Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். - ( பாகம் - 10)
Posted By:Hajas On 6/25/2014 3:56:00 AM

Mohammed Meera Sahib Sahib
June 2, 2013

வாடகை சைக்கிள் - தொடர் கட்டுரை ( பாகம் - 10)

சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும்.

நம்ம ஊருக்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கியமாக அத்தியவாசியப் பொருட்கள் சைக்கிள் மூலமாகத்தான் வந்து விற்பனையாகின்றன. பால், காய்கறிகள், தேங்காய், மீன் மற்றும் பழவகைகள் என அநேகமான அன்றாடம் பயன்படும் அத்தியவாசியப் பொருட்கள் தலைச்சுமையாகவோ அல்லது சைக்கிள் மூலமாகவோ கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. மிகச் சமீப காலத்தில் டி.வி.எஸ்.50 போன்ற மொபெட்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. இன்று வரை பால் நமது ஊருக்கு சைக்கிள் மற்றும் டி.வி.எஸ்.50 போன்ற மொபெட்கள் மூலமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது.

அவ்வாறு விற்பனைக்கு வரும் பொருட்களை பால் தவிர இதர பொருட்களை சரியான முறையில் பேரம்பேசி வாங்குவதில் நம்ம ஊர் தாய்மார்களை மிஞ்ச எவராலும் முடியாது என்பது எனது ஆணித்தரமான கருத்து. 'ஏய்.. சம்பை சம்பை..! ஏ! தாயி நல்ல பச்சை மீன் இருக்கு வாங்கேன்' என நம்ம ஊரு மீனவ சாச்சிமார்களின் குரல் கேட்டதுமே 'இவகிட்ட யாரு வாங்குவா? இவ கொள்ளை வெலையிலோ சொல்லுவா!' என்ற முடிவோடுதான் மீன் வாங்க வெளியே செல்வார்கள் நம்ம ஊரு தாய்மார்கள். 'மா..எவ்ளோவ்' 'வெலை கொறவுதான், எடுதாயி' என்பது சாச்சிமார்களின் பதிலாக இருக்கும். நல்ல துண்டு மீனைக் கூட 'இது என்ன..! வெறும் முள்ளுளா' என்று முடிவு செய்யும் திறன் நம் பெண்மணிகளிடம் அதிகமே உண்டு. மீன் விற்க வந்தவர் சொன்ன விலையைவிட பாதி விலைக்குக் கேட்டு, இறுதியில் முக்கால் விலைக்கு வாங்கி, அத்தோடு கொசுறாக சில துண்டு மீன்களையும் வாங்கிவிடும் திறமை நம்ம ஊர் பெண்மணிகளுக்கு மட்டுமே உரியது.

இப்படி தலைச்சுமையாக அல்லது சைக்களில் வரும் அத்தியவாசியப் பொருட்களை ஒடு;டுமொத்தமாக விலைபேசி வாங்குவதில் வல்லவர் ஒருவர் எங்கள் தெருவில் இருந்தார். அவர் மரணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் அவர்களது திறமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக சைக்கிளில் வரும் வியாபாரிகள் கண்டிப்பாக இவர்களிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். ' நெல்லிக்காய்.. நெல்லிக்காய்' என்று சாக்கு மூட்டை நிறைய நெல்லிக்காய் விற்கும் சைக்கிள் வியாபாரியை கேட்பார்கள், ' ஏய்.. எவ்ளோப்பா' 'படிக்கு 1 ரூபாய் முதலாளி' என்பது வியாபரியின் பதிலாக இருக்கும். 'மூத்தவளே! மூட்டைக்கு வெல சொல்லுளா' என்பது இவர்களின் கேள்வியாக இருக்கும். படிக்கு விலை சொன்ன நெல்லிக்காய் வியாபாரி மூட்டைக்கு வலை கேட்டதும் சைக்கிளை விட்டு இறங்கி விடுவார். 'மூட்டைய அவுருடே.. மூட்டையை அவுத்து திண்ணையில இறக்கு' என்பது அவர்களது அடுத்த கட்டளை. அவர்களது தோரணையையும், அவர்கள் விடுக்கும் கட்டளையையும் கேட்டதும் நெல்லிக்காய் வியாபாரி பதிலேதும் பேசாமல் சைக்கிளில் உள்ள நெல்லிக்காய் மூட்டையை திண்ணையில் இறக்கி வைத்து விடுவார். 'ஆ.. இப்ப வெலைச் சொல்லு..' 'படிக்கு 1 ரூபா சொன்னம்ல முதலாளி'. 'அது சரிதான்டே..! கொஞ்சம் கொஞ்சமா வித்தா அந்த வெல சரி..! இப்பம் மொத்தமால எடுக்கப்போறன்.. அது எப்படி சரியான வெலயாவும்' 'நீங்க ஒரு வெல சொல்லி கேளுங்க முதலாளி..' 'உனக்கும் வேண்டாம்.. எனக்கும் வேண்டாம்.. படிக்கு 50 பைசா' வில் இருந்து பேரம் துவங்கும். 'முதலாளி முதுவலு அடிச்சா பட்டுக்கிரலாம். நீங்க வயித்துலலோ அடிக்கியொ' என்பது நெல்லிக்காய் வியாபாரியின் பதில். 'சரிடே மொத்தத்துல படிக்கு 70 பைசா' கடைசி வெல என்ன சொல்லுத...! அடிக்கிற வெயியில் அலைந்து திறிந்து கொஞ்சம் கொஞ்சமாய் விற்பதை விட மொத்தமா ஒரே இடத்தில் கொஞ்சம் வெலெ கொறச்சுலா கிடைச்சாலும் பராவயில்லை. வித்துட்டுப் போரயிரலாம்' என என்னும் வியாபாரி கடைசியில் அந்த வெலைக்கு சம்மதிப்பார்.

