Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரை
Posted By:Hajas On 3/16/2013

paroxetine vidal

paroxetine forum

உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரை

 
ஒரு காலாவதியான முறை, எப்போதோ பெரும் போராட்டத்தைச் சந்தித்து சரித்திரத்தில் மாறா வடுவாக எழுத்துக்களுள் புதைந்திருந்து சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் கொதித்தொழும் பல கதைகள் உலகில் நிகழ்ந்திருப்பது அனைவரும் அறிந்திருக்க, அந்நியர்கள் போட்டு கழட்டி எறிந்த நாற்றமடிக்கும் பழந்துணிக்கு இஸ்திரிப்போட்டு செண்டடித்து மாட்டிக்கோ மாட்டிக்கோ என கொஞ்சிக்குழையும் அரசியல் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வராமல் மைக்கில் மொழியும் புதிய கழனிப்பானைச் சிந்தனையாளர்களின் பல அறிக்கைகள் நம்மை வாரிச்சுருட்டிக் கொள்ள இருக்கிறது மக்களே! 
 
சமீபத்தில் நான் பார்த்த ஒரு படத்தினோடு மான்டெக் அலுவாலியாவின் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தையும் அள்ளிக்கொட்டிக் குழைத்து புரிதலின் உணர்வுசம்பந்தப்பட்டப் பகுதி இதோ!
 
கொலம்பஸ் தங்கவேட்டையாடுவதற்காக முதன்முதலில் தென்னமரிக்காவிற்குள் புகுந்து சூதுவாது தெரியாதப் பூர்வகுடி இந்தியர்களை அடிமைகளாக்கி, தங்கத்தை வேட்டையாடும் அட்டூழியத்தை இசியார் போலாய்ன் 2000த்தில் நடந்த கொச்சபம்பா தண்ணீர் புரட்சியோடு கலந்து even the rain (மழையும்) என்ற திரைப்படத்தை இயக்கியிருப்பதில் முடிந்துபோன கதையானது இப்போ இந்தியாவில் வால் நுழைத்திருக்கும் முகத்தைக் காணலாம்.  கதையில், மிகக்குறைந்த செலவில் கொலம்பஸ் பற்றிப் படமெடுக்க கோஸ்டாவும் (தயாரிப்பாளர்) செபஸ்டியனினும் (இயக்குனர்) தென்னமெரிக்கவிலுள்ள கொச்சபம்பா எனும் ஊர் ஏற்றதாக தேர்ந்தெடுக்கக் காரணம் அங்கு வாழும் பூர்வகுடி இந்தியர்கள் இரண்டு ரூபாய்க்கு கூலிக்கு நாள் முழுக்க கடுமையாக உழைப்பார்கள் என்பதுதான். 
 
படவேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் டேனியல் எனும் நடிகனின் தலைமையில் தண்ணீர் விநியோகத்தைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம் தொடங்குகிறது. எங்கே தமது படவேலைகள் தடைபட்டுப்போய்விடுமோ என அஞ்சிய துணை இயக்குநரும் அவரது நண்பரான தயாரிப்பாளரும் பல வழிகளில் டேனியலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். அவன் போராட்டத்தின் உணர்வில் தொய்ந்தவனாக இருக்கிறான்.அவனது போராட்டத் தாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.
 
 அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாடுகளோ மழை நீரைக்கூட அவர்கள் பிடிக்கக்கூடாது என்றளவிற்கு உச்சத்தை அடைகிறது அவர்களின் கபளீகரப்போக்கு. படத்தில் நடித்தப் பொரும்பாலான இதர நடிகர்களும் டேனியலும் போராட்டக் களத்தில் மும்முரமாக ஈடுபட்டதால், அவர்களுக்கும் படத்திற்கும் பெருத்தச் சேதம் ஏற்பட்டுவிடுகிறது. பல சிக்கலுகளுக்குப்பின் படமும் முடிவடைக்கிறது, இறுதிக் காட்சியில் தயாரிப்பாளரிடம் தண்ணீர் சீசா ஒன்றை அந்த நடிகன் பரிசாகக் கொடுப்பதோடு, முடிவடைகிறது. 
 
