போலீஸ் குடியிருப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணி : பணகுடியில் பரபரப்பு

Posted by Haja Mohideen (Hajas) on 2/26/2011

போலீஸ் குடியிருப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணி : பணகுடியில் பரபரப்பு
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2011,06:31 IST

பணகுடி : பணகுடி போலீஸ் குடியிருப்பு பகுதியில் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதன் பேரில் தூப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வளையம் செய்துள்ளனர். இதன் தொடர்பாக பணகுடியில் பதட்டம் நீடித்து வரும் நிலையில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணகுடி போலீசாருக்கு சர்வே எண் 490ல் 81 சென்ட் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் நிலத்தில் பொதுமக்களின் வசதிக்காக நூலகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 76 சென்ட் நிலத்தில் பணகுடியில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ. மூன்று சிறப்பு எஸ்.ஐ.க்கள் மற்றும் 36 காவலர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு 1932ல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்த குடியிருப்பு பகுதியில் 7 வீடுகள் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது.

இதை காரணம் காட்டியே போலீசார் வசதி கருதி மாற்று இடங்களில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பணகுடியில் கடந்த செப்டம்பர் மாதம் துவக்கப்பட்ட அரசு மனோ கலை கல்லூரி அஷ்ஷே நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டபோது காலியாக உள்ள போலீஸ் குடியிருப்பு தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் போலீஸ் மத்தியில் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

இந்த இடத்தை மீட்க மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் இரவு பகலாக பாதுகாப்பில் உள்ளனர். இது தொடர்பாக பணகுடியில் போலீசாருக்கும், மனோ கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே பனிப்போர் உருவாகியுள்ளது. இச்சம்பவம் பணகுடியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு வளாகத்தை மீட்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வளையத்தை நீடித்து வருகின்றனர்.

அத்துமீறி போலீஸ் வளாகத்திற்குள் நுழைபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=196213






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..