Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி
Posted By:Hajas On 1/20/2014 11:06:59 AM

tadalafil generico mylan

cialis generico

 Peer Mohamed

“நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி ...

எப்போதும் ஊருக்குப் போனால் ஆக கூடினால்  பத்து நாட்களுக்குள் திரும்பிடுவேன் ஆனால்  இந்த தடவைதான் மிக அதிகமான நாட்கள்  நீண்ட நாட்களுக்குப் பிறகு நமதூரில்  ஒருமாத காலம் இருந்தேன் தம்பி மகள் திருமண  அழைப்பிதழ் கொடுக்க ஊரில் எல்லா இடங்களுக்கும்  போனேன் நமதூர் ரெம்ம்பதான் மாறி இருக்கு

நமதூரில் முன்பெல்லாம் ஒன்றாம் தெரு தொடங்கி  ஒன்பதாம் தெருவரை தான் ,அதன்பின்   புதுக்குடி, புதுமனை  என்று சொல்லக்கூடிய  “ மொஹைதீன் நகர் “ லெப்பை வளவு , அக்கரை என்று  அழைக்கும் “கட்டளை தெரு மட்டும்தான் உண்டு. 

  பிஸ்மி நகர் , மதீனா நகர், ஹாஜி நகர் , அரபாத் நகர் ,  அல்ஹுதா நகர், அப்துல் கலாம் நகர்,  இஞ்சிகாலனி,  ரஹ்மத் நகர் , ஓகே நகர், நாகூர நகர் இப்படி பல பல  புதிய பெயர்களில் புதிய குடிஇருப்புகள் நிறையவே  வந்து, சகல வசதிகளும் கொண்ட உள்க்கட்டு அமைப்போடு  மிக அருமையான, நவீன வசதிகள் கொண்ட சிறிய, பெரிய பங்களாக்கள், வீடுகள் வந்து விட்டதை காண முடிந்தது.

இதற்க்கெல்லாம் நமதூர் சகோதரர்கள் மத்திய கிழக்கு  நாடுகளுக்குப் போய் , ஊரை, தாய், தந்தையை , மனைவி,  மக்களை, சொந்த பந்தங்களை மட்டும் அல்ல நல்ல தினங்கள் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகள் யாவையும்  மறந்து “ தனது இரத்தத்தை வேர்வையாக்கி “ கஷ்டப்பட்டு உழைத்து கட்டப்பட்ட, கட்டிடங்கள்தான் , பங்களாக்கல்தான்  அவை யாவும் என்பதை நான் நன்கு அறிவேன்

புதிய புதிய கட்டிடங்களை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்வாய் இருக்கு இந்த புதிதாக உருவான நகர்களால் ஏர்வாடியின் எல்லை நான்கு பக்கத்திலும் விரிந்து விட்டன

முன்பெல்லாம் தெற்க்கே பொண்ணகுறிச்சி குளத்துக்கு  உள்ப்பட்டுதான் குடிஇருப்புகளும் வீடுகளும்  இருக்கும் இப்போம் பொண்ணகுறிச்சி குளத்தையும் தாண்டி  “ ஏர்வாடியை விட்டு வள்ளியூரை தொட்டு விடும் அளவுக்கும்,  வடக்கே , சீனிவாசபுரம் தாண்டி ஆலங்குளதிற்கு அப்பாலும் , மேற்க்கே, ஒன்றாம் தெரு தாண்டி ஆலடிகுளம் தொட்டு விட்டன.

கிழக்கே ,அணைக்கரையை தொட மிச்ச நாட்கள் போகாது போல  என்று நினைக்கும் அளவுக்கு நமதூர் வளர்ச்சியடைந்து வருகிறது  இதைப்பார்க்கும் நமதூர் மண்ணின் மைந்தர்கள் மகிழ்வார்கள்  நானும்தான் . தெருக்களுக்குள் காலி மனை காண்பது அரிதாக  உள்ளது கிடைத்தாலும் “ விலைகளை கேட்டால் மயக்கம்
போடாத குறைதான்.அந்தஅளவுக்கு கொடுமையான விலையை  சொல்கிறார்களாம் .ஊரில் ஒரு நடுத்தர குடும்பத்தின் பெரியவர்  சமிபத்தில் சந்தித்தபோது ஒரு சம்பவம் சொன்னார் .,

