Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இந்த வலையில் சிக்கிடாதீங்க!
Posted By:peer On 3/7/2015 2:15:04 AM

pradaxa

pradaxa

‘‘ஒரு கம்ப்யூட்டர், வேகமாக இயங்கும் இணையதள வசதி. இந்த இரண்டும் இருந்தா, நீங்கள் லட்சாதிபதி’னு சொன்னா யாருக்குத்தான் ஆசை வாரது? ஆன்லைன் வேலை வாய்ப்பின் ‘அடடே’ வாசகங்கள்தான் இவை. க்ளிக் செய்தால் பணம், வீடியோவை ஷேர் செய்தால் பணம், இ-மெயில் படித்தால் பணம். இப்படி விதவிதமாய் திரியும் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடிகளை ஆழமாக அலச டிடெர்ஜென்ட் பவுடர் பத்தாது பாஸ்!

பல்வேறு நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதாக அவர்களிடம் விலைபேசி, அதை ‘க்ளிக்’ செய்து பார்க்கும் விளம்பரமாக நமக்குக் கொடுக்கின்றன இந்த இணையதளங்கள். ஆன்லைன் வேலைவாய்ப்பைத் தரும் 99 சதவிகித இணையதளங்கள் இப்படித்தான். இந்த இணையதளங்களில் உங்களுக்கென ஒரு அக்கவுன்ட்டை ஆரம்பித்தால் போதும்.

தினமும் குறிப்பிட்ட விளம்பரங்கள் உங்கள் கணக்குக்கு வரும். ‘கட்டாயம் பார்க்கணும்’, ‘டைம் இருந்தா பாருங்க’, ‘பாருங்க பார்க்காமலும் இருங்க’ வகைகளில் இருக்கும் இந்த விளம்பரங்களை க்ளிக் செய்து சில நொடிகள் பார்வையிட வேண்டும். ஒரு விளம்பரத்துக்கு இத்தனை பைசா என கணக்கு இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, அந்த இணையதளத்திலேயே ‘கோல்டன்’ மெம்பர் ஆகும்வரை பொறுமையாக இருந்தால் போதும். நீங்க லட்சாதிபதி. ஒரு கணக்கை ஒரு கம்யூட்டரைப் பயன்படுத்தி மட்டுமே பார்க்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கைத் துவங்கக் கூடாது என இவர்கள் போடும் ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன்களை நம்பி, ‘நம்மளை ஏமாத்தணும்னா, எதுக்கு இத்தனை ரூல்ஸ் போடப்போறான். சேர்ந்துதான் பார்ப்போமே?’ என ஆர்வம் காட்டினால் நீங்கள்தான் அவர்களுக்கு ஆம்லேட்!

‘கிளிக் பண்ணி உத்துப் பார்த்துக்கிட்டு இருக்காம ஜாலி, கேலி வீடியோக்களை போஸ்ட் பண்ணுங்க. எத்தனை பேரு பார்க்கிறாங்களோ, அத்தனை டாலரை அள்ளிட்டுப் போங்க’ என அழைக்கின்றன சில வெப்சைட்கள். ஆனா, நீங்க போஸ்ட் பண்ற வீடியோக்களை மத்தவங்க பார்க்கணும்னா, அதுக்கு சம்பந்தப்பட்ட வெப்சைட் கொடுக்கிற ஒரு கருத்துக்கணிப்புக்கு ‘ஆமாம்’ போடணும். இந்தக் கருத்துக்கணிப்புகள் டூத்பேஸ்ட், பிஸ்கட் என சின்னச் சின்னப் பொருட்களில் ஆரம்பித்து உங்கள் பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் எத்தனை. அதில் எது சிறந்தது வரை கொண்டுபோகும். சுருக்கமாகச் சொன்னால், உங்கள் ஊர், மாநிலம், நாடு பற்றிய தகவல்களை ஆர்வக்கோளாறில் அவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறீர்கள். ஏதாவது ஒரு சோப்புளாங்கி, உங்கள் வீடியோவில் இருக்கும் கருத்துக்கணிப்புக்குப் பதில் சொன்னால் மட்டுமே பணம்.

