•மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!

Posted by Haja Mohideen (Hajas) on 6/3/2014 11:12:14 AM


  • மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!
மாநகராட்சி பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி. : பட்டையைக் கிளப்பும் ஃபாத்திமா-பவித்ரா!
Posted Date : 18:05 (02/06/2014)Last updated : 18:10 (02/06/2014)

ஹெச்.ராசிக்  ராஜா

படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல் 

மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க, பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே. இத்தகைய சூழலில்.... சென்னை, சைதாப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர், இதில் பங்கேற்று கலக்கலான வெற்றி கண்டிருப்பது... பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

சென்னையைச் சேர்ந்த ஃபாத்திமா ஷபானா மற்றும் பவித்ரா இந்த இருவருரையும் சந்தித்தோம்.

''ஒன்பதாவது படிச்சப்போ, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஃபிட்ஜி அகாடமி’, எங்க பள்ளியில இருந்து ஒரு தேர்வு மூலமா எட்டு பேரை தேர்ந்தெடுத்தாங்க. வாரத்துல மூணு கிளாஸ் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங் கொடுத்தாங்க. சாயந்திரம் 5 - 8 மணி வரை வகுப்பு நடக்கும். அப்புறம் வீட்டுக்கு வர 9 மணி ஆகிடும். சாப்பிட்டு, அங்க நடத்தின படங்களைப் படிப்பேன். காலையில 5 மணிக்கு எழுந்து, ஸ்கூல்ல நடத்தின பாடங்களைப் படிப்பேன். ரெண்டு பாடங்கள்லயும் கவனம் செலுத்த கஷ்டமாதான் இருக்கும். ஆனாலும் நல்ல காலேஜ்ல சேரணும்னு நம்பிக்கையோட படிச்சேன்!'' எனும் ஃபாத்திமா ஷபானாவின் அப்பா, இரவு நேர 'டிபன்’ கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.

''ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதில் குடும்பச் செலவுகளைப் பூர்த்தி செய்றதே கஷ்டம். நல்லா படிக்கிற பிள்ளைய, எப்படி மேல படிக்க வைக்கிறதுனு அவங்களுக்கு கலக்கம்தான். ஆனாலும், முயற்சியைக் கைவிடாம படிச்சேன். இப்போ ஐ.ஐ.டி தேர்வுல 83 மார்க் வாங்கிட்டேன். இதுல 74 மார்க் எடுத்தாலே பாஸ்தான். அதேமாதிரி ப்ளஸ் டூ பொதுத்தேர்வுலயும் 1109 மார்க் வாங்கிருக்கேன்'' என்ற ஃபாத்திமா, தன் அம்மாவை அருகில் அழைத்து,

''எங்கம்மா முகத்துல எவ்வளவு சந்தோஷம் பாருங்க. டீச்சர்ஸ், ஹெட்மாஸ்டர் எல்லாரும் என் படிப்புக்கு உதவி பண்றது, நேரத்துக்கு கோச்சிங் கிளாஸுக்கு அனுப்புறதுனு ரொம்ப ஊக்கப்படுத்தினாங்க. இப்போ நிறைய பேர் எனக்கு பண உதவி செய்றதாவும், நிறைய வங்கிகள் படிப்புக்கு லோன் உதவி செய்றதாவும் போன் மூலமா தெரிவிச்சிருக்காங்க. எங்கப்பாவுக்கு சுமை கொடுக்கலைங்கறது, எனக்கு நிம்மதியா இருக்கு.

இன்னும் ஒரு தேர்வு பாக்கியிருக்கு. அதில் வெற்றிபெற்று, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுப்பதுதான் என் விருப்பம். படிப்புதான் உண்மையான செல்வம்னு, எங்களைப் போன்ற ஏழைப்பட்ட குடும்பங்களுக்கு எல்லாம் நம்பிக்கை வர, நானும் உதாரணமா இருப்பேன்!''

- அழகாகச் சிரித்தார் பாத்திமா.

ன்னொரு மாணவியான பவித்ராவின் ஐ.ஐ.டி மதிப்பெண்... 78. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 1129. கண்களில் துள்ளல் பவித்ராவுக்கு.

''கோச்சிங் கிளாஸ்ல சொல்லிக்கொடுத்த நிறைய விஷயங்கள் எனக்கு படிப்புலயும் உதவியா இருந்துச்சு. தினமும் நைட் தூங்க 12 மணிக்கு மேல ஆகிடும். திரும்ப காலையில 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு படிக்க ஆரம்பிச்சுருவேன். அப்பாவும் அம்மாவும் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தாங்க.

