54000 டன் மலேசிய மணல் முடக்கம்..!

Posted by Haja Mohideen (Hajas) on 10/31/2017 3:55:57 AM

54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! 

கன்னியாகுமரி பசங்க நாங்க

Image may contain: sky and outdoor

54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! 
மணல் மாஃபியாக்கள் அட்டகாசம்...!

புதுக்கோட்டையை சேர்ந்த MRM ராமையா என்டர்பிரைசஸ் மலேசியாவிலிருந்து வரலாற்றிலையே முதல்முறையாக வரிகள் அனைத்தும் முறையாக கட்டி இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணல் முடங்கும் அபாயம்!

தமிழக வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட 54 ஆயிரம் டன் வீடுகட்டும் மணல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மணல் மாஃபியாக்களின் நெருக்கடியால் கனிமவள அதிகாரிகள் மணலை துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!

தாமிரபரணி… காவிரி…. தென்பெண்ணை… பாலாறு என தமிழகத்தின் நீராதரமாக விளங்கும் எல்லா ஆற்றிலும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்த மணல் கொள்ளையின் விளைவு இன்று நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. அதோடு ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக ஒரு சில மணல் குவாரிகளே செயல்பட்டு வருகின்றன.

அரசு குறைந்த விலைக்கு மணலை வழங்கினாலும் தட்டுபாட்டை பயன்படுத்தி மணல் மாஃப்பியாக்கள் ஒரு டன் மணலுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்கின்றனர். மணல் தட்டுப்பாட்டால் பல கட்டுமான நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
இந்த மணல் தட்டுப்பாட்டை போக்க புதுக்கோட்டையை சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. அதாவது தமிழக வரலாற்றில் முதல்முறையாக வீடுகட்ட பயன்படும் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 ரூபாய் மதிப்புள்ள அந்த மணலுக்கு 2 கோடியே 88 லட்சம் ரூபாய் சுங்க வரியும் செலுத்தப்பட்டது. மேலும் ஜி.எஸ்.டி 38 லட்சம் ரூபாயும் செலுத்தியுள்ளனர். கப்பலில் இருந்து துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்ட மணலை 54 லாரிகளில் கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்துக்கும் தமிழகத்தில் சில பகுதிகளுக்கும் 1000 டன் மணல் ஏற்றிச்செல்லப்பட்டது . இவற்றில் ஆறு லாரிகளை ஆரல்வாய் மொழியில் மறித்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக ஆறு லாரிகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் முறையாக வரி செலுத்தியிருப்பதாலும், மணலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருப்பதாலும் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என்று தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் எடுக்கப்படும் மணல் விலையை விட குறைந்த விலைக்கு இந்த மணல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கனிம வளத்துறையின் உதவியுடன் உள்ளூர் மணல் மாஃபியாக்கள் துறைமுகத்துக்குள் இருந்து மணல் வெளியே எடுத்து செல்லவிடாதபடி முடக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 54 ஆயிரம் டன் அளவிலான மணல் லாரிகளில் ஏற்றப்படாமல் துறைமுக வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த 54 ஆயிரம் டன் மணலும் மார்கெட்டுக்கு வந்தால் எங்கே உள்ளூரில் 50 மடங்கு விலைக்கு விற்கப்படும் மணல் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுமோ என்று அஞ்சிய மணல் மாஃப்பியாக்கள், இதனை தடுத்து வைத்திருப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். பல வருடங்களாக தமிழகத்தில் ஆறுகளை சூறையாடி மணல் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட போதெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த கனிம வளத்துறையினர், முறையான சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியில் எடுத்து வர தடை போட்டுள்ளது ஏன் ? என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மலேசியாவில் இருந்து இதே போல தொடர்ச்சியாக கப்பல் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டால் தமிழகத்தில் மணல் விலை குறைவதோடு தமிழக ஆறுகள் சூறையாடப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும்!

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! 

https://www.facebook.com/delightsboys/photos/a.1653071478333057.1073741828.1652796451693893/1734797863493751/?type=3

https://tamil.oneindia.com/news/tamilnadu/sand-mafia-s-take-upper-hand-imported-sand-from-malaysia/articlecontent-pf270502-300114.html

 






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..