நிக்காஹ் ஏர்வாடி - ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்

Posted by S Peer Mohamed (peer) on 3/9/2013

இன்னும் நன்மையிலும். பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் ( திருக்குர்ஆன் 5:2)

அன்புள்ள சகோதர- சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் கருணையினால் இம் மடல் தங்களை உயரிய ஈமானுடனும் சீரிய உடல்நலத்துடனும் சந்திக்கட்டுமாக...

ஏர்வாடி மக்களின் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் ஆற்றி வரும் நற்காரியங்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும்  நற்கூலி வழங்குவானாக. அல்லாஹ் நம்மில் சிலருக்கு வழங்கியிருக்கும் பொருளாதாரங்களை நம்மோடு பிறந்து, நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது ஊரை சேர்ந்த வறுமையில் வாடும் சிலருக்கு உதவி செய்யும் பாக்கியத்தை வழங்கியிருக்கிறான்.(அல்ஹம்துலில்லாஹ்)

Nikkah Eruvadiநமது  சமுதாயத்தில் பல்வேறு பொருளாதார காரணங்களால் பரிதவித்தும், தங்களின் பொருளாதார இயலாமையால்   , பருவ வயதடைந்தும் திருமணம் முடிக்க முடியாம லும், குடும்ப வறுமையின் காரணத்துக்காகவும் தன்மானம் பார்க்காமல் நமதூர்,வெளியூர்,வெளிநாடு என்று கையேந்தி வாரிசுகளை கரை சேர்க்கவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களிடம் கையேந்தக்கூடிய நிலைமையில் இருக்க கூடிய பெற்றோர்கள், அவர்கள் பெண்களுக்கு அவர்கள் வேறு யாரிடமும் எவ்வித உதவியும் கேட்க கூடாது, நாமும்,நம்மைப் போல் நலன் நாடுவோரும் ஒருங்கிணைந்து இவர்களின் துயர் துடைக்க முயற்சி செய்வோம்  கூட்டாக வருடத்திற்கு குறைந்த பட்சம் 10 திருமணங்களை ஒரே மேடையில் கூட்டாக நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் சில சகோதரர்கள் சிந்தித்ததன் விளைவு இங்கு ஒரு வித்து ஊன்றப்பட்டுள்ளது.

(இது நம்  சமுதாயத்தில் துடைத்தெரிய பட வேண்டிய வரதட்சணையாலேயே இந்த இழி நிலையென்றாலும் இதனால் தேங்கி இருக்கும் குமருகளுக்கான தீர்வே இந்த முயற்சி. அல்லாஹ்வின் கிருபையால் இந்த நலதிட்டத்தோடு இந்நிலை மாறவும் இந்த குழு துஆ வோடு என்றும் பெருமுயற்சி செய்யும்)        

வருடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட குமர்களுக்கு தலா ரூ.1,50,000/= வீதம், 10 குமர்களுக்கு ரூ. 15,00,000/= வரை சமுதாய நலன் நாடும் ஏர்வாடியைச் சார்ந்த சகோதர,சகோதரிகள் மூலம் நிதி வசூல் செய்யலாம் என முடிவெடுத்து ஒரு பங்களிப்பு (contribution) ரூ.15000/= என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 100 contribution வரை வருடத்திற்கு திரட்ட வேண்டும்.         

பங்களிப்புக்களை சேகரித்து வருடந்தோரும் வழங்கலாம் என்றும் அதன் அடிப்படையில் இதற்கான ஓர் குழுவையும் கடந்த 6/01/2013 அன்று ஏற்படுத்தி செயலாற்றி வருகிறோம்(அல்ஹம்துலில்லாஹ்). மேலும் இதில் ஆர்வமுள்ள அமைப்புகளையும் தனி நபர்களின் ஆதரவையும் ஆலோசனையையும் பெறப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இதன் மூலம் ஏராளமான குமர்களுக்கு உதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் எதிர் நோக்கியவர்களாக…..       --நிக்காஹ் ஏர்வாடி குழு.—     

தங்களது பங்களிப்புக்களை இக்குழுவிற்கு தந்து ஏழை குமர்களின் வாழ்வில் ஒளியேற்ற எல்லாம் வல்ல இறைவன் தங்களது உள்ளங்களில் உதவி செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தி தருவானாக..........

தங்களது  பங்களிப்புக்கள் விரைவாக உறுதி செய்யப்படும் நிலையை பொருத்தே குமர்கள் எத்தனை என்பது முடிவு செய்யப்படும். அதனால் விரைவாக தங்களது பங்களிப்புக்களை உறுதி செய்தால் குழுவின் அடுத்த கட்ட செயல்பாடு விரைவாக இருக்கும்.   அல்லாஹ் நமது நற்காரியங்களை ஏற்று மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க அருள்புரிவானாக..   தங்களின் பங்களிப்புக்களை உறுதிப்படுத்த கீழ்கண்ட சகோதரர்களில் ஒருவரை தொடர்பு கொள்ளவும்.

 

M.A. ஆஸாத்                          maazad.577@gmail.com  
முகைதீன் (லெப்பைவளவு)    peeralmd@gmail.com  
முஹம்மத் ரஃபி- அபுதாபி     mohd_rafi129@hotmail.com  
அல்தாஃப்-அபுதாபி              althafalim@gmail.com  
BK முஹ்யித்தீன் –ஷார்ஜா    beekayemm@gmail.com

 

- BK முஹ்யித்தீன்



 






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..