Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
ABT TRAVELS - இன் அராஜகம்!
Posted By:peer On 5/8/2012

bentelan effetti collaterali

bentelan effetti collaterali link

 

நமது நாட்டில் பணம் கொடுத்து சேவையை எதிர்பார்க்கும் நுகர்வோருக்கு என்ன மதிப்பு என்பதையும், வாடிக்கையாளர்  சேவையின்  தரத்தையும்  மீண்டும் ஒருமுறை  பறைசாற்றும் அனுபவத்தை சமீபத்தில் பெற்றேன்! அரசாங்க சேவைகளின் தரம் நாம் அனைவருமே அறிந்ததுதான்... ஆனால் தனியார் துறைகளும் அதற்க்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல என்றும் சேவை வேண்டாம். குறைந்தபட்ச  மனிதாபிமானம்கூட  இல்லை என்று  சமீபத்தில் தெரிந்துகொண்டேன்! நான் மற்றும் எனது நண்பன் அவனது மனைவி என மூன்றுபேர் சிங்கையில் இருந்து சென்னை சென்று அங்கு இரண்டுநாள் இருந்துவிட்டு அங்கிருந்து காரைக்குடி செல்வதாக பிளான் செய்தோம்.. அதனால் சிங்கையில் இருந்தபடியே முன்பதிவு செய்யலாம் என்று ட்ரெயினில் முயற்சி செய்தோம்.. ஆனால் கிடைக்கவில்லை அதனால் பேருந்தில் முன்பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து நண்பர்கள் ஆலோசனைப்படி ABT TRAVELS இல் முன்பதிவு செய்தோம்.. ஆனால் அது தவறான தேர்வு என்று பிறகுதான் தெரிந்தது!

 

 

ஆறாம் தேதி சிங்கையில் இருந்து சென்று சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு எட்டாம் தேதி இரவு அனைவருமே சொந்த ஊருக்கு செல்வதாக திட்டம், அதன்படி எட்டாம் தேதி இரவு பேருந்துக்கு முன்பதிவு செய்தோம்.. இவர்களது சேவை கிண்டி மற்றும் கோயம்பேடு இரண்டில் மட்டுமே பயணிகள் ஏறலாம்.. சென்னையில் வேறு எங்கும் ஏறமுடியாது என்றார்கள்.. சரி பரவாயில்லை கோயம்பேடு சென்று ஏறிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டோம்.. நண்பர் இருப்பது ராயபுரம்.. நான் இருப்பது பல்லாவரம்.. அன்று இரவு ஏழு மணிக்கெல்லாம் தொலைபேசியில் அழைத்து எங்கள் பயணத்தை உறுதி செய்து எந்த இடத்தில பேருந்து நிற்கும் என்பதை கேட்டோம், அவர்களும் பயணசீட்டில் குறிப்பிட்டதுபோல் கோயம்பேடில் உள்ள அலுவலக முகவரிக்கு வந்துவிடவும் என்றனர், எங்கள் ஒருவருக்கும் அங்கிருந்து பயணம் செய்து அனுபவமில்லை.. இருந்தாலும் வாடகைக்கு கார் அமர்த்திக்கொண்டு இரவு ஒன்பது மணிவாக்கில் அங்கு சென்று விட்டோம்!

 

கோயம்பேடு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.அந்த கூட்டத்திலும் பேருந்து நெரிசலிலும் கையில் சுமைகள் நண்பனின் கர்ப்பிணி மனைவி என நாங்கள் அவர்களின் அலுவலகத்தை கண்டுபிடிப்பதற்க்கே மிகவும் சிரமப்பட்டோம்! அப்போதுகூட நாங்கள் அவர்களோடு தொலைபேசியில் கேட்டுத்தான் அங்கு சென்றோம், அவர்களது அலுவலகம் மிகவும் உள்ளடங்கி இருந்தது.. அங்கு உள்ள வராண்டாவில் நின்று நேரத்தை கழித்துக்கொண்டிருந்தோம்..சுமார் 10 மணிக்கு அதன் அலுவலர் ஒருவர் வந்து பேருந்து உள்ளே வராது நீங்கள் அனைவரும்  (ஒரு ஹோட்டல் பெயரை குறிப்பிட்டு) அங்கு நடந்து சென்று ஏறிக்கொள்ளுங்கள் என்றார்.. காத்திருந்த அனைவருமே குறைந்தபட்ச எதிர்ப்புகூட இல்லாமல் பேருந்தை நோக்கி சென்றனர்.. அதன் தூரம் அலுவலகத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் இருக்கும்!! கையில் சுமைகளுடன் கர்ப்பிணி பெண்ணுடன் நாங்கள் எவ்வாறு நடப்பது?..அதனால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்! நாங்கள் அவர்களிடம் கேட்டது இவைகள்தான்...

