Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?
Posted By:Hajas On 2/11/2014 5:03:09 AM

பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்டபாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சிகாலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பானபணிகள் நடைபெற்றுள்ளன.  கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப் பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வரு கின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் வித மாக 1864ம் ஆண்டு பதிவுத்து றை ஏற்படுத்தப்பட்டது.

1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்ட ம்நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரிசெய்யும் வகையில், அடுத்தடுத்துபல்வேறு சட்டங்கள்நிறை வேற்றப்பட்டு பத்திரப்பதிவுதொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.  தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவ து என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது.  30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரி வினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்ப ட்டுள்ளன.

பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆ வணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படி க்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத் திவரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன் னமும்புரியாதவையாகவே உள்ளன .

இதில், ஆவணங்கள் அடிக்கடி பய ன்படுத்தப்படும் சில வார்த்தைகளு ம், அவற்றின்  விளக்கங்கள் விவரம்:
.
பட்டா:
.
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளி க்கும் சான்றிதழ்.
.
சிட்டா:
.
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவண ம்.
.
அடங்கல்:
.
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
.
கிராம நத்தம்:
.
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒது க்கப்பட்டுள்ள நிலம்.
.
கிராம தானம்:
.
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
.
தேவதானம்:
.
கோவில் பயன்பாட்டுக்காக குறிப் பிட்ட நிலத்தை தானமாக அளித்த ல்.
.
இனாம்தார்:
.
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவ ரை குறிக்க பயன்படுத்தும்சொல்.
.
விஸ்தீரணம்:
.
நிலத்தின் பரப்பளவு. எல்லைக ளை குறிப்பது.
.
ஷரத்து:
.
பிரிவு.
.
இலாகா:
.
துறை.
.
கிரயம்:
.
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவண படுத்துதல்.
.
வில்லங்க சான்று:
.
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமை யாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒரு வருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
.
புல எண்:
.
நில அளவை எண்.
.
இறங்குரிமை:
.
வாரிசுரிமை.
.
தாய்பத்திரம்:
.
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
.
ஏற்றது ஆற்றுதல்:
.
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
.
அனுபவ பாத்தியதை:
.
நிலத்தை பயன்படுதிகொள் ளும் உரிமை.
.
சுவாதீனம் ஒப்படைப்பு:
.
நிலத்தின் மீதான உரிமை யை ஒப்படைத்தல்.
.
ஜமாபந்தி:
.
வருவாய் தீர்வாயம்.
.
நன்செய்நிலம்:
.
அதிக பாசன வசதி கொண்ட நிலம்.
.
புன்செய்நிலம்:
.
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
.
குத்தகை:
.
ஒரு நிலத்தை பயன்படுத்து ம் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனை களுடன் அளிப்பது அல்லது பெறுவது.
.
இந்த வார்த்தைகளின் பயன் பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரி வித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒரு வ ரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
.
இதை ஏற்ற, சொத்து விற்பனை , அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்துசெய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வ கையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்து றை வெளியிட்டுள்ளது.
,
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்….

பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?
சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்டபாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சிகாலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பானபணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு  பயன்படுத்தப் பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வரு கின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் வித மாக 1864ம் ஆண்டு பதிவுத்து றை ஏற்படுத்தப்பட்டது. 
1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்ட ம்நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரிசெய்யும் வகையில், அடுத்தடுத்துபல்வேறு சட்டங்கள்நிறை வேற்றப்பட்டு பத்திரப்பதிவுதொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவ து என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது.
30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரி வினரையே  சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள்  ஏற்ப ட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆ வணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படி க்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத் திவரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன் னமும்புரியாதவையாகவே உள்ளன .
இதில், ஆவணங்கள் அடிக்கடி பய ன்படுத்தப்படும் சில வார்த்தைகளு ம், அவற்றின்
விளக்கங்கள் விவரம்:
.
பட்டா:
.
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளி க்கும் சான்றிதழ்.
.
சிட்டா:
.
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவண ம்.
.
அடங்கல்:
.
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
.
கிராம நத்தம்:
.
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒது க்கப்பட்டுள்ள நிலம்.
.
கிராம தானம்:
.
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
.
தேவதானம்:
.
கோவில் பயன்பாட்டுக்காக குறிப் பிட்ட நிலத்தை தானமாக அளித்த ல்.
.
இனாம்தார்:
.
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவ ரை குறிக்க பயன்படுத்தும்சொல்.
.
விஸ்தீரணம்:
.
நிலத்தின் பரப்பளவு. எல்லைக ளை குறிப்பது.
.
ஷரத்து:
.
பிரிவு.
.
இலாகா:
.
துறை.
.
கிரயம்:
.
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவண படுத்துதல்.
.
வில்லங்க சான்று:
.
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமை யாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒரு வருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
.
புல எண்:
.
நில அளவை எண்.
.
இறங்குரிமை:
.
வாரிசுரிமை.
.
தாய்பத்திரம்:
.
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம்  இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
.
ஏற்றது ஆற்றுதல்:
.
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
.
அனுபவ பாத்தியதை:
.
நிலத்தை பயன்படுதிகொள் ளும் உரிமை.
.
சுவாதீனம் ஒப்படைப்பு:
.
நிலத்தின் மீதான உரிமை யை ஒப்படைத்தல்.
.
ஜமாபந்தி:
.
வருவாய் தீர்வாயம்.
.
நன்செய்நிலம்:
.
அதிக பாசன வசதி கொண்ட நிலம்.
.
புன்செய்நிலம்:
.
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
.
குத்தகை:
.
 ஒரு நிலத்தை பயன்படுத்து ம் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில  நிபந்தனை களுடன் அளிப்பது அல்லது பெறுவது.
.
இந்த வார்த்தைகளின் பயன் பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரி வித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது  தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒரு வ ரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
.
இதை ஏற்ற, சொத்து விற்பனை , அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்துசெய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வ கையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ்   மாதிரி படிவங்களை பதிவுத்து றை வெளியிட்டுள்ளது.
,
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்….

General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..