Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.
Posted By:Hajas On 1/9/2015 4:55:54 AM

what is naltrexone made of

naltrexone opiate partickcurlingclub.co.uk

நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)


வரலாறு மாணவனாக சென்னை புதுக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயிலும் பொது கீழக்கரை சீதக்காதியின் வள்ளல் தன்மையினை படித்திருக்கிறேன், அனால் என் வாழ்க்கையில் கண்ணாரப் பார்த்த வள்ளல் சீதக்காதி ஒருவர் இருகின்றார் என்றால் அவர் தான் பெரியவர் பி.எஸ்.ஏ அவர்கள். இணைந்த இராமநாதபுரம் மாவட்டம் கடைக்கரை ஓரம் கீழக்கரையில் பிறந்து ''திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கு இணங்க, திரவியம் சேர்த்து எண்ணற்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பினை தந்து அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்துள்ள ஒரு ஒளிவிளக்கு அவர்.


எங்கள் ஊர் இளையான்குடி மக்கள் பி.எஸ்.ஏ. அவர்கள் கம்பெனியால் பயன் பெற்று வசதி வாய்ப்புடன் வாழ்கின்ற மக்களை நான் கண்கூடாக காண்கிறேன்.
பி.எஸ்.ஏ. அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1946 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு 1983 ல் தான் கிடைத்தது. அப்போது நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பீ. ஆகா பணியாற்றினேன். திருசெந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சூடு பறக்க ஈடு பட்டிருந்த நேரம். குலசேகரபட்டினம் என்ற ஊரில் ஒரு இரவு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்ததால் நான் நேரடி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்து பேசிகொண்டிருந்தார். அப்போது ஒரு நபர்(பின்பு தெரிந்து கொண்டேன் அவர் உடன்குடி தாஹா) வந்து உங்களுக்குத் தெரிந்த ஒரு பெரியவர் கூப்பிடுகிறார் என்றார். உடனே அவர் யார் என்று பார்ப்பதிற்காக அவரிடம் சென்றேன். கூட்டத்தின் ஒரு மூலையில் பொன் நிறத்தில் தற்போதைய இஸ்ரேயில் பிரதமர் நத்னாயகு போன்று இருந்த பி.எஸ்.ஏ. அவர்களை முதன் முதலில் பார்த்தேன்.,