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், மக்கள் தமக்குத் தேவையான தண்ணீரைப் பெற தமது மலைக்கு ஏழு கிலோமீட்டருக்கு கால்வாய் தோண்டி குழாய் வைத்து மலையிலிருந்து தண்ணீர் கொண்டுவர, தனியார் நிறுவனமோ அரசு உதவியோடு போலீஸ் பாதுகாப்போடு கொச்சபம்பா மக்களின் பூட்டை உடைத்தெரிந்துவிட்டு தாம் கொண்டு வந்த பூட்டை மாற்றிவிடுகிறார்கள், அவர்களது உழைப்பிற்கு தாம் கூலிபெற. 
 
அவர்களது கிணற்றிலிருந்து அவர்கள் போட்ட பைப்பிலிருந்து வரும் தண்ணீரை திறந்துவிட்டு பணம் பறிப்பதை, “இரண்டு ரூபாய் சம்பாதியத்திற்கு பாடாதபாடு படுகிற இந்த மக்கள் எப்படி தண்ணீருக்காக 300 ரூபாய் கொடுக்க முடியும்” என்று தயாரிப்பாளர் அரசின் உயர்பதவியில் இருப்பரிடம் கேட்கும் போது மழுப்பிவிடுகிறார், அவர். அந்த மழுப்பல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர்களுக்கு நிம்மதியைக்  கொடுத்திருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ, மான்டெக் சிங் அலுவாலியா 12வது ஐந்தாண்டுத் திட்டத்தினில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து கருத்துக்களும் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்திற்கினங்க, அவற்றின் கம்பெனிகள் செழித்தோங்க வேண்டியும், இந்திய மக்களின் முதுகில் எவ்வளவு காலம் ஏறி சவாரி செய்யலாம் என்பதற்கேற்றவாறும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 
பொய்யை விதைக்கத் தெரிந்ததினால் மக்களை இலவசங்களில் திணறடிக்கும் ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் தூண்டில் போடும் சூட்சுமத்தை மோப்பம் பிடித்துவிட்ட தனியாரோ அந்நியரோ சுலபமாக உள்ளே நுழைந்து இந்திய ஆட்டக்காரர்களின் நாக்கில் கோலாவைத் தடவி,  தமது பொருளுக்கு அவர்களை விளம்பரக் கோமாளிகளாக்கி, அவர்களைக் காணும் கோடாணுகோடி இந்தியப் பிரஜைகளின் அறைக்குள் நுழைந்து கண்களில் கலர் கண்ணாடிகளைப் பொறுத்தி சார்புக்குருடர்களாக்கி கோலாவின் நுறைக்குள் மூழ்கடித்துக் கொன்றுகொண்டிருக்கும் சமயத்தில், இடம் கேட்டு நுழைந்தால் வரலாறு ஞாபகத்திற்கு வந்துவிடும் என்று அஞ்சி பங்குதாரர்களாக அவதாரம் எடுக்கிறார்கள். தவிட்டை ஊதி எடுத்துக்கொள்ளச் சொல்லும் ஒப்பந்தங்கள் வழியாக நிர்மூலமாக்கலாம் என அந்நிய முதலைகள் கோட்டுசூட்டுப் போட்டுக்கொண்டு நெருப்பில் தகிக்கும் நம் பகுதிக்குள் நுழைந்துவிட்டார்கள் ஏ.சி கேபின்களைக் கூடவேக் கொண்டுவந்து நட்டு வைத்துக்கொண்டு.
 
ஒவ்வொரு நரியாக கேபினுக்குள் நுழைகிறது. நம் எஜமானர்கள் பிச்சைக்காரர்களை கோட்டுச் சூட்டுப் போட்டிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், நமக்கு நாகரீகம் கற்றுத் தருகிறார்கள் என்ற மயக்கத்தில் கலர் சாராயத்தில் குடல் எறிந்து வாய் குழறி அவர்களுக்காக ஆள ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். 
 
ஐந்தைந்து ஆண்டுகளாக திட்டத்தை நிறைவேற்றுவதாகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில், காப்பீட்டு நிறுவனங்களை காவு கொடுக்கிறார்கள். அதிலே நோய்ப்பட்டவன் மருத்துவமனையிலிருந்து கதறுகிறான், “எங்கே என் பணம், எங்கே..எங்கே” என்று. காப்பீட்டு நிறுவனத்துக்கோ அதனுடைய நாட்டிலேயே அட்ரஸ் இருக்காது. அதை நம்பிப் போட்டப் பணம்? இவன் பிணமாகும்வரை வராது. அதை நம்பி இவர்கள் அந்த அந்நிய காப்பீட்டு நிறுவனத்தில் பணம் போடவில்லை. உடனே நமது நரிகளுக்குச் சுரணை வந்துவிடுகிறது. 
 
