அலோ மைம்பாத்துமா !

Posted by S Peer Mohamed (peer) on 5/4/2019 4:49:27 PM

 

அஸ்ஸலாமு அழைக்கும் லா, சொவ்மா இருக்கியா … ஊட்ல எல்லாரும் சொவ்மாஇருக்காலா....̀̀̀


போன வாரம் இங்க துபாய்ல நம்ம ஈமான் சங்கத்துல ல இருந்து பாரம்பரிய வெளாட்டு போட்டி நு ஒன்னு வச்சிருந்துவோ பாத்துக்கோ… எல்லாம் மாஷா அல்லாஹ் ....ம்மாடி ஒருமாறி அழகுலா அம்புட்டும்.....

இங்க இருக்குற டிராபிக் ல எவ வூட்டுக்கும் போவ வாலா முடியுது.... வருஷத்துக்கு ஒரு மட்டமாவது இப்டி எல்லா தாய் புள்ளை லுவோலயும் ஒரே எடத்துல பாக்கமுடியுதே! அல்லா இந்த புள்ளைலுவொலுக்கு ஆயுச போட்டு வச்சி இந்த மாறி அடிக்கடி நடக்க வைக்கட்டும்...

காலையிலே 10 மணிக்கு ஆரம்பிச்சிச்சிவோ. மொதல்லே ஆம்பளைலுவோ பக்கம் பம்பரம் குச்சி கம்பு , கோலிக்காய் னு அதுவ வெளாண்டத பாத்தா ….. 
அந்த காலத்துல நம்மல திண்ணையிலே கூட இருக்க உடாமே , குச்சி கம்பையும் பம்பரத்தையும் வட்சி கிட்டு வாச நடைய குட்ட புழுதி ஆக்கிட்டு ஊட்டு ஓட்டையெல்லாம் ஒடச்சி நாசம் பன்னிகிட்டு கெடப்பானுவோன்னு அந்த கிழி கிழிப்போம் - அதையும் இப்போ இந்த புள்ளயலுவோ இந்த வயசுலையும் கடல் கடந்து சம்பாதிக்க வந்தப்பறம், இப்பவும் இங்கே ஆர்வமா வெளெயாடறதே பாக்க ஒரு மாறி வெவசாரமாதான் வந்திச்சு என்ன செய்ய … அவ்லோ ஆர்வமா பழைய நாட்களே திரும்பே கெடைச்சதாட்டு அவ்லோ சந்தோசமா வெலையாண்டிச்சிவோ

இப்ப ஊர்லவுள்ள பயலுவொலுக்கு கூட தெருல வெளையாட கொடுப்பின இல்லாம போச்சு, பம்பரம் குத்த தெருல மண்ணும் இல்ல வெளில வெளயாட வர அதுவொலுக்கு தோனுறதும் இல்ல. ஆவாத ஒடுக்கத்து டி வி யும் கையில அந்த போனையும் நோண்டிக்கிட்டு இருக்கத்தான் நேரம் அதுவொளுக்கு.

அடுத்தாக்களே ஜூம்மா தொழுவ போச்சிவோ அம்புட்டு ஆம்பளையலுவோலும் அந்த நேரத்துல அம்புட்டு கொமரியலுவொலும் ஒடியாடி வெளையாண்டிச்சிவோ – அப்டியே பெருநா அன்னைக்கி நம்மூர்ல ஆம்பளைலுவோ அம்புட்டும் கொத்வா பள்ளிக்கு போனதும் கொமரியலுவோ வெளையாடுமே அதே நெனப்புல வந்திச்சு புள்ள

தொழுதுட்டு வந்து - ருசியாட்டு நெய் சோறு, அளவு போல வால எலை ல போட்டு கல்யாண ஊடு மாறிலமா பந்திலே வச்சி பறிமாறிச்சிவோ அழகாட்டு சோறு தின்னு முடிச்சு சோறுதின்னே வாய்க்கு 4 வெத்துலய மடக்கி திங்க லாம்னு - அந்த பையன கூட்டு கேட்டேன் இந்த நாட்லே அதெல்லாம் தட செஞ்சிருக்காங்கோ கண்மா அப்படின்னுட்டான் அந்த அப்தாஃப் பய. அதுக்கு பதிலா வேணா இத திங்குறியலா கண்மா நு - ஆரஞ்சி முட்டாயும் தேன் முட்டாயும் ஊர்லே இருந்து கொண்டுவந்தது னு குடுத்தான் அதும் நல்லா ருசியாதான் இருந்திச்சி ஆமா.

