குளு, குளு வசதியுடன் நவீன மெட்ரோ ரயில் பெட்டிகள்- டிசம்பரில் சென்னைக்கு வரும்!

Posted by Haja Mohideen (Hajas) on 2/18/2012

குளு, குளு வசதியுடன்  நவீன மெட்ரோ ரயில் பெட்டிகள்- டிசம்பரில் சென்னைக்கு வரும்!

 
 

Metro Train

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக உலக தரத்திலான குளு, குளு வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டில் தயாராகி வருகின்றன. இந்த ரயில் பெட்டிகள் சென்னைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து, மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. ரூ.14,600 கோடி செலவில் நடந்து வரும் இத்திட்டத்தில், சுரங்கம் மற்றும் பறக்கும் பாதையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்திற்காக பல்வேறு கம்பெனிகளுக்கு 22 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. சுரங்க பாதை அமைப்பதற்காக சீனாவில் இருந்து 4 ராட்ஷ டிரிலிங் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகர் பகுதிகளில் இருந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ளது. சுரங்கப் பாதை பணிகளுக்காக சீனாவில் இருந்து மேலும் 7 இயந்திரங்கள் கப்பலில் வந்து கொண்டிருப்பதாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம்:
மெட்ரோ ரயில்களை இயக்க தேவையான அதிநவீன கட்டுப்பாட்டு மையம், ரயில்களை நிறுத்துவதற்கான இடம், பராமரிப்பு பணிமனை, நிர்வாக அலுவலகம் ஆகியவை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக 68 ஏக்கர் இடத்தில் 7 மாடிகள் கொண்ட அலுவலகம் அமைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
பிரேசிலில் தயாராகும் ரயில் பெட்டிகள்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக குளு, குளு வசதியை கொண்ட ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டில் தயாராகி வருகின்றது. இதற்கான பணியில் 'அல்ஸ்டம் டிரான்ஸ்போர்ட்' என்ற பிரேசில் நாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, சோதனை ஓட்டம், இயக்கம் குறித்த பயிற்சி ஆகிய பணிகளை அந்நிறுவன பணியாளர்கள் ஈடுபடுவர்.
பிரேசில் நாட்டு நிறுவனம் செட்டுக்கு 4 ரயில் பெட்டிகள் வீதம் மொத்தம் 42 செட்களை தயாரித்து அளிக்க உள்ளது. இதற்காக ரூ.1471 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2013) இறுதியில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரேசில் நாட்டு நிறுவனம் ரயில் பெட்டிகளை சென்னைக்கு அனுப்பி வைக்கும் என்று தெரிகின்றது.

http://tamil.oneindia.in/news/2012/02/18/tamilnadu-chennai-metro-rail-boogies-may-this-year-aid0180.html






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..