என்னை எந்த ஊர் என்றுக் கேட்டார். நான் இளையான்குடி என்றதும் அடே நம்ம மாவட்டம் என்றதோடு மட்டுமல்லாமல் எங்களுரைச் சேர்ந்த அவரிடம் வேலைப் பார்த்த யாசின் தம்பியை தெரியுமா என்று கேட்டார். நான் அவர்கள் என் வீட்டு அருகில் உள்ளவர்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மேடை அருகில் சென்று விட்டேன். கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ஒரு பக்கம் காரில் ஏறினர் மறு பக்கம் பி.எஸ்.ஏ. அவர்கள் ஏறியது கண்டு ஆச்சரியப்பட்டேன். அவரை இரண்டாவதாக சந்திக்கும் வாய்ப்பு 1985 ஆம் ஆண்டு எனக்கு கிடைத்தது.
விருந்தோம்பலுக்கு முன்மாதிரி
1985 ஆம் வருடம் நான் ஏ.டி.எஸ்.பி யாக ஊட்டியில் பணியாற்றினேன். எனது அலுவல் காரணமாக சென்னை சென்றேன். வெள்ளி கிழமை ஜும்மா தொழுவதற்கு அண்ணா சாலையிலுள்ள மக்கா மஸ்ஜித் சென்றேன். தொழுது முடிந்ததும் வெளியே வரும்போது பி.எஸ்.ஏ. அவர்கள் மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியிடம் பள்ளியினை புதுப்பிற்க ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எங்கே வந்தீர்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்த மெஜெஸ்டிக் கரீம் மற்றும் நிர்வாகத்தினரிடம் அறிமுகப்படுத்தி விட்டு காரில் ஏறுங்கள் என்று அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு வந்து சாப்பாடு வைக்கச் சொன்னார். கரி சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும் போது பிரிட்ஜில் உள்ள நேற்றைய மீன் குழம்பையும் சூடு பண்ணி வைக்கச் சொல்லி தானே எடுத்து வைத்தார்.
1996 ஆம் ஆண்டு நான் குடும்பத்துடன் டெல்லி சென்றபோதும், 1999 ஆம் ஆண்டு அலுவல் காரணமாக மக்கா, மதீனா சென்றபோது பி.எஸ்.ஏ. அவர்கள் சென்னையில் இல்லை. அவருடைய பி.ஏ. ஹசனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். எங்களுடைய பயணம் ஹசன் மூலம் அறிந்து தேவையான உதவிகளைச் அங்கெல்லாம் செய்தார்.
1999 ஆம் ஆண்டு அவருடைய கூடுவான்சேரியிலுள்ள பண்ணை வீட்டுக்கு அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ், அலாவுதீன் ஐ.ஏ.எஸ் மற்றும் என் குடும்பத்தினரையும் ஒரு நாள் அழைத்திருந்தார்கள்.நாங்கள் அங்கு சென்றோம். அவரே முன்னே நின்று குழந்தைககளுக்கு கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மீன் தொட்டிகளை சுற்றிக் காட்டினார்கள். பின்பு எனது மகன்களை குதிரை சவாரி செய்யச் சொன்னார். அங்குள்ள சிறிய நீச்சல் குளத்தில் குளிப்போமா என்று அழைத்துக்கொண்டு சிறு பிள்ளைபோல் நீச்சலடித்தார். மதிய சாப்பாடு ஆண்களும் குழந்தைகளும் ஒரு இடத்திலும் பெண்கள் ஒரு இடத்திலும் சாப்பிடும் போது இடையில் எழுந்து பெண்கள் சாப்பிடும் இடத்திற்குச் சென்று அவர்களிடம் கூச்சல்லாமல் சாப்பிடுங்கள் என்றும் சொல்லி விட்டுவந்தார். அங்கிருந்து நாங்கள் கிளம்பும் போது எவ்வளவு பெரிய மனிதர் குழந்தைகள் முதல் பெண்கள் வரை மிகவும் எளிமையாக அன்புடன் விருந்தோம்பல் செய்கின்றாரே என்று ஆச்சிரியபட்டேன். ஆகவே தான் சொன்னேன் அவர் விருந்தோம்பலும் முன்மாதரி என்று.
பிற்படுத்தபட்டோரின் கல்வித்தந்தை:
