காலையில் ஒரு செய்தி, மாலையில் ஒரு செய்தி - சமுதாயத்தை ஏமாற்றும் நாடகமா?

Posted by S Peer Mohamed (peer) on 12/28/2015 12:59:28 AM


காலை தினத்தந்தியில்....
காஜாமைதீன் கொலை வழக்கு தொடர்பாக ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் தனிப்படை போலீசார் சிலரைப் பிடித்து தொடர் விசாரணை நடத்தி வருவதாக, போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தகவல்: தினத்தந்தி
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 27, 2015


மாலைப் பத்திரிகைகளில்...
காஜா மைதீனின் ஆட்டோவில் சென்ற பெண் விபச்சார அழகி என்றும், அவள் காஜாமைதீனின் ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்பவளாகவும் இருந்தாளாம். (தம்பி காஜாவோ பத்து நாட்களாகத் தான் ஆட்டோ ஓட்டினார்) அந்த விபச்சார அழகியை பிடித்து விசாரித்ததில் ஏர்வாடியைச் சார்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாம். அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்களாம். அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம், இன்று அல்லது நாளைக்குள் கொலையாளி கைது செய்யப்படலாம் என்றும், 5பேர் கொண்ட தனிப்படையிடம் 5 பேர் சிக்கியுள்ளனர் என்றும்....ஒரு செய்தி....
மூன்று லட்சத்தை நிவாரணமாக அறிவித்துவிட்டு, முதல்வர் தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என்று காண்பிப்பதற்காக, ஏர்வாடி மக்களை ஏமாற்றும் நாடகம் அரங்கேறுவது போல தோன்றுகிறது...


ஒருங்கிணைப்பு குழு, அனைத்து இயக்கங்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மக்களை பிளவுபடுத்தி அதன் மூலமாக பிரச்சனைகளை உண்டு பண்ணி சுதந்திரப் போராட்டத்தை வீரியமிழக்கச் செய்வதற்காக வெள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த காவல் துறை எனும் ஏவல்துறை. இந்த வேலையைத் தான் ஏர்வாடி காவல் நிலையம் + உளவுத்துறையும் தொடர்ந்து செய்து வருகிறது. அதன் விளைவாகத் தான் நாம் நமது சகோதரன் ஹாஜாவை இழந்தோம், இனியும் இந்த காவல் மற்றும் காவிகளின் சூழ்ச்சியில் இனி ஒரு உயிரைக் கூட இழக்க அனுமதிக்க மாட்டோம்.
அல்லாஹு அக்பர் !


எனவே இந்த பிளவுபடுத்தும் சூழ்ச்சி இனியும் தொடரக் கூடாது, ஏர்வாடி அமைதிக்கும், மத நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற ஊர் என்பதை மனதிற் கொண்டு ஏர்வாடி காவல் நிலையத்தின் காவலர்கள், அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட வேண்டும் என்பதை தமிழக முதல்வரின் தனிக்கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.


நீதியை.... நிதியைக் கொடுத்து விலைக்கு வாங்கி விட அதிகார வர்க்கம் பல வழிகளிலும் முனையும். சூழ்ச்சிக்கு இரையாகாமல் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!

Peer Mohamed


 

Peer Mohamed NCHRO குழுவும் இன்று ஏர்வாடி வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வைஇட்டு விசாரித்து சென்று உள்ளார்கள், அவர்களும் நாளை தங்களது அறிக்கையை தர இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் நம் சகோதரனின் இரத்தத்தை வீணாக்க மாட்டான்.






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..