தம்பி மகனை பட்டினி கிடந்து கஷ்ட்டப்பட்டு பட்டினி கிடந்து படிக்க  வைத்து பட்டதாரியாக்கிட்டேன் தம்பி கொஞ்ச நாள் மெட்ராசில் வேலை  செய்தான் சுமாரான வருமானம் அவன் செலவு போக கொஞ்சம் பணம்  மாசா மாசாம் அனுப்புவான் அதும் போதலே வீட்டில் இரண்டு குமர் பிள்ளைகள் அதுகளை கட்டி கொடுத்து கரைஏற்றணும் சொல்லி  வீட்டையும் வித்து போட்டேன அதன்பின்னே “அல்லாட கிருபயாலே “  என் மகனுக்கு வெளிநாட்டில் அவன் படித்த படிப்புக்கு நல்ல ஒரு  வேலை கிடைத்தது அங்கிட்டு இங்கிட்டு கடனை வாங்கி அவனை வெளி நாட்டிற்கு அனுப்பினேன் இப்போ வெளிநாட்டில் மனம் நிறைந்த வேலையோடும் கை நிறைந்த சம்பளதோடும் நல்லமாறி இருக்கிறான்.

அவன் மாத மாதம் அனுப்ப கூடிய பணத்தில் சேமித்து வைத்த  பணம் இப்போ பல லட்சம் பாங்கில் இருக்கு தம்பி அதை வைத்துக் கொண்டு அவனுக்கு ஒரு வீடு கட்டி கொடுக்கலாம்  என்ற எண்ணத்தில் நான் பிறந்த ஊரான நமதூரில் நான் புரண்ட  புழுதியில் அதும் நானும் எனது முன்னோர்கள் வாழ்ந்த தெருவில்  அதே “ வட்டாரத்தில் “ ஒரு பழைய வீட்டை பார்த்து பேசி  இத்தனை லட்சம் என்று பேசி முடிவு செய்து மகனுக்கும் தெரியப்படுத்தினேன் தம்பி என்றார். மிக்க சந்தோஷம் என்றேன் நான்.

மகனும் பேசிய மொத்த பணத்தையும் அனுப்பிவிட்டான் தம்பி  அதன்பின் அவரிடமிருந்து பேச்சு ஏதும் வரவில்லை கொஞ்சம் நாக்கு தடுமாறி தழு தழுத்த குரலில் சொன்னார்.  மொத்த பணத்தையும் கொடுத்து வீட்டை எப்போ எழுதாலாம்  என்று கேட்டபோது வீட்டுகாரர் சொன்னார் பேசிய விலையை விட நான்கு ஐந்து லட்சம் அதிகம் தந்தால்  பேசுங்க...இல்லன மற்றொரு நபருக்கு கொடுக்க போவதாய் சொல்லிட்டார்
தம்பி என்று மிகவும் மனகஷ்டத்தோடு சொல்வதை கேட்ட எனக்கும்  மனதில் பாரம் ஏறிய உணர்வு ஊண்டாகியது.

அந்த வீட்டை வாங்க போகும் நபருக்கும் ஊரில் பல  வீடுகள் இருப்பதாகவும் சொன்னார் அவர் யார் என்று  கேட்டேன் “அது அல்லாட அமானம் “ சொல்லமாட்டேன்  என்று மிகவும் உறுதியான குரலில் சொன்னார் பண்பு கருதி நானும் வற்ப்புறுத்தவில்லை .நீங்களும் என்னிடம் வற்புறுத்த வேண்டாம்.

“ அது அல்லாட அமானம் “  சரி இப்போ எங்கேபோய் வீடு பார்க்க போறிங்க என்றேன் நமதூருக்கு  வடக்கே , தெற்க்கே புதிதாக தோன்றி இருக்கும் நகர்களில் எங்கியாவது பார்க்கணும் என்றார் மன கஷ்ட்டதோடு   நமது தெருக்களில் எல்லாம் புதிய புதிய பங்களாக்கள்; வீடுகள் மட்டுமல்ல  புதிய புதிய ரக வாகனங்கள் யாவும் நிறையவே நிக்கிறது இன்னும் வருங்காலத்தில் இதைவிட அதிகமான வாகனங்கள் வரலாம்  தெருக்கு தெரு பத்து பன்னிரெண்டு வாகனங்களுக்கு குறையாமல்  நிக்கிறது அதுபோல் இரு சக்கர வாகனம் இல்லாத வீடு மிக குறைவு  முச்சக்கர வாகனமும் நிறையவே அடிக்கடி வந்து போகின்றன  மக்கள் நடந்து போவது குறைந்து போய் விட்டன.