ஒருங்கிணைத்த இராமநாதபுர மாவட்டம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியது. அதுவும் பெண் கல்வியில் மிக, மிக பின் தங்கியது. ஆகையால் கீழக்கரையில் பெண்களுக்கான கல்லூரியினை நிறுவினார். அது மட்டுமல்லாமல் மதுரை மட்டும் நாகூரில் கல்லூரிகள் வரக் காரண கர்த்தாவாக இருந்தார். அது மட்டுமல்லாமல் ஆனதை சிறுவர்களுக்கான இல்லங்களை மதுரை, ஓட்டபிடாரம், சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவினார். என்னிடம் எப்போதும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும் என அடிக்கடி சொல்லுவார். தன்னிடம் கல்விக்காக உதவி கேட்டு வருபவர்களை வெறுங்கையோடு ஒருபோதும் அனுப்பியதில்லை என்று 3 உதாரணத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
1) இளையங்குடியில் கல்லூரி ஆரம்பிக்க காரண கர்த்தாவாக இருந்தவர்களில் நானும் ஒருவனாவேன். எனது உறவினரும் எங்களூர் கல்வித் தந்தையுமான அமீன் நைனார் ஹௌத் அவர்கள் பி.எஸ்.ஏ. அவார்களை 1971 ஆம் ஆண்டு சந்தித்து கல்லூரிக்கு உதவிக் கேட்டுள்ளார். பி.எஸ்.ஏ. அவர்கள் எப்போதும் உதவி கேட்டு வரும் நபர்களை எடை போட தயங்க மாட்டார். பி.எஸ்.ஏ. அவர்கள் ஒரு சிறு தொகையினை சொல்லி அதுதான் தர முடியும் எனச் சொல்லி உள்ளார். உடனே நைனார் கோபித்துக் கொண்டு உங்க காசு எங்களுக்கு வேண்டாம் என்று கோபமாக சொல்லி விட்டு வெளியே செல்ல கதவு வரை சென்ற வரைக் கூப்பிட்டு சமாதானமாக என்னிடம் எவ்வளவு எதிர் பார்த்து வந்தீர்கள் என்று கேட்டு விட்டு நைனார் கேட்ட தொகையினை உடனே கொடுத்து அனுப்பியதாக நைனார் மட்டுமல்ல, பி.எஸ்.ஏ அவர்களும் சொல்லக் கேட்டுள்ளேன்.
2) 1999 ஆம் ஆண்டு இளையான்குடி கல்லூரிக்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்து அதன் நிர்வாகிகள் கல்லூரியில் ஒரு லேப் கட்ட தீர்மானித்து பி.எஸ்.ஏ. அவர்களை அணுகலாம் என என்னிடம் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் வந்தார்கள். நான் மதிய ஒரு மணிக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களைக் கூட்டி கொண்டு புஹாரியா கட்டிடத்திற்குச் சென்றேன். பி.ஏ. ஹசன் 'சார், இப்போது பெரியார்கள் போர்டு மீடிங்கில் இருக்கிறார்கள், மீட்டிங் முடிந்ததும் அனைவருக்கும் இங்கேயே சாப்பாடு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆகவே இன்று சந்திப்பது முடியாது’ என்று சொல்லி விட்டார். நான் பிடிவாதமாக ஊரிலிருந்து பத்து பேர் வந்துள்ளார்கள் அவர்களை ஏமாற்றத்துடன் அனுப்ப முடியாது என மறுத்து நாங்கள் மீட்டிங் முடியும் வரை நிற்கின்றோம், எங்களைப் பார்த்தால் சரி அல்லது போய் விடுகிறோம் என்றேன். மீட்டிங் சரியாக இரண்டரை மணிக்கு முடிந்தது. நான் மீட்டிங் அறைக்கு முன்னே நின்று கொண்டேன். பி.எஸ்.ஏ. அவர்களினைத் தொடர்ந்து அனைவரும் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என்ன போலீஸ் காரர் வந்திருக்கார் கூட்டத்தோட நம்மை கைது செய்ய வந்திருக்கிறாரா என்று கேலியாக அனைவரும் சிரிக்கச் சொன்னார். பின்பு என்ன விஷயம், நாங்கள் சாப்பிடப் போறோமே என்றுக் கேட்டார். நான் உங்களை கல்லூரி நிர்வாகிகள் மரியாதை நிமித்தம் பார்க்க வேண்டும் ஒரு நிமிடம் தாங்கள் என்றேன். அவரும் சரியென்று அறைக்குள் அழைத்துச் சென்றார். உடனே இதுதான் சமயம் என்று பி.எஸ்.ஏவிடம் லேப் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றோம். அவரும் விபரம் கேட்டு விட்டு சரி என்று சொன்னதோடு அல்லாமல் கட்டியும் கொடுத்தார்.
3) என் இரண்டு மகன்களான பைசல் மற்றும் சதக்கத்துல்லாஹ்விற்கு பி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கொடுத்ததினால் இன்று அவர்கள் பொறியாளர்களாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்கள்.
