Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
சுய தொழில்கள்-04: செம்மறி ஆடு வளர்ப்பு
Posted By:peer On 4/24/2013

ஆடு வளர்ப்பு நன்மைகள்

  • ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது.
  • குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய்
  • வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி.
  • அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது
  • நல்ல எரு கிடைக்கிறது.
  • வருடம்முழுவதும்வேலை


செம்மறி ஆட்டினங்கள்

ராமநாதபுரம் வெள்ளை, கீழக்கரிசல், நீலகிரி, திருச்சி கருங்குரும்பை, மேச்சேரி, மெரினோ.

உள்ளூர் இனங்கள் – இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்

  • · மெரினோ – கம்பளிக்கு உகந்தது
  • · ராம்பெளலட் – கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
  • · சோவியோட் – கறிக்கு ஏற்றது
  • · செளத் டான் – கறிக்கு ஏற்றது

     

நல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது,வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண்அலுவலகத்தையோ அணுகவும்.

நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம்.வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில்,செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம்பெறலாம்.

செம்மறி ஆடு

நன்மைகள்

  • · அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.
  • · கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
  • · உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
  • · சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.
  • ·ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.
  • · எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.

செம்மறியாடு வளர்ப்பு

செம்மறியாடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. அதிகளவு நிலம் கொண்டு பகுதிகளில் திறந்த வெளியில் மேயவிட்டும், இடவசதி குறைவாக உள்ள இடங்களில் பட்டியலில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம். குறைந்த செலவில் சிறு, குறு நில விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஆடு வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.

செம்மறி ஆடு வளர்ப்பின் நன்மைகள்

  • செம்மறி ஆட்டிலிருந்து இறைச்சி, கம்பளம், தோல் எரு மற்றும் பால் மூலம் வருவாய் கிடைக்கிறது.
  • ஒரு செம்மறி ஆடு ஒரு ஆண்டிற்று 500 முதல் 700 கிலோ எரு உற்பத்தி செய்கிறது.
  • செம்மறி ஆடுகள் புல்லின் மேற்பகுதி மட்டும் மேய்வதால் மேய்ச்சல் தரைகள் அழிவதில்லை. மரங்களையும் இவை அழிப்பதில்லை.
  • செம்மறியாடுகள் மந்தையாகவே நடமாடுவதால் பராமரிப்பு எளிது. 100 ஆட்டிற்கு 1 நபர் போதுமானது.
  • அதிகச் செலவில் கொட்டகைத் தேவையில்லை. திறந்தவெளிகளிலும் பட்டிகளிலும் வளர்க்கலாம்.


செம்மறி ஆடு

மேலும் செம்மறி ஆடுகள் எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக.

வெப்பப் பிரதேசங்களிலும் காணப்படும் ஆடுகள் உடல் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கம்பளமில்லாத உரோமத்துடனும், நீண்ட கால்களுடனும், பெரிய வால், காது, கழுத்து அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன.

குளிர்ப் பிரதேசங்களில் உள்ள செம்மறி ஆடுகள் உரோமத்துடன் காணப்படுவதால் மழைத்தண்ணீர் உடலில் பட்டு பாதிக்காதவாறு உள்ளன.

தீவனத் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களில் வாழும் செம்மறியாடுகள் தங்களுக்கு தீவனம் சரிவரக் கிடைக்காத காலங்களில் உபயோகித்துக் கொள்வதற்காக கொழுப்புச் சத்தை தாங்கள் உடலில் (வால்) சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவை.

செம்மறி ஆடுகளில் இறைச்சி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.
சாதாரணமாக 1-2 குட்டிகள் ஈனும்.

இவை வயல்வெளிகளில் மேயும் போது இதன் புழுக்கைகள் மற்றும் சிறுநீர் வயலுக்குச் சிறந்த எருவாகப் பயன்படுகிறது.

ஆடு மேய்க்கலாம்!  ஆயிரமாயிரமா சம்பாதிக்கலாம்!