இன்மேல் தான் விளையாட்டே. மொத்த சாக்கு மூட்டையிலும் குறைந்து 10 முதல் 10 படி நெல்லிக்காயாவது இருக்கும். அவைகள் அத்தனையையும் அவர்கள் எடுத்து என்ன செய்யப் போகிறார்கள். நாம் இப்படி யோசித்து கொண்டிருக்கும்போதே, அக்கம் பக்கத்து விடடில் உள்ளவர்கள் என்ன வியாபாரம் என்று பார்க்கத் துவங்கி விடுவார்கள்.
'என்ன யாவாரம் மாமா' அடுத்த வீட்டில் பாத்துமுத்து தாத்தா.

'ஏய்.. நல்ல நெல்லிக்கா வந்துருக்கு' அவுச்சி ஊரப்போட்டா பழையதுக்கு நல்லாருக்கும்' ஒரு படி வாங்கிப்போடு என்பது பேரம் பேசி பொருட்களை வாங்கும் அவர்களின் பதிலாக இருக்கும்.
'ஒருபடி காணுமா மாமா? தாத்தா வூட்க்கும் 1 படி சேத்து 2 படியா தாங்க'..

அடுத்து பக்கத்து வீட்டு வாப்பும்மா. 'மருமொவனெ என்ன யாவாரம்? '
நெல்லிக்காய் மாமி'
'என்ன வெலயாம்'
சவுரியம்தான். அப்படின்னா நம்ம வூட்டுக்கும் மொவமார் வூட்டுகக்குமா சேர்த்து, 5 படி வாங்குங்கோ'
எஞ்சியதை அப்படியே தனக்கு எடுத்தக் கொண்டு, மூட்டை நெல்லிக்காயும் சில நிமிடங்களில் விற்று தன்னும் பிறருக்கும் உதவியாக இருந்த பெரியவர்கள் வாழ்ந்த ஊருதான் நம்ம ஊர்... ( இன்ஷா அல்லாஹ் தொடரும்)
வாடகை சைக்கிள் - தொடர் கட்டுரை ( பாகம் - 10) சைக்கிள் வியாபாரிகளும் பேரம் பேசுதலும். நம்ம ஊருக்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கியமாக அத்தியவாசியப் பொருட்கள் சைக்கிள் மூலமாகத்தான் வந்து விற்பனையாகின்றன. பால், காய்கறிகள், தேங்காய், மீன் மற்றும் பழவகைகள் என அநேகமான அன்றாடம் பயன்படும் அத்தியவாசியப் பொருட்கள் தலைச்சுமையாகவோ அல்லது சைக்கிள் மூலமாகவோ கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. மிகச் சமீப காலத்தில் டி.வி.எஸ்.50 போன்ற மொபெட்கள் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. இன்று வரை பால் நமது ஊருக்கு சைக்கிள் மற்றும் டி.வி.எஸ்.50 போன்ற மொபெட்கள் மூலமே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. அவ்வாறு விற்பனைக்கு வரும் பொருட்களை பால் தவிர இதர பொருட்களை சரியான முறையில் பேரம்பேசி வாங்குவதில் நம்ம ஊர் தாய்மார்களை மிஞ்ச எவராலும் முடியாது என்பது எனது ஆணித்தரமான கருத்து. 'ஏய்.. சம்பை சம்பை..! ஏ! தாயி நல்ல பச்சை மீன் இருக்கு வாங்கேன்' என நம்ம ஊரு மீனவ சாச்சிமார்களின் குரல் கேட்டதுமே 'இவகிட்ட யாரு வாங்குவா? இவ கொள்ளை வெலையிலோ சொல்லுவா!' என்ற முடிவோடுதான் மீன் வாங்க வெளியே செல்வார்கள் நம்ம ஊரு தாய்மார்கள். 'மா..எவ்ளோவ்' 'வெலை கொறவுதான், எடுதாயி' என்பது சாச்சிமார்களின் பதிலாக இருக்கும். நல்ல துண்டு மீனைக் கூட 'இது என்ன..! வெறும் முள்ளுளா' என்று முடிவு செய்யும் திறன் நம் பெண்மணிகளிடம் அதிகமே உண்டு. மீன் விற்க வந்தவர் சொன்ன விலையைவிட பாதி விலைக்குக் கேட்டு, இறுதியில் முக்கால் விலைக்கு வாங்கி, அத்தோடு கொசுறாக சில துண்டு மீன்களையும் வாங்கிவிடும் திறமை நம்ம ஊர் பெண்மணிகளுக்கு மட்டுமே உரியது. இப்படி தலைச்சுமையாக அல்லது சைக்களில் வரும் அத்தியவாசியப் பொருட்களை ஒடு;டுமொத்தமாக விலைபேசி