வண்டலூரில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரி மூலம் பயன் பெற்று நல்ல வேளையில் இருக்கும் பலரை நான் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் சென்றபோது நேரில் கண்டேன். அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய பி.எஸ்.ஏ. அவர்களின் முயற்சியினை அவர்கள் வாயார புகழக் கேட்டுள்ளேன். ஆகவேதான் பி.எஸ்.ஏ. அவர்கள் பிற்பட்டோர் மக்களின் கல்வித் தந்தை என்றேன்.
சமூக சிந்தனை சிற்பி:
இஸ்லாமிய சமுதாயம் பொருளாதரத்தில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்லிகொண்டிருப்பர்கள். அந்த சிந்தனையில் உதித்தது தான் யுனைட்டடு எகோநோமிக் பாரும். அதில் உறுப்பினர்களாக ஒத்தக் கருத்துடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழலகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து முஸ்லிம் ஊர்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்தார்கள். பி.எஸ்.ஏ. அவர்கள் சிந்தனையில் முஸ்லிம்களுக்கென்ற தனி பத்திரிக்கை, தொலைக்காட்சி வேண்டும் என்றார். அவருடைய சிந்தனையில் உதித்தது தான் இன்று காணப்படும் பல பத்திரிக்கைகள் மற்றும் மூன் தொலைக்காட்சி என்றால் மிகையாகாது.
சமுதாயக் காவலர்:
பி.எஸ்.ஏ. அவர்கள் எப்படி சமுதாயக் காவலர் என்று ஒரு உண்மை நிகழ்ச்சியினைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன். 2003 திருசெந்தூர் சட்டமன்ற உப தேர்தலில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.ஏ. அவர்களும் வந்திருந்தார் என முன்பு சுட்டிக் கட்டினேன். ஒரு இரவு காயல்பட்டினத்தில் எம்.ஜி.ஆர் பேசுவதாக இருந்தது. அங்கே உள்ள சுல்தான் ஹாஜியார் வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு தனது வாகனத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு புறப்படும் முன்பு காயல் மௌலான என்ற கட்சிக் காரர் நீங்கள் தெருக்கள் வழியாக வந்தால் பெண்கள் உங்களைப் பார்க்க ஏதுவாகும் என்றதும் எம்.ஜி. யாரும் முன் அறிவிப்பின்றி வாகனத்தினை குறுகிய சந்துக்களில் விடச் சொல்லி விட்டார். ஆனால் ஒரு சவுக்கையில் டி.எம்.கே. கூட்டத்தில் அப்துல் சமது, சுப்புலட்சுமி ஆகியோர் அமர்திருந்த்தனர். எம்.ஜி.ஆர். வாகனம் வருவது அறிந்து டி.எம்.கே. தொண்டர்கள் கல்லெறிய ஆரம்பித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர். வாகனத்தில் கல்லும் விழுந்து விட்டது. உடனே எம்.ஜி.ஆர். தனது வண்டியினை பின் நோக்கி எடுக்கச் சொல்லி பொதுகூட்ட மேடைக்கு வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வாகனத்தில் கல் விழுந்ததும் ஏ.டி.எம்.கே. தொண்டர்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். நிலைமையினை அறிந்து பி.எஸ். ஏ. அவர்கள் மேடையில் ஏறி சிலர் தெரியாமல் கல் வீசியதிர்க்காக எம்.ஜி.ஆரிடம் மன்னிப்புக் கேட்பதாக பகிங்கரமாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆர் மைக்கினைப் பிடித்து முஸ்லிம்களைக் காப்பது நமது அரசாங்கத்தின் கடமை ஆகவே ஒரு சிலர் செய்த தப்பிற்காக முஸ்லிம் மக்களுக்கு தொண்டர்கள் எந்த தீங்கும் நான் சென்ற பின்பு ஏற்படாது என்று பி.எஸ்.ஏ. அவர்களிடம் உறுதி கூறுகிறேன் என்று தொண்டர்களை அமைதிப் படுத்தினார். இல்லையென்றால் பெரும்பாலான ஆண்கள் வெளி நாட்டில் இருக்கும் இந்த ஊரில் பெண்கள் மட்டும் இருக்கும் காயல்பட்டினத்தில் அன்று ஒரு பெரிய கலவரமே எற்பட்டிருக்கும். அதனை என்னுடைய, 'காக்கிச் சட்டைப் பேசுகிறது' என்ற புத்தகத்தில் இதை சுட்டிக் காட்டியுள்ளேன்.