ஆடு வளர்ப்பது லாபகரமான தொழில் என்பதில் யாருக்கும்எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். நாம் வளர்க்கும் ஆடுகளைமிக மிக எளிதாக மார்க்கெட்டிங் செய்துவிடலாம் என்பதால், இந்தத் தொழிலில் ஆண், பெண் வித்தியாசமின்றி யார்வேண்டுமானாலும் தாராளமாக இறங்கலாம்.

செம்மறி ஆடு கொட்டில் முறையில் நீங்கள் ஆடு வளர்க்கப் போகிறீர்கள்என்றால் உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே ஷெட்அமைத்து, ஆடு வளர்க்கலாம். அதற்கு உங்களுக்கு இரண்டுஏக்கர் இடம் இருந்தால் போதும். பகலில் வெளியே ஆட்டைமேயவிட்டு, இரவில் கொட்டிலில் அடைத்துவிடலாம். மழைக்காலங்களில் ஆட்டை வெளியே கொண்டு போய் மேய்க்கமுடியாதபோது, உங்களிடம் உள்ள இரண்டு ஏக்கரில் வளரும்பசுந்தீவனத்தை ஆடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

உங்களிடம் நிறைய இடம் இருக்கிறது. மேய்ச்சலுக்காகஆடுகளை வெளியே அனுப்பத் தேவையில்லை என்றால், ஆறு ஏக்கரை முதலில் தனியாக ஒதுக்கிவிடுங்கள். ஆட்டுக்குத் தேவையான பசுந்தீவனத்தை இந்த ஆறு ஏக்கரில்வளர்த்து, சாப்பிடத் தாருங்கள். நீங்கள் ஆடு வளர்க்கும்இடத்தைச் சுற்றி மேய்ச்சல் நிலம் இல்லை என்றால் தனியாகஇடம் ஒதுக்கி, பசுந்தீவனம் வளர்த்து, ஆட்டைப் பராமரிப்பதுதவிர வேறு வழியில்லை.

கொட்டில் முறையில் வளர்க்கும் போது ஆடுகளுக்கு அடிக்கடிநோய் வர வாய்ப்புண்டு. மேய்ச்சல் முறையில் வளர்த்தால்ஆடுகள் நிறைய அலைய வேண்டியிருக்கும். இதனால்ஆட்டின் உடல் எடை குறையும். இரண்டையும் சம அளவில்கலந்து வளர்க்கப்படும் ஆடுகள், நல்ல உடல் எடையோடுஆரோக்கியமாக இருக்கும்.

நம்மூரில் நிறைய வகை ஆடுகள் உண்டு. நாட்டு ஆடுகள்வளர்ப்பதற்குச் சிறந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள் செங்கனி, பால்கனி அருமையான ஆடு வகைகள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியாடும் நல்லஇறைச்சி தரக்கூடியவை.

ஆடுகளை வளர்க்க நிலங்கள் தயார் என்றால், சிலவிஷயங்களை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது. முதலில் ஆடுகளை சந்தையில் வாங்குவதைவிட, பண்ணைக்கு போய் வாங்குவது நல்லது. இரண்டாவது, உங்களுக்கான பசுந்தீவனத்தை நீங்களே வளர்த்தால்தான்செலவு குறையும். கலப்பினத் தீவனத்தை ஆடுகளுக்குநிறைய தந்தால், நமக்குத்தான் செலவு அதிகமாகும்.

தொழில் ரீதியில் ஆடு வளர்க்க விரும்புகிறவர்கள், குட்டிஆடுகளை வாங்காமல், ஒன்றரை வயதுள்ள இரண்டுபல்லுள்ள ஆடுகளாகப் பார்த்து வாங்க வேண்டும். அந்த மாதிரிஆடுகள்தான் அடுத்த ஆறு மாதத்தில் குட்டி போடும். பதினைந்து மாதங்களுக்குப் பிறகு நல்ல உடல் எடையோடுஇருக்கும். விற்றாலும் நல்ல விலைக்குப் போகும்.

