Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4)
Posted By:peer On 3/3/2012

vermox

vermox click

  - ராஜ்சிவா

 

மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும் பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!

  கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளா? பூச்சிகளா? மீன்களா?  இல்லை விமானங்களா? என்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன். அந்த  உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும், அந்த  அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான். இல்லையா?  

இதுவரை, 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு கொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.  

இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளி அறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள், எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்க முடியும்?  இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக் கூடியது,  விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கி யாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயா இனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான். அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு ‘பில்டப்‘பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம்.  

ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்' என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?  

ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன் உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன.  அவற்றை நீங்களே பாருங்கள்.......!  

 

 

இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...?  இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதா? அப்படி வேறு இனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும் எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.  

பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான்.  

எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.  

அப்படி என்னதான் இருந்தது?  

கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!  

இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!  

 

 

 

என்ன உங்களால்  நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவது போன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?

  சரி, இதுக்கே அசந்தால் எப்படி? இன்னும் இருக்கிறது பாருங்கள்.  

 

 

 

 

மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.  

இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!  

 

எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள். மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.  

இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அது இதுதான்.  

 

இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?  

சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம். இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து விடுகிறதல்லவா?  

 

இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள் என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?  

 

இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.  

 

விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.  

அடப் போங்கப்பு....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா?  

சரி, அப்போ, இதையும் பாருங்கள்........!  

 

இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம் இது. தலையே சுற்றுகிறதா..?  

இதற்கு மேலேயும் சொன்னால் தாங்கமுடியாமல் போகலாம். எனவே அடுத்த தொடரில் சந்திப்போம்.

 

அதை அடுத்த தொடரில் பார்க்கலாம்……!

<< முந்தைய தொடர் (3) அடுத்த தொடர் (5) >>

இந்தக் கட்டுரையின் மூலம்: உயிர்மை.காம். ஆசிரியர்: - ராஜ் சிவா

உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

 




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..