இந்த காலத்து கொமரியளுவொளுக்கு நம்ம காலத்துல இருந்த சோறு பலகாரம் லான் தெரியுதான்னு பாக்க ஒரு போட்டி வச்சி இருந்தானுவோ அதுல பாப்பியா…
தக்கடி, மருந்து சோறு, கொக்குசு, மால்சா , உளுந்தங்கஞ்சி , பா சோறு , பழைய சோறும் கருவாடும், கொலகட்ட , பாயாசம் நு அழகாட்டு செஞ்சி கொண்டு வந்திருந்ததுவோமா அம்புட்டும் அளவுபோலே இருந்திச்சிலா , - இப்ப உள்ள கொமரியொலுவொலுக்கு நம்ம கை பக்குவம் இருக்கவா போதுன்னு நெனச்சுதான் நானும் 4 வாய் தின்னே புள்ள, சும்ம சொல்ல கூடாதுலா அம்புட்டும் அவ்ளோ ருசியா செஞ்சிருக்குவோ இந்த காலத்துலே இந்த அளவுக்கு செஞ்சி இறுக்குவொலே னு பெருமையாதான் இருந்திச்சி,

அடுத்தாக்குல கை மருந்து பத்தி தெரிஞ்சத சொல்ல சொல்லிச்சிவோ, அதுல பாத்தனா நெறய புள்ளைலுவோ தனக்கு தெரிஞ்ச பாட்டி வைத்தியத்த சொல்லிச்சிவோ அதுல இருமலுக்கு, வயித்து போக்குக்கு நு கைபுள்ளைலுவொல தனியா வச்சிட்டு இருக்குறவலுவொளுக்கு ஏத்த மாதிரி சொன்ன எல்லா கைமருந்து பக்குவம் அம்புட்டும் நல்ல புரயோஜனமா இருந்திருக்கும்.

ஆம்புளைலுவோ பக்கம் அடுத்தால நம்ம ஊரு 4 முஹல்லா பேருல மேல முஹல்லா , நடு முஹல்லா, கீழ முஹல்லா , L.V முஹல்லானு 4 குரூப்பா போட்டு 7 கல் வெளையாண்டுசுவோ, அப்றம் 35 வயசுக்கு கீழ் உள்ள எளசுவலுக்கும் ,அதுக்கு மேலே உள்ள பெரிசுவளுக்கும் கயிர் இழுக்குற போட்டி பாத்துகோ, அங்க நடந்தத கேட்பியா அல்லாவே.....
எழசுவோ பூரா ஒரு பக்கம் திமிக்கு திமிக்குனு நிக்கிதுவோ,இன்னொரு பக்கம் பூரா நரைச்ச தாடிக்காரங்குளுவலா நின்னுச்சிவோ .... 
விசில் அடிச்சி கொஞ்ச நேரத்துல பாத்தா திமு திமுனு நின்ன எளசுவல பூரா ஒரு நிமிசத்துல பொசுக்குனு இழுத்து போட்டுச்சிவோ இந்த நரச்ச தாடி குரூப்பு …
அல்லாஹ்……. அல்லாஹ்…. ம்மாடி…….சரியான கூத்துலா அத பாக்க….

பின்ன அந்த காலத்துல தின்ன நல்ல ஒரமான தீவனமா இப்போ இந்த எளசுவோ திங்கிது பீசா பர்கர் நு நம்மூரு பன்னுவொலலோ தின்னுட்டு திரியுதுவோ....

அப்றமா கபடி,ஆபியம் மணியாபியம்னு ஆமபளைலுவோலும் பையனுவோலுமா நல்லா ஒலப்பிட்டு கெடந்துச்சுவோ,
ஓட்ட பந்தயம்னு வச்சி சின்ன பயலுவல்ல ஆரம்பிச்சி- தாடி நரசவங்க வரைக்கும் வயசு வாரியா குரூப் குரூப்பா நடத்துச்சிவோ...
சாக்கு ஓட்டம்னு பெரிய ஆம்புளைவலுக்கு வச்சி அதுவோ சின்ன புள்ளைங்க மாறி துள்ளி துள்ளி ஓடி வர்ரதே பாக்கவே அவ்ளோ தமாஸ்ஷா இருந்துச்சி போ.....