இன்னலிலும் இன்முகம் காட்டுபவர்:
பி.எஸ்.ஏ. அவர்களின் வின் வெற்றிக்குப் பின்னணி ஆங்கில எழுத்தாளர் டேல் கார்நேஜ் எழுதிய ‘ஹௌ டு வின் பிரெண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுவன்ஸ் தி பியுப்பில்’ என்ற புத்தகத்தில் வெற்றிக்குப் பின்னணி முகத்தில் புன்னகையும் மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இன்றி பழகுவதுதான் என்று சொல்லி உள்ளார். அது பி.எஸ்.ஏ. அவர்களுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். டிரைவரிலிருந்து பெரிய அதிகாரி வரை அவர் பேச்சில் மயங்கி விடுவார்கள். அதே நேரத்தில் துன்பத்திலும் மனம் தளராதவர் என்பதினை பி.எஸ்.ஏ அவர்களின் துணைவியார் இறந்தபோது பார்த்தேன். துக்கம் விசாரிக்க வந்த ஆண் பெண் அத்தனை பேர்களிடமும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நலம் விசாரித்தார். அது சஞ்சய் காந்தி 1980 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்ததும் பிரதமர் இந்திரா காந்தி துக்கம் கேட்க வந்த பிரமுகர்களை வரவேற்றது போல இருந்தது.
என் மகன் சதக்கத்துல்லாஹ் திருமண அழைப்பிதழ் 2007 ல் கொடுக்கும்போது படுக்கையில் இருந்தார் பி.எஸ்.ஏ. அவர்கள் பத்திரிகையினை வாங்கி படித்துப் பார்த்து விட்டு டீ கொடுக்கச்சொல்லி அனுப்பினார். திருமணம் ஹோட்டல் மெரினாவில் இரவில் நடந்தது. நான் நிக்காஹ் மேடையில் இருந்தபோது என் உறவினர் ஓடி வந்து பி.எஸ்.ஏ. அவர்கள் சக்கர நாற்காலியிலும் அவர் துணைவியாரும் வருகிறார் என்றார். எனக்கு மட்டுமல்லாது அங்கு வந்திருந்த அனைவருக்கும் சந்தோஷத்தினைத் தந்தது. இவ்வளவிற்கும் நான் அப்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதோடு அல்லாமல் விருந்தும் சாப்பிட்டுச் சென்றார்கள். இதனை எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் முடியாத நிலையிலும் தனக்குப் பிடித்தவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்த தெரிந்தவர் அத்தனை பேர்களிடமும் பேசி மகிழ்ந்தார்கள்.
என்னிடம் என் மகன்களில் யார் என்னைப் போல் வருவார்கள் என்று பி.எஸ்.ஏ ஒரு சமயம் கேட்டார்கள். அதற்கு நான் நீங்கள் பெற்றது அனைத்தும் நன் முத்துக்கள் அதில் தரம் பிரிக்கும் தகுதி என்னிடம் இல்லையென்றேன். அதுக்கேட்டு வாய் விட்டு சிரித்து விட்டார்கள் பி.எஸ்.ஏ. நான் அவரிடம் நீங்கள் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்றேன். அதற்கு பி.எஸ்.ஏ. அது அல்லாஹ் கையில் அல்லவா இருக்கிறது என்றார். அவர்கள் எண்ணப்படி இல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஜென்னத்துல் பிர்தௌசுக்கு 7.1.2015 அன்று பயணமாகி விட்டார்கள். அவர்கள் ஜனாஸா அடக்கத்தில் நானும் ஒருவனாக வண்டலூர் பி.எஸ்.ஏ கல்லூரி மைதானத்தில் நடந்தது. அப்போது நான் கண்ட காட்சி, கோமான் முதல் சாமானியன் வரை, கல்வியாரிலிருந்து கடைக்கோடி தொழிழாளி முதல் கண்ணீர் மல்க விடை கொடுத்தது நெஞ்சைத் தொட்ட சம்பவமாக இருந்தது.


AP,Mohamed Ali

 

 

https://www.facebook.com/ukhmz/posts/10205343111474247




Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..