Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு
Posted By:peer On 2/25/2013

planned parenthood sioux falls sd cost of abortion

planned parenthood sioux falls sd cost of abortion

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

Sugar Cane Farmer

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்

கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:

ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (குறைந்தது ரூ 3000 ஒவ்வொரு முறையும்)

புல்/களை எடுத்தல்: 2 முறை (குறைந்தது ரூ 4000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500

ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375

லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

 Sugar Cane Farmer

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..