வாங்குவதில் வல்லவர் ஒருவர் எங்கள் தெருவில் இருந்தார். அவர் மரணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் அவர்களது திறமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக சைக்கிளில் வரும் வியாபாரிகள் கண்டிப்பாக இவர்களிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். ' நெல்லிக்காய்.. நெல்லிக்காய்' என்று சாக்கு மூட்டை நிறைய நெல்லிக்காய் விற்கும் சைக்கிள் வியாபாரியை கேட்பார்கள், ' ஏய்.. எவ்ளோப்பா' 'படிக்கு 1 ரூபாய் முதலாளி' என்பது வியாபரியின் பதிலாக இருக்கும். 'மூத்தவளே! மூட்டைக்கு வெல சொல்லுளா' என்பது இவர்களின் கேள்வியாக இருக்கும். படிக்கு விலை சொன்ன நெல்லிக்காய் வியாபாரி மூட்டைக்கு வலை கேட்டதும் சைக்கிளை விட்டு இறங்கி விடுவார். 'மூட்டைய அவுருடே.. மூட்டையை அவுத்து திண்ணையில இறக்கு' என்பது அவர்களது அடுத்த கட்டளை. அவர்களது தோரணையையும், அவர்கள் விடுக்கும் கட்டளையையும் கேட்டதும் நெல்லிக்காய் வியாபாரி பதிலேதும் பேசாமல் சைக்கிளில் உள்ள நெல்லிக்காய் மூட்டையை திண்ணையில் இறக்கி வைத்து விடுவார். 'ஆ.. இப்ப வெலைச் சொல்லு..' 'படிக்கு 1 ரூபா சொன்னம்ல முதலாளி'. 'அது சரிதான்டே..! கொஞ்சம் கொஞ்சமா வித்தா அந்த வெல சரி..! இப்பம் மொத்தமால எடுக்கப்போறன்.. அது எப்படி சரியான வெலயாவும்' 'நீங்க ஒரு வெல சொல்லி கேளுங்க முதலாளி..' 'உனக்கும் வேண்டாம்.. எனக்கும் வேண்டாம்.. படிக்கு 50 பைசா' வில் இருந்து பேரம் துவங்கும். 'முதலாளி முதுவலு அடிச்சா பட்டுக்கிரலாம். நீங்க வயித்துலலோ அடிக்கியொ' என்பது நெல்லிக்காய் வியாபாரியின் பதில். 'சரிடே மொத்தத்துல படிக்கு 70 பைசா' கடைசி வெல என்ன சொல்லுத...! அடிக்கிற வெயியில் அலைந்து திறிந்து கொஞ்சம் கொஞ்சமாய் விற்பதை விட மொத்தமா ஒரே இடத்தில் கொஞ்சம் வெலெ கொறச்சுலா கிடைச்சாலும் பராவயில்லை. வித்துட்டுப் போரயிரலாம்' என என்னும் வியாபாரி கடைசியில் அந்த வெலைக்கு சம்மதிப்பார். இன்மேல் தான் விளையாட்டே. மொத்த சாக்கு மூட்டையிலும் குறைந்து 10 முதல் 10 படி நெல்லிக்காயாவது இருக்கும். அவைகள் அத்தனையையும் அவர்கள் எடுத்து என்ன செய்யப் போகிறார்கள். நாம் இப்படி யோசித்து கொண்டிருக்கும்போதே, அக்கம் பக்கத்து விடடில் உள்ளவர்கள் என்ன வியாபாரம் என்று பார்க்கத் துவங்கி விடுவார்கள். 'என்ன யாவாரம் மாமா' அடுத்த வீட்டில் பாத்துமுத்து தாத்தா. 'ஏய்.. நல்ல நெல்லிக்கா வந்துருக்கு' அவுச்சி ஊரப்போட்டா பழையதுக்கு நல்லாருக்கும்' ஒரு படி வாங்கிப்போடு என்பது பேரம் பேசி பொருட்களை வாங்கும் அவர்களின் பதிலாக இருக்கும். 'ஒருபடி காணுமா மாமா? தாத்தா வூட்க்கும் 1 படி சேத்து 2 படியா தாங்க'.. அடுத்து பக்கத்து வீட்டு வாப்பும்மா. 'மருமொவனெ என்ன யாவாரம்? ' நெல்லிக்காய் மாமி' 'என்ன வெலயாம்' சவுரியம்தான். அப்படின்னா நம்ம வூட்டுக்கும் மொவமார் வூட்டுகக்குமா சேர்த்து, 5 படி வாங்குங்கோ' எஞ்சியதை அப்படியே தனக்கு எடுத்தக் கொண்டு, மூட்டை நெல்லிக்காயும் சில நிமிடங்களில் விற்று தன்னும் பிறருக்கும் உதவியாக இருந்த பெரியவர்கள் வாழ்ந்த ஊருதான் நம்ம ஊர்... ( இன்ஷா அல்லாஹ் தொடரும்)

