங்களும் அழிந்துபோகிறது.

இதற்கு அடுத்து வருவது Cenozoic era இதை பூமியின் new life என்கிறார்கள். இதில்தான் இப்பொழுது நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நம்மோடு சக உயிரினங்களாக இந்த பூமியை பகிர்ந்துகொள்ளும் அனைத்து விதமான உயிரினங்களும் இந்த காலகட்டத்திலேயே உருவானவைகள் என்று நம்பப்படுகிறது.

பூமியில் உயிரினங்கள் பெரும் அளவில் ஓட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட நிகழ்வை mass extinction என்கிறார்கள். அப்படி ஐந்து mass extinction-களை இந்த பூமி கண்டிருப்பதாக கருதப்படுகிறது. இவைகள் ஐந்தும் நாம் மேலேப் பார்த்த மூன்று காலகட்டப் பகுதிகளுக்குள் அடங்குவதுதான்.

இதில் முதலாவது Ordovician-Silurian extinction. இது சுமார் 439 கோடி வருடங்களுக்கு முன்பு ஏற்ப்பட்டது. இந்த பெரு அழிவு பனிப் பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்ப்பட்டிருக்கலாம் என்கிறக் கருத்து முன்வைக்கப்படுகிறது. முன்வைக்க மட்டும்தான்படுகிறது ஆதாரப் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை.

அடுத்து வருவது Devonian extinction. இது 364 கோடி வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த பெரு அழிவிற்கான காரணத்தை இதுவரை அறிவியலால் ஒரு அனுமானமாக கூட சொல்ல முடியவில்லை. பனிப்பாறை உருகுதலே இதற்கும் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மனதை தேற்றிக்கொள்கிறார்கள். வேறு வழியில்லை. இப்பொழுது ஒரு கூட்டம் இதற்கும் விண்கல் மோதலே காரணமாக இருக்கலாம் என்று கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கான ஆதாரத்தைதான் காட்ட முடியவில்லை. சும்மா வாயிலேயே வடை சுட்டுவைக்கலாமே என்று சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Permian-Triassic extinction இது நடந்தது 251 கோடி வருடங்களுக்கு முன்பு. ஐந்தில் மிக கடுமையான உயிரின அழிப்பாக இந்த அழிப்பை குறிப்பிடுகிறார்கள். பூமியில் இருந்த கடல்வாழ் மற்றும் நில உயிரினங்கள் இரண்டையும் சேர்த்து கிட்டத்தட்ட 99.9% உயிரினங்களின் கதையை இந்த பெரு அழிப்பு முடித்துவிட்டது. நிலவாழ் உயிரினங்களில் 70%-தமும் கடல் வாழ் உயிரினங்களில் 84%-தத்தையும் இந்த பெரு அழிப்பு சுவாகா செய்துவிட்டது. இந்த கோர அழிப்பு வேலைக்கு காரணமானது எது என்பதைப் பற்றியும் இதுவரை ஆராய்ச்சியாளர்களால் திட்டவட்டமாக கண்டுபிடிக்க முடியவில்லை. விண்கல் மோதியிருக்கலாம், எரிமலைகள் வெடித்திருக்கலாம் என்று பாட்டி வடை சுட்டக் கதையாக சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Triassic extinction இது 200 கோடி வருடங்களுக்கு முன்பு ஏற்ப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்றைக்கு பூமியை அச்சுருத்திக்கொண்டிருக்கும் அறிவியல் உண்டாக்கிவைத்திருக்கும் Global Warming-யை போன்று எரிமலை குழும்பு (flood basalt) உண்டாக்கிய Global Warming-ஆல் இந்த பெரு அழிப்பு நடவடிக்கை ஏற்ப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இறுதியானது Cretaceous-Tertiary extinction (இதை K-T extinction என்று அழைக்கிறார்கள். இனி நாமும் அப்படியே அழைப்போம்). இது நடந்தது 65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. இந்த அழிவின்போதுதான் டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அழிப்பு வேலைக்கு எது காரணமாக இருந்திருக்கும் என்று அள்ளிவிடப்பட்டதுதான் Alvarez-களின் ஆராய்ச்சிக் கட்டுரை.

(ஆறாவதாக ஒரு பெரு அழிப்பை மனிதன் தொடங்கிவைத்திருக்கிறான். அறிவியல், மனித குல வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு பெரும் அளவில் கரியமில மூலக் கூறுகளை CO2 வெளியேற்றி அதன் மூலம் Global Warming-யை உண்டாக்கி பூமியில் பெரு உயிரின அழிப்பை – mass extinction - மங்களகரமாக ஆரம்பித்துவைத்திருக்கிறான்.)

இத்தகைய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் பெற்றது stratigraphic record-களிலிருந்து. அடுத்து நாம் பார்க்கப்போவது புதைப்படிவங்களைக் கொண்டு எப்படி இந்த பூமியில் வாழ்ந்த உயிரினங்களின் வகைகளையும் அவைகளின் வாழ்க்கை தரத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகிறார்கள் என்பதை.

அடுத்த தொடரிலும்.....

பாகம் 4பாகம் 5இறுதி

https://www.facebook.com/photo.php?fbid=1536725699907376&set=a.1398919533687994.1073741828.100007098817905&type=1




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..