Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
siddha vaiththiyam
Posted By:nsjohnson On 11/15/2014 3:30:15 AM

உணவுப் பொருட்களும் அவற்றின் தன்மைகளும்    

உடற்சூட்டை தணிப்பவை
பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய்,  நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர்
ருசியின்மையைப் போக்குபவை
புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை,  வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி
சிவப்பணு உற்பத்திக்கு
புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள்,  உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை
மருந்தை முறிக்கும் உணவுகள்
அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் .  சோம்பு, வெள்ளரிக்காய்
விஷத்தை நீக்கும் உணவுகள்
வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம்
பித்தம் தணிப்பவை
சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை,  எலுமிச்சை
  •       
    May
    5

    பரம்பரை வீட்டு வைத்தியம்    

    இருதய நோய்களுக்கு:
    இருதய  நோயாளிகள் அவர்களது நாளங்களில் கொழுப்பு படிந்து அவற்றின் விட்டம்  குறைந்திருப்பதால் ஏற்படுகிறது, மென்மைபான மரக்கறி, பழவகை உணவுகள்,  கொழுப்பில்லாத தயிர் ஆகியவை உண்ணலாம், சீனிச்சத்து, உப்பு இவற்றைக்  குறைப்பது அவசியம். செந்தாமரைப்பூ இதழ்களை கஷாயம் செய்து தேன்,  கொழுப்பில்லாத பால் சேர்த்து காலையில் குடித்தால் இருதய நோய் படிப்படியாக  குணமாகும்.. இருதயநோய் உள்ளவர்கள் தினம் மென்மையான உடற்பயிற்சி செய்தல்  அவசியம். சுவாசப்பயிற்சி தினம் இருமுறையாவது செய்தல் அவசியம்.
    இதைச்  சுலபமாக எவரும் செய்யலாம். ஓரிடத்தில் நிமிர்ந்து இருக்கவும் வாயை நன்கு  மூடிக்கொள்ளவும். வாய்க்குள் நாக்கை கீழ்முரசுடன் அழுத்தி வைத்துக்  கொள்ளவும்.(இது உடம்பை தளர்த்திய நிலை). கண்ணையும் மூடிக்கொள்ளவும்.  மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். சில வினாடிகள் உள் வைத்திருக்கவும்  பின் இழுத்த நேரத்திலும் இருமடங்கு நேரத்தில் மூச்சை வெளியே விடவும்.  இப்படி 15 முறை செய்யவும். தினம் மூன்று முறையாவது இந்தச் சுவாசப்பயிற்சி  செய்தால் உடம்பு நன்கு தளரும். புகைத்தல், மதுபானம் தவிர்க்கப்பட வேண்டும்.  மனதை அமைதியாக வைத்திருத்தல் அவசியம். இரவில் படுக்குமுன் சீமை  அத்திப்பழம் மூன்றை கொழுப்பற்ற பாலில் காச்சி குடிப்பதும் இந்த  நோயாளிகளுக்கு நற்பலன் தரும். கடுக்காய் கொட்டையை நீக்கி அதன் சதையை  இடித்து சூரணம்செய்து அந்தத் தூளை கொழுப்பற்ற பாலில் காச்சி இரவில்  குடித்தால் இருதயம் பலப்படும்..
    இரும்புச்சத்து கூடுவதற்கு:
    இரத்தத்தில் பிராண  வாயுவை சேர்ப்பதற்கு உதவுவது செங்குருதி. இதில் போதிய இரும்புச்சத்து  இல்லாவிடில் செங்குருதி உருவாகாது இதனால் காமாளை நோய் ஏற்பட்டு உயர் ஆபத்து  நேரும். விரைவாக உடம்பிற்கு இரும்புச்சத்து சேர்ப்பதற்கு உணவில் ஈரலை  சேர்த்தால் விரைவாக இரும்புச்சத்து இரத்தத்தில் கூடும். சைவ உணவு  உண்பவர்கள் அதிகம் வெங்காயம், வாழைக்காய், உருளைக்கிழங்கு,  வாழைத்தண்டுக்கறி, பூசணிக்காய், தக்காளி, பருப்புவகை, பேரீச்சம்பழம்  கீரைவகை உண்பதால் இரும்புச்சத்து உடம்பில் கூடும். இத்துடன் உடற்பயிற்சி  செய்து வரவும்.
  •               
    May
    5