“அதிவேக வளர்ச்சி மற்றும் வருவாய் பெருக்கம் ஆகியவற்றின் மூலமாகத்தான் சமூக மற்றும் பொருளாதார ஆதரவு திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.” என மான்டெக்  கருத்தைக் கவனித்தால், வெளிநாட்டு வங்கிகளுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். அவர்கள் நமக்குக்கொடுக்கும் கடன்களுக்கு அதிக வட்டி பெற்றாலும், நாம் போடும் சேமிப்புக் கணக்கிற்கு குறைந்த வட்டி கொடுத்தாலும், அவர்களை நம்புவோம் எனும் மான்டெக்கின் திட்டத்தில் நாம் காவு வாங்கப்படும் எதிர்காலக் காட்சி தென்படுகிறது.
 
மேலும், “வேளாண்துறை வளர்ச்சியின் பெரும்பகுதி உணவு தாணிய உற்பத்தியிலிருந்து கிடைப்பதில்லை. மாறாக தோட்டக்கலை, பால் மற்றும் மீன்தொழில் ஆகியவற்றின் மூலம்தான் வேளாண் துறையின் வளர்ச்சி எட்டப்படுகிறது. பால், மீன் தொழில் போன்றவை எளிதில் அழுகக்கூடியவை ஆகும். எனவே இந்தப் பொருட்களை அவை உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து நுகர்வோருக்கு எவ்வளவு விரைவாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதற்கு தனியார் துறையின் தீவிர பங்களிப்பு தேவை. இத்தகைய பங்களிப்பை ஏற்படுத்துவதற்காக, மாறில அரசுகள் வேளாண் உற்பத்திப் பொருள் சந்தைக் குழு விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகலும். இந்த திருத்தங்களை செய்வதற்கு பெரும் தடையாக இரப்பது, சந்தைகளைக் கட்டுப்படுத்தும் சில சக்திகள் தான். கிராமப்புரங்களில் சாலைகளை ஏற்படுத்துவதன் மூலம் தோட்டத்தில் பறிக்கப்படும் காய்கறிகளை நிறுவனங்களே வந்து வாங்கிச் செல்லும். இதற்கு பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.” எனக் கட்டுரை எழுதும் மான்டெக், “சிறுவிவசாயிகள் தமது நிலங்கள் முழுமையான பயனை அடையுவிதத்தில் விவசாயம் செய்யத்திறானியற்றவர்களாக இருக்கிறார்கள்.
 
 சிறுசிறு நிலங்களை வைத்துக்கொண்டு விவசாயம் செய்வதினால் பெரும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. அதனால் அந்நிய முதலீட்டார்களிடம் குறு நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் கொடுத்துவிட்டு அவர்களிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டால் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வழியிருக்கிறது; அதன்படி இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக தான் நிர்னயிக்கும் இலக்கை அடையும் எனும் அவர் கருத்தின் படி நிலம் அந்நியர்களுக்கு விற்கப்படாமல் ஓசியிலேயே விடப்படுவதாகிறது. அவர்கள் நம் நிலத்தில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் வெற்றிபெரும் முயற்சிகளை தமது நாட்டிற்குக் கொண்டு போய் லாபகரமாக விவசாயம் செய்வார்கள். நாம் ஆராய்ச்சிக்கூட எலியாவோம். நிலத்தையும் கொடுத்துவிட்டு அவனுக்கு வேலைக்காரனாகவும் அடிமைப்பட்டு, நிலத்தையும் பாழ்படுத்திக்கொண்டு கடைசியில் இன்னொரு சோமாலியாவை இந்திய மண்ணில் உருவாக இதுவெல்லாம் காரணிகளாம்” என சூசுகமாகக் தெரிவிக்கும் (அ)அறிவிக்கிறார். கவனம். “Even the rain” காட்சிகளை நேரில் காணப்போகும் நேரம் வெகுதூரத்தில் இல்லை. 
 



Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..