முன்பெல்லாம் “ வில்வண்டி “ சக்கடவண்டி” தெருவுக்கு தெரு  நிக்கும் இப்போம் அவைகள் நமதூரில் துப்பரவாய் காணமல்  போய் விட்டன.  போன் போட்டதும் வீட்டுக்குவீடு குடி தண்ணீர் பெரிய பெரிய  பாட்டில்களில் வந்து இறங்குகின்றன முன்பெல்லாம்  “ ஆற்றில் இருந்து ஊற்று தண்ணீர் மண் குடத்தில்” மேத்தி”  கொண்டு வருவார்கள் .

பதநீர் இளநீர் மோர் தயிர் சாப்பிட்ட வீடுகளில் இன்று  பெப்ஸி., கோலா, போன்ற மென்பானங்கள் புழங்குவதை பார்க்க முடிந்தது .மாடு வளர்த்த வீடுகள் மறைந்து போய் விட்டன. ஊரில் கடித கலாசாரம் மறந்தபோன மறைந்து ஒன்றாய்  ஆகி விட்டது இளம் தலைமுறைக்கு “கடிதம்” என்றால் என்ன  என்பதே தெரியாமல் போய் விட்டது முன்பெல்லாம் கடித காரரை  எதிர் பார்த்து நமது பெற்றோர்கள் தெருக்கு தெருவீடுகளுக்கு முன் காத்திருப்பார்கள்.

 இப்பமும் கடிதகாரர் வருகிறார் அவர் கொண்டு வருவது உண்மையான  அன்புகளை சுமந்து வரும் பழைய கடிதங்கள் அல்ல.,மாறாக  டெலிபோன் பில் வங்கி ,கொடுக்கல் வாங்கல் மற்ற  இத்தியாதி... இத்தியாதி கள்தான்.

வீட்டுக்கு வீடு படித்த பட்டதாரிகள் நிறையவே இருக்கிறார்கள்  அறிவியல் படித்தவர்கள் மட்டும்மல்ல “ஆண்மீகம்” நன்கு தெரிந்து  ஐந்து நேரமும் இறைவனை தொழ கூடியவர்கள் ஊரில் நிரம்ப  இருக்கிறார்கள் மகிழ்ச்சியான செய்தி அல்ஹம்துலில்லாஹ் ...

எல்லோரும் கிணத்தை காணவில்லை ,கிணத்தை காணவில்ல  என்றுதான் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்  ஆனால் நமதூரில் ஆற்றை காணவில்லை  ஆற்றை காணவில்லை என்று யாரிடம் போய் சொல்ல...

“ உண்மையில் நமதூரில் இருந்த அழகான ஆற்றை தொலைத்து  விட்டோம் என்பதும் கசப்பான உண்மை “

ஊரில் அரசியல் கட்சிகளின் செயல்பாடு குறைந்து இயக்கங்களின்  ஆன்மீக செயல்பாடுகள் நிறையவே காணமுடிகிறது ஒருவேளை  தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் களத்தில் வரலாம் நமது மாவட்டத்தில் நமதூரில்தான் அதிகமான புதிய புதிய கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதாக ஒரு கட்டிட  குத்தகைகாரர் சொன்னதை வைத்துப் பார்த்தால் நமதூர் பொருளாதரத்தில் மிகவும் சிறப்பாய் முன்னேறி  வருகிறது என்றாலும்.,  சிறு சிறு கைதொழில் தொடங்கி பெரும் பெரும்  தொழில் துறைகள் நமதூரில் பெருகுமேயானால்  நமதூர் இன்னும் இன்னும் பொருளாதரத்தில் வளம் பெற்று மாறிவர நிறையவே வாய்ப்புள்ளது மொத்தத்தில்  சொன்னால் .,  “ நமதூர் ஏர்வாடி நிறையவே மாறி இருக்கு “

பீர் முஹம்மத் மாத்தளை ...

Peer Mohamed's photo.
Peer Mohamed's photo.