ஆம்புளைலுவோ கூத்து இப்புடி ஒரு பக்கம் ...... கல கலனு சிரிப்பு சத்தமும் வாயம்லே போயம்லேனு நம்ம ஊரு பழக்கமும் , அந்த நாள் பூரா நம்ம துபாய் ல இருக்கோம்னே தோனல புள்ள ...அப்படியே ஏர்வாடி தான் போ....

ஆனால்லா ம்மா , எல்லாதுக்கும் மேல இந்த பொம்பளை புள்ளைங்கல்லாம் சேந்து இந்த குட்டி புள்ளைவலுக்கு மாறு வேட போட்டினு ஒன்னு வச்சால்வோ பாரு அல்லாஹ் அல்லாஹ்..... சொல்லி முடியாதுலா அந்த அழக ….

அதுல ஒவ்வொன்னையும் அவ்ளோ அழகாட்டு ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்சி உட்டுருக்குவோ பாரு....ம்மாடி ஒரு மாறி லட்சனம்மா ஒவ்வொன்னும் 
ஊர்ல நம்மூட்டு வாசலுக்கு வர்ர எல்லா ஏவாரியையும் அவ்லோ அழகாட்டு கண்னு முன்னாடி கொண்டு வந்துச்சுவொ பாரு ....

கீரக்கார பாட்டி... பூக் காரம்மா... காய்கரி பாட்டி.. தயிர் பாட்டி…பழ காரரு... கறிகட காரரு.. இடியப்ப காரரு நு ம்மாடி அவ்லோ லெட்சனமா இருந்திச்சிவொ ஒவ்வொன்னும், ஒவ்வொரு சுண்டுவலும் அதுக்கு உடுத்து இருந்த உடுப்புவலும் அதோட அழகும் அதுவொ பேச்சும் காய்கறி காய்கரினிட்டும் ...... ம்மா பூ வாங்கலையா……. ம்மா கீர வாங்கலியா……னு யாவாரி மாறியே அதுவோ பேச்சும் நடிப்பும் அழகோ அழகுலா எவ்லோதான் நா உண்ட்ட வெலா வாரியா வெவரிச்சாலும் அங்க நடந்த ஒவ்வொன்னையும் நீ நேர்ல பாத்து இருக்கனும்லா அவலோ லெட்சனம்மாட்டு இருந்திச்சிலா....

இப்போ உள்ள புள்ளைவலுக்குலாம் இந்த மாறி யாவாரி ஆட்களுவோலெல்லாம் தெரியவே மாட்டுக்குலா, கண்ணா வாப்மா னு கூட இருந்தாச்சும் கதை சொல்லியாவது அந்த காலத்துலே என்னலாம் நடந்திச்சி னு சொல்லி கொடுப்பா இங்க அதுக்கும் வழி இல்ல, இங்க வளற்ற புள்ளயலுவோலாம் அந்த 4சொவத்துக்குள்ளே தானே இருக்குதுவோ ஸ்கூல் க்கு போய்ட்டு வந்தா ஆவார அந்த tv யும் போனும் தான்.

இந்த ஈமான் மக்களுவோ இப்பிடியாச்சும் வருசத்துக்கு ஒரு தடவையாவது அளவு போல ஒரு பார்க்க புடிச்சி பழைய கதைலுவொளையும் பழைய வெளயாட்டுவொளையும் ஊர் பழக்க வழக்கத்தையும் இந்த தலையமுறை புள்ளைலுவொளுக்கு சொல்லி வளக்குறதுக்கு ஒரு வாய்ப்ப உண்டாக்கி கொடுக்குறது ரொம்பே தேவையும் முக்கியமும் கூட லா – அத அழகாட்டு செஞ்சி இருந்திச்சி வோ ….ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு…..
போட்டில கலந்த எல்லாத்துக்கும் ஒரே மாறி பரிசு லாம் குடுத்து அனுப்புச்சிவோ அழகாட்டு…

இத ஏற்பாடு செய்ய ஆம்புளைலுவோ பக்கமும் சரி அதே மாறி பொம்பளைலுவோ பக்கமும் சரி நெறைய மக்களுவோ கஷ்ட்டபட்டுச்சிவோலாம்லா....

