Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சமையல் அறையும் வங்கி கணக்கும்.
Posted By:peer On 12/18/2014 9:29:07 AM

alcohol and citalopram

citalopram and alcohol insomnia

சமையல் எரிவாயு மானியத்தை வங்கியில்தான் கொடுப்போம் என அரசாங்கம் மக்களை படுத்தும்பாடு கொஞ்சமல்ல. இருக்கும்வேலை எல்லாம் விட்டுவிட்டு வங்கி,ஆதார் கார்டு இன்னபிற ஆவணங்களோடு மக்கள் படும்பாடு ஏராளம்.

தேர்தலுக்கு முன்பாக அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தீவிரம், தேர்தல் நேரத்தில் நடக்கமுடியாத முதியவர்களை கட்டிலோடு தூக்கும் மக்கள்நல அரசியல் கட்சி சேவைகள் எல்லாம் இப்பொழுதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது.



தேர்தல் நேரம் வேறு, அதன் பலனை மக்கள் அனுபவிக்கும் நேரம் வேறு.

மானியம் வேண்டுமா? வங்கிக்கு அலைந்து திரியுங்கள் என கண்டிபாக சொல்லிவிட்டது அரசாங்கம், இனி சென்றுதான் ஆகவேண்டும். இல்லையேல் மானியமில்லை, மானியமில்லையேல் இக்கால சமையல் இல்லை.
மாறிவிட்ட காலங்கள், இந்தியாவில் அடுப்பெரிக்க கூட‌ மானியம் என்று 30 வருடம் முன்பு கூட யாரும் நினைத்துபார்த்திருக்கமுடியாது. பனைமட்டையோ காய்ந்த கள்ளி செடியோ ஏதோ ஒன்று எரிந்து அடுப்படி கடமையை முடிக்கும். விறகுக்கு செல்லும் நேரம் என்று பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரமே உண்டு. அலைந்து திரிந்து சேகரிப்பார்கள்,சுமந்து வருவார்கள் சர்க்கரை,கொழுப்பு, உடல்பருமன்,ரத்த அழுத்தம் என எந்தவியாதியும் இல்லை,

ஆண்களின் அன்றாட பணிகளில் கோடாரியால் ஒன்று விற்கு கீறுவது. இன்று வாழ்வின் நேரத்தை நிர்ணயம் செய்வதில் தொலைக்காட்சி முதலிடம், அமர்ந்தே இருந்து அதனையே பார்த்து உடலையும் கெடுத்து, நகரத்தை விடுங்கள் கிராமங்களில் கூட சிலிண்டர் இல்லாமல் சமையைல் இல்லை,

அப்படியான இன்றைய‌ வாழ்க்கை முறையில் உடல் தானாக சிலிண்டர் வடிவையே அடைந்தும் விடுகின்றது. அரசு திட்டமிட்டு காய்நகர்த்துகின்றது, இன்று சமையல் எரிவாயு மானியம், நாளை பெட்ரோலுக்கு அரசு கொடுக்கும் மானியம், பின்னர் விவசாயிகளின் உரங்களுக்கும்,மருந்துகளுக்கும் கொடுக்கும் மானியம், ரேஷன் கடைகளை மூடிவிட்டு அந்த பொருட்களுக்கான மானியம் என இனி எல்லாமே இப்படித்தான் நடக்கும்.

இது இன்னமும் அதிகபட்டு கல்விக்கும்,மருத்துவத்திற்கும் சென்றாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. அரசு பேருந்துகளிலும், ரயிலிலும் செல்லும் பயணத்திற்கும் விரைவில் மானியம் வங்கிக்கு வந்தாலும் வரும், டாஸ்மாக்கிற்கு இதுவரை அரசு மானியம் இல்லை என்பதால் குடிகார அட்டை வழங்கும் திட்டம் எல்லாம் வராது.

அதாவது பொருளின் முழுவிலையை மக்களிடம் கட்டசொல்லிவிட்டு, அரசு இதுவரை வழங்கும் மானியதொகையை மக்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பும். என்றாவது ஒருநாள் மானியம் "கட்" அல்லது குறைவு என அறிவித்தால் முழுசுமையும் மக்கள்மேல் விழும்.

ஆசியாவின் மிகசிறந்த பொருளாதாரபுலிகளான மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் மிக கடினபட்டு உருவாக்கிய திட்டம் இது, பின்னாளில் மோடி அரசும் அதனையே பின்பற்றி உயிர்கொடுத்திருக்கிறது.
இங்கெல்லாம் மோதிகொள்ளமாட்டார்கள். ஏன் இப்படி புதிய திட்டம் என்றால் இது மோசடிகளை தடுக்க உதவும் என்பார்கள், இப்படியான திட்டங்களால் ஏற்கனவே பல மோசடிகள் துடைத்தெறியபட்டன என்பதால் நாமும் நம்பிகொள்வோம்.

மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்திவிட்ட நாடுகள் கூட இப்படியான சிக்கலில் மக்களை தள்ளவில்லை. அங்கெல்லாம் குப்பை அள்ளும் வண்டிபோல கேஸ் சிலிண்டர் வண்டிகளும் அடிக்கடி தெருவில் ஒலிஎழுப்பியபடியே தவறாமல் பலமுறை வரும், தேவைபட்டால் நிறுத்தி வாங்கி கொள்ளலாம். சிலிண்டர் புத்தகமோ அதற்கு எண்ணிக்கை கட்டுப்பாடோ அறவே கிடையாது. ஒரே கொள்கை மக்கள் பயனுறவேண்டும்.

