Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மட்யூக் (முஹம்மது) பிக்தால்
Posted By:sohailmamooty On 3/23/2010

பெயர்     மர்மட்யூக் பிக்தால்

பிறப்பு    1875

இறப்பு    1936

தந்தை    சர்லஸ் கிரேய்சன் பிக்தால்

தாயார்    மேரி-ஒ-பிரேயின்

சாதனை  அல்குர்ஆனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தது

 

 

பிக்தால் என்பவர் யார்? முன்னுரை

பிக்தால் அவர்களின் முழுப்பெயர் மர்மட்யூக் பிக்தால் இவர் கிருஸ்தவ தம்பதியினருக்கு பிறந்தவர். பிக்தால் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்லாமல் பத்திரிக்கை நிறுபராகவும், தலைமை ஆசிரியராகவும், அரசியல் தலைவராகவும், மார்க்க மேதையாகவும் இருந்தார்.

 

பிரிட்டீஷ் அரசாங்கத்தினால் இஸ்லாமியர்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகளை கண்ணெதிரே கண்டு மனம் உறுகி தன் நாட்டையும் கிருத்தவர்களையும் எதிர்த்து குரள் எழுப்பிய மாபெரும் எழுத்தாளன்.  மர்மட்யூக் பிக்தால் ஆக இருந்தவர் இவர் இறுதியாக அல்லாஹ்வின் கருணையினால் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது பிக்தால் ஆக மாறினார்.

 

வாழ்நாள் சாதனையாக இவர் செய்தது அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாகும். இவரைப் பற்றி இங்கு காண்போம்!

 

பிக்தால் அவர்களின் குடும்பம் 

பிக்தால் அவர்களின் குடும்பம் மிகவும் புகழ்பெற்ற இங்கிலாந்து மன்னரான வில்லியம் கான்குயிரர் என்பவரது பாதுகாவரின் பரம்பரையைச் சார்ந்தவர்கள் எனினும் அன்னாரது பெற்றோர் நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேலும் கிருஸ்தவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள். தந்தை சர்லஸ் கிரேய்சன் பிக்தால் அவர்களின் மரணம்  மர்மட்யூக் பிக்தாலின் 5ஆம் வயதில் நிகழ்ந்தது பின்னர் தனது ஏழை விதவைத்தாயுடன் இலண்டன் மாநகரத்தில் குடிபெயர்ந்தார்.

 

குழந்தை பிக்தாலும் நோய்களும் 

பிக்தால் குழந்தைப் பருவத்திலிருந்தே நுரையீல் நோயினால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்கு ஏற்ப 8 வயது சிறுவனாக இருந்தபோது மூலைக்காய்சல் நோயாலும் மிகவும் அவதிப்பட்டார். குழந்தைப் பருவத்தில் பிக்தால் அவாகள் மிகவும் கூச்ச சுவாபமுள்ள வராகவும் திகழ்ந்தார் அதே நேரம் நோய் நொடி சூழ்ந்த பாவப்பட்ட குழந்தையாகவும் இருந்தார்.

 

பிக்தால் அவர்களின் பள்ளிப்பருவம்

இவர் பிரான்ட்ஸ்பரி (Brondesbury) என்ற நகரில் இயங்கிவந்த ஹேரோ பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை துவக்கினார் அந்த படிப்பு பாதியில் நின்று போனது!  மேலும் ஹேரோ பள்ளிக்கூடத்த்தில் 1  வருடத்திலேயே (six terms) படிப்பை நிறுத்திக்கொண்டார். (இங்கிலாந்து நாட்டு கல்வி முறைப்படி SIX TERMS என்பது ஒரு வருடத்தில் உள்ள 12 மாதங்களை 6 பருவ காலங்களால் வகுத்து கல்வி போதிக்கும் முறையாகும், நாம் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என்கிறோம் அங்கு கால் ஆண்டுக்களுக்கு பதிலாக இரண்டு மாதங்கள் படிப்பு) 

 

பிக்தால் அவர்களின் மொழிப்பற்றும் சோதனையும் 

பலவீனமான நிலையில் பள்ளிப்படிப்பை தொடர இயலாத பிக்தால் தன் தாயுடன் ஐரோப்பிய நாடுகள் முழுவதற்கும் சுற்றுப்பணம் மேற்கொண்டு அங்கு பேசப்படும் மொழிகளை கவனித்து தனது கல்வி மற்றும் மொழித் திறமைகளை வளர்த்துக் கொண்டார். 