 

  1. பேருந்து உள்ளே வராது என்றால் நாங்கள் தொலைபேசியில் பேசும்போதே அது நிற்கும் அந்த ஹோட்டல் பெயரை சொல்லி அங்கு செல்ல சொல்லியிருந்தால் நாங்களும் காரிலே அங்கு சென்றிப்போம்.. சுமைகளை தூக்கும் சிரமமும் அலைச்சலும் மிச்சமாயிருக்குமல்லவா?
  2. சரி.. அலுவலகத்தில் இருந்து ஒரு வாகனம் ஏற்பாடு செய்து குறைந்தபட்சம் சுமைகளையாவது பேருந்து வரை கொண்டு சேர்க்கும் ஏற்பாட்டினை செய்திருக்கலாம் அல்லவா?
  3. அலுவலகத்தில் இருந்து பேருந்து வரை செல்வதற்கு வழிகாட்டியாக ஒருவரை அனுப்பலாம் அல்லவா? எங்களைப்போன்ற இடத்திற்கு புதியவர்களுக்கு அது உதவியிருக்கும் அல்லவா?

 

இவையெல்லாம் செய்ய வில்லை என்றாலும் பரவாயில்லை.. நாங்கள் இதை கேட்டதாலேயே நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு ரவுடிகளைப்போல் மிரட்ட ஆரம்பித்து விட்டனர்! பேருந்து அங்குதான் நிற்கும் உங்களால் அங்கு செல்ல முடிந்தால் செல்லுங்கள் இல்லையென்றால் பேருந்து உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்காது.. நீ பணம் கொடுத்து பயண சீட்டு வாங்கியிருந்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று ஒரு பெண் பக்கத்தில் இருக்கிறார் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தனர்! (சென்னைவாசிகளுக்கு தெரியும்..அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்!) இந்த சேவைக்காகவா நாங்கள் அரசு பேருந்தில் 300 ரூபாய்க்கு கிடைக்கும் சேவையை அவர்களிடம் 550 ரூபாய்க்கு முன்பதிவு செய்தோம்? அனைத்து பேருந்து சேவைகளும் உள்ளே வரும்போது உங்களுக்கு மட்டும் என்ன என்று நாங்கள் கேட்டதற்கு அதன் ஊழியர் ஒருவர் சொன்ன பதில்.. " இந்த இடத்தில அலுவலகம் பேருக்கு மட்டும்தான்.. பேருந்து உள்ளே வருவதற்கு இன்னும் முறையான அனுமதி வாங்க வில்லை" என்கிறார்! இது உண்மையாக இருக்கும்  பட்சத்தில்  எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை இது? அனுமதி இல்லாமலே அலுவலகம் வைத்துக்கொண்டு பயணிகளையும் அங்கு வரச்செய்து அவர்களை அலைய வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

 

கர்ப்பிணி பெண்ணின் நிலையை மனதில்கொண்டு ஒரு அளவிற்குமேல் பிரச்சனையை வளர்க்காமல் அவர்கள் சொன்ன இடத்திற்கு சுமைகளையும் சுமந்து சென்று ஏறினோம்! ஆனால் பணமும் கொடுத்து அவர்களிடம் ஏச்சும் வாங்கியதை நினைத்து ஏற்பட்ட மனஉளைச்சல் இன்றும் உள்ளது! இது வரை எத்தனைபேர் எங்களைபோல் உள்ளனரோ? இன்றும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்! இதற்க்கு யாரிடம் முறையிடுவது? என்ன தீர்வு? இந்தியாவிலேயே இருந்தால் ஒருவேளை தீர்வை தேடியிருக்கலாம்..ஆனால் என்னைப்போல் எப்போதாவது வருபவர்கள் என்ன செய்ய முடியும்?.. சகிப்புத்தன்மைதான் ஒரே தீர்வா?

Source: http://www.vaigai.net/2011/05/apt-travels.html




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..