ஒரு ஆட்டின் விலை ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம்ரூபாய் வரை விற்கிறார்கள். எந்த இனத்து ஆடுகளைவாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து ஆட்டின் விலை மாறும்” – அடிப்படையான விஷயங்களை சொல்லிக் கொண்டேபோகிறார் தாமோதரன்.

ஓரளவுக்கு வருவாய் தரக்கூடிய வகையில் எல்லோரும் ஆடுவளர்க்கிற மாதிரி ஒரு புதிய முறையை பல கிராமங்களில்அறிமுகப்படுத்தி இருக்கிறார் தாமோதரன். இரண்டு ஏக்கர்நிலமும் மூன்று பேர் வேலை பார்க்க்கூடிய ஒருகுடும்பத்துக்கு அல்லது ஒரு குழுவிற்கு 25 அல்லது 50 ஆடுகளைக் கொடுக்கிறார். இதற்காக அவர்கள் ஒரு நயாபைசாகூட கொடுக்க வேண்டியதில்லை. இந்த ஆடுகளைஆரோக்கியமாகப் பராமரித்து, வளர்க்க வேண்டிய வேலைஅவர்களுடையது. ஒரு ஆடு, இரண்டு ஆண்டுகளுக்குள்சராசரியாக மூன்று குட்டிகளை ஈணும். ஐம்பது ஆடுகளைநீங்கள் வளர்க்கிறீர்கள் என்றால் ஏறக்குறைய 150 குட்டிகள்உங்களுக்குக் கிடைக்கும். இதில் 75 குட்டிகளை நீங்களேவைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள குட்டிகளைதாமோதரனுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான்அக்ரிமெண்ட்.

ஆடு வளர்க்கும் போது ஒன்றிரண்டு ஆடுகள் இறந்தாலும்அதற்காக அவர்கள் நஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடமிருந்து ஒரு சான்றிதழ்வாங்கிக் கொடுத்தாலே போதும். அதற்கான இன்ஷுரன்ஸைவாங்கிவிடுகிறார் தாமோதரன்.

“பாரம்பரியமான இந்த முறை நல்ல மேய்ச்சல் நிலம் உள்ளஅனைத்துப் பகுதிகளிலும் அதிவேகமாகப் பரவி வருகிறது. நூறு ஆடுகளை நாம் வளர்க்கும் பட்சத்தில் இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை 2.25 லட்ச ரூபாய் வருமானம்கிடைக்கும். நாங்களே பதிமூன்றுக்கும் மேற்பட்டகிராமங்களில் ஆடுகளைக் கொடுத்து வளர்த்து வருகிறோம்” என்கிறார் தாமோதரன்.

இன்னும் சில ஆண்டுகளில் கோழி வளர்ப்பு போல, ஆடுவளர்ப்பும் தனிப் பெருந் தொழிலாக வளர்ந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.

தாமேதரனுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் 094437-37094 என்கிற எண்ணுடன் தொலைபேசலாம்.

கொசுறுத் தகவல் : மகாராஷ்டிராவில் SELF என்கிற ஒருதொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் தாமோதரன்என்கிற மராத்திக்காரர். கிராமங்களில் ஆடு வளர்ப்பதைஊக்குவிப்பதுதான் இவரது அமைப்பின் வேலை. இந்தஅமைப்பின் ஒரு ஆண்டு டேர்ன் – ஓவர் எவ்வளவு தெரியுமா? 650 கோடி ரூபாய்! 094437-37094

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் “ஆடு வளர்ப்பு” ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.

பசுந்தீவன உற்பத்தி:

கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.

விற்பனை வழிமுறைகள்:

நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை  விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.

மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
  • ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
  • பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
  • உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
  • நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.

     

 

மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம். தொடர்புக்கு – ஐ. நாசர், கோயம்புத்தூர். 99943 82106.

Info by: Engr.Sulthan




செம்மறி ஆடு

 

மேலதிக தகவல்கள்:




சுய தொழில்கள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..