1894ஆம் ஆண்டு சுற்றுப்பயணங்களைகளை முடித்துக்கொண்டு LEVANT CONSULAR SERVICE என்ற தேர்வில் கவனம் செலுத்தி வந்தார். மொழியியலில் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிக்தால் மற்ற பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றார். இதனால் மனம் நொந்து போன இவர் கீழ்கண்ட மூன்று சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது அவையாவன:

 

1) மீண்டும் ஹேய்ரோ ஆரமப் பள்ளிக்குச் செல்வது

2) ஆக்ஸ்போர்ட்டில் படிப்பை தொடர்வது

3) தனது உறவினரான தாமஸ்-டவ்லிங் (Thomas Dowling) என்பவரது அழைப்பை ஏற்று  பாலஸ்தீனம் சென்று அங்குள்ள ஜெருசலம் பகுதியின் பாதிரியாரான ஆங்லிகன் பிஷப் என்பவருக்கு உறுதுணையாக இருப்பது!

 

மேற்கண்ட 3 சாவால்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பிக்தால் தள்ளப்பட்டர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார் அந்த முடிவுக்கு காரணம் இவைகளே

  •  பாலைவன மணல்,
  • ஒட்டகம்,
  • பாலைவனத்தில் காணப்படும் ஒருவகை பனை மரங்கள்

அரபு நாடுகளின் மீது கொண்ட பற்று இவரை ஜெருசலம் செல்ல தூண்டியது!

 

பிக்தால் அரபு மொழி தேர்ச்சிக்கு எடுத்துக்கொண்ட சிரமங்கள்

அயல்நாடுகளில் பணிபுரிய கிழக்கத்திய மொழிகள் பெரிதும் உதவும் என்று பிக்தால் கருதினார் அதற்காக காய்ரோ நகருக்குச் சென்றார் அங்கு சிலவாரங்கள் ஊர் முழுவதும் சுற்றித்திரிந்தார்.

காய்ரோ நகருக்கு செல்வதன் மூலம் அரபு மொழியை கற்பது மட்டுமல்லாமல் அங்கு வாழும் ஏழைமக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக்கொள்வதற்கும் விரும்பினார். பின்னர் ஜாஃப்பா, ரமள்ளா, காஜா, கேரமல், ஜுதியா போன்ற நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

 

முதல் முதலில் இஸ்லாத்தை அவர் புறக்கணித்தார் ஆனால் பல்வேறு அரபுலக நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து சரளமாக அரபு மொழியை பேச கற்றுக்கொண்டார் அதன் பின்னர் பிக்தால் ஜெருசேலம் நகருக்கு விஜயமானார். அங்குள்ள இடங்களும் சூழ்நிலைகளும் பிக்தால் அவர்களை பெரிதும் ஈர்த்தது இதற்கிடையில் தனது 20-ஆவது வயதில் பெற்ற தாயின் அழைப்பை ஏற்று தாயகம் திரும்பினார்.

 

பிக்தால் அவர்களின் மன மாற்றம்

இரண்டு வருடகால வெளிநாட்டு அனுபவம் பிக்தால் அவர்களை முற்றிலும் மாற்றிவிட்டது. இதற்கிடையில் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணமானார். பொருளாதாரத்தில் அவ்வளவாக வசதியில்லாத பிக்தால் தம்பதியினர் SUFFOLK என்ற பகுதியில் சிறிய குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தனர். அந்த சின்னஞ்சிறிய வீட்டிலிருந்து தனது எழுத்துப்பணியை தொடர்ந்தார். அங்கு தனது முதல் நூலை 1898ஆம் ஆண்டு வெளியிட்டார் பிறகு அதே ஆண்டு இவரது THE WORD OF AN ENGLISHMAN என்ற ஆங்கில படைப்பு வெளியானது.

 

பிக்தால் அவர்களின் எழுத்தாற்றலும் நாவல்களும்

  • முதல் நாவல் All Fools என்பதாகும் ஆனால் இதை 2 பதிப்பக ஆசிரியர்கள் பதிக்க முன்வரவில்லை இறுதியாக இந்த நாவல் 1900-ம் ஆண்டு வெளியானது

 

  • இரண்டாவது நாவல் Said the Fisherman 1902-ஆம் ஆண்டு வெளியானது (இந்த நாவலை James Barrie and H.G. Wells போன்ற தலைசிறந்த நாவலாசிரியர்கள் புகழ்துரைத்தார்கள்)

 

  • பிக்தால் தனது முதல் படைப்பான All Fools என்ற நாவலின் அனைத்து பிரதிகளையும் விலைக்கு வாங்கி அத்தனை பிரதிகளையும் தாமாகவே அழித்தார்.