 

  • Mustafa Hasan Kamalஉண்மை. முற்றிலும் உண்மை.
  • Peer Mohamedஉண்மை உண்மை முற்றிலும் உண்மை
  • S Ahmad Kabeerஅஸ்ஸலாமு அழைக்கும் பீர் காக்க குழும மற்றும் நம் ஊர் அன்பு மக்கள் எல்லோர் மனதிலும் தினம் தினம் வந்து மறையும் உண்மை நிங்கள் மிக்க விளக்கத்துடன் எழுதி விட்டிடீர்கல் மாஷா அல்லாஹ்..
  • Si Sulthan///அந்த வீட்டை வாங்க போகும் நபருக்கும் ஊரில் பல வீடுகள் இருப்பதாகவும் சொன்னார் அவர் //// இது ஒருவகை புரோக்கர்களின் டெக்னிக். வீடு வாங்குபவர்களை கசக்கி பிளிய அவர்கள் கையாளும் கீழ்த்தர உத்தி. 100க்கு 90 சதவீதம் இடங்களில் அவர் கேக்குறார் என அவர்கள் சொல்லும் நபர் அதுபற்றி சிந்தித்தும் இருக்கமாட்டார். நான் கண்னால் கண்டுமிராத, கேள்விப்பட்டும் இராத பல இடங்களை சுல்தான் இவ்வளவுக்கு கேட்கிறார் என புரோக்கர்கள் என் பெயரை சொல்லி விலையேற்றம் செய்த பல நிகழ்ச்சிகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுபோலவே ஊரில் உள்ள யாராவது ஒருவரின் பெயரை சொல்லி அந்த சம்பவம் நடந்திருக்கலாம்.
  • Si Sulthanஊரைப்பற்றிய அருமையான கணிப்பு. பாராட்டுக்கள்.
  • Mohamed Mustafa/// சிறு சிறு கைதொழில் தொடங்கி பெரும் பெரும் தொழில் துறைகள் நமதூரில் பெருகுமேயானால் நமதூர் இன்னும் இன்னும் பொருளாதரத்தில் வளம் பெற்று மாறிவர நிறையவே வாய்ப்புள்ளது. ///
  • MA Azadஅருமை...யதார்த்தமான ஏர்வாடியை,உள்வாங்கி ரசித்து எழுதியிருக்கிறீர்கள்!இதுதான் மாத்தளைபீர்காக்கா டச்.அருமை.
  • G Saffi Ghouse Mohamedஆற்றை கானவில்லை என தங்களின் ஆற்றாமையை வெளிபடுத்தும் பிர் காக்கா இன்க்ஷாஅல்லாஹ் நம்பிக்கை வையுங்கள் நம்பியாறும் அழகாக வெளி வரும். அழகான பாலம் வந்துவிட்டது,அந்த பாலத்தை ஒட்டி அல்லாஹ் நாடினால் பஸ் நிறுத்தமும் வந்துவிடும். துய்மையான என்னத்தோடு வேலை செய்பவர்கள் இருக்கும் வரை வேலைகள் விரைவில் நடக்கும் பாலமும் அழகு பாலத்தின் கீழே ஒடும் ஆறும் அழக்காகும்!!!நம்பிக்கை வைப்போம்!!!!
  • Peer Mohamedநல்ல செய்தி சொன்ன ஷாபி தம்பி
    செய்தி அறிந்து மனம் கிடந்து குதுகளிக்கிறது
  • ஏற்வாடியின் மாற்றம் பற்றி எழுதி இருந்தேன் அதில் ஒன்றை விட்டுவிட்டேன்

    நமக்கு கிடைத்த ' பேரூராட்சி தலைவர் ' இறைவனின் மாபெரும்
    கிருபை நமக்கு பண்பான ,அன்பான
    யாரும் எளிதில் அணுகக் கூடிய ,
    செயல் வீரர் , நமது பேரூராட்சி மன்ற தலைவர் அவர்கள்

    " அதும் நமதுரின் மாற்றம்தான் "

    " நல்ல மாற்றம் " ...

  • K Peer Mohamedவிபரமான விரிவுரை மூலம் எங்களை போன்ற வெளிநாடு வாழ் மக்கள் ஊருக்கு வராமலே ஊர் பற்றிய நிலைகளை அறிய பெற்று மிக்க சந்தோசம்.

நன்றி : முகநூல்.




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..