Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!
Posted By:Hajas On 11/29/2014 6:15:27 AM

cost of an abortion

link abortion pill go

cost of an abortion

link abortion pill go

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

கிளிங்கர்கள்
--------------------
மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால்அழைக்கப்பட்டனர். கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு ஒன்று ஒழிந்திருக்கின்றது.
தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டார்கள்! மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு, அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.
அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர்.நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.
அக்கைதிகளில் இருவருக்கு மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர். அவர்களில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் ஒருவரான சேக் உசேன் எனற இஸ்லாமிய இளைஞர்.

யார் இந்த சேக்உசேன்?
------------------------------------
( Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 – இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. பார்வை:மேற்படி பக்கம்.45.)
இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது.
மலபார் கேரளவர்மா, மருதுபாண்டியர்,திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய, கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.
இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷாகான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். அந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.* ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்*
*( K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.) (**libd.,P.125)

அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.* இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாஅத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.

இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.

**இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள் விளங்கியுள்ளனர்.

*( செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41)
** (K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence, 1800-1803..,Page.274.)

தகவல்: www.kulasaisulthan.wordpress.com

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..!

கிளிங்கர்கள்
--------------------
மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால்அழைக்கப்பட்டனர். கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு ஒன்று ஒழிந்திருக்கின்றது.
தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டார்கள்! மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு, அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.
அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர்.நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.
அக்கைதிகளில் இருவருக்கு மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப் பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக் கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக் கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர். அவர்களில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் உருவான சேக் உசேன் எனற இஸ்லாமிய இளைஞர்.

யார் இந்த சேக்உசேன்?
------------------------------------
( Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 – இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. பார்வை:மேற்படி பக்கம்.45.)
இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக் கிளர்ச்சி [1800-1801] முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது.
மலபார் கேரளவர்மா, மருதுபாண்டியர்,திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய, கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.
இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷாகான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக் கோட்டையைத் தகர்ப்பதாகும். அந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக் கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.* ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம் பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர்*
*( K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.) (**libd.,P.125)

அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம் வீரர்களாவர்.* இம்மண்ணின் விடுதலைக்காக ஜமாஅத்தாக (கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை இஸ்லாமியர் படைத்துள்ளனர்.

இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத் திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.

**இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று தியாக வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள் விளங்கியுள்ளனர்.

*( செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள். பக்கம் 41)
** (K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence, 1800-1803..,Page.274.)

தகவல்: www.kulasaisulthan.wordpress.com
https://www.facebook.com/photo.php?fbid=352622258250296&set=gm.749908395077880&type=1

General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..