அந்த தெளஃபீக் பையன் தான் வேனா வெயில்ல அலஞ்சி திரிஞ்சி இந்த பார்க்குக்கு பெர்மிஷன் வாங்குனானாம்லா.....

அப்றம் இந்த சிட்டி கோல்ட் மொய்தீன் பரிசு வாங்க, புதுசா வந்தவங்களுவொல கூப்டா நு ஊர்பட்ட வேலை பாத்தானாம்லா...

6ஆந்தெரு டாஸ்கண்ட் வூட்டு பையன் இருக்கான் பார்லா ஜெய்னுலு அவந்தான் எல்லா பயலுவோலயும் கார்ல கூட்டிபோய் மொதல்லயே எறக்கி உட்டு வெளையாட்டலாம் ஆரம்பிச்சானாம்...

பா அதுக்குலாம் மேல அந்த புதுமனை ல மொத வூட்டு அமீர் புஹாரி இருக்காம்லாலா அந்த பையன் தாம்லா இந்த கூட்டதுக்கு மெயின் ஆளாம் ... சோறு கரி எல்லாம் அவந்தாம்லா ஏற்பாடாம் இதில்லாம இந்த வெளையாண்டுட்டு இருந்த பயலுவோ எடைல...எடைல தண்ணி இல்ல கிளாஸ் இல்லனு வேற அந்த புள்ளய கடைக்கி அனுப்பி சாமான் வேற வாங்கிட்டுவர வச்சிருக்கானுவோ...

அப்றம் அந்த லெப்ளோ தெரு அவ்மது மொய்தீன் இருக்கான் பாரு அவந்தான் தினுசு தினுசா யோசனலாம் குடுத்தானாம்... இதுல அந்த அல்தாஃப் பயல பத்தி சொல்லனுமே அந்த பூங்கால தேவையான வெளாட்டுக்கு க்கும் ஏற்பாட்டுக்கும் இங்கயும் அங்கயுமா திரிஞ்சிகிட்டு விசிலடிச்சி விசிலடிச்சி கத்தி எல்லாத்தையும் ஒண்ணா கூட்டுரதுக்குள்ள அவனுக்கு பாதி உசிரு போயிருச்சு.. அந்த பயலுக்கு.

அப்றம் மொம்மது, தமீமு, பாஸித்து, ரியாஸு வேற… இன்னும் செல பயலுவோ பேரு ஒன்னும் நெனவுலயும் வர மாட்டிக்கு….

இப்டி எல்லாரும் சேந்துதான் அல்லாவோட கிருபைல அழகாட்டு செஞ்சி முடிச்சிருக்கானுவோ...

பொம்பளைய்லுவோ பக்கம்தான் அம்புட்டு அழகாட்டு ஏற்பாடு செஞ்சிருச்சுவோலா வூட்டு வெலையும் பாத்துகிட்டு புள்ளைலுவொலயும் வச்சிகிட்டு 250 வருக்கு இந்தபுள்ளைலுவோ மோர் வரைக்கும் செஞ்சி செறப்பிச்சிருக்கே பெரிய விசயம் தாம்லா…. மாஷா அல்லாஹ்....

இப்டி நெறைய புள்ளைலுவோ அன்னைக்கு ஒரு நாள் கூத்துக்கு பல நாளா வேல செஞ்சிருக்குவோ...

அல்லா அந்த புள்ளைலுவோ எல்லாத்துக்கும் கிருபை செய்யட்டும்... இங்க உள்ள நம்ம சந்ததிவொளுக்கு நம்ம மண் வாசணை மறக்காம இருக்க இந்த மாதிரி போட்டியலுவோலையும் விருந்துவொலையும் அடிக்கடி இந்த ஈமான் புள்ளைலுவோ தொடர்ச்சியா நடத்தனும் அதுக்கு அல்லாஹ் கிருபை செய்வான் நானும் துஆ செய்றேன் நீயும் துவா செய்லா... இன்ஷா அல்லாஹ்…

அல்லாஹ் எனக்கும், உனக்கும் ஆயுச போட்டு வைக்கட்டும் அடுத்த விருந்துல எல்லா மக்களுவொளையும் சந்திக்க, நீயும் கண்டிப்பா வாலா அதுக்கு… இன்ஷா அல்லாஹ்…






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..