அடுத்து எழுதப்போற எக்ஸாம் இன்னும் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் விடாம படிச்சுக்கிட்டே இருக்கேன். எப்படியாவது ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்துல சேர்ந்தாகணும். கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சாலும் ஐ.ஐ.டி-யில படிக்கலாம்னு பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தணும்... எங்க பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுக்கணும்!'' எனும் பவித்ராவுக்கு பிடித்த சப்ஜெக்ட், ஃபிசிக்ஸ்.

''அதனாலதான்... ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிச்சு சயின்டிஸ்ட் ஆகுறதை லட்சியமா வெச்சிருக்கேன்!'' என்று பவித்ரா சொல்ல,

''பத்தாவது பரீட்சையில 486 மார்க் வாங்கி, சென்னை அளவில் மூன்றாம் இடம் பிடிச்சி, அப்துல் கலாம் கையால விருது வாங்கினதையும் சேர்த்து சொல்லு!'' என்கிறார் பவித்ராவின் அப்பா பெருமிதத்துடன்.

இந்த இருவரும், இப்போது தேர்வில் பெற்றிருக்கும் வெற்றியின் மூலமாக என்.ஐ.டி, சி.எஃப்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இன்னும் ஒரு தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ- அட்வான்ஸ்) பாக்கியிருக்கிறது. இதில் வெற்றி பெற்றால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

பள்ளிக்குப் பெருமையையும், பெற்றவர்களுக்கு சந்தோஷத்தையும், எளிய குடும்பத்து மாணவர் களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ள இந்த வெற்றிப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்!

-அவள் விகடனிலிருந்து...

http://news.vikatan.com/article.php?module=news&aid=28572

 

கடின உழைப்பும் இறைவனின் நாட்டமும் ஒருங்கே அமைந்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்....

முஹம்மது ரஸ்வி

 
 

உங்கள் இருவருக்கும் எனது மனமாரத வல்ழ்துகல் !.

vanathi

 
 
 
 
 

வாழ்த்துக்கள்.உங்கள் விருப்பம் கைகூட எங்கள் எல்லோருடைய நல்லாசிகள் துணையிருக்கும்.

K.Venkatasubramanian

 

ALL THE BEST FOR U R FUTURE

SELVARAJ

 
 

Hi....best wishes...my kutties.....

venibala

 
 
 

பெஸ்ட் விஷேஸ் போர் யுவர் குட் ஹர்ட் வொர்க் அண்ட் எப்போர்த்ஸ்.

varadan kanniappan

 
 
 
 
 

wish u all success frndz............u bth realy rockz......

varshni

 

ஆல் தி பெஸ்ட்

SIVASHANMUGAM

 

 
 
 
 

உங்களுடைய வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.

dinakaran

 

 
 
 

எத்தனையோ வாய்ப்புகளை பெற்றோர் வசதியாகயிருந்து , அதை பயன்படுத்தாத மாணவ, மாணவிகள் இருக்க,கஷ்டப் பட்டக் குழந்தைகள் பவித்ரா, பாத்திமா கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி தங்கள் குடும்ப சூழ்நிலை உணர்ந்து, கடின உழைப்புடன் முன்னேறியதற்கு வாழ்த்துக்கள்!

Mohamed

 

 

நல வாழ்த்துகள்

seetharamank

 
 

Ivargal iruvar mugangalilum Arivum, olimayamaana edhirkaalamum piragaasikkindrana. Don't stop with IIT. Send your application to MIT in US too. God bless you both>

Raffel Francis

 
 
 

எத்தனையோ வாய்ப்புகளை பெற்றோர் வசதியாகயிருந்து , அதை பயன்படுத்தாத மாணவ, மாணவிகள் இருக்க,கஷ்டப் பட்டக் குழந்தைகள் பவித்ரா, பாத்திமா கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி தங்கள் குடும்ப சூழ்நிலை உணர்ந்து, கடின உழைப்புடன் முன்னேறியதற்கு வாழ்த்துக்கள்!

Jasper Kiruba Subamathi

 
 

எல்கேஜிக்கே லட்ச ரூபாய் டொனேசன் கொடுத்து சேர்க்கரவங்க காதுகளில் இந்த சேதி விழனுமே ....

vanthiyadevan






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..