முல்லைப் பெரியாறு அணை உடையப்போகிறது என்றால் தேக்கடி படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை?

Posted by Haja Mohideen (Hajas) on 12/6/2011

முல்லைப் பெரியாறு  அணை உடையப்போகிறது என்றால் தேக்கடி படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை?

 
 

Kerala spreads the message Mullaperiyar dam is on the verge of collapse but it hasn't stopped the ferry service in Thekkady. This makes TN people think that Kerala is not telling the truth about the dam.

சென்னை: முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் உடையும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடத்தும் கேரளா தேக்கடியில் ஏன் படகு சவாரியை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 12 படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகு சவாரி மிகவும் பிரபலம். இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாது தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வார்கள். தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு பணம் பார்ப்பதற்காக அதிக  அளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று பலரைக் கொன்றது கேரள சுற்றுலாத்துறை. இந்த சம்பவத்திற்குப் பிறகும் கூட அது படகு சவாரியை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. படகுகளும் நிரம்பி வழிந்தபடிதான் போகின்றன.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அது உடைந்தால் பல லட்சம் மக்கள் பலியாவார்கள் என்று கூறி கேரளாவில் தொடர் போராட்டங்கள் ந்டந்து வருகின்றன. அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையும் என்று கூறி அணையை ஒட்டியுள்ள வல்லக்கடவு, வண்டிபெரியாறில் இருந்து 450 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆனால் இந்நிலையும் தேக்கடி படகு சவாரி மட்டும் நிறுத்தப்படவில்லை.  அணை உடைந்தால் படகு சவாரி செய்பவர்களுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் வராதா என்ன?  அணை உண்மையிலேயே உடையும் அபாயத்தில் இருந்தால் படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழக மக்கள் மற்றும் நாட்டின் இதர பகுதி மக்களிடமிருந்து வரும் பணம் மட்டும் சுளையாக வேண்டும் என்ற சுயநலம்தான் இந்த படகு சவாரி தொடருவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

http://tamil.oneindia.in/news/2011/12/06/tamilnadu-why-isnt-thekkady-ferry-service-stopped-aid0128.html






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..