    திருநீற்றுப் பச்சிலை    

    சகல விதமான வாந்திகளுக்கும்  இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப  வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின்  சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.
    முகம் போன்ற பகுதிகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக்  கண்டிருப்பீர்கள். இந்த வசப் பருக்களை தெரிந்தோ, தெரியாமலோ நகத்தால்  கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தைக்  கூட  ஏற்படுத்தி விடும். 
    இத்தகைய விஷப் பருக்கள் தோன்றினால் யாரும் கவலைப் படத் தேவையில்லை.  திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு  எனப்படும் கடைச் சரக்கை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று  வேலை தடவ்னால் போதும், பரு காய்ந்து கொட்டிவிடும்.
  •               
    Apr
    25

    அருகம்புல்    

    நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?
    நமது உடலில் ஊட்டச்சத்து பெருக வேண்டும் என்பதற்காக ஹோர்லிக்ஸ், ஓவல்டின், போன்ற பானங்களைஸ் சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து முலிகை என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.
    நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன்  சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.
    அருகம்புல்லை நிரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இத நோய்க்கு இதமளிக்கும்.
    திடிரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும்,  அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.
  •               
    Mar
    12

    உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி    

    தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
    தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
    தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
    சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.
    இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.
  •               
    Mar
    12

    முல்லைப் பூவின் மருத்துவ குணம்    

    முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
    முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.
    முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
    முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.
    ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
    உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.
    முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.
  •       
    Mar
    9

    நரைமுடி    

    வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும் ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. இளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும்.
    குறைபாட்டை நீக்கும் முறைகள்:
    1. சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயற்ற மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.
    உணவு:
    இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும்.  
     பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    கூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்ப்பசையும் , நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.
  •       
    Mar
    9

    முலாம் பழம்    

       
    முலாம்  கொடி வகையைச் சேர்ந்தது. வெப்ப மண்டலப் பகுதிகளில் நீருள்ள இடங்களில்  நன்கு வளரும். சாதாரணமாக குளங்களின் கரையோரங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும்  தண்ணீர் வற்றியபோது பயிர் செய்யப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. சில  பழங்கள் பனி வெண்மையாகவும், சில மஞ்சள் நிறமாகவும், சில சிவப்பாகவும்  இருப்பதைக் காணலாம். இதில் ஒரு விதமான மனதுக்கு இதமான வாசனை உண்டு. பழம்  இனிப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
    இதில்  அடங்கியுள்ள சத்துப் பொருள்கள் பின்வருமாறு:
    புரதம்  0.6 சதவிகிதம் சர்க்கரைச்சத்து 5.4 சதவிகிதம் கொழுப்பு 0.2  சதவிகிதம் சுண்ணம் 0.016 சதவிகிதம் எரியம் 0.015 சதவிகிதம் இரும்பு  3.9 மை.கி. வைட்டமின் 'ஏ' 2,400 I.U. தியாமின் 52 I.U. ரிபோ·ப்ளவின்  75 I.U. வைட்டமின் 'சி'  25 I.U
  •       
    Mar
    9

    பழங்களும் பயன்களும்    

    1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*
    நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.
    2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*
    காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.
    3. இளமை தரும் *தக்காளி*
    இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

    4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*
    எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,
    5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*
    இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.
    6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*
    கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.
    7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*
    களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

    8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*
    மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.
    9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*
    நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.
    10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*
    கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

    11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*
    கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் ஆஇறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.
    12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*
    தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.
    13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*
    பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும்.
    அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.
    14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்*
    பகலுணவுக்குப் பின்  இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

    15. தாது விருத்தி தரும் *திராட்சை*
    உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன்
    சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.
    16. *பப்பாளிப் பழம்*
    யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

    17. *வாழைப்பழம்*
    மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.
    18. *வில்வப் பழம்*
    பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம் நன்கு செயல்படும்.
    19. *அரசம் பழம்*
    விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.
    20. *சீமை அத்திப்பழம்*
    மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும்.
    இரத்தச் சோகை விலகும்.
    21. *பேரீச்சம் பழம்*
    இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.
    22. *தர்பூசணிப் பழம்*
    கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.
    23. *முலாம் பழம்*
    மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
    24. *விளாம்பழம்*
    பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்
    விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.
    25. *அன்னாசிப் பழம்*
    குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.
  •       
    Mar
    8

    பரம்பரை வீட்டு வைத்தியம்    

    அக்கி குணமாக!
    பப்பாசிப்பழச்சாறும் பசுப்பாலும் கலந்து பூசிலாம் தரைப்பசலிக்கீரையும் மஞ்சள்தூளும் சேர்த்து பூசினால்குணமாகிவிடும்,
    ஆசனவாசலில் குடைச்சலுக்கு-இப்படியான அரிப்பு வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிள்ளைகளுக்கும் மூலவியாதி இருப்பவரகளுக்கும் காணப்படும். இதற்கு பாகல் இலை அல்லது முள்முருங்கை இலை-தளிர் இவற்ரில் ஏதாவது ஒன்றை அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும் அதன்பின் மூலகாரணம் அறிந்து தகுந்த சிகிச்சை செய்யவேண்டும்.. கருஞ்சீரகத்தையும் தேனுடன் அரைத்து பூசினால. அரிப்பு குணமாகும்.

