Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
முதல் ஆலயம் (காஃபா)
Posted By:sohailmamooty On 12/15/2009

mixing adderall and weed

mixing lexapro and weed news.noerskov.dk

முதல் ஆலயம் (காஃபா) 

 .(இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக (மக்கா)வில் இருப்பது தான்; பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர் வழியாகவும் இருக்கின்றது. அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இட(மான 'மகாம இப்றாஹீ')மும் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார்; (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்ல சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்த கைய மனிதர்கள் மீது, அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்; எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது, (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தா(ர் அனைவ)ரை விட்டும் தேவையற்றவன்.

அல்குர்ஆன் 3:96,97

இப்றாஹீம் ''என் இரட்சகனே! (மக்காவாகிய) இதை, அபயமளிக்கும் நகரமாக ஆக்கிவைப்பாயாக! இன்னும், இதில் வசிப்பவர்களுக்கு லி அவர்களில் எவர், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு பலவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் உணவளிப்பாயாக!'' என்று கூறியதை நினைவு கூறுவீராக!

அல்குர்ஆன் 2:126

இன்னும், இப்றாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அடித்தளங்களை உயர்த்தியபொழுது ''எங்களுடைய இரட்சகனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிலிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) செவியேற்கிறவன்; நன்கறிகின்றவன்'' (என்றும்),
''எங்கள் இரட்சகனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) கீழ்ப்படிகிற (முஸ்லிமான)வர்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ('ஹஜ்ஜு'க்குரிய) எங்களுடைய கிரியை (செய்ய வேண்டிய இடங்)களையும் எங்களுக்குக் காண்பிப்பாயாக! (எங்கள் பிழைகளை மன்னித்து) எங்களின் தவ்பாவையும் அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே தவ்பாக்களை மிக்க ஏற்பவன்; மிகக் கிருபையுடையவன்! (என்றும் பிரார்த்தித்தார்கள்)

அல்குர்ஆன் 2:127,128

தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெரிவுசெய்தோம்; நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார். அவருக்கு அவருடைய இரட்சகன், ''நீர் (எனக்குக்) கீழ்ப்படியும்!'' எனக் கூறிய போது அவர் ''அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன்'' எனக் கூறினார்.

அல்குர்ஆன் 2:130,131

நிச்சயமாக ''ஸஃபா'' மற்றும் ''மர்வா'' (எனும் இரு மலைகள்) அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்தாரோ அவர் மீது, அவ்விரண்டையும் சுற்றிவருவது (அவ்விரண்டிற்குமிடையில் ஸயீ செய்வது) குற்றமல்ல; இன்னும் எவர் தாமாக உபரியான நன்மையைச் செய்தால் நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், (அவர்களின் செயல்களை) நன்கறிகிறவன்.

அல்குர்ஆன் 2:158

 




Religious
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..