Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
கம்ஸ்......
Posted By:peer On 1/13/2013

estrace

estrace open

இந்த புகைப்படம் எதனை நினைவூட்டுகிறது? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.

 

 

 

வலையுகம் ஹைதர் அலிபழைய பர்மா வீடு திண்ணை
 
 
வலையுகம் ஹைதர் அலிஇன்றைய தலைமுறைக்கு திண்ணை என்றால் என்னவேன்று தெரியாமல் போய் விட்டது
 
 
Hameed Hamshaஎனக்கு அடுமப்பா ஓதுர பள்ளிக்கூடம் நினைவு வருது ,காலையிலும் ,சாயங்காலமும் ஓதுர பள்ளிக்கூடம் போகனும்,போக கொஞ்சம் நேரமானா கருக்குமட்டை அடி விழும் ,அப்படி தினமும் அடி வாங்குரது அசனார்பாய் மகன் அப்துல்காதர் ,நான் லேட் டா போனா படுக்காலி பய வந்துட்டான் ,நாசுவ பய ,உன்னை எங்க மச்சி டீ கடைக்கு கூடிட்டே கெடுத்து வச்சிருக்க என எங்க கண்ணாவை பேசுவார் ,பெருநாள் வந்தா கம்சு ஒத போவோம் சில வீடுகள்ள 2 பைசா,3பைசா தருவாங்க ,கலை தீபம் இதோ பாராய் ...மறை குர்ஹான் வழி வாராய் ,ம்ம்ம் நினைவுகள் சுகமானது.......
 
 
Mohamed Matharகள்ளம் கபடம் இல்லாத பிஞ்சு உள்ளங்கள் .கவலை என்றால் என்ன என்று தெரியாத இளமை பருவம் .இந்த வழியைத்தான் நாமும் கடந்து வந்தோம் என்று நினைக்கும் போது வார்த்தைகள் இல்லை எழுதுவதெற்கு .வாழ்க


Musthan Jawaharஓதுற பள்ளிகூடத்துக்கு போகாமலேயே கம்சுக்கு லீடரா இருந்தவன் .சாதலி அப்பா ஒதிகொடுப்பங்க நா வயசனவன்ல எல்லூரும் கேலி பண்ணுவாங்க ஆன்னாலும் விட பிடியாஅவங்க கூடவே இருந்து விடுவேன் இரண்டு மூணு கம்சுக்குலீடர இருந்து வசூல் செய்து அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டியது
அது ஒரு கனா காலம் .ஏங்கத்தான் முடியும் இப்பவும் கம்சுக்கு கூடிகிட்டா போவ முடியும்
 
 
 
Haja Sheik Misbaahiகம்ஸை முடிக்கும் போது ஒரு பாத்திஹா ஒதுவாங்க அதற்கு பெயர் என்ன ?
 
 
 
Mohammed Meera Sahib Sahibகட்டளைத்தெரு பட்டாணி லெப்பை கம்ஸூல இப்படி பாத்திஹா ஓதுரத்துக்குனே ஒருத்தன் இருந்தான். என் நண்பண் அப்துல் அஸீஸ். இன்றைக்கு மதுரையில் தாடியும் தொப்பியுமாக நூல் கடை நடத்துகிறான். 4 அல்லது 5நாட்கள் கம்ஸூ முடிந்ததும் அவனுக்கு மாத்திரம் தனியாக 'கைமடக்கு' கிடைக்கும் லெப்பையிடம் இருந்து. பெருநாளைக்கு வாடகை சைக்கிள் எடுக்கவும் - சந்திரா ஐஸ் வாங்கித் திங்கவும் பயன்படுத்துவான். எங்களுக்கும் ஒரு 'சேமியா' ஐஸ் கிடைக்கும்.
 
 
 
Musthan Jawaharஓதுவோம் வாருங்கள்
லாயிலாக இல்லஹா முஹம்துற சூருல்லாஹ்
லாயிலாக இல்லஹா முஹம்துற சூருல்லாஹ்
அடுத்த வரி நாபகம் இல்லை

கம்சு பாடெல்லாம் எழுதி கொடுத்து வழி நடத்தினேன்
இப்போ மறந்து போயிட்டு
 
 
 
M.s. Sheik Mohamedஹம்சு அன்று எல்லா பிள்ளைகளும் புதுசா துணி அணிந்து வருவார்கள் ஒவ்வொரு வீட்டிருக்கு போகும் போதும் திண்ணையில் அமர்ந்து அடுத்து எந்த வீட்டிற்கு போகனும் என்று ஆலோசித்துக்கொண்டு இருக்கும் காட்சி...
 
 
 
Thameemul AnsariIdhai Paarthaal.....Kaalai,Maalai Velaigalil Quran Odha Sendradhu Nyabagam Varugiradhu...
 
 
Rabiathul Basariyaஸ்ல்லல்லாஹு அலா முகம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ,,ஸ்ல்லல்லாஹு அலா முகம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம்,சல்லல்லாஹுஅலா முஹம்மது யாரப்பி சல்லி அலைஹி வசல்லம்
 
 
(From Facebook)





Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..