    ஆரோக்கியத்திற்கு!
    தேகஆரோக்கியத்திற்கு உணவு முக்கியம். தகுதியான உணவை அளவுடன் உண்ணவேண்டும். அரைவயிறு உணவும், கால்வயிறு தண்ணீரும் கால்வயிறு காலியாகவும் இருப்பது அவசியம். தினம் உடற்பயிற்சி,யோகாசனம் செய்தால் ஆரொக்கியம் கிடைக்கும்.

    ஆண்கள் மலடு தீர!
    ஆண்களுக்கு அவரது இந்திரியத்தில்-ஈஜீஎப்| (EGF) என்னும் இரசாயனச்சத்து குறைவதால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு இந்த ரசாயனச்சத்தை மருத்துவர் மேற்பார்வையில் பாவித்தால் மலடுதீரும். எமது சித்தரகள் அறிவுறுத்தலுக்கு அமைய யோகாசனம் செய்தாலும் குறிப்பாக ஹலாசனம், சர்வாங்காசனம், சற்பாசனம் சாந்தி ஆசனம் ஆகியவற்றை தினம் செய்தால் சிலநாட்களில் நற்பயன் கிடைக்கும்.

    ஆண்மை வலுப்பெற!
    அரசம்பழத்தை பாலில்போட்டு காச்சி வெல்லத்துடன் தினம் பருகிவந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சிநீங்கும்.. ஓரிலைத்தாமரையை அரைத்து பாலில்கலந்து குடித்தாலும் தழற்சிநீங்கும். செம்பருத்திப்பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்கவைத்து வென்சூட்டில் சர்க்கரைசேர்த்து குடித்தால் பலம் கிடைக்கும். பேரீச்சம்பழம்,உழுந்து இவைகளை தேனுடன்சேர்த்துஅருந்தினால்தழர்வு நீங்கும்.. இலுப்பைப்பூகஷாயத்துடன் பசும்பால் சேர்த்து குடித்துவரின் ஆண்மை வலுப்பெறும்.

    இசைமருத்துவம்!
    இன்றையநவீனவிஞ்ஞானமுறைப்படி மேல்நாடுகளிலும்,சீனா,ஜப்பான்போன்ற நாடுகளிலும்  இசையைப்பயன்படுத்துகின்றனர். சிலநோய்களுக்கு தகுந்த இசையை தேர்ந்தெடுத்து அதை இசைத்தட்டில் பாடவைத்து நோயாளிமட்டும் கேட்ககூடிய செவிக்கருவியில்பொருத்தி தினம் சில நேரங்கள் அந்த இசையைச்செவிமடுக்க வைப்பாரகள். இந்த இசை மருத்துவம அமோகவெற்றியளிப்பதாக நம்பப்படுகிறது. எமது மூதாதையர் பலநோய்களையும் குணமாக்க திருவாசகம் போன்றசுவையான பாடல்களை பயன்படுத்துனர் என்பது எம்மவர் அறிந்ததே. இப்போதுதான் நமது நவீனவிஞ்ஞானிகள
     இந்த உண்மையை கண்டறிந்திருக்கின்றனர. இனியாவது எம்மவர் இதைநம்பி இசையை நோய்கள் தீரப்பயன்படுத்தட்டும்.

    இரத்தம் பெருக!
    இரத்தம் உடம்பில் விருத்தியாக அதிகம் கீரை உணவுகள் பழவகைகள் தினம் போதிய நீர் அருந்துதல் அவசியம்.. இறைச்சி,ஈரல்,மீன்முதலியவை அதைஉண்பவருக்கு உடன்இரத்தம் விருத்தியாக உதவும். தக்காளனிப்பழமும் -பீறுறூற்|இரத்த உற்பத்திக்கு உதவக்கூடியவை. தினம் உடற்பயிற்சியும் இடைவிடாது நடப்பதும் இரத்தவிருத்திக்கு உதவும். பாதாம் பருப்பு பாலுடன் உண்பதால் இரத்தவிருத்தி உண்டாகும். அத்திப்பழத்துடன் பாலும்சேரத்து அருந்துவதும் இரத்த விருத்திக்கு உதவும்.