 

  • பிறகு வருடத்திற்கு ஒரு நாவல் வெளியிடுவது என்று தீர்மானித்துக்கொண்டார். ENID /  BRENDLE  /  AND THE HOUSE OF ISLAM என்ற நாவல்கள் குறிப்பிடத்தக்கதாகும்.

எழுத்தாளரான பிக்தால் அவர்களை சிந்திக்க வைத்தவை!

1907ம் ஆண்டு பிக்தால் மீண்டும் கிழக்கு நாடுகளின் பக்கம் திரும்பினார் பின்னர் காய்ரோ நகத்திற்கு பிரிட்டீஷ் அதிகாரியாக சென்றடைந்தார்.

 

  • பிரிட்டீஷ் அரசின் ஆட்சி அதிகாரமும் அதனால் சிரியா மற்றும் மற்ற நாட்டு மக்களின் பொருளாதார பின்னடைவு ஆகியவை பிக்தால் அவர்களை சிந்திக்க தூண்டியது.

 

  • அதே சமயம் எகிப்து நாட்டில் நிகழ்ந்த கிராமவாசிகளின் விடுதலை புரட்சியை காரணம் காட்டி பிரிட்டீஷ் அதிகாரிகள் எகிப்து நாட்டு 4 கிராமவாசிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியது.

 

  • இதே காலகட்டத்தில் இந்திய நாட்டினரை பிரிட்டீஷ் அரசாங்கம் கொடுமைப்படுத்தியது.

 

மேற்கண்ட பிரிட்டீஷ் அரசாங்கத்தின் தவறான அணுகு முறைகளை நன்கு அறிந்து வைத்திருந்தார் அதன் காரணமாக எகிப்து நாட்டினருக்கு தன்னுடைய முழுஒத்துழைப்பை கொடுத்து வந்தார்.  இதற்கிடையில் தன்னுடைய நாட்டிற்கும் ஆட்டோமன் (Clark 2) பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது. இந்த சிக்கலான காலகட்டம் செய்தியாளரான பிக்தாலின் எழுத்துப்பணியில் மிக்க கவனம் செலுத்த தூண்டியது!

1912-ஆம் ஆண்டு மீண்டும் தன் தாய் நாடான இங்கிலாந்துக்கு திரும்பினார் அங்கிருந்த நியு ஏஜ் பத்திரிக்கையில் இணைந்தார் பின்னர் 1920-ல் இந்தியா திரும்பும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.

 

பிக்தால் அவர்கள் கிருத்தவர்களுக்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

கிருத்தவர்கள் துருக்கி நாட்டு முஸ்லிம்களை சாத்தான்கள் என்று கூறிக்கொண்டு அவர்களை  கொன்று குவித்தும் வந்தனர் இதை அறிந்த பிக்தால் மிகவும் வேதனைப்பட்டார்.

 

இதை மையமாக வைத்து THE BLACK CRUSADE என்ற கட்டுரையை மிக்க கவனத்துடன் எழுதி வந்தார் அதை நியு ஏஜ் பத்திரிக்கை துண்டுப் பிரச்சுரமாகவும் வெளியிடப்பட்டது. இந்த துண்டுப் பிரச்சுரங்களின் மூலமாக பிக்தால் கிருத்தவர்களை நோக்கி கடுமையாக எச்சரித்து வந்தார். அதே சமயம் துருக்கி நாட்டிற்கு நேரில் சென்று அங்கு இன்னல்படும் முஸ்லிம்களின் துயரங்களை பார்வையிட்டு அதை தாம் எழுதுகின்ற  கட்டுரையில் சரியாக இடம்பெறுகிறதா? என்று கண்காணித்து வந்தார். (இப்படிப்பட்ட குணம் நம்மில் யாருக்கேணும் உள்ளதா? அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலகட்டத்தில் தாம் எழுதுவது உண்மையா பொய்யா என்பதை நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ்!) 

 

பிக்தால் தன்னை முஸ்லிமாக பிரகடனப்படுத்துதல்

1917ஆம் வருடம் நவம்பர் 29ம் நாள் வெஸ்டு லண்டனின் நாட்டிங்-ஹில் என்ற பகுதியில் Muslim Literary Society-யினால் நடத்தப்பட்ட Islam and Progress என்ற சொற்பொழிவின் போது இவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவதாக பிரகடனப்படுத்தினார். (அல்ஹம்துலில்லாஹ்). இவர் இஸ்லாத்தை தழுவியவுடன்  க்வாஜா கமாலுத்தீன் அவர்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் மிஷன் என்ற அமைப்பில் தம்மை அர்பணித்துக்கொண்டார்.

