தமிழ்நாடு முதல்வரின் - ஒன்றிணைவோம் வா

Posted by S Peer Mohamed (peer) on 6/6/2021 4:27:13 PM

ஒன்றிணைவோம் வா
ஒன்றிணைவோம் வா
என எங்களைத்தான்
அழைக்கின்றீர்கள் என எண்ணியிருந்தோம் முத்துவேலின் பேரரே!

பொருளாதார வல்லுனர்களையும்,
படித்த மேதைகளையும்,
நல்ல அறிவாளிகளையும்,
ஆற்றல் மிகு அதிகாரிகளையும்,
அற்புதமான சிற்பிகளையும்,
ஒன்றிணைத்து,
வளமான தமிழ் நாட்டை உருவாக்கத்தான்
ஒன்றினைவோம் வா என
அனைவரையும் அழைத்தீர்கள் என
இப்போது தான் தெரிகிறது,

கலைஞரின் மகனார், செயல் முதல்வர் ஸ்டாலின் அவர்களே.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதல்வராக இருந்தபோது 1971ல் ‘திட்டக் குழு’ ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவர்: முதல்வர். துணை தலைவர்: சர்வ சுதந்திரமான செயல் படுபவர்.

இதை கடந்த 2020ல் ‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழு’வாக பெயர் மாற்றம் செய்து வெத்து நடை போட்டு கொண்டிருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இதன் துணை தலைவர் யார் யார்? 
கடைசியாக பினாமி அரசில் அந்த பதவியில் இருந்தவர்: பொன்னையன். பெயருக்கு ஏற்றவர். ஏதாவது ஒன்று செய்திருப்பாரா? ஆனால் தற்போது: பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் இதன் துணை தலைவர்.

மாநில வளர்ச்சி கொள்கை குழுவில்: Dr: சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள். புதுக் கல்லூரி விரிவுரையாளர் முதல், மண் புழு ஆராச்சியாளர் வரை, மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் முதல், MS சுவாமிநாதன் அறக்கட்டளை வரை, அனைவருக்கும் வழிகாட்டி. எனக்கும் தான்.

21 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களை பற்றி கேள்விப்பட்டு ECR சாலையில் உள்ள இவர்களின் வீட்டில் போய் சந்தித்தேன். அப்போதுதான் வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கிய களைப்பையும் பொருட்படுத்தாமல் எங்களை சந்தித்து பேசினார்கள். அவர்கள் எழுதிய மண் புழு பற்றிய புத்தகத்தையும் வழங்கினார்கள். மண் புழு உரம் சம்பந்தப்பட்ட அனைத்து என்னுடைய அனுபவத்துக்கும் இவர்களே முன்னோடி. தேனி மாவட்டத்தில் 2000 முதல் 2008 வரை மண் புழு உர உற்பத்தியில் முடிசூடா மன்னனாக திகழ்ந்ததற்கு இவர்களே காரணம்.


இது விஷயத்தில் என்னுடைய ஆசான். வழிகாட்டி நல்லாசிரியர். நல்ல நண்பர். இந்த கொடும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் இதன் உற்பத்தியை ஆரம்பிக்க, நல்ல பல அறிய ஆலோசனைகளை அளித்தவர்கள். அதிகம் பேச மாட்டார்கள்.


சமீபத்தில் தற்போதைய மண்புழு உயிர் உரம் தயாரிப்பு கூடத்தின் வடிவமைப்பையும், நவீன தொழில் நுட்பத்தின் துணையுடன் இதன் தயாரிப்பு முறைகளையும், வெகுவாக பாராட்டி, என்னை மேலும் ஊக்கப்படுத்திய உன்னதமான நண்பர். 

இவர்களை தேடி கண்டுபிடித்து,  இவர்களுக்கு இப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார் மக்களுக்கான முதல்வர்.
இவர்களுக்கு கிடைத்துள்ள இந்த பதவி, எனக்கு கிடைத்தது போல சந்தோஷமடைகிறேன்.

இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

மிகச்சரியான நபர்கள். மிகச்சரியான தேர்வு.

எங்கள் இறைவா! உன்னுடைய மாபெரும் கிருபையால், மிக இனிதாக, பரிபூரண நலமாக, மிகுந்த வளமாக,

எங்கள் தமிழ்நாட்டு மக்களும், அதை முன்னுதாரணமாக கொண்டு, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்,
அனைத்து தரப்பு மக்களும், ஒற்றுமையாக, உறவு முறையோடு, அவர் அவர்கள் விரும்பிய உணவை உட்கொண்டு,
அவரவர்களின் இறை வழிபாட்டுமுறைகளில் எந்தவித இடையூறும் இல்லாமல், பல்லாண்டு காலம் நீடூழி வாழ,
என்றும் நீ அருள் புரிவாயாக. மேலும் மேலும் கருணை மழை பொழிவானாக.

முக்கியமாக: தொலைகாட்சிகளில் தோன்றி, தொல்லை தரும், வலதுசாரி போலி பொருளாதார வல்லுனர்களின் தொல்லையில் இருந்தும் எங்களை நீ பாதுகாத்து அருள்வாயாக.

-அலிமாலிக் பீர் முஹம்மது










Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..