     இளநீர் மருத்துவம்!
    இளநீரில் தாதுப்பொருள்களாகிய இரும்பு, பொற்ராசியம், சுண்ணாம்புச்சத்து, சோடியம் ஆகியவை அதிகம் இருப்பதால் சிறுநீரக நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் பெரிதும் உதவும். குடலில் புளு பெருகுவதையும் குறைக்க வல்லது.
  •       
    Mar
    5

    பரம்பரை வீட்டு வைத்தியம்    

    அஜீரணசக்திக்கு
    அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
    அம்மைநோய் தடுக்க!
    அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
    அறுகம் புல்
    இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது. அம்மைநோய் வேகத்தை தணிக்க!
    பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
    அகத்திக்கீரை 
    உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.
    ஆறு சுவையின் செயல்!
    காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
    கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
    இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
    புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
    துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
    உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்
    அன்னாசிப்பழம்  
    இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.
    அரைக்கருப்பன் சரியாக!
    இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
  •               
    Sep
    5

    அன்னாசிப்பூ    


    புதிய நோய்களைப்பற்றி அறியும்பொழுது, எங்கே நமக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான். எலிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற போன்றவற்றைப் பற்றிய செய்திகள் காய்ச்சலைவிட வேகமாக பரவுகிறது. இத்தகைய நோய்களை தடுக்க முந்தைய காலங்களில் ஆறுகள், குளங்கள், கேணிகளில் மூலிகை வேர்களை ஊறவைத்தும், யாகங்கள், ஹோமங்கள் செய்து காற்றுமண்டலத்தை தூய்மை செய்தும், மூலிகை ஊறிய நீரை பிறர் மேல் தெளித்தும் அருந்த கொடுத்தும் நோய் வராமல் தடுத்துக் கொண்டனர். ஆனால் மாறி வரும் நவீன யுகத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் குறைந்துவிட்டதாலும், போக்குவரத்து எளிதானதாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பும் அதிகரித்துவிட்டது.
    ஹோமங்கள், யாகங்களில் பயன்படுத்தப்பட்ட மூலிகை பொருட்கள் கிருமிநாசினி செய்கை உடையதுடன் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் பரவாமல் தடுக்கும் ஆற்றலையும் கொண்டிருந்தன. இவை ஹோமம், யாகத்தில் பயன்படுவது மட்டுமின்றி, அசைவ உணவுகளை உண்ணும்பொழுது ஜீரணிக்கச் செய்யவும் பயன்படும் அன்னாசிப்பூ என்னும் தக்கோலம் தொற்று நோய்க்கு காரணமான பல வகையான புளூ வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.
    இலிசியம் வீரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மேக்னோலியேசியே (இலிசியேசியே) குடும்பத்தைச் சார்ந்த இந்தச்செடிகளின் பூக்கள் அன்னாசிப்பூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படுகின்றன. இதன்பூ மற்றும் பழங்களிலுள்ள டிரான்ஸ் அனித்தோல், பெனிக்குலின், ஈஸ்ட்ராகோல், பைசாபோலின், பார்னிசின், கேரியோபிலின், நிரோலிடால் போன்ற சத்துகள் சுரத்தை குறைக்கும் தன்மையுடையன.
    வேதி தொழிற்சாலைகள் மூலமாக அன்னாசி பூவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சிக்கிமிக் அமிலமானது எச்1என்1 வகை வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடைய காரணத்தால் ஆசல்டாம்விர் என்ற வைரஸ் எதிர் உயிரி மருந்தில் ஒரு உள்வேதிப்பொருளாக இணைக்கப்படுகிறது. இந்த மருந்தின் ஆரம்பக்கட்ட ஆய்வின்பொழுது சிக்கிமிக் அமிலம் அன்னாசிப்பூவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. தற்சமயம் பன்றிக்காய்ச்சலை தடுக்க வழங்கப்படும் டாமிபுளூ மாத்திரை தயாரிக்க மூலப்பொருளாக விளங்கியது அன்னாசிப்பூதான் என்பது பாரம்பரிய மருத்துவத்தின் சான்றாகும்.
    சுவாசப்பாதையில் ஏற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க அன்னாசிப்பூவை பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து உட்கொள்ள சுவாசப்பாதையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அன்னாசிப்பூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி.,யாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட தொற்று காய்ச்சலினால் தோன்றும் தொண்டைக்கட்டு, இருமல், தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும்.
    செரிமானக் கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றிலுள்ள காற்றை வெளியேற்றி பசியை உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிப்பூ பிரியாணி போன்ற செரிக்கக்கடினமான உணவுகள் தயார் செய்யும் பொழுது மசாலாவாக அரைத்து சேர்க்கப்படுகிறது.



General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..