 

பிக்தால் லண்டன் இமாம் ஆகவும் இருந்தார்

லண்டன் மாநகரில் இஸ்லாமியர்களுக்கு இமாமத் செய்யும் பணியிலும் தம்மை அர்பணித்துக்கொண்டார். இவர் எடிட்டராக இருந்தது மட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான ஆக்கங்களை வெளியிடுவதிலும் மிகச் சிறந்த மனிதராக திகழ்ந்தார்.  லண்டனை சேர்ந்த இஸ்லாமிய பியரோ என்ற அமைப்பிலும் இணைந்து மார்க்கப் பணியாற்றி வந்தார் இதன் மூலம் முஸ்லிம் அவுட்லுக் என்ற வாரப்பத்திரிக்கையும் வெளியானது!

 

பிக்தால் இந்தியாவில் திருக்குர்ஆனை மொழிபெயர்த்தது

1919 ஆம் ஆண்டு இஸ்லாமிக் இன்ஃபர்மேஷன் பியரோ என்ற அமைப்பில் இணைந்த பிக்கதால் 1920 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கு விஜயமானார். பின்னர் பாம்பே கிரானிக்கல்ஷ் என்ற பத்திரிக்கையின் எடிட்டராக பணியாற்றினார்.

 

பிக்தால் அவர்களின் சென்னை மாநகர் சொற்பொழிவுகள்

முஹம்மது பிக்தால் 8 சொற்பொழிவுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தியுள்ளார் அவைகளில் நம் சென்னை மாநகரத்தில்  நடைபெற்ற இஸ்லாம் பற்றிய மதராஸ் சொற்பொழிவு (MADRAS LECTURES ON ISLAM) குறிப்பிடத்தக்கது பிறகு இதை THE CULTURAL SIDE OF ISLAM என்ற பெயரில் கட்டுரையாக தொகுத்து வழங்கினார்.

 

பிக்தால் அவர்கள் அல்லாஹ்வின் மீது பற்று கொண்டவர்

1930-ஆம் ஆண்டு முஹம்மது பிக்தால் அருள்மறை குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து THE GLORIOUS KORAN என்ற பெயரில் வெளியிட்டார்.

 

குர்ஆன் என்ற அரபு வார்த்தை அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தை எனக் கருதி அந்த பெயருக்கு மொழி பெயர்ப்பை கொடுக்க விரும்பவில்லை மேலும் ஆங்கிலத்தில் அந்த பெயரையே KORAN என்று எழுதி வெளியிட்டார்! (அல்லாஹு அக்பர்)

 

அருள்மறை குர்ஆனை முழுமைப்படுத்தி வெளியிட்ட பின்னர் சகோதரர் முஹம்மது பிக்தால் அவர்கள் 1935ம் ஆண்டு தாயகம் திரும்பினார் அங்கேயே காலமானார். இவரது அருள்மறை குர்ஆன் மொழியாக்கம் துருக்கி, போர்த்துக்கீசு, உருது, டகேலோக் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள குறிப்பிடத்தக்கது.

 

முஹம்மது பிக்தால் மரணித்தவுடன் அவரது நல்லடக்கம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்து நாட்டில் உள்ள சர்ரே  (Surrey) மாகானத்தில் உள்ள புருக்வுட் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய கப்ருஸ்தானில் நடைபெற்றது.

 

இங்குதான் அருள்மறை குர்ஆனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்த இந்தியரான அப்துல்லாஹ் யுசுஃப் அலி நல்லடக்கம் செய்யப்பட்டார். அருள்மறை குர்ஆனுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பு கொடுத்த இரண்டு மாபெரும் அறிஞர்கள் ஒரே கப்ருஸ்தானில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நமக்காகவும், நமது சமுதாயத்தின் அவலங்களை கண்டு சொந்த நாட்டை எதிர்த்து குரள் கொடுத்த பிக்தால் அவர்கள் மண்ணரையில் சுவன நித்திரை பெற அல்லாஹ்விடம் நம்மால் ஆன துவா செய்வோமாக!

 Thanks:

en.wikipedia.org/wiki/Marmaduke_Pickthall

http://www.thetruecall.com/home/modules.php?name=News&file=article&sid=183

இம் மொழிபெயர்ப்பில் தவறு காணப்பட்டால் தெரிவிக்கவும் திருத்திக்கொள்வோம்!

அல்ஹம்துலில்லாஹ்!

http://islamicparadise.wordpress.com/                             m   ,
Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..