Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
Posted By:Hajas On 3/31/2013

is late term abortion legal in the us

is abortion legal in the us

 

ஸுபுஹ் தொழுகையும் நாமும் ??? 


அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)

ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்..பாருங்கள்!

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்: “படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)

அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும்வரை தூங்குபவர்கள் அல்லாஹ்வின்அருளையும், பாதுகாப்பையும் அலட்சியம் செய்யும் மக்கள் அல்லவா..? அல்லாஹ்வின் பாதுகாப்பையே அலட்சியம் செய்பவர்களுக்கு, ஷைத்-தான் அல்லாமல் வேறு யார்தான் பாதுகாவலனாக இருக்க முடியும்?

ஆனால், மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள்.. உலகம் எப்படி மாறினாலும் சரி, மக்கள் அனைவரும் எப்படிப் போனாலும் சரி, தொலைக்காட்சியில் எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினாலும் சரி… மனதில் ஸுபுஹ் தொழுகையை நினைத்த வண்ணமே படுக்கைக்குச் செல்வார்கள். அவ்வண்ணமே அதிகாலையில் எழுவார்கள். அவர்கள்தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்.

அதிகாலைத் தொழுகையை விட்டதால் நாம் கண்ட நன்மை என்ன? இத்தொழுகையைவிட்டதால் வங்கியில் நாம் சேமித்த பணம் எவ்வளவு..? இத்தொழுகையை விட்டதால்நாம் அடைந்த பதவி உயர்வுகள் எத்தனை? இதனை அலட்சியம் செய்ததால் வியாபாரத்தில் நாம் கண்ட லாபம் என்ன? மனதில் நாம் அடைந்த நிம்மதி எவ்வளவு?எண்ணிப்பார்த்தால் எதுவும் இல்லை. அத்தனையும் சுழியம்!

ஒருவர் அல்லர், இருவர் அல்லர்.. ஒட்டு மொத்த ஒரு சமூகமே அல்லாஹ் கடமையாக்கிய கட்டாயத் தொழுகைகளில் ஒன்றை அலட்சியம் செய்கின்றது என்றால் அல்லாஹ்வின் வெற்றி எப்படிக் கிடைக்கும் நமக்கு?

நாம் இங்கே பேசுவது இரவுத் தொழுகையைக் குறித்தோ, தஹஜ்ஜுத் தொழுகையைக்குறித்தோ, உபரியான வணக்கங்களைக் குறித்தோ அல்ல. மாறாக அல்லாஹ் நம்மீதுவிதியாக்கிய அதிகாலைத் தொழுகையைக் குறித்து; ஃபர்ள் தொழுகையைக் குறித்து என்பதை எண்ணும்போது மனதில் வேதனை அலைகள் எழுகின்றன.

அண்மையில் இணையதளத்தில் ஒரு பள்ளிவாசல் முஅத்தினின் (பாங்கு சொல்பவர்)வேதனையைப் படிக்க முடிந்தது. அறிஞர்களிடம் அவர் கேட்ட மார்க்க விளக்கத்தைஅதில் வெளியிட்டிருந்தார்கள். அவருடைய கேள்வி இதுதான்: “சிலசமயம் ஸுப்ஹானல்லாஹ்! சமூகத்தின் நிலையைப் பாருங்கள். நல்ல வேளை. இது இந்தியாவில் அல்ல. வேறு எங்கிருந்தோ கேட்கப்பட்ட கேள்வி. ஆனாலும், நம் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் கேள்வி இல்லையா இது? ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்வி இல்லையா இநான்அதிகாலைத் தொழுகைக்காக பாங்கு சொல்கின்றேன். தொழுகைக்கு யாரும் வருவதில்லை. நான் காத்திருப்பேன். சூரியன் உதித்து விடுமோ என்ற பயம் வருகின்றது. எனவே இந்தப் பள்ளிவாசலை மூடிவிட்டு வேறு பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் நான் ஸுபுஹ் தொழுகையை நிறைவேற்றலாமா?”

ஸுப்ஹானல்லாஹ்! சமூகத்தின் நிலையைப் பாருங்கள். நல்ல வேளை. இதுஇந்தியாவில் அல்ல. வேறு எங்கிருந்தோ கேட்கப்பட்ட கேள்வி. ஆனாலும், நம்ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் கேள்வி இல்லையா இது? ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்து கேட்கப்பட்ட கேள்வி இல்லையா இது?

 

- Sahid Abdul Fatah 

 

இது சமரசத்தில் வெளியான கட்டுரை.கட்டுரையின் ஆசிரியர் மௌலவி நூஹ் மஹ்லரி.

சமுதாய ஒற்றுமை என்ற வலைத்தளத்திலும் இடம் பெற்றுள்ளது.




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..