அடுத்தபடியாக முழுக்க முழுக்க ‘கருத்துக்கணிப்புக்கு வாங்க, காசை அள்ளுங்க’ ரகம். மேலே சொன்ன கருத்துக்கணிப்பின் ‘டீட்டெயில் வெர்ஷன்’தான் இது. ‘பத்து நிமிட கருத்துக்கணிப்புக்கு 5 டாலர் பணம். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கி, ஆறு சர்வேக்களில் கலந்துக்குங்க. வாரத்துக்கு 210 டாலர். மாசத்துக்கு 840 டாலர். வருடத்துக்கு 10,080 டாலர். உங்க வருட சம்பளம் 60 லட்சத்துச் சொச்சம்’ - இப்படித்தான் மகுடி ஊதிக்கொண்டிருக்கின்றன பல சர்வே வெப்சைட்கள். தவிர, ‘நான்தான் முகேஷ்...’ விளம்பரத்தைக் காப்பியடித்து, ‘நான்தான் ராபர்ட். இந்த சர்வே இணையதளத்தில் சேர்ந்தேன். ஒரே மாதத்தில் நான் சம்பாதித்த தொகை 1 கோடிக்கும் மேல்’ என இணையதளத்தின் ஒரு ஓரமாய் சிரிக்கவே சிரிக்காமல் காமெடி ஷோ நடத்துவார் ஒருவர்.

இது மட்டுமில்ல பாஸ், ஒரு மெயில் படிச்சா 100 டாலர், காப்பி பேஸ்ட் பண்ணிக் கொடுத்தா குறிப்பிட்ட தொகை, நாலு வரி கமென்ட்டுக்கு இவ்வளவு ரூபாய். இப்படி ஏகப்பட்ட பேர் உங்களை நோக்கி ஓடோடி வருவாங்க. கொஞ்சம் இறங்கித்தான் பார்ப்போமேனு இதுபோன்ற இணையத்தில் புகுந்து தீயா வேலை செய்ய ஆரம்பிச்சா போதும். ‘இந்த வாரத்தின் சிறந்த பணியாளர்’னு நோட்டிஃபிகேஷன் வரும். ‘சூப்பர்ப்பா 5,000 இன்க்ரிமென்ட்’னு மெசேஜ் வரும். ‘அச்சச்சோ, இப்போ முடியாதே. உங்க அக்கவுன்ட்ல 25,000 டாலர் சேர்ந்ததும் எடுத்துக்கிறீங்களா?’னு பெண் பெயரில் இருக்கும் இ-மெயிலில் இருந்து செல்லத் தகவல் வரும். ஆனா கடைசி வரைக்கும் பணமே வராது. ஏன் எதுக்குனு நீங்க கேள்வி கேட்கிறதுக்கு முன்னாடியே ‘செக்‌ஷன் 420 படி நீங்க எங்க கம்பெனி ரூல்ஸை மீறிட்டீங்க. ஐ ஸே கெட் அவுட்’னு கம்ப்யூட்டர் உங்களைப் பார்த்து கத்தும். அதுக்கப்புறம் முட்டி மோதினாலும் அந்த இணையதள முகவரிக்குள் நீங்க கை வைக்கவே முடியாது. அதாவது உங்களை வைத்து விளம்பரங்களைப் பார்க்கவைத்து, உங்கள் மூலமாகவே உங்கள் கருத்துகளை வாங்கி சர்வே நடத்திவிட்டு ஆன்லைனிலேயே அல்வா தருபவைதான் இந்த ‘ஆன்லைன் ஜாப்’ மோசடிகள்!

அதனால் இதுபோன்ற ‘சதுரங்கவேட்டை’ கும்பலில் சிக்கி சின்னாபின்னமான பிறகு வர்ற டென்ஷன்ல எதிரே இருக்கும் உங்க கம்ப்யூட்டரை உடைச்சிடாதீங்க. கோணலா இருந்தாலும் அது உங்களோடதாக்கும்!


- கே.ஜி.மணிகண்டன்

விகடன் - http://www.vikatan.com/article.php?module=magazine&aid=104289






General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..