 

    Sheik Mohideen இது மன்னாரு வண்டி .....

    Peer Mohamed தானும் நன்மையடைந்து தன்னை சுற்றிவாழும் மக்களும் நன்மையடைய எண்ணியவர்கள் ஏராளமாய் வாழ்த்த ஊர் நமதூர் ,நெல்லிக்காய் மட்டுமல்ல , விறகு , மாம்பழம் , மீன் , போன்ற பொருள்கள் வந்தால் இப்படி மொத்தமாய் வாங்கி எல்லோருக்கும் பங்கிட்டு புண்ணியம் தேடி கொண்டவர்கள் நமது தெருவில் நிறையபேர் வாழ்ந்தபோது நான் சிறுவனாய் பக்கத்தில் நின்று பார்த்து ரசித்திருக்கிறேன் அதில் மறக்கமுடியாத நம்மதெரு பிரமுகர் "மாவன்ன "என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் " மாம்ட்டி அப்துல்காதர் " அவர்கள் இவர் "பைசல் கான் " அவர்களின் தந்தை யாவார் ...

    Mohammed Meera Sahib Sahib நான் கட்டுரையில் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்திருந்தேன். இருப்பினும் எனது சகோதரர் அந்த பெயரை சுட்டிக்காட்டி விட்டார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் மாவன்னா அப்துல் காதர் அவர்களுக்கு நல்ல சுவர்க்கத்தைக் கொடுக்க பிரார்த்திப்போமாக..!

 

https://www.facebook.com/groups/baithussalam/permalink/487346251334097/




Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..