ரத்த பரிசோதனைக் கூடங்கள், கட்டணத்தில் பாதி டாக்டர்களுக்கு கமிஷன்

Posted by Haja Mohideen (Hajas) on 11/26/2011

ரத்த பரிசோதனைக் கூடங்கள்,  கட்டணத்தில் பாதி  டாக்டர்களுக்கு கமிஷன்

-எஸ்.ராமசாமி-

கொஞ்சம் பணமும், சிறிய இடமும் இருந்தால் போதும், ரத்தப் பரிசோதனைக் கூடத்தை துவக்கி விடலாம் என்பது தான், தமிழகம் முழுவதும் உள்ள இன்றைய நிலை. இதில் வேடிக்கை என்னவென்றால், பெட்டிக் கடை வைப்பதற்கு கூட, மாநகராட்சி, நகராட்சிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பரிசோதனைக் கூடங்களுக்கு அந்த அவசியமே இல்லை.
கேட்க ஆளில்லை மருத்துவ சிகிச்சையில், ரத்த பரிசோதனைக்கு முக்கிய பங்கு உண்டு. இதில் சிறிய தவறு நேர்ந்தால் கூட, தவறான சிகிச்சைக்கு வழிவகுத்து, நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும்.
ரத்த பரிசோதனைக் கூடங்கள் அமைக்க, "பிளஸ் 2' மற்றும் லேப் டெக்னீஷியன் பட்டயப் படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, ஏட்டளவில் மட்டுமே உள்ளது. உண்மையிலேயே இத்தகைய தகுதி உள்ளவர்கள் தான், பரிசோதனைக் கூடங்களை நிறுவுகின்றனரா என்பது சந்தேகம் தான். கட்டணம் அதிகம்
பல பரிசோதனைக் கூடங்கள், முடிவுகளை துல்லியமாகத் தருவதில்லை என்ற புகார், பரவலாக உள்ளது. சில சமயங்களில், சர்க்கரை அளவை பரிசோதிக்க வழக்கமாக வரும் நோயாளிகளுக்கு, தோராயமாக அளவுகளை குறிப்பிடும் ஆய்வுக் கூடங்களும் உண்டு.இதில், கட்டணமும் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, ரத்தத்தில் உள்ள யூரியா அளவை பரிசோதிக்க, 5 ரூபாய் தான் செலவாகும். ஆனால் இவர்கள், 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.
டாக்டர்களுக்கு கமிஷன்! சென்னையில், ரத்த பரிசோதனைக் கூடம் நடத்தும் ராஜ், அதிக கட்டணம் குறித்து கூறுகையில், ""எங்களுக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது. ரத்த பரிசோதனையின் தரம் காக்கப்பட வேண்டும்; முடிவுகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.

கட்டணங்களை பொறுத்தவரையில், பாதி கட்டணத்தை, டாக்டர்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டியுள்ளது. அப்போது தான் அவர்கள், எங்களிடம் பரிசோதிக்க பரிந்துரைப்பர்,'' என்றார் போலி பயிற்சி நிலையங்கள் லேப் டெக்னீஷியன் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளை நடத்துவதாக குறிப்பிட்டு, பொது இடங்களில் ஆங்காங்கே, போலி பயிற்சி பள்ளிகளின் விளம்பரங்கள் தென்படுகின்றன. இதுகுறித்து பேசிய, தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புணர் சங்க பொதுச் செயலர் சுகுமார், ""பயிற்சி நிறுவனங்களை நடத்த, அரசு அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால், தற்போதுள்ள நிலையங்கள், அங்கீகாரம் பெற்றுள்ளனவா என்பது யாருக்கும் தெரியாது. பயிற்சி நிறுவனங்களில் பணம் கொடுத்து, சான்றிதழ் பெற்று, பரிசோதனைக் கூடம் அமைப்பவர்களும் உண்டு,'' என்றார்.மேலும், ""இதையெல்லாம் ஆய்வு செய்ய, எந்த அமைப்பும் இல்லை. பரிசோதனைக் கூடங்களை முறைப்படுத்த, மாநில கவுன்சில் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்தும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை,'' என்றார். சான்று மட்டும் போதும் மதுரையில், தனியார் பயிற்சி நிலையத்தில் பயின்று, தற்போது பரிசோதனை மையம் நிறுவியுள்ள ஒருவர் இதுகுறித்து கூறியதாவது: தனியார் பயிற்சி மையங்கள், அங்கீகாரம் பெற்றதா, இல்லையா என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. தொழில்நுட்ப தகுதி கிடைத்தால் போதும் என நினைத்து, அதில் சேர்ந்தேன்.தற்போது, தனியாக பரிசோதனை மையம் நிறுவியுள்ளேன்.

இதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை; பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.டாக்டரின் தயவில் தான், நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம். இதனால், டாக்டருக்கு கமிஷன் கொடுப்பதை தவிர்க்க முடியாது.மதுரையில், பரிசோதனை மைய உரிமையாளர்கள், சங்கம் வைத்துள்ளனர். அவர்கள், டாக்டர்களுக்கு, 50 சதவீதத்துக்கு மேல் கமிஷன் கொடுக்க கூடாது என, தீர்மானித்துள்ளனர்.இவ்வாறு சுரேஷ் கூறினார். சட்டம் இல்லைஇதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் வசம்சதாரா கூறும்போது, ""பரிசோதனை மையங்களுக்கு அங்கீகாரம் அளிக்க, தேசிய அளவில் அங்கீகாரக் குழு உள்ளது. ஆனால், இக்குழுவில் அங்கீகாரம் பெற்று தான், பரிசோதனை மையம் நிறுவ வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை. தேசிய அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்கள், சிறந்த மையங்களாக கருதப்படுகின்றன, அவ்வளவு தான். பரிசோதனை மையங்களை கண்காணிக்க, கட்டுப்படுத்த தற்போது, எந்த விதியும் இல்லை,'' என்றார்.

பதிவு செய்வது இல்லை தனியார் மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், ரத்த பரிசோதனைக் கூடங்கள் ஆகியவை, மாநகராட்சியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானந்தம் கூறும்போது, ""மருத்துவமனைகள் பெரும்பாலும் பதிவு செய்து வருகின்றன. ஆனால், பரிசோதனைக் கூடங்களை பொறுத்தவரை, இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை,'' என்றார்.

 

http://www.dinamalar.com/News_detail_ban_exclu.asp?Id=356127






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..