நமது நாடு மிகபெரிய வளரும் நாடு, இன்னும் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றாத நாடு. அதற்குள் இப்படியான மாற்றங்கள். இது வளர்ச்சி அல்ல, ஒரு வகையான வீக்கம், ஆபத்தானது.
செய்திகளை புரட்டினால் ஆதார் அட்டையும்,ரேஷன் கார்டும், வங்கி விண்ணப்ப பாரமும் கொண்டு மக்கள் ஆட்டு கூட்டமாக‌ அலைவதும், பாமர மூதாட்டிகள் திசைதெரியாமல் தடுமாறும் பரிதாமமும் தான் தெரிகின்றது.

இந்த மூதாட்டிக்கு தேர்தல் நேரத்தில் எவ்வளவு மவுசு இருக்கும். தேர்தலுக்கு மட்டுமே அரசிற்கும், கட்சிகளுக்கும் மக்களுக்கு ஆற்றும் கடமைகள் நினைவுக்கு வரும், ஒருநாள் மக்களை கும்பிட்டுவிட்டு பின் 5 ஆண்டுகள் அலையவிடுவார்கள், அதில் ஒன்றுதான் மேற்கண்ட காட்சி.

அப்படியாக சகலவித வாழ்க்கை செலவீன மானியதொகைய வங்கிக்கு அனுப்பி, "ஏதோ" ஒரு திட்டத்தோடு அரசு செய்கின்றது. இனி அங்கு கொடுத்துவிட்டு இங்கு வங்கியில் வாங்கவேண்டும், அதுவும் அரசு கொடுக்கும்வரை, அரசு நிறுத்தினால்....

பழைய சோவியத்யூனியனில் எல்லா கடைகளும் அரசுடயவை, மிக குறைவான எண்ணிக்கை, முடிவெட்ட கூட பெரும் வரிசை உண்டு. எங்குபார்த்தாலும் வரிசை வரிசை வரிசை மட்டுமே,
இனி இந்திய ஏ.டி.எம் முன்னாலும் அதே நிலைதான், இன்று சமையல் எரிவாயு மானியத்தில் சோதித்துபார்க்கின்றார்கள், திட்டம் மாபெரும் வெற்றி. காரணம் சிலிண்டர் இல்லாமல் இனி வீடுகள், உணவகங்கள் இல்லை. உணவே இல்லை. முணுமுணுத்தாலும் மக்களுக்கு வேறுவழி இல்லை, மாறிவிட்ட காலத்தில் விருப்பம் இல்லாமல் தத்தளிக்கின்றார்கள்.

அந்தகாலத்தில் நமதுபகுதியில் மாலைவேளையில் முன்னால் மாடும் பின்னால் தலையில் விறகுகட்டும், கையில் காய்ந்த ஓலையும் இழுந்து வரும் பெண்கள் கூட்டத்தின் காட்சி மறக்கமுடியாதது.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை மிக உன்னதமானது, விறகுக்கு கூட கையேந்தாத வாழ்க்கை.

இனி யார் அந்த வாழ்க்கை வாழ கூடும்.


 

 


 

  • Hameed Hamsha MAசமையல் எரிவாயு க்காக ஜெரக்ஸ் கடைகளில் வரிசை,அதை எரிவாயு ஏஜண்டிடம் கொடுக்க வரிசை,பின் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கொடுக்க வரிசை,வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக்கணக்கு தொடங்க வரிசை ,அத்தோடு இப்போது புதிதாக ரேஸன் கடைகளில் தாள் ஒட்ட வரிசை .வேலைக்கு செல்பவர்களின் பாதி நாட்கள் வரிசையில் நின்றே கழிகின்றன.அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்களின் பாடுதான் பாவமாக இருக்கின்றது. இரண்டு மூன்று நாட்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கடன் வாங்கி வங்கிக்கணக்கு தொடங்கும் பரிதாப நிலை...2005 -ல் கொடுக்கப்பட்ட ரேஸன் கார்ட் இப்போது மூண்றாவது முறையாக தாள் ஒட்டப்படுகின்றது. புதிதாக ரேஸன் கார்ட் புத்தகம் கூட அடித்துக்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் .காரணம் கேட்டோமானால் சுமார்ட் ரேஸன் அட்டை வழங்கப் போவதாகவும் அதற்க்கான பணிகள் நடந்துக் கொண்டு இருப்பதாகவும் ஒரு ரெடிமெட் பதில் தயாராக இருக்கின்றது.மணல் கொள்ளையிலும் ,கிரனெட் கொள்ளையிலும் அரசியல்வாதிகளுக்கு கிடைத்த லஞ்சப்பணத்தில் எத்தனையோ செய்திருக்கலாம் மக்களுக்கு.ஓட்டுக்காக 500,1000 வாங்கியவர்கள் அனுபவித்தாலும் பரவாயில்லை வாங்காதவர்களும் சேர்ந்து அனுபவிக்கின்றோம்...நமது வாக்குரிமையை 500க்கும் 1000க்கும் தொலைத்து விட்டு வரிசைகளில் நின்று தேடுகின்றோம் உரிமைகளை .வாழ்க ஜனநாயகம்
    9 hrs · Edited · Like · 11
  • Peer Mohamedஇதுல வேற இப்போம் புதுசாக , வெளிநாடு செல்பவர்களிடம் ஏர்போட்டில் பாஸ்போட்டுடன் சேர்த்து ஆதார் கார்டு கேட்கிறார்களாமே, உண்மையா?!!!!
    7 hrs · Like · 2
  • Hameed Hamsha MAஅப்போ கோர்டில் ஆதார் கார்ட் அவசியம் இல்லனு சொல்வதெல்லாம் பொய்யா? ம்ம்ம்ம் அரசன் எவ்வழி ,குடிகள் அவ்வழி



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..